சைக்யாட்ரிஸ்ட் 8
போலீசின் ஒரு பெரும் பிரிவு V ட்ரக்ஸை ரவுண்ட் அப் செய்திருந்தது. செய்தி சேனல்கள் தங்கள் வாகனங்களில் வெளியே காத்திருந்தனர்.
வித்யாசாகர் கலக்கமாய் உட்கார்ந்திருக்க விஷால் அவரிடம் கேட்டான்.
“கம்பெனி டாக்குமெண்ட்ஸ் எங்கே?”
“எனக்கு தெரியாது”
“நீங்கதானே எம் டி ?”
“ஆமா”
“அப்ப அதெல்லாம் உங்க கஸ்டடிலதானே இருக்கணும்?”
“ஆமா”
“அப்ப அதெல்லாம் எங்கே?”
“எனக்கு தெரியாது”
“உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியா கேட்டுட்டிருக்கேன். என் பொறுமைய சோதிக்காதீங்க “ விஷால் சொல்ல வித்யாசாகர் திடீரென்று எழுந்து கத்தினார்.
“பணம் இல்லாம என்னைப்படைச்சது என்னோட தப்பா? அது கடவுளோட தப்பு”
“நேர்மை நீதி நியாயம் இதெல்லாம் யாரும் பார்க்கறது இல்ல. நான் மட்டும் பார்த்து என்ன பண்ணப் போறேன்?”
விஷால் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.
வித்யாசாகர் பேப்பர் வெயிட்டை எடுத்து டேபிளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை ஓங்கி அடித்தார். கண்ணாடி தெறித்து விழுந்தது.
ஒரு கண்ணாடித்துண்டை கையில் எடுத்தவர் “கடைசில நீ சொன்ன மாதிரியே நான் சாகப் போறேன். உனக்கு நிம்மதி தானே? “ கேட்டபடி தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயல விஷால் பாய்ந்து சென்று அவர் கையில் இருந்த கண்ணாடித் துண்டை பறித்து எறிந்தான்.
“விஷ்ணு என்ன நடக்குது இங்கே?” விஷால் கேட்க விஷ்ணு தயக்கமாய் பதில் சொன்னான்.
“சார் எம்டி சார் அந்த மாத்திரையை சாப்பிட்டிருக்காரு. அதான் இப்படி பிஹேவ் பண்றார்.”
“அவர ஹாஸ்பிட்டல்க்கு கொண்டு போக அரேஞ்ச் பண்ணுங்க “ நின்றிருந்த கான்ஸ்டபிள்களுக்கு சொன்ன விஷால் மனதில் வித்யாசாகர் சொன்னது மீண்டும் மீண்டும் ஓடியது.
‘கடைசியில நீ சொன்ன மாதிரியே நான் சாகப் போறேன்’
அப்படின்னா அதுக்கு என்ன மீனிங் ? யாரோ ஒருத்தன் வித்யாசாகருக்கு மாத்திரை கொடுத்திருக்கான். சாகச் சொல்லியிருக்கான். ஆனா லாஜிக் இடிக்குது. ஒரு கம்பெனிக்கு எம்டி கிட்ட இப்படி யாரால சொல்ல முடியும்?
எங்கேயோ தப்பு நடக்குது. எங்கே?
முத்துகிருஷ்ணன் விஷால் அருகில் வந்தார். சல்யூட் செய்தார்.
“சார்”
“சொல்லுங்க”
“பிளான்ட்டுக்கு சீல் வச்சாச்சு”
“குட்”
“இப்ப அடுத்து என்ன சார் பண்றது?”
“வித்யாசாகர் எப்படி இருக்காருன்னு பார்ப்போம். அவர் வாய் திறந்து பேசினா ஸ்டேட்மெண்ட் வாங்குங்க. ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணி கவர்மெண்ட்க்கு சப்மிட் பண்ணனும். “
“ஓகே சார்”
“பிரஸ் வெளியே இருக்காங்க. அவங்க கிட்ட விசாரணை இன்னும் போயிட்டிருக்குன்னு சொன்னா மட்டும் போதும் “
“யெஸ் சார்”
விஷால் முத்துகிருஷ்ணன் இருவரும் வெளியேறும்போது பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.
“சார் நாங்க கேள்விப்பட்ட விஷயம் உண்மையா?”
“என்ன கேள்விப்பட்டீங்க?”
