"விக்ரமா?" என்றால் நீரஜா அதிர்ந்தவளாய்! நம்ப முடியாதவளாய்!
"ஆமா, விக்ரம்தான். அவனோட அட்ரஸ் சரியா இருக்கா, பாருங்க!"
"நெம்பர் - 42/4, 13 வது குறுக்கு சந்து, பாரதியார் தெரு, குரோம்பேட்டை. ஆமா, சரிதான்! என்னால நம்பவே முடியலையே சார்! இது எப்படி?"
"எப்படின்னு என்னைக் கேட்டா? விக்ரமைத்தான் கேக்கணும். ஏன்னா, அவனோட போட்டோ, ஆதார் கொடுத்துதான் இந்த போன் நெம்பர் வாங்கியிருக்கான்! இந்த நெம்பரில் இருந்துதான் உங்களுக்கு மிரட்டல் கால் வந்திருக்கு! இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு உங்களுக்கு இப்பப் புரியுதா?"
நீரஜா தலையாட்டினாள். அவள் அழகிய கண்களில் சிறுத்தைக்குத் தப்பிய ஒரு மானின் மிரட்சியும் ஆசுவாசமும் இருந்தது.
"இப்போ நீங்க சொன்ன உங்க கதையை - நடந்த சம்பவங்களை - எல்லாம் கோர்வையா சொல்றேன்; சரியா இருக்கான்னு சொல்லுங்க!" என்று நீரஜாவை பார்த்தேன். அவள் இன்னும் அதிர்ச்சி விலகாத இதயத் துடிப்புடனே காணப்பட்டாள். நான் பேச ஆரம்பித்தேன்.
"நீங்க உங்கப்பாவுக்கு ஒரே பெண்ணா?"
"ஆமாம்."
"உங்கப்பாவோட பெரும் பங்கு சொத்து கல்யாணத்துக்குப் பிறகு உங்களுக்கு கிடைச்சுதா?"
"ஆமாம்."
"உங்கப்பாவும் உங்க கணவர் சுவாமிநாதனோட அப்பாவும் பால்ய சினேகிதர்கள். சுவாமிநாதனுக்கு அத்தனை சொத்து இல்லேன்னாலும் உங்க அப்பா உங்களை சுவாமிநாதனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தார் இல்லையா?"
"ஆமா! நானும் ஏதோ ஒரு சூழ்நிலையில் - அது என்னன்னு எனக்கு சொல்ல தெரியல; நானும் சுவாமியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டேன்."
"எது எப்படியோ, உங்களுக்கும் சுவாமிநாதனுக்கும் கல்யாணம் நடந்துடுச்சு! உங்க அப்பா கிட்ட இருந்து உங்களுக்கு சீதனமா பெரும் பங்கு சொத்தும் கிடைச்சது?"
"ஆமாம்."
"அதுக்கு பின்னால ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்க விக்ரமை சந்திக்கிறீங்க?"
"ஆமாம். அது ஒரு சின்ன பர்த்டே பார்ட்டி! என்னோட ஃபிரண்டு சிந்துவுக்கு பர்த்டே! அதை ஒரு ஓட்டல்ல கொண்டாடும் போதுதான் நான் விக்ரமை முதன்முதலா மீட் பண்ணினேன். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு!"
"சரி. அதுக்குப் பிறகு நீங்க விக்ரமோட பழக ஆரம்பிச்சீங்க. பழகப்பழக உங்ககிட்ட இருக்கிற சொத்து மேல அவனோட கவனம் திரும்புது. உங்களோட சேர்ந்து உங்க சொத்தும் அவனுக்கு கிடைக்கனும்னு நினைக்கிறான். அதுக்கு என்ன வழின்னு யோசிச்சு, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை சுத்தி ஒரு சதி வலையைப் பின்ன ஆரம்பிக்கிறான். எப்படி?"
கேட்டுவிட்டு அவளைப் பார்த்தேன். அவள், "எப்படி?" என்றாள்.
