சைக்யாட்ரிஸ்ட் 3
“V ட்ரக்ஸ்” என்று அந்தப் பெண் சொல்ல விஷால் யோசித்தான்.
‘யார் அவன்?’
கேட்டான்.
“போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கீங்களா?”
“ஆமாண்ணா”
“என்ன சொன்னாங்க?”
“எப்ப கேட்டாலும் நடவடிக்கை எடுக்கிறோம்னு சொல்றாங்க ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா “ அந்தப் பெண் குரலில் கவலை தெரிந்தது.
விஷால் யோசித்தான்.
“உங்க பேர் என்ன?”
“காயத்ரி ணா”
“நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் இங்கே வெயிட் பண்ணுங்க நான் உள்ள போய் என்னன்னு கேட்டு வரேன்”
“சரிண்ணா”
விஷால் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.
கான்ஸ்டபிள் ஓடி வந்து கேட்டார்.
“என்ன சார்?”
“இன்ஸ்பெக்டரப் பார்க்கணும்”
“சார் அவர் இன்னும் வரல அவரு வர்றதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்” கான்ஸ்டபிள் சொல்ல விஷால் மேலே இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தான்.
“இட்ஸ் ஓகே எனக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் வேணும்”
“சொல்லுங்க சார்”
“காயத்ரினு ஒரு பொண்ணு தன்னுடைய ஹஸ்பன்டக் காணோம் து இங்க கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க இல்லையா?”
விஷால் கேட்க கான்ஸ்டபிள் யோசித்தார்.
“என்ன பேர் சார் சொன்னீங்க?”
“காயத்ரி”
எஃப் ஐ ஆர் ரெஜிஸ்டர் எடுத்து பார்த்த கான்ஸ்டபிள் சொன்னார்.
“ஆமா சார். மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட் “
“இப்ப என்ன லெவல்ல இருக்கு?”
“சார்.. வந்து…”
“பரவால்ல சொல்லுங்க”
“சார் அதை கண்டுக்க வேண்டாம்னு சொல்லிவிட்டார் “
“எந்த சார் உங்க இன்ஸ்பெக்டரா?”
“ஆமா சார்”
“எதுக்குன்னு நீங்க காரணம் கேக்கலையா?”
“இல்லை சார்”
“அப்படியே பழகிட்டீங்க போல”
“ஸாரி சார்”
அப்போது இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். விஷாலைப் பார்த்தவர் கண்களால் யார் என்று கான்ஸ்டபிளிடம் கேட்டார்.
“ஹலோ சார் ஐ’ம் விஷால். ஏ சி பி மதுரை சிட்டி” விஷால் சொல்ல இன்ஸ்பெக்டர் சல்யூட் செய்தார்.
“யெஸ் சார்”
“உங்க பேர் என்ன?”
“முத்துகிருஷ்ணன் சார்”
“நாலு நாளைக்கு முன்னாடி ஒரு மிஸ்ஸிங் கேஸ் இங்க ரெஜிஸ்டராயிருக்கு.”
“சார்”
“காயத்ரிங்கிற பொண்ணு தன்னோட ஹஸ்பண்டக் காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க.”
“ யெஸ் சார்”
“என்ன ஆக்சன் எடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?”
“என்கொயரி பண்ணிட்டிருக்கோம் சார். இன்னும் டீட்டெயில்ஸ் எதுவும் கிடைக்கல “
சொன்னவரை புன்னகையுடன் பார்த்த விஷால் கேட்டான்.
“அப்படியா?”
“யெஸ் சார்”
“மிஸ் ஆன சண்முகம் V டிரக்ஸ் கம்பெனிக்கு போறதா சொல்லி இருக்காரு. அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்”
விஷால் கேட்க இன்ஸ்பெக்டரின் முகம் மாறியது.
“சொல்லுங்க முத்துகிருஷ்ணன் உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”
“தெரியும் சார்”
“விசாரிச்சிங்களா?”
