மலரினும் மெல்லியது காமம் 5

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
புவனா அழைக்கிறாள் என்று ட்ரு காலர் காட்ட கணேஷ் படபடப்பாய் உணர்ர்த்தான்.

சட்டென்று மொபைலை எடுத்துக் கொண்டு தள்ளிச் சென்றான்.

“ஹலோ”

“என்ன புவனா பேசறேன்”

“சொல்லுங்க”

“அவரை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க”

“ம்”

“நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்”

“சரிங்க”

“ரொம்ப தேங்க்ஸ்”

“பரவால்லங்க”

மேற்கொண்டு என்ன பேசுவாள் என்று கணேஷ் யோசிக்க புவனா எதுவும் பேசாமல் வைத்து விட கணேஷ் ஏமாற்றமாக உணர்ந்தான். அதே நேரத்தில் அந்த ஏமாற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.

அதிகமாக பேசுவதற்கு அவள் என்ன அவன் காதலியா அல்லது தோழியா? அவள் இவ்வளவு தூரம் பேசியதே அதிகம் தான் என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.

எதற்காக புவனாவின் ஞாபகங்கள் என்னை விடாமல் துரத்துகின்றன? யாருக்கு ஒரு ஆபத்து என்றாலும் உதவுவது என் வழக்கம் தான். அப்படித்தானே இவளுக்கும் உதவினேன் ? புவனாவின் கணவன் என்று நான் அவனுக்கு உதவவில்லை. யார் கீழே விழுந்தாலும் இப்படித்தான் செய்திருப்பேன்.

தனக்குள் பலவாறு யோசித்த கணேஷ் அருகில் அம்மாவின் குரல் கேட்டு நிமிர்ந்தான்.

“என்ன கணேஷ் ரொம்ப யோசிக்கிறே. என்ன விஷயம்?”

கேட்டவள் முகத்தை கவனமாய் பார்த்தான்.

அம்மாவிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது. ஒருவேளை ஒன்றும் சொல்லாமல் போகலாம். அல்லது ஒரு திருமணமான பெண் ஞாபகம் உனக்கு எதற்கு வர வேண்டும் என்று என்னை கடிந்துக் கொள்ளலாம்.

கணேஷ் இப்படி யோசிக்க அனிதா கணேஷை அமைதியாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

போன் அடித்தவுடன் மாமா நம்முன் பேசாமல் தனியாக சென்று பேசுகிறார். அப்படி என்றால் அவர் யாருடன் பேசுகிறாரோ அது மற்றவர்க்குத் தெரியக்கூடாது என்று யோசிக்கிறார். அப்படி ரகசியம் காக்க வேண்டும் என்றால் அது நிச்சயமாக நாம் நேசிக்கும் அல்லது நம்மை நேசிக்கும் ஒருவர் பேசினால்தான்.
மாமா மனசுல வேற யாராவது இருக்காங்களா?

எப்படி தெரிந்து கொள்வது?

அதை எதற்கு நீ தெரிந்து கொள்ள வேண்டும்?

தெரிந்து கொள்ள விருப்பம்.

ஏன்?

தெரியவில்லை.

நீ கணேஷை நேசிக்கிறாயா?

எதற்கு இப்படி ஒரு கேள்வி?

கேட்ட கேள்விக்கு பதில் சொல்.

கேள்வியின் பொருள்?

உலகில் அனைத்து மொழிகளிலும் நேசத்திற்கு பொருள் ஒன்றுதான்.

நேசம் என்றால் என்ன?

சரி வெளிப்படையாகக் கேட்கிறேன் கணேஷ் மீது உனக்கு காதலா?

இல்லை

ம்

ஒரு நிமிடம்

ம்

நான் அவர் மீது பைத்தியம்

அப்படி என்றால் உனக்கு அவன் மீது அபரிதமான நேசம்?

ம்

இது யாருக்காவது தெரியுமா?

தெரியாது.

