சைக்யாட்ரிஸ்ட் 4
விஷாலைப் பார்த்த ஜானியின் முகம் மாறியது.
“மனோகரா சட்டுன்னு கிளம்பு. போகணும்”
“என்ன ஜானி சொல்ற? இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கோம்?”
“ஆபத்து புரிஞ்சுக்க” ஜானி அடி குரலில் சொல்ல மனோகரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்ற? “என்று கேட்டபடி சுற்றுமுற்றும் பார்த்தான்.
ஜானி சட்டென்று எழுந்து டாய்லெட்டுக்குள் நுழைந்தான். சற்று நேரம் உள்ளே இருந்தவன் மெதுவாக கதவைத் திறந்து கொண்டு எட்டிப் பார்க்க விஷால் புன்னகைத்தான்.
“ என்ன ஜானி டாய்லெட் போயிட்டியா? என்னப் பார்த்தா கிரிமினல்ஸ்க்கு டாய்லெட் போகத் தோணும்தான். ஆனா ரொம்ப நேரம் நான் வெயிட் பண்ண முடியாது. போலாமா?” விஷால் கேட்க ஜானி சட்டென்று தன் பட்டன் கத்தியை எடுத்தான்.
“நான் மோசமானவன் கிட்ட வராத”
“என்ன ஜானி காமெடி பண்றே? மோசமானவனத் தூக்கி உள்ளே போடறது தான் என் வேலையே” சொன்ன விஷால் பளார் என்று ஜானி கன்னத்தில் அறைய பொறி கலங்கி விழுந்தவன் சுதாரித்து எழ முயன்று முடியாமல் தலை சுற்றி மீண்டும் விழுந்தான்.
அவன் மயக்கமாகக் கிடந்ததைப் பார்த்த விஷால் தன்னையே நொந்து கொண்டான்.
‘சே கொஞ்சம் மெதுவா அடிச்சிருக்கணும்’
யோசித்தவன் வாட்டர் குளோசெட் பைப்பை ஜானியின் முகத்திற்கு நேராக வைத்து தண்ணீரை அடிக்க ஜானி மெல்ல அசைந்தான்.
“டேய் இன்னும் மயக்கமா கிடந்தேன்னு வை. ஒரே மிதிதான். ஒரு மாசத்துக்கு படுக்கையில் தான் இருக்கணும். பரவாயில்லையா?” விஷால் கேட்க “சார்” என்று பயமாய் அலறினான்.
“வாடா”
ஜானி வலியால் நொண்டியபடி நடக்க மனோகரன் எதிரில் வந்தான்.
விஷாலை முறைத்தான்.
“யார் நீ என்னோட ஃபிரண்ட அடிச்சு இழுத்துட்டுப் போறே? உயிர் மேல ஆசை இல்லையா?” மனோகரன் கேட்க ஜானி மனோகரனை பாவமாய் பார்த்தான்.
ஜானி இமைகள் மூடியது மட்டும்தான் அவனுக்குத் தெரியும். மனோகர் ஓடிக்கொண்டிருந்த ஃபேன் மீது மோதி எவர் டேபிள் மீதோ விழுந்து அலறினான்.
“டேய் காட்டான். என்னையே அடிச்சுட்டியா?” மனோகரன் கத்த ஜானி விஷாலை பயமாய் பார்த்தான்.
விஷால் ஜானிடம் திரும்பி கேட்டான்.
“யார் அவன் உன்னோட கூட்டாளியா?”
“இல்ல சார் ஃப்ரண்ட்”
“அவனும் ஏதாவது தப்பானவனாத்தான் இருப்பான். நீ என்ன பண்றே?”
“சார்”
“ஒரு ஆட்டோ பிடிச்சுக்க அவனையும் தூக்கி ஆட்டோல போடு நீங்க ரெண்டு பேரும் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றதுக்குள்ள அங்க இருக்கணும். “
“சார்”
“சொன்னது புரிஞ்சதா? நான் வர்றதுக்குள்ள நீ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். இல்லன்னா டைரக்டா மார்ச்சுவரிதான்.” விஷால் சொல்ல ஜானி பதறினான்.
“நான் இருப்பேன் சார்”
***
“மாப்பிள்ள எங்கம்மா போயிட்டார்?” நஞ்சுண்டேஸ்வரா கவலை தோய்ந்த குரலில் கேட்க ஆர்த்தி புன்னகைத்தாள்.