“சார்.. வந்து…”
“என்ன சொல்லுங்க”
“விஷயம் கொஞ்சம் வேற மாதிரி போகுது”
“எனக்கு புரியல நீங்க சொல்றது”
“அந்த கேஸ்ல ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்னு …”
“யார் சொன்னாங்க?”
“இல்லை என்னை மிரட்டினாங்க சார்”
“அதனால நீங்க ஆக்சன் எடுக்கலையா?”
“சார்”
“என்னன்னு மிரட்டினாங்க?”
“கன்னியாகுமரிக்கு இல்லன்னா தூத்துக்குடிக்கு மாத்திடுவோம்னு.. பொண்ணு இப்ப ப்ளஸ்டூ படிச்சிட்டிருக்கா அதான் “ முத்துகிருஷ்ணன் சொல்ல விஷால் புன்னகைத்தான்.
“உங்களுக்கு உங்க பிரச்னை. ஆனா ஒரு போலீஸ்காரன் எப்பவுமே தன்னோட பிரச்னை பத்தி யோசிக்க மாட்டான் சார் “விஷால் சொல்ல முத்துகிருஷ்ணன் தலைகுனிந்து நின்றார்.
“பரவால்ல. நீங்க தலை குனிய வேண்டாம். நீங்க ஒரு பாசமான அப்பா. உங்களுக்கு உங்க பொண்ணு எப்படியோ அப்படித்தான் வெளியில காத்திட்டிருக்கிற காயத்ரிக்கு அவங்க புருஷன். நம்ம மேல இருக்கிற நம்பிக்கையில தான் சார் மக்கள் நிம்மதியா இருக்காங்க. அந்த நம்பிக்கைய நாம எவ்வளவு தூரம் காப்பாத்தறோம்? அது ரொம்ப முக்கியம் “
“ஸாரி சார்”
“பரவால்ல உங்கள மிரட்டினதா சொன்னீங்களே அது யாரு?”
விஷால் கேட்க முத்துகிருஷ்ணன் சொன்னார்.
***
டாக்டர் மனோகரன் கலைவாணியிடம் கேட்டார்.
“என்ன பிரச்னை? சொல்லுங்க “
“டாக்டர் கொஞ்ச நாளா எனக்குள்ள ரொம்ப உறுத்தலா இருக்கிற இந்த விஷயம் என்னோட மனச ரொம்ப பாதிக்குது.”
“உங்க மனசு சரிபன்றதுக்குத்தான் நான் இருக்கேன் விஷயம் என்னன்னு சொல்லுங்க “
“என்னோட பேரு கலைவாணி நான் சின்ன வயசா இருக்கும் போது அப்பா செத்துட்டாரு. நானும் அம்மாவும் மட்டும்தான். ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனா அந்த கஷ்டத்திலயும் எப்படியாவது படிச்சாகணும்னு படிச்சேன். ஆனா என்னோட கெட்ட நேரம் நான் பிளஸ் டூ படிக்கிறப்ப என்னோட அம்மாக்கு கேன்சர். இந்த உலகத்துல எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் எங்க அம்மா தான். அவங்கள எப்படியாவது காப்பாத்தணும்னு போராடினேன். பணம் இல்லாம இருந்த எனக்கு இளமையும் அழகும் மட்டும் நல்லாவே இருந்துச்சு. நான் உதவி கேட்டு போன இடத்துல எல்லாம் அவங்க என்னை எதிர்பார்த்தாங்க. ஆரம்பத்துல முடியாதுன்னு மறுத்த எனக்கு அம்மாவோட நிலைமை அட்ஜஸ்ட் பண்ணிப் போக வெச்சிடுச்சு. முடிஞ்ச அளவுக்கு பணம் சேர்த்து அம்மாவை காப்பாத்த முயற்சி பண்ணேன். ஆனா என்னால முடியல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. செத்துப் போலாமா இல்ல இருக்கலாமா ஒண்ணுமே புரியல. அப்பத்தான் எனக்கு ஒரு சீரியல் வாய்ப்பு வந்துச்சு. நான் சீரியல் நடிகையா மாறிட்டேன். அம்மா செத்ததுக்கு அப்புறம் நான் ஒரு தடவை கூட தப்பு பண்ணல. ஆனா அதுக்கு முன்னாடி நடந்த தப்புல ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில ஒருத்தன் என்னை போட்டோ எடுத்து வச்சிருக்கான். அதுவும் நான் இன்னொருத்தன் கூட ரொம்ப நெருக்கமா இருக்கிற மாதிரி. அந்த போட்டோவ வெளியில விடாம இருக்கணும்னா என்னை வந்து அட்ஜஸ்ட் பண்ணனும்னு மிரட்டறான். எனக்கு யார்கிட்ட போய் என்ன சொல்றதுன்னு புரியல. கொஞ்ச நாளா ரொம்ப பதட்டமா இருக்கு. யாரைப் பார்த்தாலும் அவன் தானான்னு ஒரு பயத்தோட பார்க்கிறேன். இந்த பயம் டென்ஷன் என்ன எல்லா விதத்திலயம் பாதிக்குது. ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் கேட்கிறார். என்ன கலைவாணி எதுவும் பிராப்ளமா ன்னு
நான் இதுவரைக்கும் சீரியல்ல சம்பாதிச்ச பேர் எல்லாமே போயிடுமா? சார் வாழ்க்கையில நான் உண்மையா சந்தோஷமா இல்ல ஆனா கொஞ்சம் நிம்மதியா இருக்கணும்னா இந்த பிரச்னையில் இருந்து நான் கண்டிப்பா வெளியே வரணும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார் “
கலைவாணி சொல்ல டாக்டர் மனோகரன் “ஷ்யூர் நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம் நான் ஒரு டேப்லட் தரேன் நீங்க சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க “ சொன்னவர் உள்ளே இருந்த பெட்டியைத் திறந்தார். ஒரு மாத்திரையை எடுத்து கலைவாணியிடம் கொடுத்தார்.
கலைவாணி தயக்கமாக பார்க்க டாக்டர் மனோகரன் கண்களால் அதை எடுத்துக் கொள்ளும்படி சொல்ல கலைவாணி மாத்திரையை விழுங்கினாள்.
ஐந்தாவது நிமிடத்தில் அவளுக்கு தலை சுற்றியது.
‘ஏய் எங்கடி போற நீ எங்க போனாலும் நான் உன்னை விடமாட்டேன். என்கூட நீ நிச்சயம் வந்தாகணும் ‘
‘ தூ இவ இப்படிப்பட்டவளா ? இது தெரியாம இவளுக்கு போய் ஃபேன்ஸா இருந்திருக்கோம். நம்ம புத்தியை செருப்பால அடிக்கணும்’
‘மூஞ்சப்பாரு பண்றது எல்லாம் பண்ணிட்டு.. அப்படியே அப்பாவி மாதிரி நடிக்கிறா’
கலைவாணியின் மூளை தாறுமாறாக கட்டளைகளை பிறப்பிக்க தன் தலையைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
“சார்”
“என்ன சொல்லுங்க”
“முடியல சார் காப்பாத்துங்க சார்”
“கலைவாணி உங்க பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கு. செய்றீங்களா?”
“சரி சார் சொல்லுங்க சார்”
“ஒரு மாத்திரை கூட தரேன் வீட்டுக்கு போயிட்டு அந்த மாத்திரைய விழுங்கிட்டு தற்கொலை பண்ணி செத்துப் போயிடுங்க “
டாக்டர் மனோகரன் சொல்ல கலைவாணி பயமாய் பார்த்தாள்.
“சார்”
“சொல்லுங்க கலைவாணி”
“நான் பாவம் சார்”
“அந்த கதை நான் படிச்சிருக்கேன் நல்லா இருக்கும்”
“அதில்ல சார்.. நான் ரொம்பப் பாவம் சார்”
“அதனால தான் சொல்றேன் செத்துடுங்க உயிரோட இருந்தா உங்களுக்கு பிரச்னை தான். “
“சார் எப்படியாவது என்ன காப்பாத்துங்க சார்”
“ஓகே நீங்க ஒன்னு பண்ணுங்க”
“சொல்லுங்க சார்”
“உங்கள ஒருத்தன் மிரட்டறதா சொன்னீங்களே?”
