நீரஜாவின் கையில் இருந்த செல்போன் ஓசை இல்லாமல் வெறும் அதிர்வு மட்டுமே வெளிப்படுத்தி, அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தது.
செல்போன் திரையில் எழுதுங்கள் மின்னின.
"விக்ரமை நம்பாதே!"
விக்ரம், அவள் முன்பாக முழுதாக அமர்ந்திருந்தான். பச்சைக் குழந்தை போல் இருந்தான். வாயில் விரலை வைத்தால் கூட, கடிக்காமல் விரலை வெளியே எடுத்து விட்டு ஒன்றும் தெரியாமல் சிரிப்பான் போலிருக்கிறது. அப்படி உட்கார்ந்திருந்தான். அவன், தன் முன்னால் இருக்கும் போதே இப்படி ஒரு மெசேஜ் வருகிறது என்றால், இருவரையும் ஒன்றாக பார்த்த பிறகு, அனுப்பி இருக்கிறார்கள்.
அவள் சற்று நேரம் கழித்து தான் அந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.
அவள் பார்த்தது மிக இயல்பாகவே இருந்தது. அப்போது விக்ரமை பார்த்துகொண்டே - அவன், தன் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் - நீரஜா அந்தக் குறுஞ்செய்தியை மீண்டும் படித்தாள்.
''விக்ரமை நம்பாதே!''
அதை அடுத்ததாக இன்னொரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
''விக்ரம் தான் பிளாக்மெயில் செய்கிறான்.''
இன்னொரு குறுஞ்செய்தி!
''இதையெல்லாம் உடனே அவனிடம் சொல்லாதே! பிறகு நான் தெளிவாக உனக்கு விளக்குகிறேன்!"
நீரஜாவின் முகம் சட் சட்டென்று மாறி இயல்புக்கு வந்தது. மனதுக்குள் ஆயிரம் குழப்பங்கள் புகுந்து கொண்டது.
விக்ரம் தன் செல்போனில் இருந்து தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
"ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" என்றான்.
"ஒ...ஒண்ணுமில்லை விக்ரம்." என்றாள் நீரஜா.
"நீ சுவாமிநாதனை நினைச்சு ரொம்ப மண்டையை உருட்டிக்காதே நீரஜா. நான் வேணும்னா ஒரு நல்ல வக்கீலை கேட்டு பார்க்கட்டுமா? உனக்கு என் கூட சேர்ந்து வாழுறதுல விருப்பம் தானே?"
நீரஜா மௌனமாக அவனைப் பார்த்தாள். 'விக்ரம்தான் பிளாக்மெயில் செய்கிறானா? நம்பவே முடியவில்லையே! எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கிறான்! சாதாரணமாக அமர்ந்திருக்கிறானா, சாதூர்யமாக அமர்ந்திருக்கிறானா?'
"என்ன அப்படி பார்க்கிறே? ஆர் யூ ஓகே?"
"தலை வலிக்கிற மாதிரி இருக்கு விக்ரம்!" என்று மழுப்பினாள். ஆனால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை அவளால். விக்ரமா பிளாக்மெயில் செய்கிறான்? இன்னும் கூட அவளால் நம்ப முடியவில்லை. அவனிடமே கேட்டு விடலாமா என்ற ஆவலை தன்னுள் புதைத்து கொண்டாள். செல்போன் குறுஞ்செய்தியில் 'பிறகு நான் தெளிவாக உனக்கு விளக்குகிறேன் ' என்று இருந்ததை அலட்சியப்படுத்தக் கூடாது என்று நினைத்தாள். பார்ப்போம்; என்னதான் விளக்குகிறான் என்று. அதுவரை குறுஞ்செய்தி பற்றிய செய்தியை விக்ரமிடம் சொல்லாமல் மறைத்து வைக்கலாம் என்று முடிவு செய்தாள் நீரஜா.
"சரி விக்ரம், நான் கிளம்பறேன்" என்று எழுந்தாள், நீரஜா.
அப்படி சட்டென்று எழுந்தது விக்ரமுக்கு புதிதாக இருந்தது.
"சரி நீரஜா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே நீ?"
"என்ன?" என்றாள், கவனத்தைக் குறுஞ்செய்தியில் வைத்து.
"நீ நார்மலா இல்லை நீரஜா! திடீர்னு என்னாச்சு?"
"ஒண்ணும் இல்லை விக்ரம்."
"நான் பேசறது மேல உனக்கு கவனம் இல்லை. அதான், அப்படி கேட்டேன்."
"சரி, ஓகே! ஏதோ குழப்பம் விக்ரம்!"
"நீ திடீர்னு மூட் அவுட் ஆயிட்டே!"