“அவருக்கு கேஸ் எதுவும் வரக்கூடாது இந்த வெக்கேஷன்ல நானும் அவரும் சந்தோஷமா இருக்கணும்னு வேண்டியிருந்தேன். ஆனா இங்க வந்து இறங்கிறப்பவே அவருக்காக ஒரு கேஸ் காத்திட்டிருக்கிறப்ப நாம என்னப்பா பண்ண முடியும்?” ஆர்த்தி சொல்ல நஞ்சுண்டேஸ்வரா பெருமூச்சு விட்டார்.
“உனக்கு இது கஷ்டமா இல்லையாம்மா?”
“ஒரு பர்சன்ட் கூட இல்ல. அவர விட எனக்கு அவர் யூனிஃபார்ம் ரொம்ப பிடிக்கும்.” ஆர்த்தி சொல்ல நஞ்சுண்டேஸ்வரா சிரித்தார்.
“சரி வாம்மா சாப்பிடலாம்” சொன்னவர் உள்ளே நுழைய ஆர்த்தி தலை சுற்றுவது போல் உணர்ந்தாள். வாந்தி வருவது போல் தோன்ற வாஷ்பேசின் நோக்கி ஓடினாள்.
ஆர்த்தி வாந்தி எடுத்ததைப் பார்த்த நஞ்சுண்டேஸ்வரா பதறினார்.
“என்னம்மா ஆச்சு? கிளம்புமா டாக்டர் கிட்ட போலாம் “ அவர் சொல்ல முகத்தைத் துடைத்த ஆர்த்தி “வேண்டாம் பா” என்றாள்.
“என்னம்மா சொல்ற கிளம்புமா”
“அப்பா”
“சொல்லுமா”
“எனக்கு நாள் தள்ளிப்போயிருக்குப்பா” ஆர்த்தி சொல்ல நஞ்சுண்டேஸ்வரா பரவசமாக உணர்ந்தார்.
ஆர்த்தியின் தலை மீது கை வைத்து
“எப்பவும் நீ நல்லா இருக்கணுமா” என்று ஆசீர்வதித்தார்.
“அப்பா”
“சொல்லுமா”
“அவருக்கு போன் பண்ணி கொஞ்சம் வரச் சொல்லுங்கப்பா “
“இப்பவே பண்றேன் மா “ சொன்னவர் தன் மொபைலை எடுத்து விஷாலுக்கு அழைத்தார். ரிங் போனது போய்க்கொண்டே இருந்தது விஷால் எடுக்கவில்லை.
***
ஜானி மனோகரன் இருவரையும் பார்த்த இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விஷாலை திகைப்பாய் பார்த்தார்.
“சார் .. இவங்க?”
“இதோ இவன் பேர் ஜானி இவன் ஒரு ரவுடி. உங்கள மிரட்டின மாவட்ட செயலாளருக்கு இவன் தான் வலது கை. இன்னும் சொல்லப்போனா உங்களை மிரட்டுனது மாவட்ட செயலாளர் இல்ல . இவன்தான் அவர் பேசற மாதிரி பேசி மிரட்டியிருக்கான். அதுக்கான ஆதாரம் உங்க மொபைல்ல இருக்கிற கால் லிஸ்ட்ல எட்டாவது கால் இவன் பேசினது. உங்கள மிரட்டிட்டு இவன் சிம்மைத் தூக்கிப் போட்டுட்டான். ஆனா அந்த நம்பர் கடைசியா எங்க ஆக்டிவா இருந்ததுன்னு நான் செக் பண்ணினேன். நீங்க சொல்ற கட்சியோட ஆபீஸ்லதான் அது ஆக்டிவேட் ஆயிருக்கு, ஆனா அந்த மாவட்ட செயலாளர் அன்னிக்கு ஊர்ல இல்ல. அவர் சென்னை போயிருக்கார். அப்ப வேற யார் அந்த மாதிரி பண்ண முடியும்னு விசாரிச்சேன். இவன்தான் அவருக்கு வலது கைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்கு மிரட்டல் கால் வந்தது மத்தியானம் 12:30 மணிக்கு. மத்தியானம் 12:45 மணிக்கு இவன் ட்ராஃபிக் சிசிடிவி கேமராவில் மாட்டிபிருக்கான். இவனப் புடிச்சா மேற்கொண்டு இந்த கேஸ்ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க முடியும்னு தோணுச்சு. இவனைத் தேடி இவன் வீட்டுக்கு போனேன் அங்கே இவன் இல்லை. விசாரிச்சதுல வழக்கமா அந்த டைம் பார்ல இருப்பான்னு சொன்னாங்க. எதுக்கும் போய் பார்க்கலாம்னு தோணுச்சு. அங்க தான் இருந்தான்.”
