மலரினும் மெல்லியது காமம் 9

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
இரவு பத்து மணி. அனிதாவிற்கு உறக்கம் வரவில்லை. அவள் மனதில் மீண்டும் மீண்டும் மாலையில் கண்ட காட்சியே திரும்பத் திரும்ப வந்தது.

மாமா ஏன் புவனாவுடன் ஒன்றாக வரவேண்டும்?

கவுன்சிலராக இருப்பதால் ஏதாவது உதவி கேட்டு புவனா சந்தித்திருப்பாளோ?

இல்லையே இருவரும் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்தால் அவர்களுக்கிடையே பல நாள் பழக்கம் இருப்பதைப் போல் அல்லவா தோன்றுகிறது?

ஒருவேளை அவர்கள் இருவருக்கும் …

இல்லை நிச்சயமாக இருக்காது. என் மாமா அப்படிப்பட்டவர் இல்லை.

அதுமட்டுமல்ல புவனா திருமணமானவள்.

அனிதா

ம்

நீ என்ன குழந்தையா ?

ஏன்?

உலகத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் கேள்விப்பட்டதில்லையா?

எது?

ஒரு திருமணமான பெண் தடம் மாறுவதில்லையா?

இருக்கலாம் ஆனால் என் மாமா அப்படிப்பட்டவர் இல்லை.

எப்படி சொல்கிறாய்?

எனக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது.

உன்னைப் போன்ற பல பெண்கள் ஏமாறுவதற்குக் காரணம் இப்படி எதைப் பற்றியும் யோசிக்காமல் காதலிப்பவர் மேல் வைக்கும் நம்பிக்கைதான்.

இல்லை என் மாமாவை நான் சந்தேகப்பட மாட்டேன்.

உன்னை யார் சந்தேகப்பட சொன்னது ?

அப்படியென்றால்…

சந்தேகப்பட வேண்டாம். ஆனால் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

நான் எப்படி என் மாமாவிடம் அதைப்பற்றி எல்லாம் கேட்க முடியும்?

முடியாதா?

நிச்சயமாக முடியாது.

அப்பொழுது அவளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்.

யாருடன்?

புவனாவுடன்.

அதனால் எனக்கு என்ன பயன்?

அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரிந்து கொள்ள பயன்படும்.

இல்லை நான் அப்படி செய்ய மாட்டேன்.

ஏன்?

என் மாமாவைப் பற்றி யாரிடமும் விசாரித்து அவருக்கு அவப்பெயரை உண்டாக்க மாட்டேன்.

அதில் என்ன இருக்கிறது?

வேண்டாம் நான் இந்த விஷயத்தை வேறு யாரிடம் பேசினாலும் அவர்கள் என் மாமாவை மட்டுமல்ல அந்த பெண்ணையும் குறித்து தவறாக எண்ணுவார்கள்.

அதற்காக?

நான் இதை கண்டுகொள்ளப் போவதில்லை.

ஆனால் மனதில் வைத்து கவலைப்படுவாய் அல்லவா?

என் காதல் அப்படித்தான்.

எப்படி?

என் மாமாவை கஷ்டப்படுத்த மாட்டேன். அதற்கு பதிலாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி.

என்ன தியாகமா?

நிச்சயம் இல்லை.

இதற்கு என்ன பெயர்?

என்னுடைய காதல் உண்மை என்றால் அதுவே என் மாமாவை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

அசட்டுத்தனமான நம்பிக்கை.

இருக்கட்டும்.

அனிதா

ம்

பாவம் நீ

ஏன் ?

கடைசியில் கண்ணீர் விடும்போது உனக்குத் தெரியும்.

தனக்குள் மாறி மாறி யோசித்த அனிதாவிற்கு அழுகை வந்தது.

***

மறுநாள் காலையில் அனிதாவைப் பார்த்த கணேஷ் அவள் ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் எப்போதும் போல் இயல்பாகப் போக திகைத்தான்.

முன்தினம் மாலை அவள் கணேஷைப் பார்த்ததை அவனும் பார்த்திருந்தான்.

தன்னை நேரில் பார்க்கும் பொழுது நிச்சயமாக இருவருக்கும் இடையில் என்ன என்று கேட்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளின் மௌனத்துக்கான காரணம் புரியவில்லை. அவளையே பார்த்தான்.

“அனிதா”

அழைத்தான். அவன் அருகில் வந்தாள்.

“என்ன மாமா ?”

கேட்டவள் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்.

வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை.

அவனுக்கு திகைப்பாக இருந்தது.

அப்படியெல்லாம் இவள் எதையும் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டாளே? என்னாச்சு?

யோசித்தான்.

தன்னை அழைத்த கணேஷ் ஒன்றும் சொல்லாமல் யோசிப்பதைப் பார்த்து அனிதா மீண்டும் கேட்டாள்.

“என்ன மாமா ?”

“இன்னிக்கு காலேஜ் இருக்கா?”

