Search results

  1. G

    ஒரு ரகசிய குற்றம் 12

    நான் சொல்வதைக் கேட்டு நீரஜாவின் விழிகளும் உதடுகளும் விரிந்தன. அதிர்ச்சியிலும் எப்படி இவள் இப்படி அழகாகத் தெரிகிறாள் என்று நான் ஒரு விநாடி யோசித்தேன்.‌ "நீங்க என்ன சொல்றீங்க மாதவன் சார்? நான் ஒரு நாளைக்கு அவன் கூப்பிட்டா போகணுமா?" என்றாள். நான் பொறுமையாக, "ஆமாம்." என்றேன். "என்னால...
  2. G

    ஒரு ரகசிய குற்றம் 11

    "விக்ரமா?" என்றால் நீரஜா அதிர்ந்தவளாய்! நம்ப முடியாதவளாய்! "ஆமா, விக்ரம்தான். அவனோட அட்ரஸ் சரியா இருக்கா, பாருங்க!" "நெம்பர் - 42/4, 13 வது குறுக்கு சந்து, பாரதியார் தெரு, குரோம்பேட்டை. ஆமா, சரிதான்! என்னால நம்பவே முடியலையே சார்! இது எப்படி?" "எப்படின்னு என்னைக் கேட்டா? விக்ரமைத்தான்...
  3. G

    ஒரு ரகசிய குற்றம் 10

    என்னை நெருங்கும் விக்ரமையும் அவன் கையிலிருந்த நீளமான கத்தியையும் பார்த்தேன். ஒரு சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று அந்த கத்தியில் உறைந்திருப்பது போல் அது பளபளப்பாக மின்னியது. "எதுக்கு இப்போ கத்தி எல்லாம் எடுத்துக் காட்ற?" நான் கேட்டேன். "அவனுக்கு போன் பண்ணி குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லு...
  4. G

    ஒரு ரகசிய குற்றம் 9

    "என்ன நீரஜ்! இன்னிக்கு ரொம்ப ஆர்வமா இருக்கே? நான் கிளம்ப வேணாமா? உனக்கு இருக்கிற ஆர்வத்தைப் பார்த்தா நான் மும்பை போன மாதிரிதான்." என்றான் சுவாமிநாதன். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, வெகு நெருக்கத்தில், பர்ஃப்யூம் மணத்தது. இறுக்கி, நொறுக்கியதில் அவன் இதயம் கனத்தது. நான் அவனைப் பேச விடாமல்...
  5. G

    ஒரு ரகசிய குற்றம் 8

    கைக்குழந்தையுடன் ஓர் இளம் பெண் கதவைத் திறந்தாள்.‌ புருவங்களில் கேள்விக்குறி அமைத்துக்கொண்டு பார்த்தாள். "நான் எத்திராஜ்ங்கிறவரை தேடிட்டு வந்தேன். அவர் இறந்து விட்டதா ஒரு பெரியவர் சொன்னார்." "ஆமா, நீங்க யாரு?" பெரியவரிடம் சொன்ன அதே பொய்யை அவளிடமும் சொன்னேன். அந்த பெண்ணின் கண்களில் கண்...
  6. G

    ஒரு ரகசிய குற்றம் 7

    ஓர் உன்னதமான பொருளைக் கண்டுபிடித்தது போல் என் கண்கள் விரிந்தன. உடனே பிடிவாதமாக அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றேன். நீரஜா கொடுத்த இரண்டு செல்போன் எண்களின் பெயர் விலாசத்தை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று அவளுக்கு இப்போது தெரிய படுத்த விரும்பவில்லை. அவளிடம் இருந்து இன்னும் சில...
  7. G