"சொல்றேன். திட்டத்தோட முதல் கட்டமா ஒரு புது செல்போனும் ஒரு புது சிம் கார்டும் வாங்குறான். அந்த நம்பரில் இருந்து உங்களுக்கு போன் பண்ணி பேசறான். என்னன்னு? உனக்கும் விக்ரமுக்கும் இருக்கிற உறவைப் பத்தி எனக்கு தெரியும்னு சொல்றான். நீங்க இதை விக்ரம் கிட்ட சொல்றீங்க. விக்ரம் என்ன சொல்றான்? எனக்கும் இது மாதிரி போன் வந்ததுன்னு சொல்றான். நீங்க நம்பறீங்க. ஆனா, விக்ரமுக்கு போன் வந்ததா சொன்னது பொய்யா இருக்கலாம். உங்களை நம்ப வைப்பதற்காக அப்படி சொல்லியிருக்கலாம். இல்லை, விக்ரமே ஒரு ஆளைத் தயார் பண்ணி கூட பேச வெச்சிருக்கலாம். அடுத்து, உங்க கணவருக்கு போன் பண்ணி 'விக்ரமா?'ன்னு விசாரிக்கிறான். உங்க கணவர் ராங் நம்பர்னு வெச்சுட்டார். அதுக்கு அப்புறம் மறுபடியும் உங்களுக்கு ஒரு போன் வருது. அப்போதுதான் அவனுக்கு பணமும் வேணும்; உங்களையும் ஒரு நாளைக்கு வேணும்னு தன்னோட கோரிக்கையை சொல்கிறான்.
நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நீரஜா இடைமறித்து ஒரு கேள்வியை எழுப்பினாள்.
"அப்போ, 'நலம் விரும்பி'ன்னு யாரோ ஒருத்தன் எனக்கு மெசேஜ் செய்தானே? நான் போன் பண்ணி அந்த 'நலம் விரும்பி' கூட பேசினேன். அது வேறு நம்பர்! அது வேறு புது குரலா இருந்தது. இதுக்கு என்ன அர்த்தம்?"
"இந்த ஒரு விஷயம் எனக்குப் புரியலை. நடுவுல புகுந்து ஒரு ஆள் எச்சரிக்கை செய்தது எனக்கு நெருடலாய் இருக்கு. சரி, இதைப் பத்தி நாம் அப்புறம் யோசிப்போம். இப்போ, உங்களுக்கும் விக்ரமுக்கும் இடையில இருக்கிற உறவைத் தெரிஞ்சுகிட்டு, எனக்கு பணமும் வேணும்; உன்னையும் ஒரு நாளைக்கு வேணும்னு ஒருத்தன் மிரட்டுறான். அதாவது, உங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறான். நீங்க இதுக்கு சம்மதிக்கலைன்னா, உங்க கணவர் கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டுறான். நீங்க என்ன பண்றீங்க? விக்ரம் கிட்ட சொல்றீங்க! விக்ரம் என்ன சொல்றான்? உங்க கணவரை விவாகரத்து பண்ணிட்டு என் கூட வந்துடு; நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம்னு சொல்றான். நீங்க உங்க கணவரை விவாகரத்து பண்ணிட்டு விக்ரமை கல்யாணம் பண்ணிக்கிட்டா பிளாக்மெயில் பண்ணினவனால ஒண்ணும் செய்ய முடியாது, இல்லையா? அதைத்தான் விக்ரம் திட்டம் போட்டு காய் நகர்த்தி இருக்கான். ஒரு நெருக்கடிக்கு உங்களை உள்ளாக்கி, விக்ரமை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி செய்யறான்."
நீரஜா பிரமித்து அமர்ந்திருந்தாள்.
"இப்படி எல்லாம் என்னால யோசிக்கவே முடியலையே! இது உண்மையாக இருக்குமா? இப்படித்தான் நடந்திருக்கும்னா சொல்றீங்க?"
"இப்படித்தான் நடந்திருக்கும்! ஆனா, இதுல எதிர்பாராத ஒரு திருப்பம் என்னன்னா... செல்போன் நம்பரை கண்டுபிடிக்கச் சொல்லி நீங்க என்கிட்ட வந்தது. இதை விக்ரம் எதிர்பார்த்திருக்க மாட்டான்!"