"ஆமா, இந்த பிரச்சனை கொஞ்சம் தலை வலியைக் கொடுக்கும் போல இருக்கு. எதுக்கும் நீ வக்கீல் கிட்ட கேட்டுப்பார் விக்ரம்!" அப்போதைக்கு அவளால் இப்படி சொல்லித்தான் சமாளிக்க வேண்டியிருந்தது.
பளிச்சென்று அவன் கண்களில் பல்பு எரிந்தது.
"சரி, வக்கீலை கன்சல்ட் பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன்."
"சரி விக்ரம் நான் கிளம்பறேன் என்று வெளியே வந்தாள், நீரஜா. அவளுக்காக அவளின் 'கோடா' கார் விசுவாசமாக காத்திருந்தது. டிரைவர் சீட்டில் அமர்ந்தவள் இக்னீஷியனை உசுப்பி ஓடவிட்டாள். அதிக குலுங்கல் இல்லாமல் மனித இரைச்சல் களுக்கிடையே நழுவிச் சென்றது கார்.
நீரஜாவின் மனம் திடீரென்று எச்சரிக்கை அடைந்தது. அவள் ஆரம்பத்தில் விக்ரம் மீது சந்தேகித்தது - கோப்பட்டது - அதை அவனிடமே கேட்டது எல்லாம் இப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
ஆனால்... ஆனால்... எனக்கு போன் செய்தவன் விக்ரமுக்கும் போன் செய்ததாக சொன்னானே!
எனக்கும் போன் வந்தது என்று விக்ரம்தானே சொன்னான்? விக்ரம் ஏன் பொய் சொல்லி இருக்கக் கூடாது? எனக்கு போன் செய்தவன் விக்ரமுக்கு போன் செய்தானா, இல்லையா என்று எனக்குத் தெரியாதே!
யோசித்த நீரஜாவுக்கு இப்போது ஒரு புதுக் குழப்பம் தோன்றியது.
எனக்கு ஒருவன் போன் செய்து உனக்கும் விக்ரமுக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு தெரியும் என்று சொல்கிறான்!
அவன் தான் எனக்கும் போன் செய்தான் என்று விக்ரம் சொல்கிறான்.
அப்படி சொல்கிறவன் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் போன் செய்து சொல்கிறான்.
அப்படி இருக்கும்போது, எனக்கு எதற்கு 'விக்ரமை நம்பாதே! விக்ரம்தான் பிளாக்மெயில் செய்கிறான்!' என்று செய்தி அனுப்ப வேண்டும்?
ஒருவனே இரண்டையும் செய்ய முடியுமா?
அப்படி இல்லை என்றால் , இரண்டு பேரும் வெவ்வேறு நபர்களா?
இரண்டு பேரும் வெவ்வேறு நபர்கள் என்றால், விக்ரமுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றியும், இந்த போன் கால் பற்றியும் இன்னொருவனுக்கும் தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்?
எனக்கு போன் செய்தது - சுவாமிக்கு போன் செய்தது - விக்ரமோ, வேறு யாரோ கூட இருக்கட்டும்; போன் செய்து பேசிய நபரை இன்னொரு நபருக்குத் தெரிந்திருக்கிறது.
பலவிதமான குழப்ப மனநிலையிலேயே வீட்டிற்கு வந்தாள், நீரஜா. போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தாள். வீட்டிற்கு முன்னால் நிறைய இடம் விட்டு, புற்களும், பூச்செடிகளும், மரங்களும் என்று பராமரிப்பு செய்யப்பட்டிருந்தது. காரை விட்டு இறக்கினால் இரண்டு நிமிடமாவது போர்ட்டிகோவில் நின்று அந்த அழகான தோட்ட அமைப்பை ரசித்து விட்டு தான் எப்போதும் அவள் உள்ளே செல்வது வழக்கம். அப்படி நின்று ரசிக்கையில் ஏதோ ஒரு பறவையோ, குருவியோ, ஒலி எழுப்ப வேண்டும் என்று விரும்புவாள்.
ஆனால், இன்றைக்கு எதையும் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. உடைந்த கண்ணாடிச் சிதறல்கள் போன்ற மனநிலையில் அவள் இருந்தாள்.
நீரஜா மாடிப்படியேறி தன் அறைக்குள் நுழைந்த உடனேயே செல்போனை எடுத்து வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்தாள் - பொறுமையாக.