    ஒரு ரகசிய குற்றம் 6

    மறுநாள் காலையில் அதி சீக்கிரமாகவே எழுந்து அலுவலகத்திற்கு வந்திருந்தேன். அலுவலகத்தைச் சுத்தம் செய்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழை விரித்தேன். பக்கத்திற்கு ஒரு அரசியல்வாதியும், ஒரு கொலைகாரனும், நசுக்கப்பட்ட ஒரு விவசாயியும், ஒரு பள்ளி விழாவும், ஒரு விளையாட்டு செய்தியும், என்று விரிவாக...
  8. G

    ஒரு ரகசிய குற்றம் 5

    நான் அத்தனை உன்னதமான ஆப்பிளைப் போன்ற பளபளப்பான ஒரு பெண்ணை இதுவரை பார்த்ததில்லை. அவள் நுழைவதற்கான தகுதி என் அலுவலகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவள் என் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அவள் நுழைந்த உடனே பிரகாசமான வெளிச்சம் பரவியது. அநேகமாக அவள் நடந்து வந்திருக்க முடியாது. நடப்பதற்கு உகந்த...
  9. G

    ஒரு ரகசிய குற்றம் 4

    நீரஜாவின் கையில் இருந்த செல்போன் ஓசை இல்லாமல் வெறும் அதிர்வு மட்டுமே வெளிப்படுத்தி, அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தது. செல்போன் திரையில் எழுதுங்கள் மின்னின. "விக்ரமை நம்பாதே!" விக்ரம், அவள் முன்பாக முழுதாக அமர்ந்திருந்தான். பச்சைக் குழந்தை போல் இருந்தான். வாயில் விரலை வைத்தால் கூட...
  10. G

    ஒரு ரகசிய குற்றம் 3

    விக்ரம் தளர்ந்தான். தன் அப்பார்ட்மெண்ட்டின் அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். நீளமான காரிடாரில் நடந்து, மாடிப்படி இறங்கி, அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு சீறினான். குரோம்பேட்டையில் இருந்து ஒரு 'யூ' டர்ன் அடித்து, ஒரு 'எஸ்' வடிவ சாலையில்...
  11. G

    ஒரு ரகசிய குற்றம் 2

    கண்ணாடியில் தெரிந்த அதிர்ச்சி அடைந்த நீரஜாவை எதிரில் நின்ற நீரஜா பார்த்தாள். நீல நிற பூக்கள் தெளித்த, மஞ்சள் நிற நைட்டியில் தூக்கலாகத் தெரிந்தாள். விசேஷமாக, நைட்டியின் கூர்மையில் இரண்டு தாமரைப் பூக்களை வடிவமைத்திருந்ததுதான். கழுத்தில் இருந்து சரிந்து இறங்கிய தங்கச் சங்கிலி. சங்கிலியில்...
  12. G

    ஒரு ரகசிய குற்றம் 1

    அபாரமான வேகத்தில் அந்தக் காரை நான் எதிர் கொண்டேன். அது, கரும்பச்சை டொயோட்டா இல்லை; கரும்பச்சை பிசாசு! டிரைவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் காற்றை அறைந்து கொண்டு காட்டுத்தனமாக அப்படி காரை செலுத்த முடியாது. உள்ளே இருக்கும் டிரைவரை என்னால் பார்க்க முடியவில்லை. காரினுள்...
  13. G

    மலரினும் மெல்லியது காமம் 10

    அந்த நேரத்தில் கணேஷை எதிர்பார்க்காத புவனா திகைத்தாலும் சுதாரித்துக் கொண்டு புன்னகைத்தாள். “வாங்க” “ஸாரி இவ்வளவு காலையில வந்துட்டேன். நான் அவசர வேலையா சென்னை வரைக்கும் போக வேண்டியிருக்கு” “சரிங்க” “நேத்து நம்ம ஸ்கூல் ஹெட் மாஸ்டர் கிட்ட உங்களப் பத்தி பேசினேன். அப்பா அவரு ஒரு விஷயம் சொன்னார்”...
  14. G

