சட்டென்று தன் முன் வந்து கேட்ட இளைஞனைப் பார்த்து தயங்கினாள் புவனா.
“இல்ல பரவால்ல நான் எடுத்துக்கிறேன்” அவள் சொல்ல அவன் புன்னகைத்தான்.
“இது என்னங்க இருக்கு பரவால்ல வாங்கிக்கங்க” அவன் சொல்ல புவனா எதுவும் சொல்லும் முன்பாக அவன் கொடுத்துவிட்டுச் செல்ல புவனா சுள்ளியை கொண்டு வந்து அடுப்பின் அருகில் வைத்தாள்.
“கணேஷை எப்படித் தெரியும்?” கோகிலா கேட்க புரியாமல் பார்த்தாள்.
“யார் கணேஷ்?”
“இப்ப உன்கிட்ட வந்து பேசிட்டு போனானே அவன் தான்” கோகிலா சொல்ல
“அவன் பேர் கணேஷ்னு நீங்க சொல்லித்தான் தெரியுது” என்றவளைப் பார்த்து புன்னகைத்தாள் கோகிலா.
“நீதான் வீட்டை விட்டு எங்கயும் வெளியில வர மாட்டியே? அதான் உனக்கு யாரையும் தெரியல.”
“ம்”
“அவன் நம்ம வார்டு கவுன்சிலர். அதாவது தெரியுமா?”
“தெரியாதுக்கா”
“சுத்தம்”
“அடுப்பை பத்த வைக்கலாமாக்கா?”
“இரு நல்ல நேரம் வர இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு”
“சரிக்கா” சொன்னவள் பார்வை எதார்த்தமாக எங்கோபட அங்கே கணேஷ் யாரோ ஓர் அம்மாவின் பாத்திரத்தை வாங்கிக் கீழே வைத்தான். சட்டென்று புவனாவை நிமிர்ந்து பார்க்க அதை எதிர்பாராதவள் பார்வையை உடனடியாக வேறு பக்கம் திருப்பினாள்.
“புவனா”
“அக்கா”
“நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சி” சொன்ன கோகிலாவை திகைப்பாய் பார்த்தாள்.
“என்னாச்சு புவனா ?”
“ஒண்ணுமில்லக்கா”
கோகிலா அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்தாள்.
புவனா வேடிக்கை பார்த்தாள். சற்று தூரத்தில் இருந்த ஒரு குழந்தை அவளைப் பார்த்து சிரிக்க புவனாவும் சிரித்தாள். வா என்று சைகை செய்ய அது அவளை நோக்கி வந்தது. அப்போது
“எங்கே போறே தேவி?” குரல் கொடுத்தபடி கணேஷ் வந்து அந்த குழந்தையைத் தூக்கிக் கொள்ள புவனா அதை எதிர்பார்க்கவில்லை.
‘ஓ இது இவன் குழந்தையா ?’ யோசித்தாள்.
பொங்கல் அம்மனுக்கு படைக்கப்பட்டு சாமி கும்பிட அனைவரும் வரிசையில் காத்திருக்க அந்தக் குழந்தை அவனை அழைத்தது அனைவரும் காதிலும் கேட்டது.
“மாமா சீக்கிரம் வா”
ஓ இது அவன் குழந்தை அல்ல.
யோசித்த புவனாவிற்கு தன் மீது கோபம் வந்தது. யார் அவன்? எதற்காக அவனைப் பற்றி நான் யோசிக்க வேண்டும்? அவன் யாராக வேண்டும் என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே ? யோசித்தபடி அம்மன் முகத்தைப் பார்க்க அம்மன் அவளைப் பார்த்து புன்னகைத்தது போல் அவளுக்குத் தோன்றியது.
வீட்டிற்கு வரும்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. தன்னிடமிருந்து சாவியைத் திறந்து உள்ளே சென்றாள்.
இன்று அரவிந்துக்கு வேலை இல்லை தானே?
யோசித்தவன் தன் மொபைல் எடுத்து அவனை அழைத்தாள்.