"என்னை ஒரு நாளைக்கு வேணும்னு போன்ல மிரட்டினதைச் சொன்னதும் கத்தி எடுத்து அவனைக் கொலை பண்ணாதான் என் ஆத்திரம் அடங்கும்னு சொன்னானே?"
"ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு படத்துல ஒருத்தன் செத்த மாதிரி நடிக்கிறான்! கோடிக்கணக்குல வாங்குற ஹீரோ செத்தவன் போல விழுந்து புரண்டு நடிக்கிறான்! நமக்கு அவங்க நடிக்கிறாங்கங்கிறதே மறந்து போயிடுது. உங்ககிட்ட கோடிக்கணக்கான சொத்து இருக்கு. அதை அடைய இவ்வளவு கூட நடிக்கலன்னா எப்படி?"
நீரஜாவால் நான் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை.
"இதுல எனக்குப் புரியாத விஷயமே 'நலம் விரும்பி'தான்!" என்றேன்.
நீரஜா, "நலம் விரும்பின்னு ஒரு ஆள் இருக்கான்னா… " என்று தன் தலையில் கை வைத்து கொண்டாள். அவள் அழகிய முகம் வேதனையை வெளிப்படுத்தும் போது கன்னச் சதைகள் ஒத்துழைக்க மறுத்தன. எவ்வளவுதான் கடினமான சூழ்நிலையிலும் அவளுக்கு அழுகையும் ஏதோ ஓர் அழகைத்தான் பிரதிபலித்தது. அப்படியானால், அவள் அழுவதற்காகப் பிறந்தவள் அல்ல என்று தோன்றியது. ஆனால், அவளாக ஏற்படுத்திக் கொண்ட சிக்கலான வாழ்க்கையில் இப்படியொரு வேதனையை அவள் ஜீரணிக்க வேண்டியுள்ளது.
"என்ன நீரஜா! ஏன் திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்டீங்க?"
"இல்லை, மாதவன் சார்… எனக்கும் விக்ரமுக்கும் உள்ள உறவு இப்போ இன்னொருத்தனுக்கும் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்?" என்று கேட்டு விட்டு கவலையாக என்னைப் பார்த்தாள்.
நான், "ஆமாம்." என்றேன்.
"என்னை எச்சரிக்கை செய்யறதால அவனுக்கு என்ன லாபம்? அவன் எதுக்கு என்னை எச்சரிக்கை செய்யறான்? யார் அவன்?"
"நீங்க என்னைக் கேக்கற எல்லா கேள்விகளையும் நானே எனக்குள் கேட்டுக்கிட்டு இருக்கேன் நீரஜா. இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்த நலம் விரும்பி பேசிய செல்போன் நெம்பர்ல இருக்கிற உண்மையான பெயர் எத்திராஜ். இந்த எத்திராஜ் செத்து ரெண்டு வருஷம் ஆகுது!"
"என்னது, செத்துப் போயிட்டாரா? அப்போ, செத்துப் போனவனோட செல்போனில் இருந்துதான் நலம் விரும்பின்னு யாரோ ஒருத்தன் எனக்கு மெசேஜ் செய்தானா?"
"ஆமாம். செத்துப் போனவன் நெம்பரில் இருந்துதான் உங்களுக்கு பேசியிருக்கான். நீங்க அவன் கிட்ட பேசினீங்க இல்லை?"
"ஆமாம். உடனே பேசினேன். ஆனா, பேசி கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நெம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு! இதுக்கு என்ன அர்த்தம்?"
"உங்களுக்கு மெசேஜ் பண்றதுக்காக மட்டும்தான் அந்த நெம்பரை பயன்படுத்தி இருக்கான்னு அர்த்தம்! விக்ரம் கிட்ட எச்சரிக்கையா இருன்னு சொல்றதுக்காக மட்டும்தான் செத்துப் போன எத்திராஜ் நெம்பர்லேயிருந்து மெசேஜ் பண்ணியிருக்கான். மெசேஜ் பார்த்துட்டு நீங்க உடனே போன் பண்ணி பேசியதும், போன்லேயும் உங்களை எச்சரிக்கை செய்திருக்கான். அதுக்கப்புறம் ஸ்விட் ஆஃப் அல்லது, அந்த நம்பர் உபயோகத்தில் இல்லைன்னா அந்த சிம்கார்டை தூக்கிப் போட்டுப் போயிட்டான்னு அர்த்தம்!"