    மலரினும் மெல்லியது காமம் 9

    இரவு பத்து மணி. அனிதாவிற்கு உறக்கம் வரவில்லை. அவள் மனதில் மீண்டும் மீண்டும் மாலையில் கண்ட காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. மாமா ஏன் புவனாவுடன் ஒன்றாக வரவேண்டும்? கவுன்சிலராக இருப்பதால் ஏதாவது உதவி கேட்டு புவனா சந்தித்திருப்பாளோ? இல்லையே இருவரும் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்தால்...
  15. G

    மலரினும் மெல்லியது காமம் 8

    அனிதா தன் வீட்டில் அசைன்மென்ட் எழுதிக் கொண்டிருந்தாள். வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். அலமேலு நின்றிருக்க உற்சாகமாய் எழுந்து வந்தாள். “வாங்கத்த” “அப்பா இருக்காராம்மா?” “இருக்கார் அத்த. இதோ கூப்பிடறேன் “ சொன்னபடி “அப்பா” என்று உரக்க அழைத்தாள். “என்னம்மா?” என்று உள்ளே இருந்து குரல் வர...
  16. G

    மலரினும் மெல்லியது காமம் 7

    புவனா என்ன சமைப்பது என்று யோசித்தாள். கத்தரிக்காய் இருந்தது. சாம்பார் வைத்து சாதம் வடித்தாள். அப்பளம் பொறிக்கலாமா என்ற யோசனையைக் கைவிட்டு ஊறுகாய் பாட்டிலைப் பார்த்தாள். இன்றாவது அரவிந்த் நேரத்திற்கு வருவானா? வெளியே பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பைக்கும் தென்படவில்லை...
  17. G

    மலரினும் மெல்லியது காமம் 6

    கணேஷ் தன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்க எதிரில் புவனா வர உள்ளே ஒரு படபடப்பு அவன் கேட்காமலே ஒட்டிக்கொண்டது. அவளை பார்க்கும் போது வரும் உணர்வு அவனுக்கே வியப்பாக இருந்தது. இத்தனைக்கும் பெண்களிடத்தில் அவன் பேசாமல் இல்லை. யாராக இருந்தாலும் பேசுவான். அதற்காக தேவை இல்லாமல் பேசிக்...
  18. G

    மலரினும் மெல்லியது காமம் 5

    புவனா அழைக்கிறாள் என்று ட்ரு காலர் காட்ட கணேஷ் படபடப்பாய் உணர்ர்த்தான். சட்டென்று மொபைலை எடுத்துக் கொண்டு தள்ளிச் சென்றான். “ஹலோ” “என்ன புவனா பேசறேன்” “சொல்லுங்க” “அவரை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க” “ம்” “நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்” “சரிங்க” “ரொம்ப தேங்க்ஸ்” “பரவால்லங்க” மேற்கொண்டு என்ன...
  19. G

    மலரினும் மெல்லியது காமம் 4

    அந்த இரவு நேரத்தில் கணேஷை சற்றும் எதிர்பார்க்காத புவனா அவனை திகைப்பாய் பார்த்தாள். “என்னங்க” “நான் டவுனுக்குப் போயிட்டு வந்துட்டிருந்தேன். அப்ப ஒரு பைக் கீழ விழுந்திருந்தது. யாருன்னு போய் பார்த்தா உங்க வீட்டுக்காரர். கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு. கீழ விழுந்ததில அடிபட்டிருந்தது. அதான் அவரப் போய்...
  20. G

    மலரினும் மெல்லியது காமம் 3

    புவனா கதவைத் திறக்க அரவிந்த் உள்ளே நுழைந்தான். நன்றாகக் குடித்திருந்தான். புவனா ஒன்றும் சொல்லாமல் பார்த்தாள். “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” “வேண்டாம்” “சாப்பிட்டீங்களா?” “உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?” கேட்டபடி உள்ளே சென்றவன் கட்டிலில் படுத்தான். கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்...