“இருக்கு ஆனா நான் போகல”

“ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா?” அவன் குரலில் தெரிந்த பதட்டம் அவளுக்குப் பிடித்திருந்தது. அதே நேரத்தில் இது வெறும் அக்கறை தானோ என்று நினைப்பம் அவளுக்குள் வராமல் இல்லை. மனதில் தோன்றிய உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்தாள்.

“என்னாச்சு அனிதா ?”

“உடம்பு சரியில்ல மாமா”

“ஹாஸ்பிடலுக்குப் போலாம் வா . என்னாச்சு?” அவன் கேட்க அவளுக்கு அவன் அவள் மேல் வைத்திருக்கும் அன்பு புரிந்தது. இன்னும் அவன் முன் என்றால் எங்கே அழுது விடுவோமா என்று பயந்து

“இல்ல மாமா பரவால்ல” என்று சொன்னபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக நடந்து கொண்ட அனிதாவை ஒன்றும் புரியாமல் பார்த்தபடி நின்றான் கணேஷ்.

***

அதிகாலை நான்கு மணி.

பனி இன்னும் பொழிந்து கொண்டிருக்க புவனா அதை லட்சியம் செய்யாமல் கோலப்பொடி எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.

புள்ளி வைத்து கோலம் போட ஆரம்பிக்கையில் எதிரில் நிழலாட நிமிர்ந்தாள்.

கணேஷ் புன்னகைத்தான்.

“என்ன ,சார் தூங்கலையா? அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்களா?” புவனா குறும்பாகக் கேட்க கணேஷ் சிரித்தபடி சொன்னான்.

“மேடம் எந்திரிச்சு வந்துட்டா சாருக்கு எப்படி தூக்கம் வரும்?”

“எனக்கு வேலையிருக்கு”

“என்ன வேலை?”

“கோலம் போட்டு முடிக்கணும்”

“அது சரி. அதுக்காக இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு வரணுமா?”

“இந்த மாசம் இந்த மாதிரி நேரத்துல எந்திரிச்சு போட்டா ரொம்ப நல்லது”

“அட்லீஸ்ட் தலைக்கு மஃப்ளர் கட்டிட்டு வந்து போடு”

“பரவாயில்லப்பா”

“சொன்னா கேட்கமாட்டியா?” கேட்ட கணேஷ் வீட்டுக்குள் சென்று ஒரு துண்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

“இங்க வா” புவனாவை அழைத்தவன் அவள் அருகில் வர அவள் தலையையும் காதுகளையும் மறைத்துத் துண்டால் கட்டினான்.

“ம் ஓகே இனிமேல் குளிரடிக்காது “ அவன் சொல்ல அவனை நெகிழ்ந்து போய் பார்த்தாள்.

“புவனா”

“ம்”

“என்னாச்சு?”

“ம்”

“ஏன் அப்படி பார்க்கற?”

“நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன்”

“ஏன்?”

“நீங்க எனக்கு கிடைக்க”

“இல்ல “

“என்ன சொல்றீங்க?”

“நான் தான் புவனா கொடுத்து வச்சிருக்கேன் நீ கிடைக்கிறதுக்கு”

சொன்ன கணேஷ் அவள் விழிகளைப் பார்த்தபடி அவளை அணைத்துக் கொள்ள தன் இரு கைகளையும் நீட்ட புவனா அனிச்சை செயலாய் அவன் அணைப்பில் நெகிழ்ந்தாள்.

ஒரு அணைப்பு இப்படி பரவசத்தை கொடுக்குமா?

கொடுக்கிறதே.

இந்த அணைப்பு எனக்கு எப்போதும் வேண்டும். நான் இருக்கிறேன் உனக்கு என்னும் வகையிலான பாதுகாப்பு கலந்த பாசமான அணைப்பு. என் கணேஷ் அணைப்பில் நான் இருக்கையில் இந்த உலகில் வேறு எதுவும் என்னை பாதிக்க முடியாது எதைக் கண்டும் நான் பயப்பட வேண்டியதில்லை என்ற உணர்வை எனக்குத் தருகிறது இந்த அணைப்பு.

புவனாவின் இரு விழிகள் மூடியிருக்க அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான் கணேஷ்.

அவள் அமைதியாக இருக்கவும் நெற்றியில் முத்தமிட்ட இதம் தன் இதழ்களுக்கு இன்னும் வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ தன் இதழ்களை அவள் இமைகளில் மென்மையாகப் பதித்தான்.

என்னவளின் இரு விழிகளைத் தாங்கும் என் பிரியத்திற்குட்பட்ட இமைகளே.. என் முத்தங்கள் உங்களுக்கு .. என்று சொல்லிவிட்டு கொடுப்பது போல் மென்மையாக கொடுத்தான்.