“இவன் சார்?” முத்துகிருஷ்ணன் மனோகரனைக் காட்டி கேட்க
“இவன் யாருன்னு தெரியல. தானா வந்து என்கிட்ட வாங்கிக்கட்டிட்டு இங்க வந்திருக்கான். விசாரிங்க ஏதாவது சொன்னாலும் சொல்வான் “ விஷால் சொல்ல முத்துகிருஷ்ணன் தலையசைத்தார்.
ஜானி மனோகரன் இருவரின் மொபைல்களும் டேபிளில் வைக்கப்பட்டன. இருவரையும் ஒரு கான்ஸ்டபிள் லாக்கப்பில் அடைத்தார்.
முத்துகிருஷ்ணன் லத்தியை எடுத்தார். லாக்கப்பிற்குள் சென்றார்.
ஜானியைப் பார்த்தவர் ஆத்திரமானார். லத்தியை வீசினார்.
ஜானி வலியால் துடிக்க மனோகரன் இன்ஸ்பெக்டரை பயமாய் பார்த்தான்.
“சொல்லுடா யார் சொல்லி என்னை மிரட்டினே?” முத்துகிருஷ்ணன் அடிப்பதை நிறுத்தாமல் கேள்வி கேட்க ஜானி துடித்தபடி கத்தினான்.
“சார் நான் ஒரு அப்பாவி எனக்கு ஒன்னும் தெரியாது என்னை அடிக்காதீங்க “
“என்னடா எப்ப போலீஸ் கிட்ட மாட்டினாலும் இப்படித்தான் சொல்லணும்னு உன்னோட லாயர் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா?” கேட்ட முத்துகிருஷ்ணன் ஜானியை எட்டி உதைக்க அவன் சுவரில் மோதி மல்லாக்க விழுந்தான். இன்ஸ்பெக்டரின் பார்வை மனோகரன் மீது நிலைத்தது.
“நீ யாருடா உனக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஜஸ்ட் பேசிக்குவோம் சார் அவ்வளவுதான்.” மனோகரன் பயத்தை விழுங்கியபடி சொல்ல இன்ஸ்பெக்டர் அவனை உன்னிப்பாய் பார்த்தார். லத்தியால் அவன் முதுகில் விளாசினார். மனோகரன் கதறித் துடித்தான்.
“ஐயோ சார் அடிக்காதீங்க சார் ப்ளீஸ்”
“சொல்லுடா உனக்கு இந்தக் குற்றத்தில என்ன பங்கு ?”
“சார் ப்ளீஸ் என்ன நம்புங்க சார் நான் ஒரு அப்பாவி” அவன் சொன்னதை ஏற்காத இன்ஸ்பெக்டர் அவனைத் தொடர்ந்து விளாசினார்.
வெளியே அமர்ந்த விஷால் தான் மொபைலை எடுத்துப் பார்க்க அதிர்ந்தான்.
மாமா மூணு முறை கால் பண்ணி இருக்கார். என்ன விஷயமா இருக்கும்?
யோசித்தவன் நஞ்சுண்டேஸ்வரா எண்ணிற்கு அழைத்தான்.
அவர் எடுத்தார்.
“சொல்லுங்க மாமா கால் பண்ணி இருக்கீங்க போல. நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன்.”
“மாப்ள ஒரு நல்ல விஷயம் எப்படி சொல்றதுன்னு தெரியல” மறுமுனையில் அவர் கண்கலங்குவதை விஷால் உணர முடிந்தது.
என்னாச்சு மாமா ? ஏன் இப்படி பீல் பண்ணனும் ? என்ன விஷயமா இருக்கும்?
“சொல்லுங்க மாமா என்ன விஷயம்?”
“மாப்ள” அழைத்த நஞ்சுண்டேஸ்வரா ஒரு நிமிட இடைவெளி விட்டு தொடர்ந்தார் “நீங்க அப்பா ஆகப் போறீங்க மாப்பிள்ளை “
விஷால் சட்டென்று பரவசமானான்.
“மாமா*
“சொல்லுங்க மாப்ள”
“ஆர்த்தி பக்கத்துல இருக்கா?”
“இதோ தர்றேன் “ நஞ்சுண்டேஸ்வரா ஆர்ததியிடம் கொடுத்தார்.
“விஷால்” ஆர்த்தி அழைக்க
“எப்படி இருக்கே?”
“ம்”
“சாரி ஆர்த்தி உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்”
“நானும் தான். “ சொன்ன ஆர்த்தி கேட்டாள்.