"அப்படித்தான் இருக்கணும்."
"அவன்தான் உங்களை தனியார் டிடெக்டிவ் கிட்ட போகச் சொல்லி அட்வைஸ் பண்ணினான், இல்லையா?"
"ஆமாம். அதனால்தான் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சின்னு எப்பவோ விளம்பரம் பார்த்த ஞாபகம் வந்தது. தேடிப் பிடிச்சு உங்க கிட்ட வந்துட்டேன்."
"ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்ட போகச் சொல்லி சொன்னதுக்கு என்ன காரணம்?" என்றேன் யோசனையுடன்.
"என்ன காரணம்?" என்று கேட்டாள் நீரஜா, சந்தேகமாய்.
"போலீசுக்கு போனா உங்களுக்கும் விக்ரமுக்கும் இடையில இருக்கிற தொடர்பு தெரிஞ்சுடும்னு அப்படி சொல்லியிருக்கலாம்."
"ஆமா, அப்படித்தான் இருக்கும். ஆனா, அவனுக்கு என்ன அக்கறை?"
"அது தான் தெரியலை; ஒரே குழப்பமா இருக்கு எனக்கு!"
நான் சிந்தித்தேன். என்னவாக இருக்கும்? எவ்வளவு யோசித்தும் இந்த கேள்விக்கு மட்டும் எனக்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ ஒரு குழப்பம்; ஏதோ ஒரு விஷயம்; ரகசியம்; தந்திரம் இதில் ஒளிந்து இருக்கிறது என்று மட்டும் உள்ளுணர்வு உணர்த்தியது.
"சரி நீரஜா, இது இப்படியே இருக்கட்டும்; இன்னும் ரெண்டு நாள் கழிச்சி உங்களை மிரட்டியவன் உங்களுக்குப் போன் பண்ணுவான் இல்லையா? அவன் அப்படித்தானே சொல்லி இருக்கான்?"
"ஆமாம் அப்படித்தான் சொல்லி இருக்கான். ஆனா, அவன் எனக்கு போன் பண்ணுவானா?"
"ஏன் அப்படி கேக்கறீங்க நீரஜா?"
"என்னை மிரட்டியவன் விக்ரம்தான்னு இப்போ தெரிஞ்சு போச்சு இல்லையா?"
"நமக்கு - அதாவது உங்களுக்கு - தெரிஞ்சுப் போன விஷயம் அவனுக்கு தெரியாது இல்லையா?"
"ஆமா."
"அப்போ போன் பண்ணுவான். இன்னும் உங்களுக்கு நெருக்கடி கொடுக்கிற மாதிரி பேசுவான். உங்க கணவருக்கு விஷயத்தை போட்டு உடைச்சிடுவேன்னு மிரட்டுவான். நீங்க முடியாதுன்னு சொன்னா உங்க கிட்ட இருந்து பணம் கேட்க வாய்ப்பிருக்கு! ஆனா, அவன் என்ன பேசுவான்; எப்படி பேசுவான்; என்ன முடிவெடுக்கிறான்னு நிச்சயமாக நமக்கு தெரியாது. அவன் போன் பண்ணா மட்டும்தான் நம்மால் தெரிஞ்சுக்க முடியும்! தெரிஞ்ச பின்னாடிதான் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு நாம யோசிக்கிறதுக்கு."
"சரி, போன் பண்றன்னே வெச்சுக்குவோம். முன்னே அவன் கேட்ட மாதிரியே பணமும் வேணும்; நீயும் வேணும்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?"
"நான் ஒரு நாளைக்கு உன் கூட வர்றேன்னு சொல்லுங்க! எங்க வரட்டும்னு கேளுங்க!"
மின்சாரத்தைக் குடித்தது போல் வாய்ப் பிளந்து என்னைப் பார்த்தாள் நீரஜா.

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 11
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.