“என்ன சொல்லு? “
“எங்க இருக்கீங்க?”
“பார் ல”
“எப்ப வருவீங்க?”
“அவசியம் சொல்லணுமா?”
“அதில்ல வீட்டுக்கு கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியதிருக்கு “
“உனக்கு வாங்கத் தெரியாதா?”
“அதில்லங்க”
“அதானே? விட்டா நீ ஊரையே வித்துட்டு வந்துருவே உனக்குத் தெரியாம இருக்குமா?”
மேற்கொண்டு அவனிடம் அவளுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.
களைப்பாக உணர்ந்தாள்.
ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கை இப்படி இருக்கிறது? சிறுவயதில் இருந்தே இப்படித்தான். அனைத்து வீடுகளிலும் பெண் குழந்தைகளுக்கு அப்பா செல்லம் கொடுக்கிறார் என்றால் என் வீட்டிலோ அப்பா என்னை எப்போதும் வேண்டாத ஒருத்தியாகத்தான் பார்த்தார். அதற்குக் காரணம் ஆண் குழந்தையை எதிர்பார்த்து பெண் குழந்தை பிறந்ததால்.
“வெளில போறப்ப என் முன்னாடி வராதன்னு உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது? உன் மூஞ்ச ப் பார்த்துட்டுப் போனா எதாவது விளங்குமா?”
அப்பா அடிக்கடி இந்த கேள்வியை கேட்டு அவளுக்கேத் தன் முகத்தை யாராவது பார்த்தால் அவர்களுக்கு போகும் காரியம் நடக்காது என்பதாக மனதிற்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டாள்.
“அப்பா”
“என்ன ?”
“நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்கேன்”
“அதுக்கு நான் என்ன பண்ணனும்?” அவர் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
என்னை கொஞ்சம் பாராட்டு என்றா? அல்லது என்றாவது எனக்கும் நல்ல வார்த்தைகள் கொஞ்சம் சொல் என்றா?
அம்மாவிடம் சொல்லி எந்தவித பிரயோஜனமும் இல்லை. அம்மாவிற்கு அப்பா சொல் தான் வேத வாக்கு.
“கங்கிராட்ஸ் புவனா சூப்பர்” உடன்படித்த வசந்த் பாராட்டும் போது மகிழ்ச்சியாக உணர்ந்தாள். வசந்த் உண்மையிலேயே அவளுக்கு நல்ல தோழனாகத் திகழ்ந்தான். அவனுடைய நட்பு கிடைத்த பின் அவளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றால் என்னவென்று ஓரளவிற்குப் புரிந்தது. ஆனால் அதுவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.
“புவனா”
“ம்”
“நீயும் காலேஜ் படி”
“படிக்க வைக்க மாட்டாங்க”
“பெருசா செலவெல்லாம் ஒண்ணும் இல்ல*
“ஆனாலும் படிக்க வைக்க மாட்டாங்க” புவனா சிரித்தபடி சொல்ல வசந்த் கவலையாய் பார்த்தான்.
“என்னாச்சு வசந்த் ஏன் அப்படி பார்க்கறே?”
“என்னிக்காவது ஒரு நாள் நீ நல்லா சிரிச்சு நான் பார்க்கணும்னு ஆசைப்படறேன் புவனா”
அவன் சொல்ல புவனா சிரித்தாள். சிரித்தபடி சொன்னாள்.
“உனக்கு ரொம்ப பேராசை வசந்த்”
பலவித யோசனையில் ஆழ்ந்திருந்த புவனா எழுந்தாள். கதவைப் பூட்டினாள்.
வெளியே வந்தாள். நடந்தாள். கோவிலை தாண்டும் பொழுது எதிரில் கணேஷ் வர அவனை கண்டுகொள்ளாமல் கடந்து விட வேண்டும் என்று மிகுந்த முயற்சி செய்தும் முடியாமல் அவன் அவளைப் பார்த்து புன்னகைக்கையில் அவளும் புன்னகைத்தாள்.
