மறுநாள் காலை.
பொழுது நன்றாக விடிந்திருக்க மனோ அதிகாலையிலேயே எழுந்திருந்தான்.
தினமும் மொட்டை மாடியில் முக்கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவன் வழக்கம். அக்கம்பக்கத்து மாடிகளில் எவரேனும் சிக்குவார்களா என்று நன்றாக நோட்டமிட்டும் அவனுடைய துரதிர்ஷ்டம் எவரும் அமையவில்லை.
பக்கத்து வீட்டு பரிமளா மட்டும் அவன் பேசுவதை ரசிப்பாள். ஆனால் அவன் அதற்கு மேல் முயற்சி செய்ய முற்பட்டால் சாமர்த்தியமாகத் தட்டி விடுவாள். பேச்சு பேச்சா இருக்கணும் என்ற வடிவேலின் காமெடி அவளை பார்க்கும்போது மனோவிற்குத் தோன்றும்.
பரிமளாவிற்கு திருமணம் ஆகி நான்காண்டுகள் ஆகின்றன. கணவன் முனுசாமி கத்தாரில் பிளம்பராக இருக்கிறான். வருடத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து போவான். ஒரு குழந்தை இருக்கிறது. பெண் குழந்தை இரண்டு வயது. அந்த குழந்தையை கொஞ்சும் சாக்கில் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.
"ஹஸ்பெண்ட் வீட்டில் இல்ல. அப்ப உங்களுக்கு ரொம்ப கஷ்டம்தான். இல்லங்களா? "
பொடி வைத்துப் பேசுவான். பரிமளாவிற்குப் புரியும். நைசாகத் தட்டிவிடுவாள்.
"யாருக்குத்தான் இல்ல கஷ்டம்? புருஷன் கூட இல்லன்னா ஒரு கஷ்டம். இருந்தா ஓராயிரம் கஷ்டம்."
"என்னங்க சொல்றீங்க? ஒண்ணும் புரியல."
"உங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நான் சொல்றது புரியும் "
சில புன்னகைகளில் அவன் செய்த அனைத்து முயற்சிகளையும் எளிதில் தட்டிவிட்டுப்பழகியிருந்தாள்.
மனோகரும் ஒத்துவராத இடங்களில் நேரத்தை வீண் செய்ய மாட்டான். அவன் சில வகை வழிமுறைகளை வைத்திருக்கிறான். அதில் பெரும்பாலானோர் எளிதில் வீழ்ந்துவிடுவர்.
அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பாலா சோகமாக இருக்க ஒரு பெண் தான் காரணம் என்று தெரிந்து கொண்டான். அவளை பாலா விரும்புவதாகச் சொல்ல இவன் சொன்ன அறிவுரை
"ஏதாவது பெருசாத் தப்புப் பண்ணி அவளை உன்னத் திட்ட வெச்சுடு பாலா. அதுக்கப்புறம் அவ கிட்ட பேசாத. அவள எப்பப் பார்த்தாலும் தலையக் குனிஞ்சுகிட்டு பாவமா இருக்கிற மாதிரி நடி. அய்யோ நாம எக்கச்சக்கமா திட்டிட்டோம் பாவம்னு அவ மனசுல ஒரு குற்ற உணர்ச்சி வரும். அவளே உன்னைத் தேடி வருவா. அப்ப வழியாம டீசண்டா பேசு. மாட்டிக்குவா. எங்கயாவது கூட்டிட்டுப் போய் சந்தோஷமா இரு"
"இல்ல மனோ நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல. தப்பா சொல்லாத. "
"இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? நீ விரும்புற பொண்ணு கூட உன்ன சந்தோசமா இருக்கச் சொன்னேன். இதுல தப்பு என்ன இருக்கு? ஒருவேளை நீ அப்படி சந்தோசமா இல்லேன்னா நீ விரும்புற பொண்ணு கூட இன்னொருத்தன் சந்தோஷமா இருப்பான். இதுதான் உலகத்தில் எல்லா இடத்துலயும் இப்ப நடந்துட்டிருக்கு."
பாலா அதன்பிறகு மனோவுடன் பேசவில்லை.
மனோ மணி பார்த்தான். எட்டு மணி. சங்கரி வருவதற்கு பத்து மணி ஆகும். ஆபீஸுக்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு வரவேண்டும்.
மனோ வீட்டை ஒழுங்கு செய்தான். ரூம் ஃபிரஷ்னர் எடுத்து எல்லா இடங்களிலும் அடித்து விட்டான். அவன் வீட்டிற்கு முதன்முதலாக யார் வந்தாலும் அவன் கல்யாணம் ஆகாத ஒரு பேச்சிலர் என்று நம்ப மாட்டார்கள். வீட்டை அந்த மாதிரி வைத்திருப்பான். பூஜை அறையில் ஊதுபத்தி மணம் மெலிதாய் கமழும். சமையலறையில் சிங்கில் எந்த பாத்திரமும் கழுவும்படி இருக்காது. சுத்தம் எல்லா இடங்களிலும் கடைபிடிப்பான். அதற்கு காரணம் வீடு நன்றாக பராமரிக்கப்பட்டால் எந்த ஒரு பெண்ணுக்கும் எளிதில் அவனைப் பிடித்துவிடும் என்பதை நன்றாக அறிந்திருந்தான்.