ஏன்?

யாருக்கும் இப்போது நான் சொல்ல முடியாது.

ஏன்?

இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு தன் காதலை எங்கும் வெளியில் சொல்ல முடியாது.


சொன்னால்?

புரிந்து கொள்ள மாட்டார்கள் மெச்சூரிட்டி இல்லை என்று சொல்வார்கள்.

அனிதா தன்னல் குழம்பினாள். வருடங்களுக்கு முன்பாக கணேஷ் மீதான அவள் நேசம் தொடங்கியிருந்தது.

அவனை நினைத்து ரகசியமாக டைரியும் தினமும் எழுதிக் கொண்டிருக்கிறாள். ஊரில் மற்ற பெண்கள் அவனைப் பற்றி பேசும்போது அவளுக்குப் பற்றிக் கொண்டு வரும். ஆனால் அவள் யாரிடமும் தன் உணர்வை வெளிக்காட்டியதில்லை. அவளுக்கு தோழிகளும் யாரும் இல்லை. ஒரே ஒரு மாமரம் மட்டும் தான் அவளுக்கு தோழி. மனதிற்கு ஏதாவது கஷ்டம் என்றால் அந்த மரத்திடம் போய் சொல்வாள். அந்த மரம் பல நேரங்களில் அவள் கஷ்டத்தை போக்கியிருப்பதாக நம்புவாள்.

இப்போதும் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. கணேஷ் தனியாக போய் மொபைலில் பேசியது அவளை சோகப்படுத்தியது. அதை கவனித்து விட்ட அலமேலு அனிதாவிடம் கேட்டாள்.

“என்னடி ஆச்சு? ஏதாவது பிரச்னையா?”

“ஒண்ணுமில்ல அத்தை”

அவள் ஒன்றும் இல்லை என்று சொல்லும்போதே ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்பது அலமேலுவிற்கு புரிந்தது. ஆனால் அலமேலு மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.

மீண்டும் வீட்டிற்கு போய் சேரும் வரையில் அனிதா யாரோடும் எதுவும் பேசவில்லை.

கணேஷ் கூட அவளை சீண்டினான்.

“அனிதா”

“மாமா”

“கோயிலுக்கு போய்ட்டு வந்தது நல்லதாப் போயிருச்சு”

“எப்படி மாமா ?”

“எப்பவும் ஏதாவது பேசற நீ இப்படி அமைதியா வர்றியே?”

கணேஷ் கேட்க மௌனமாய் பதில் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

அன்று மாலை அனிதா மாமரத்திடம் கேட்டாள்.

‘உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன். என்னோட மாமா எனக்கு கிடைக்கணும். நானா எதுவும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். பெரியவங்க அவங்களா எங்க கல்யாணத்தப் பத்தி பேசணும். என்னையும் என் மாமாவையும் சேர்த்து வைக்கணும். அதுக்கு நீ தான் சப்போர்ட் பண்ணனும். என்னோட மாமா எனக்கு கிடைப்பாரா?’

வழக்கம்போல் மாமரம் ஒன்றும் பேசாமல் லேசாக அசைந்தது. அனிதா அங்கேயே அமர தூரமாய் வந்து கொண்டிருந்த கணேஷ் விழிகளில் பட்டாள். அவளை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத கணேஷ் ஆச்சரியமானான். அவள் அருகில் வந்தான். அவனை சட்டென்று பரவசமாய் பார்த்தவள் எங்கே அவன் தன் உணர்வை கண்டுபிடித்து விடுவானோ என்று எண்ணி பயந்து முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

“அனிதா என்ன பண்றே இங்கே ?”

“சும்மாத்தான் மாமா”

“உன்னை அடிக்கடி இந்த மரத்துப் பக்கமாக பார்க்கிறதா நிறைய பேர் சொல்றப்ப நான் நம்பல. இப்ப நானே பாரத்துட்டேன். என்ன பண்ற? உண்மையச் சொல்லு”

அவன் தன்னை உன்னிப்பாய் பார்த்தபடி கேட்க அனிதா முகம் மலர்ந்தது.