“V ட்ரக்ஸ் கம்பெனி அப்ரூவல் இல்லாம ஒரு மாத்திரையை தயாரிச்சு அதன் மூலம் நிறைய பேரை சாகடிச்சிருக்குன்னு..” ரிப்போர்ட்டர் கேள்வியை முடிக்கும் முன் விஷால் குறுக்கிட்டான்.
“விசாரணை போயிட்டிருக்கு இப்ப நாங்க எதுவும் சொல்ல முடியாது “
“கம்பெனி எம்டி வித்யாசாகர் தற்கொலை முயற்சிங்கிறது பொய். போலீஸ் தான் ஏதோ பண்ணியிருக்குன்னு..”
கேட்ட ரிப்போர்ட்டரை கடுப்புடன் பார்த்த விஷால் பதில் சொன்னான்.
“இப்போ உங்களோட சந்தேகத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது”
***
டிவியில் விஷாலின் பேட்டியைப் பார்த்த தேவ் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றான்.
“ராஸ்கல் டேய் உன்னை நான் விடமாட்டேன் டா “ கத்தினான்.
“சந்திரசேகர்” உரக்க அழைக்க அவர் ஓடி வந்தார்.
“என்ன சார் சொல்லுங்க”
“யார் இவன்? இவனால என்னை ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சேன் . ஆனா இவன் என்னோட கம்பெனியை சீல் வச்சுட்டான். ஒரு சாதாரண போலீஸ்காரன் என்னோட சாம்ராஜ்யத்தை அசைச்சுப் பார்த்துட்டான். நான் அவனை விட மாட்டேன் சந்திரசேகர். நீங்க கையில் வைத்திருக்கிற டேப்லட் என்கிட்ட கொடுங்க. அந்த விஷால் எனக்கு வேணும் இந்த டேப்லட் சாப்பிட்டு அவன் துடிச்சுச் சாகணும். “ தேவ் சொல்ல சந்திரசேகர் அவனை பரிதாபமாய் பார்த்தார்.
“சார் நான் ஒண்ணு சொல்லவா?”
“சொல்லுங்க”
“நீங்க ரொம்ப எமோஷனலா இருக்கீங்க. இப்ப நீங்க ஏதாவது பண்ணப்போய் அது உங்களுக்குத் தான் எதிராத் திரும்பிடும் . அதுமட்டுமல்ல அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன் “
“என்ன சொல்றீங்க?”
“குற்றவாளிங்க யாராயிருந்தாலும் அவர்கிட்ட இருந்து உயிரை காப்பாத்திக்க ஒரே வழி சரண்டர் ஆகிறது மட்டும்தான் “
டாக்டர் சந்திரசேகர் சொல்ல தேவ் ஆத்திரமானான்.
“என்ன சந்திரசேகர் அவனுக்கு பில்டப் கொடுக்கறீங்களா?”
“இல்ல சார் அவருக்கு பில்டப் கொடுக்கவே வேண்டாம். அவர் பேரைப் பார்த்தாலே தெறிச்சு ஓடுறவங்க ரொம்ப ஜாஸ்தி பேர். அதனால…”
“அதனால …?”
“கவனமா இருங்க சார். இப்போதைக்கு அவர் மேல உங்களோட கவனம் வேண்டாம் “
டாக்டர் சந்திரசேகர் தீர்மானமாகச் சொல்ல தேவின் விழிகள் சிவந்தன.
***
போலீஸ் ஸ்டேஷன்.
விஷால் முன் வந்து நின்றார் முத்துக்கிருஷ்ணன்.
“சார்”
“சொல்லுங்க முத்துகிருஷ்ணன்”
“ B1 ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வரதராஜன் போன் பண்ணியிருந்தார்.”
“என்ன விஷயம்?”
“ஹோட்டலுக்கு ரெய்டுக்குப் போறப்ப அங்க ஒரு நார்த் இந்தியன் அவர் கிட்ட மாட்டியிருக்கான். அங்க இருக்கிற கட்சியில் ஏதோ பொறுப்பில் இருக்கான் போல இருக்கு. டேப்லட்ஸ் நிறைய பேருக்கு கொடுத்து சாகடிக்கப் போறேன்னு பேசியிருக்கான். வரதராஜன் சந்தேகப்பட்டு அவனை ஸ்டேஷன் க்கு கொண்டு வந்திருக்கார்.”
விஷால் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“அவன் இப்ப எங்க இருக்கான்?”