முதன்முதலில் வினிதா வீட்டிற்கு வந்தபோது வீட்டைப் பார்த்து அசந்து போனாள்.
"மனோ"
"ம்"
"நிஜமாவே உன் பொண்டாட்டி லக்கி."
"ஏன் வினி?"
"வீட்டை நல்லா மெயின்டெயின் பண்றே."
"ம் தேங்க்ஸ்" சொன்னவன் அவள் விழிகளையே பார்த்தான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
"மனோ"
"ம்"
"என்னாச்சு?"
"வீடு உனக்குப் புடிச்சிருக்கா?"
"ம் ரொம்ப"
"அப்ப நான் ஒண்ணு கேட்பேன். நீ தப்பா நினைக்கக் கூடாது"
"அப்படி என்ன கேக்கப்போற?"
"இந்த வீட்டுக்கு..?"
"ம் கேளு"
"இந்த வீட்டுக்கு சொந்தக்காரியா நீ வர முடியுமா?"
மனோ கேட்க வினிதாவை பரவசம் தாக்கியது.
"மனோ"
"ஆமா வினி. உன்னை எப்ப பார்த்தேனோ அப்ப இருந்து நான் நானா இல்லை. சாப்பிட முடியல தூங்க முடியல. பலமுறை வேலைல தப்பு பண்ணி மேனேஜர் கிட்ட திட்டு வாங்கினேன். உள்ள ஒரே தவிப்பா இருக்கு வினி. என்னால முடியல. உன்கிட்ட சொன்னாத்தான் எனக்கு ஒரு வழி கிடைக்கும்னு சொல்லிட்டேன். நான் ஏதாவது புண்ணியம் பண்ணி இருந்தா நீ எனக்கு சரின்னு சொல்லுவே. நான் புண்ணியம் பண்ணியிருக்கேனா பாவம் பண்ணியிருக்கேனா? எனக்குத் தெரியல வினி"
சொல்லிவிட்டு இல்லாத கண்ணீரைத் துடைத்தான் மனோ.
வினிதா விழுந்து விட்டாள்.
'என் மனோ எனக்காக இப்படி தவிப்பதா? கூடாது. நீ என்னுடையவன். எது உன்னைத் தடுமாறச் செய்கிறது? என் அழகா? இளமையா? இரண்டும் நிலையில்லாதவை. உன் நிலையான அன்பு முன் இந்த இரண்டும் நிற்க முடியுமா?
என் மனோ எதிலும் எதன் பொருட்டும் தோற்கக் கூடாது. அதுவும் என் பொருட்டுத் தோற்று எவரிடமும் திட்டு வாங்கக்கூடாது.
நான் தருகிறேன். என்னைத் தருகிறேன். என்னை உயிராய் நேசிக்கும் என் மனோவிற்கு என்னைத் தருவதில் எனக்கு மகிழ்ச்சியே.
‘எடுத்துக்கொள் மனோ. எது வேண்டுமானலும் செய்துகொள். இறுதியில் நீ மகிழ்ச்சியடைந்து உன் முகத்தில் நிறைவாய் ஒரு புன்னகையைக் காண நேர்ந்தால் எனக்கு அது போதும்.'
வினிதா மனோவை அணைத்துக்கொண்டாள். அந்த அணைப்பில் அவள் உணர்வைப் புரிந்துகொண்ட மனோ போலியாய் பதறினான். பெண் மீறும் போது ஆண் பயந்தால் அல்லது அப்படி நடித்தால் அவன் மிகவும் நல்லவன் தவறு செய்ய யோசிப்பவன் என்று பெண் மனம் நம்பும். இன்னும் அவனை ஆழமாய் நேசிக்கும். நேசத்தின் விளைவாய் தன்னைக் கொடுக்க வைக்கும். பெண்ணுக்கு முக்கியம் காதல்தான். அன்புதான். நேசம்தான். அதுதான் எல்லாம் தரவைக்கிறது. ஆனால் ஆணுக்கோ உடம்புதான் பிரதானம். எதையாவது எப்படியாவது சொல்லி பெண்ணைத் தந்திரமாக வீழ்த்துவதும் அதை எண்ணிப் பெருமையில் திளைப்பதுமாக உண்மையான நேசத்தைப் புரிந்துகொள்ளாத இழிநிலை பெரும்பாலும் ஆண்களுக்கே நேர்கிறது.
மனோவிற்கும் நேர்ந்தது.
தன் மனோவின் மகிழ்வை உண்மையென்று நம்பி மனநிறைவுடன் வினிதா சென்றிருக்க மனோவோ வழக்கம்போல் அவளுடன் கூடியதையும் அவளை வீழ்த்த அவன் மொழிந்த தந்திரமான மொழிகளையும் எண்ணி அவனை இக்காரியத்தில் வெல்ல யார் என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.
சுவர் கடிகாரம் பத்து முறை ஒலிக்க மனோ தயாரானான். வேட்டைக்குப் போகும் புலியின் பசித்த பார்வையை ஒத்திருந்த அவன் விழிகள் சங்கரியின் வரவிற்காக கதவையே பார்த்திருக்க சற்று நேரத்தில் அழைப்புமணி ஒலித்தது

Author: gavudham
Article Title: ஒழுக்கசீலன் 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.