“ஒண்ணுமில்ல மாமா”

“சரி நீ சொல்ற. நான் நம்பறேன்” சொன்னவன் “அப்பா வீட்ல இருக்காரா ?” கேட்டான்.

“இல்ல மாமா வெளியில போயிருக்கார்”

“ம் சீக்கிரமா வீட்டுக்கு போ”

அவன் சொல்ல சரி என்று தலையசைத்தாள்.

செல்லும் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

***

“எங்கடி இருக்கே?” அரவிந்த் அழைக்க புவனா அவன் முன் வந்தாள்.

“கிச்சன்ல இருந்தேன். சொல்லுங்க”

“என்னோட பைக் சாவி எங்க?”

“ஆணில மாட்டி வச்சிருக்கேன்”

“அதை எடு?”

“இப்ப எங்க கிளம்பிட்டீங்க? ஹாஸ்பிடல்ல இருந்து வந்து ஒரு நாள் கூட ஆகல. நல்லா ரெஸ்ட் எடுங்க “

“அந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும் ஜாஸ்தியா பேசாத. சாவி எடு” அரவிந்த் சொல்ல அதற்கு மேல் ஒன்றும் பேசாத புவனா சாவியை எடுத்துக் கொடுத்தாள்.

வாங்கிக் கொண்ட அரவிந்த் பைக்கை ஸ்டார்ட் செய்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பைக் பாரில் இருந்தது.

***

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” சரோஜா டீச்சர் கேட்க புவனா “நைன்த் வரைக்கும் படிச்சேன் மேல படிக்க முடியல” புன்னகையாய் சொன்னாள்.

“மேல படிச்சிருக்கலாமே”

“ஆர்வம் இருந்துச்சி ஆனால் சூழ்நிலை இடம் கொடுக்கல”

“ஆர்வம் இருந்தா போதும்”

“வெறும் ஆர்வம் மட்டும் இருந்தா போதுமா டீச்சர்?”

“கண்டிப்பா போதும்”

“என்ன டீச்சர் சொல்றீங்க என்னால் நம்ப முடியல ”

“பிரைவேட்ல டென்த் எழுதறீங்களா அப்ளை பண்றதுக்கு டேட் இருக்கு.”

டீச்சர் கேட்க புவனாவின் முகம் மலர்ந்தது.

“அது என்னால் முடியமா டீச்சர்?”

“உங்களுக்கு கொஞ்ச வருஷம் கேப் ஆயிடுச்சு. ஆனாலும் கண்டிப்பா முடியும்”

“அப்ப என்ன பண்ணனும்?”

“சி இ ஓ ஆஃபீஸ்க்கு போங்க. அங்க ஃபார்ம் கொடுப்பாங்க. அத வாங்கி ஃபில்லப் பண்ணனும்”

“ம்”

“அது எதுக்குன்னா பிராக்டிக்கல் கிளாஸ் ஃபார்மாலிட்டி.”

“சரி டீச்சர்”

“புவனா”

“சொல்லுங்க டீச்சர்”

“உங்க குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும். நம்மள மாதிரி பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். படிப்பு நமக்குத் தர்ற நம்பிக்கையை வேற யாரும் … நாம எவ்வளவு நேசிச்சாலும் சரி.. இல்ல நம்மள எவ்வளவு நேசிச்சாலும் சரி…மனுஷங்க யாரும் தர முடியாது.”

சரோஜா டீச்சர் சொல்ல புவனா தலையாட்டினாள்.

***

வழக்கம்போல் குடித்து விட்டு வந்த அரவிந்த்தைப் பார்த்து பெருமூச்சு விட்ட புவனா ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள்.

“என்ன பண்ணியிருக்க?”