“இப்போ வந்துட்டே இருப்பார்..” சொன்ன முத்துகிருஷ்ணன் வாசலைப் பார்த்து “ வந்துட்டார் “ என்றார்.
வரதராஜன் விடைபெற்று சென்றுவிட விஷால் அந்த வட இந்தியனைப் பார்த்தான்.
“யார் நீ?”
“ அந்தக் கட்சியோட மாநிலச் செயலாளர்”
“எந்த ஸ்டேட் ?”
அவன் சொன்னான்.
“என்னமோ மாத்திரை கொடுத்து நிறைய பேரைக் கொல்லப் போறதா சொன்னியா?”
விஷால் கேட்க அவன் அமைதியாக நின்றான்.
“கட்சிய வளர்க்கணும்னா ஏதாவது நல்ல கொள்கையோட கட்சியை வளர்க்கப் பாரு. இங்க வந்து எந்த கலவரம் பண்ணியும் கட்சிய வளர்க்க முடியாது. புரியுதா?”
“சரி சார்”
“கிளம்பு” என்ற விஷால் ஒரு நிமிடம் என்றான்.
“சார்”
“உன்கிட்ட டீல் பேசுனது யாரு?” கேட்ட விஷால் வித்யாசாகரின் போட்டோவைக் காட்டி இவனா என்றான்.
“இல்ல சார். அது இவன் இல்ல.”
“வேற யாரு? ஆள் ஞாபகம் இருக்கா?”
விஷால் கேட்க அவன் யோசித்தான்.
“சாரி பேர் தெரியல”
“உன்னை யார் அங்க கொண்டு போனது?”
“நீரஜ்”
***
குன்னூர்.
‘விஷால் சீக்கிரம் டூட்டி முடிச்சிட்டு வா நான் உனக்காக காத்துட்டிருக்கேன். நான் மட்டுமல்ல நம்ம பாப்பாவும் தான். அப்பா சீக்கிரம் வரச்சொல்லுன்னு பாப்பா சொல்லிட்டிருக்கு.
மிஸ் யூ’
மெசேஜை அனுப்பிய ஆர்த்தி மீண்டும் எடுத்த விஷால் பார்த்து விட்டானா என்று பார்த்தாள். அது இன்னும் ப்ளூ டிக் ஆகாமல் இருப்பதைப் பார்த்து மெலிதாய் ஏமாற்றமடைந்தாள்.
“ஆர்த்தி”
நஞ்சுண்டேஸ்வரா அழைத்தார்.
“சொல்லுங்கப்பா”
“எதுக்கும்மா இந்நேரம் போய் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கே. வீட்டுக்குள்ள வந்து உட்காரும்மா “
அழைக்க “ சரி “ என்று எழுந்தாள்.
வீட்டிற்குள் செல்லும் பொழுது எதார்த்தமாக சாலை மீது அவள் பார்வை பதிய அவர்கள் தெரிந்தனர். ஆர்த்தியின் மனம் துணுக்குற்றது.
‘யார் அவர்கள் எதற்காக இங்கேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏதோ ஆபத்து’
யோசித்தவள் உள்ளே நுழைந்து கதவைப் பூட்டினாள்.
அப்பாவிடம் சொல்லி எச்சரிக்கை செய்யலாமா என்று யோசித்தவள் ‘வேண்டாம் தேவையில்லாமல் அவரும் கலவரம் அடைவார்’ யோசனையை கைவிட்டாள்.
உள்ளே சென்றவள் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியாகப் பார்க்க அவர்களைக் காணோம்.
யாரையோ பார்த்து தேவையில்லாமல் பயந்துவிட்டேன்
யோசித்த ஆர்த்தியின் காதில் கேட்டது அழைப்பு மணி சத்தம்.
“யாரு ?” என்று கேட்டபடி கதவைத் திறக்க வந்த நஞ்சுண்டேஸ்வராவைப் பாய்ந்து போய் தடுத்தாள் ஆர்த்தி.
“அப்பா கதவைத் திறக்காதீங்க “ அவள் கிசுகிசுப்பாகக் சொல்ல அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னம்மா சொல்ற யாரு அவங்க ?”
“தெரியலப்பா”
இருவரும் கதவைத் திறக்காமல் இருக்க கதவை வெளியில் இருந்து யாரோ உடைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.
நஞ்சுண்டேஸ்வரா யோசித்தார்.