“ஆமா சார் ரொம்ப பயமா இருக்கு சார்”
“அவன் கூட போய் அவன் சொன்னபடி இருந்துட்டு வாங்க”
“சார் வேண்டாம் சார் என்னால சத்தியமா முடியாது சார். அதுக்கு நான் செத்துப் போய்டறேன் சார் “
“தட்ஸ் குட் நானும் அதான் சொன்னேன். வீட்டுக்கு போங்க பிடிச்ச சாப்பாடு ஏதாவது சாப்பிடுங்க அதுக்கப்புறம் இந்த மாத்திரை போடுங்க எந்த பயமும் இருக்காது. எப்படி சாக விரும்பறீங்களோ அப்படி நீங்க செத்துப் போலாம் “ டாக்டர் மனோகரன் அவளை தீர்க்கமாய் பார்த்தபடி சொல்ல கலைவாணி எழுத்தாள். அவள் கண்களில் நீர் வழிய அவரை கையெடுத்து கும்பிட்டாள்.
“நான் போறேன் சார்”
“இருங்க இப்ப நீங்க சாப்பிட்ட மாத்திரையோட எஃபெக்ட் நாலு மணி நேரம் தான் இருக்கும் . இன்னொரு மாத்திரைய வாங்கிட்டுப் போங்க “ சொன்னபடி மனோகரன் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுக்க கலைவாணி நடுங்கும் கரத்தோடு வாங்கிக் கொண்டாள்.
***
மாலை மலர்.
பிரபல சின்னத்திரை நடிகை கலைவாணி தற்கொலை .
அனைத்து தொலைக்காட்சிகளிலும் முதன்மையாக இருக்கும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை கலைவாணி. இன்று மாலை தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர். தனக்கென்று பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கும் கலைவாணி தமிழக அரசின் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைவாணியின் மரணம் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடன் நடித்த நடிகர்கள் அனைவரும் கண்ணீர் மல்க கலைவாணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“எப்பவுமே சந்தோஷமா இருக்கிற பொண்ணு ஏன் இப்படி பண்ணிச்சுன்னு தெரியல. நேத்து கூட என்கூட நல்லா பேசிட்டு இருந்தா இன்னிக்கு அவ இல்லைன்னு என்னால நம்ப முடியல” சொன்ன ஒரு சக நடிகை கண்களை துடைத்துக் கொண்டாள்.
“சீரியல்ல மட்டும் இல்லைங்க நிஜமாகவே எனக்கு அவ தங்கச்சி தான். ரொம்ப பாசமான பொண்ணு என்ன சொல்றதுன்னு தெரியல” ஒரு நடிகர் அழுதபடி சொல்ல டிவி சேனல்கள் கவர் செய்து கொண்டிருந்தன.
***
பார் ஒன்றில் மது அருந்தியபடி டிவி நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த மனோகரன் எதிரில் இருந்தவனைப் பார்த்து புன்னகைத்தான்.
“நீ வேற லெவல். ஒரே ஒரு போட்டோவ வச்சு அவ கதைய முடிச்சுட்டே”
“நம்ம ஆக்டிங் பர்ஃபாமன்ஸ் அப்படி. ஒரிஜினல் வில்லன் கூட என்னோட அளவுக்கு பர்ஃபார்மன்ஸ் செய்ய முடியாது” அவன் சொல்ல மனோகர் கேட்டான்.
“ஜானி”
“ம்”
“எதுக்கும் கொஞ்ச நாள் ஊர்ல இருக்காத”
“ஏன்?”
“போலீஸ் என்கொயரி பண்ணும். ஏதாவது சிசிடிவி கேமராவில் நீ மாட்டியிருந்தா உன்கிட்டயும் வருவாங்க “
“ஒன்னும் கவலைப்படாதே. நம்மள யாராலயும் நெருங்க முடியாது”
ஜானி சொல்ல பாருக்குள் நுழைந்தான் விஷால்.
தொடரும்

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 3
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.