அவை திரும்பத் திரும்ப முன்பு வாசித்த அதே வார்த்தைகள் மாறாமல் அப்படியே இருந்தன. அந்த எண் புதிதாக இருந்தது. முன்பு போன் அழைப்பு வந்த எண் வேறு; எந்த எண் வேறு! உடனே அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
ரிங் போயிற்று. ரிங் போயிற்று. ரிங் போ- "அலோஓஓ!" என்றது , ஓர் ஆண் குரல். குரல் கம்பீரமாக, நேரடியாகத் தாக்குவது போல் ஒலித்தது.
"நான் நீரஜா பேசுறேன்."
"தெரியும்ல!'
"எனக்கு மெசேஜ் அனுப்பியது நீங்கதானே?"
"அது நானே தாம்ல!"
"எனக்கு காலையில் போன் செய்தது?"
"அது நானில்லவ!"
"அப்படின்னா... போன் செய்து பேசியது யாருன்னு உனக்கு தெரியுமா?"
"தெரியும்ல!"
"யார்?"
"நம்ம விக்ரமு! விக்ரமுனா, விக்ரம் இல்லல; அவே சார்பா வேறு ஒருத்தம்ல!"
"விக்ரம்தான்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"ஏல! தெரியும்கறே! பொறவு சொம்மா அதையே கேக்கறவ?"
"அதான், எப்படி?"
"தெரியு; அம்புட்டுதே சொல்ல மொடியு! அத நீ உறுதி படுத்திகோணும்னாக்கா, ஒனக்கு வந்த போன் நம்பர வச்சு வெசாரிச்சு பார்த்துக்கவே! அப்பக்கி தெரிஞ்சு போடும்ல!"
"போன் நம்பரை வெச்சு விசாரிக்கிறதுக்கு எனக்கும் தெரியும். அதுக்கு போலீஸ் கிட்ட போக வேண்டியிருக்கும்."
"அவுக கிட்டக்க போக தேவ இல்லவ!"
"வேற எப்படி தெரிஞ்சுக்கிறது?"
"ஏராளமாக்க தனியாரு டெடக்டிவ் ஏஜன்சிக இருக்குல. அதுல எதுலயாச்சு போய் ஒங்க பெரச்சனைய சொல்லி போன் நம்பர குடுத்தீகனா, அவுக அந்த போனு நம்பரு ஆரு பேருல இருக்குதுனுட்டு கண்டு புடிச்சு சொல்லி போடுவாகலே?"
"எல்லாம் சரி நீங்க யாரு?"
"ஒங்க நலோ விரும்பிதானுவ!"
"நலம் விரும்பி?"
"ஆமாம்வே! ஒங்க நல்லதுக்கு தாம்ல சொல்லுதே!"
"இதனால உங்களுக்கு என்ன லாபம்?"
"சூரியன் ஒதிக்கறதுனால சூரியனுக்கென்ன லாபோமோ, மழை பேஞ்சு தீக்கறப்ப மழைக்கென்ன லாபோமோ, காத்தடிக்கறப்போ காத்துக்கென்னா லாபோமோ, அதே மாதிரிக்கான லாபோ தாம்ல எனக்கூ!"
"ஓகே, சரி. அந்த போன் நம்பரை கண்டுபிடிச்சு கொடுக்கச் சொல்லும் போதே, உங்க இந்த போன் நம்பரையும் கண்டுபிடிச்சு கொடுக்க சொல்றேன்."
"தாராளமாக்க கண்டுபுடிக்க சொல்லுங்கவே! ஆனாலு, நேரோ வெரையம்தாம்ல. வரட்டுமால, பைல!"
அவ்வளவுதான்.
அவன் போன் இணைப்பை துண்டித்து விட்டான். போனில் பேசியவன் ஏதோ சத்யராஜ் மாதிரி பேசினான். அவன் பேசுவதே அப்படித்தானா, அல்லது, வேண்டும் என்றே அப்படி பேசுகிறானா என்று தெரியவில்லை.
அதே எண்ணை மீண்டும் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என்ற அறிவிப்பு வந்தது. கால் மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்த போது, 'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்போது உபயோகத்தில் இல்லை!' என்று ஒரு பெண்ணின் இயந்திர குரல் ஒலித்தது.
நீரஜா தலையை உதறிக் கொண்டாள். போலீசிடம் சொல்லாமல் ஏதாவது ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் செல்லலாம் என்ற யோசனை அவளுக்குப் பிடித்திருந்தது. பாதுகாப்பானது என்றும் உணர்ந்தாள். எப்போதோ ஒரு விளம்பரம் பார்த்த ஞாபகம் வந்தது. அதன் பெயர் கூட.. ஏதோ உள்ளாடையை நினைவுபடுத்துவதாக இருந்தது.
ஆ! ஞாபகம் வந்துவிட்டது.
"BRA" "ப்ரா"

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.