“ஆர்த்தி”
“அப்பா”
“சீக்கிரமா மாடிக்குப் போ. அங்க போனதுக்கப்புறம் கதவை பூட்டிட்டு அங்கயே இரு. இங்கு என்ன நடந்தாலும் கீழ வந்திடாத” அவர் சொல்ல மாட்டேன் என்று தலையசைத்தாள்.
“ஏன் ஆர்த்தி?”
“நீங்களும் வாங்க ரெண்டு பேரும் போலாம்”
“சொல்றதை கேளு சீக்கிரம் போ” அவர் தன் இரு கைகள் எடுத்துக் கும்பிட்டு கேட்க ஆர்த்தி பதறினாள். அவரை திரும்பி திரும்பி பார்த்தபடியே மாடிப்படி ஏறினாள். மாடிக்கு வந்தவள் கதவைத் தாழிட்டாள். அதே நேரம் கீழே கதவு உடைந்த சத்தம் கேட்டது.
ஆர்த்தி பதட்டமாய் விஷாலுக்கு அழைத்தாள்.
***
விஷாலின் மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தான்.
புதிய எண்.
“ஹலோ “
“விஷால் நான்தான். நீ தேடிட்டிருக்கிறவன் பேசுறேன்.” தேவ் சொல்ல விஷாலுக்குப் புரிந்தது.
“யார் நீ எங்க இருந்து பேசற?”
“நான் அதச் சொல்றதுக்கு உனக்கு போன் பண்ணல விஷால்”
“வேற எதுக்கு போன் பண்ணியிருக்கே?”
“என்னோட கம்பெனிக்கு சீல் வச்சுட்டே. நான் இதுவரை கட்டிக் காத்த சாம்ராஜ்யத்தை அழிச்சிருக்கே. அப்படியே மனசு குளுகுளுனு இருக்கு உனக்கு நான் பரிசு கொடுக்க வேண்டாமா?’
தேவ் கேட்க விஷால் அமைதியாக இருந்தான்.
“என்ன பரிசுன்னு நீ கேட்கணும் விஷால்”
“என்ன பரிசு?”
“உன்னோட பொண்டாட்டியோட சாவு” தேவ் சொல்ல விஷால் தன்னையும் மீறி கத்தினான்.
“என்னடா சொல்ற?”
“இன்னும் அரை மணி நேரத்துல உன் பொண்டாட்டி செத்துப் போய்ட்டாங்கற நியூச நீ தாராளமா எதிர் பார்க்கலாம் என்னோட ஆளுங்க அங்க உன் பொண்டாட்டி வீட்டுல தான் இருக்காங்க”
“டேய் நீ யாருன்னு எனக்கு தெரியல உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன் அங்க எதுவும் பண்ணிடாத ப்ளீஸ் அப்படின்னு உன்கிட்ட கெஞ்சிட்டிருப்பேன்னு நினைக்கிறியாடா? “ விஷால் கேட்க தேவ்க்கு ஒன்றும் புரியவில்லை.
“விஷால் நீ என்னுடைய எச்சரிக்கையை சீரியஸா கன்சிடர் பண்ணலன்னு நினைக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்துல கண்டிப்பா நான் சொன்னது நடக்கும்”
“டேய் நான் ஒன்னு சொல்றேன் நீ கேளு. பத்து நிமிஷத்துல உன்னோட ஆளுங்க எல்லாரும் குன்னூரில் இருந்து வெளியே இருக்கணும். இல்லைன்னு வை .”
“இல்லேன்னா…”
“எல்லாருக்கும் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல அட்மிஷன் உண்டு”
“என்ன விஷால் பூச்சாண்டி காட்டறே?”
“பூச்சாண்டி இல்ல சிங்கம்”
“என்ன சொல்ற?”
“உன்னோட ஆளுங்கள்ல ஒருத்தனையும் விடாம எல்லாரையும் வேட்டையாட அங்க ஒரு சிங்கம் இருக்கு. அந்த சிங்கத்துக் கிட்ட மாட்டிகிட்டு செத்துப் போகாம எல்லாரையும் ஊருக்கு போகச்சொல்லு.”
“யார்றா அந்த சிங்கம்?”
“என்ன பயமா இருக்கா? யாருன்னு தெரிஞ்சுக்கணுமா? அடுத்த எபி வரைக்கும் வெயிட் பண்ணு”
தொடரும்.

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 8
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.