“இன்னிக்கும் கோயம்புத்தூர்ல எங்கயாவது தங்கி டுவியா? இல்ல குன்னூர் வர்ற மாதிரி ஐடியா இருக்கா?”
“இன்னிக்கு நான் வர்றேன்”
“என்னைப் பார்க்க வரல அப்படித்தானே?”
“புரியல ஆர்த்தி”
“உங்க குழந்தைன்னு சொன்ன உடனே வரத் தோணுதுல்ல?” ஆர்த்தி பாவமாய் கேட்க விஷால் சுற்று முற்றும் பார்த்தான்.
“ஆர்த்தி”
“ம்”
“எனக்கு எப்பவுமே நீ தான் முதல்ல அதுக்கப்புறம் தான் எல்லாமே “
விஷால் சொல்ல ஆர்த்தி சந்தோஷமானாள்.
“நிஜமாவா?”
“ம்”
“எப்பவும்?”
“எப்பவும்”
“விஷால்”
“ம்”
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”
“அப்படியே சந்தோஷமா இரு இன்னிக்கு நான் வந்துருவேன்”
பேசி முடித்த விஷால் மொபைலை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அமரும்போது காயத்ரி ஞாபகம் அவனுக்கு வந்தது.
“அண்ணா என்னோட குழந்தை அவரு வராம சாப்பிட மாட்டேங்குதுண்ணா. அப்பா எங்க கூட்டிட்டு வான்னு சொல்லுது அண்ணா. எனக்கு ஏதாவது பண்ணுங்கண்ணா”
விஷால் யோசித்தான்.
‘சண்முகம் ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ரிப்போட்டர். அவர் ஒரு கம்பெனி மேல ஏதோ ஒரு சந்தேகத்தில் ரிப்போர்ட் எழுத போயிருக்கலாம் அப்ப அந்த கம்பெனியில் அவர் மாட்டியிருக்கலாம். ஆனா அவர் கூட போனவங்க எங்கே? ஒருவேளை அவர் மட்டும் தான் போனாரா?’
அடுத்து நான் செய்ய வேண்டியது அந்த பத்திரிகை ஆபீஸ்ல போய் என்கொயரி பண்ணனும். அந்த V ட்ரக்ஸ் எங்க இருக்கு? அங்க போய் பார்க்கணும்.
விஷால் யோசித்துக் கொண்டிருக்க டேபிள் மேல் இருந்த மொபைல் அடித்தது. ஒரு கான்ஸ்டபிள் வந்து எடுத்தார்.
“ஹலோ”
“டாக்டர் மனோகரன் சைக்யாட்ரிஸ்ட் இருக்காரா ?” யாரோ கேட்க கான்ஸ்டபிள் ராங் நம்பர் என்றார்.
மீண்டும் அந்த போன் அடிக்க கான்ஸ்டபிள் மீண்டும் எடுத்து ராங் நம்பர் என்று சொன்னார்.
“என்னாச்சு ? “விஷால் கேட்டான்.
“யாரோ போன் பண்ணி டாக்டர் மனோகரன் சைக்யாட்ரிஸ்டா ன்னு கேக்கறார் சார். “ கான்ஸ்டபிள் சொல்ல விஷால் அது உள்ளே இருந்த மனோகரனின் போன் என்றுணர்ந்தான். எழுந்தான். லாக்கப்பிற்குள் சென்றான்.
“சார் நீங்க..?” இன்ஸ்பெக்டர் திகைப்பாய் பார்க்க
“ஒரு சின்ன வேலை” சொன்ன விஷால் மனோகரனை நெருங்கினான்.
“நீ என்ன பண்ற?”
“சார்”
“சொல்லுடா என்ன பண்ற?”
“சார் நான் மெக்கானிக் ஷெட் வச்சிருக்கேன்.”
“உன் பேர் ?”
“மனோகரன் சார்”
சொன்னவனை உன்னிப்பாய் பார்த்த விஷால் கேட்டான்.
“அப்ப சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் மனோகரன் யாரு? அந்த ரோல்ல நீ என்ன பண்ணே? எல்லாத்தையும் சொல்லிடறியா?” விஷால் கேட்க மனோகரன் அதிர்ந்தான்.
“முத்துகிருஷ்ணன்”
“சார்”
“அந்த லத்தியை இப்படி கொடுங்க” விஷால் கேட்க அவர் லத்தியை விஷாலுக்குக் கொடுத்தார். விஷால் மனோகரனை நெருங்கினான்.
தொடரும்

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.