“எங்க கிளம்பிட்டீங்க?” கணேஷ் மிகவும் இயல்பாகக் கேட்டான். அவன் பேசும்போது அவனது ஒழுங்கான பல்வரிசையும் இயல்பிலேயே குறும்பான புன்னகையும் அனைவரையும் கவனிக்க வைக்கும்.
அவன் யாரோ ஒருவன் அவனுக்கு பதில் சொல்ல கூடாது என்று அவள் மனசாட்சி எச்சரித்தும் அவள் பதில் சொன்னாள்.
“கடைக்கு”
“அவர் இல்லையா?”
“வெளியில போயிருக்கார்”
“ம்”
இருவருக்கும் இடையில் சற்று மௌனம் நிலவ அவளுக்கு அங்கிருந்து போகத் தோன்றினாலும் ஏதோ ஒன்று அவளை நிற்க வைத்தது. அவனும் போகாமல் அவள் விழிகளைப் பார்த்தான். அவளுக்கு அது புது மாதிரியாக இருந்தது.
“நான் போகவா?” அவனிடம் கேட்டாள். அதே நேரத்தில் உள்ளே அவள் மனம் அவளை கேவலமாய் திட்டியது. போக வேண்டியது தானே? எதற்காக அவனிடம் அனுமதி கேட்டு நின்று கொண்டிருக்கிறாய் என்று.
அவன் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தபடி “ம்” என்றான்.
“எங்க போகணும்?” கேட்டான்.
“ஈரோடு”
“ம்”
ஒருவழியாக அவனிடமிருந்து விலகி நடந்தாள்.
அவள் பஸ் ஸ்டாப் வரவும் ஈரோட்டிற்காண பேருந்து வரவும் சரியாக இருந்தது. ஏறிக்கொண்டாள். பேருந்து கிளம்பியது.
‘எருக்கஞ்செடியோரம் இறுக்கிப்பிடிச்ச என் மாமா..’
பேருந்தில் பாடல் ஒலிக்க அவளுக்கு புன்னகை வந்தது.
காலம் மாறினாலும் பேருந்தில் ஒலிக்கும் சில பாடல்கள் எப்போதும் மாறுவதில்லை.
கல்யாணத்துக்கு முன்பு இந்த பாடலைப் பேருந்தில் கேட்கும்போது இருந்த மகிழ்ச்சி வேறதான். இப்பொழுதும் இந்தப் பாடல் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் …?
யோசித்த புவனா வெளியில் பார்க்க பன்னீர்செல்வம் பூங்கா வந்திருந்தது.
இறங்கிக்கொண்டாள்.
கடைவீதியில் தம்பதிகளாய் செல்வோரைப் பார்த்து அவளுக்கு பெருமூச்சு வந்தது.
கொடுத்து வைத்தவர்கள் . நன்றாக வாழட்டும்.
எண்ணிய அதே வேளையில் தன்னைக் குறித்து யோசித்தாள்.
அரவிந்த் வெளியில் எங்கும் வரமாட்டான் ஏதாவது கேட்டாலும் நீயே போய் வாங்கிக்க என்று ஒரே வார்த்தையில் தட்டி விடுவான்.
பொருட்கள் வாங்குவது என்பது பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமல்ல. மனைவி கணவனுடன் எதையாவது பேசியபடி ஒன்றாக சில மணித்துளிகள் செலவிடவும் தான். அதை அறியாத கணவன்கள் இங்கே கொஞ்சம் பேர் . அறிந்தாலும் அதை செயல்படுத்தாதவர்கள் கொஞ்சம் பேர்.
பொருட்களை வாங்கிவிட்டு தன் பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கியவள் கண்களில் பட்டான் கணேஷ். அன்று பார்த்த குழந்தையுடன் நின்றிருந்தான். அவள் எதுவும் கேட்பதற்கு முன்பாகவே அவனாகவே சொன்னான்.