கன்னத்தைப் பார்த்தவன் மெல்ல கவ்வினான். கோலம் போடும் தன்னை வேறு கோலத்திற்கு மாற்ற நினைக்கிறானோ என்ற வெட்கம் மெலிதாய் புவனாவிற்குள் எட்டிப் பார்க்க அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவனோ அவள் கன்னத்தை இனிமையாய் பதம் பார்த்துவிட்டு அவள் இதழ்கள் அருகில் தன் இதழ்களைக் கொண்டு வர புவனா “வேண்டாம்” என்றாள் மென்மையாக.

வன்மையாக சொன்னாலே கேட்காதவன் மென்மையாகச் சொன்னால் கேட்கவா போகிறான்? அவன் மீறுவான் என்பதை அவளும் அறிந்திருந்தாள். அதில் அவளுக்கு சம்மதம் தான் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் இருக்கும்போதே தன்னை ஒரு வழிபடுத்தி விடுவான். இங்கே வெளிக்காட்டினால் சும்மா இருப்பானா என்ற பயம் அவளை ஆட்கொண்டாலும் அவனை அவன் செய்கையை எண்ணி ஒரு முழுமையான பரவசம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஓடியதை அவளால் மறுக்கத்தான் முடியவில்லை.

“புவனா” கணேஷ் மென்மையான குரலில் அழைக்க அவன் எதற்கு அழைக்கிறான் என்ற பொருள் அவளுக்கு புரிந்தது. அவன் வழக்கமாக அழைப்பது போல் அல்லாமல் சற்றுக் குழைவாக பாசமாக அழைக்கிறான் என்றால் அவனுக்கு அவள் வேண்டும் என்று பொருள். அதை அவளும் அறிந்திருந்தாள்.

“புவனா”

“ம்”

“கோலம்..?”

“ம்”

“அப்புறம் போட்டுக்கலாமா?”

“போட்டுட்டு வந்துடவா?” கேட்டவள் அவன் பார்வையை உணர்ந்து

“சரி அப்புறம் போட்டுக்கறேன்” என்றாள்.

புவனாவை அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றான் கணேஷ்.

உள்ளே சென்ற பின் தன் இரு கைகளாலும் அவளை மலர்க்குவியலாய் அள்ளிக் கொண்டான். அவளோ தலைவன் கைகளில் சிறைபடத்தானே தன் தேகம்? சிறைபட்டால் தானே தனக்கும் தீரும் தாகம்? என்பதாய் காதல் பார்வை பார்த்தாள்.

படுக்கையில் புவனாவை கிடத்தியவன் அவள் மொத்த எழிலை ஆடையுடன் தன் இரு விழிகளால் பருகினான். அவன் பார்வையில் வெட்கப்பட்ட ஆடைகள் அவளிடமிருந்து விடைபெற்று ஓடின.

ஆடைகளற்ற அவள் அழகு தேகத்தை தன் இரு கை விரல்களாலும் மீட்ட ஆரம்பித்தான் அவளை ஒரு வீணையாய் எண்ணி.

தலைவன் கை தன் மீது பட்டால் தலைவி எல்லாம் மறப்பாள். இதைத்தானே தமிழும் சொல்லித் தருகிறது?

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நான்கு வகை குணங்கள் அவளுக்கு இருந்தாலும் அவன் அருகில் இருக்கையில் அச்சம் என்பது அவளுக்கு அறவே இல்லை. நாணம் இருக்கத்தான் செய்யும் ஆனால் அவன் அவளிடம் பேசிப்பேசி அவள் நாணத்தைப் போக்குவதற்கு காரணமாக அமைந்து விட்டான்.

கணேஷ் தொடும் போது அவள் லயித்துக் கண் மூடி கிடப்பாள். ஒவ்வொரு முறையும் நிறைவடையும்போது அவளுக்குத் தோன்றும். மலரினும் மெல்லியதா காமம் ?

அரவிந்த் ஒரு நாள் கூட அவளை இப்படி மலர வைத்தது கிடையாது என்பது நினைவிற்கு வந்தது.

அறிந்து நடந்து கொண்டால் அனைத்தும் சிறப்பு தான் காமத்தில்.
ஆனால் இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இருவருக்கும் வேண்டும்.

கணேஷ் புவனா மேல் படர்ந்தான். அவன் ஆண்மை அவள் பெண்மையைத் தேடியது. புவனா வெட்கத்தில் மூழ்ந்தபடி அவனை கட்டி அணைத்துக் கொள்ள அப்போது

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள் புவனா

இந்நேரத்தில் யார் என்றபடி எழுந்தவளுக்கு இதுவரை தான் கண்டது கனவு என்று அப்போதுதான் புரிந்தது.

என்ன ஒரு மோசமான கனவு?


யோசித்தவள் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொண்டு மணி பார்த்தாள். காலை ஏழு மணி.

எனக்கு ஏன் இப்படிப்பட்ட கனவு வர வேண்டும் ? ஒருவேளை நான் தவறான பெண்ணோ ?

யோசித்தவள் கதவைத் திறக்க

வாசலில் நின்றது

கணேஷ்.

தொடரும்
 
Last edited:

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 9
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.