“புதினா ரைஸ் காலிபிளவர் வறுவல்”

அவள் சொல்ல அவன் முகம் மாறியது.

“சை “ அவன் சொல்ல புவனா திகைத்தாள்.

“என்னாச்சுங்க ?”

“போய் ஆம்லெட் போட்டு கொண்டு வா போ”

“ம்”

ஆம்லெட் போட்டு எடுத்து வந்தவள் அவன் தட்டில் வைத்தாள்.

அவன் சாப்பிட்டு முடித்து சோபாவில் உட்கார அவனிடம் மெதுவாக ஆரம்பித்தாள்.

“ஏங்க”

“ம்”

“வந்து நான் ஒரு விஷயம் சொல்லுவேன் நீங்க கோவப்படக்கூடாது”

“அப்படி என்ன விஷயம் சொல்லு?”

“நான் படிக்கப் போகவா?”

“உலகம் அழியும்னு சொல்றப்ப நான் நம்பல. இப்ப நான் நம்பறேன்” அரவிந்த் கேலியாகச் சொல்ல புவனா தளர்த்தாள்.

“நானும் வீட்ல சும்மா தான் இருக்கேன்”

“அதுக்கு?”

“எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு”

“பொழப்பப் பாருடி. இப்ப நீ படிச்சு என்ன கிழிக்கப் போறே?” சொன்னவன் மேற்கொண்டு அவள் பதிலைக் கேட்கப் பிடிக்காமல் “படிக்கிறாளாம் வந்துட்டா “என்றபடி எழுந்து படுக்கையறைக்குள் சென்றான்.

தன் விதியை நொந்து கொண்ட புவனா மேற்கொண்டு எதுவும் பேச பிடிக்காமல் சாப்பிட்ட பாத்திரங்களை கொண்டு போய் சிங்கிள் வைத்தாள்.

“எங்கடி இருக்கே?” அரவிந்த் படுக்கையறையிலிருந்து கத்த புவனாவிற்கு புரிந்தது அவன் எதற்கு கத்துகிறான் என்று. அவன் கூப்பிட்டது காதில் கேட்காதது போல் நின்று கொண்டிருக்க அவன் மீண்டும் கத்தினான்.

“வாடி இங்க”

புவனாவிற்கு உள்ளே செல்லப் பிடிக்கவில்லை. அவள் அவனை கண்டுகொள்ளாமல் இருக்க ஆத்திரமாக வெளியே வந்தான்.

“கூப்பிட்டது காதுல கேக்கலையா?”

அவன் கேட்க அவள் மௌனமாய் நிற்க அவனுக்கு கோபம் அதிகமானது.

“என்னடி திமிர் *** பண்றியா?” கேட்டான். அவள் அமைதியாக மிக அமைதியாக “நான் இல்லை” என்றாள்.

“அப்ப நானா?” என்று அவன் உச்சகட்ட கோவத்தில் கேட்க

“நான் அப்படி சொல்லல” என்று மிகவும் கேஷூவலாகச் சொன்னாள்.

அருகில் வந்தவன் சட்டென்று அவளை புன்னகையுடன் பார்த்தான்.

புவனாவிற்கு அவன் நடிப்பைப் பார்க்க கடுப்பாக வந்தது. காமத்திற்காக நடிக்கிறான். என்ன ஒரு கேவலமானவன். அவள் அவன் முகத்தைப் பார்க்க அதில் வெறி மட்டும்தான் தெரிந்தது. அவனைப் பார்ப்பதை தவிர்த்து வேறு எங்கோ பார்த்தாள்.

அவன் அவள் கையைப் பற்றி இழுத்தபடி உள்ளே செல்ல அவளும் வேறு வழியின்றி தொடர்ந்தாள்.

அவளைக் கட்டிலில் தள்ளியவன் அவசர அவசரமாக அவள் ஆடைகளை களைய ஆரம்பித்தான்.

தொடரும்
 

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 5
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.