“அக்கா பொண்ணு. எங்கயாவது கூட்டிட்டுப் போகச் சொல்லுச்சு. பைக்ல தான் போகணும்னு ஒரே அடம். ஆனா எனக்கு ரொம்ப பயம்.”
அவன் சொல்ல அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஏன்? பைக் ஓட்ட மாட்டீங்களா ?”
“அதெல்லாம் நல்லா ஓட்டுவேங்க ஆனா .. குழந்தைய வச்சுட்டு ஓட்ட பயம்”
அவன் வெளிப்படையாக அப்பாவியாகப் பேசியது அவளுக்குப் பிடித்தது.
“உங்களுக்கு குழந்தை?” அவள் சட்டென்று கேட்டுவிட அவன் சிரித்தான்.
“கல்யாணத்துக்கு இன்னும் பொண்ணு கிடைக்கல”
“ஓ ஸாரி… நான் .. நீங்க கல்யாணம் ஆனவர்னு நினைச்சிட்டேன்”
“பரவால்ல அதுல என்ன இருக்கு?” அவன் சிரித்தபடி கேட்க அவளுக்கு அதை ரசிக்கத் தோன்றியது.
“சீவக்கட்டை பிஞ்சுடும்” அம்மா மனதில் வந்து எச்சரிக்க சட்டென்று தன்னிலைக்கு வந்தாள்.
“நான் கிளம்பறேன் “ என்று சொல்லி அவன் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டிற்கு வர வீடு இன்னும் பூட்டியிருந்தது. இன்னுமா பாரில் இருக்கிறான்?
புவனா அயற்சியாக உணர்ந்தாள். கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
என்ன செய்யலாம் ? யோசித்தவள் சாதம் வைத்து கத்தரிக்காய் போட்டு சாம்பார் வைத்தாள். அப்பளம் பொறித்தாள்,
அரவிந்த் எப்போது வருவான் என்று யோசித்தவள் தன் மொபைல் எடுத்து அவனுக்கு அழைக்க ரிங் போனது. போய்க்கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை.
இது அடுத்தக்கட்டம். அளவுக்கு மீறி குடிக்கிறான் என்றால் போன் செய்தால் எடுக்க மாட்டான்.
“என்ன கேடு வீட்டுக்குத்தானே வர்றேன்? “
அவன் எடுத்தால் வழக்கமாகக் கேட்பது.
புவனா மொபைலை ஓரமாக வைத்துவிட்டு தட்டில் சாதம் போட்டு சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள்.
டிவி போட அதில் பாடல் ஓடியது.
ரஞ்சிதமே ரஞ்சிதமே என்று பாட சேனல் மாற்றினாள். எதைப் பார்ப்பது என்று தெரியாமல் எதையோ பார்த்தபடி சாப்பிட்டாள்.
‘நல்லா ஓட்டுவேங்க. குழந்தைய வெச்சுக்கிட்டு ஓட்ட பயம்’
சட்டென்று மனதில் கணேஷ் சொன்னது ஓடியது.
அக்கறை உள்ள ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நல்ல கணவனோ அல்லது நல்ல மனைவியோ கிடைப்பது அவரவர் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்தது போல். அரவிந்த் மாதிரி ஒரு கணவன் கிடைப்பதற்கு நான் ஏதாவது ஒரு ஜென்மத்தில் நிச்சயமாக பாவம் செய்திருப்பேன்.
மனம் உடனே கணேஷைப் பற்றி எண்ணியது.
“கல்யாணத்துக்கு இன்னும் பொண்ணு கிடைக்கல” அவன் சொன்னது நினைவில் வர அவளுக்கு சிரிக்கத் தோன்றியது. அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண் நிச்சயமாக அதிர்ஷ்டசாலி என்று தோன்றியது. அதே நேரத்தில் அந்த முகம் தெரியாத பெண் மீது ஒரு இனம் புரியாத பொறாமை புவனாவின் மனதில் தோன்ற
‘என்ன இது?’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.
அப்போது
அழைப்பு மணி ஒலித்தது.
தொடரும்

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.