பேபி 2
“என்ன கேட்டே?” சிவகாமி வாசந்தியை ஏறிட்டாள்.
“பேய் இருக்கான்னு”
“ இருக்கே”
“என்னம்மா இப்படி சாதாரணமா சொல்றே ? உனக்கு பயமா இருக்காதா?”
“எதுக்கு பயம்? இப்ப போன வாரம் செத்துப் போனாரே ?”
“யார்?”
“அதான் நம்ம கடைக்கார பாலு”
“ம்”
“ரெண்டு நாள் முன்னாடி நம்ம பக்கத்து வீட்டு அலமு வீட்டுக்கு வெளியில வர்றப்ப அவர் வந்து வாசல்ல நின்னுட்டு எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்க. ரொம்ப பசிக்குதுன்னு கேட்டிருக்காரு. நம்ம அலமு பயந்து உள்ள போய் கதவு பூட்டிக்கிட்டா.”
“என்னம்மா சொல்ற?”
“நிஜமா நடந்தது. அலமுவக் கொண்டு போய் ஹாஸ்பிடல்ல காட்டிட்டு வந்தாங்க. இதுக்கு நடுவுல வேற ஒரு கூத்து.”
“அது என்ன?”
“அலமு புருசனுக்கு பயங்கரக் கோபம். ஊர்ல எத்தனையோ பொம்பளைங்க இருக்கும்போது அவன் இங்க மட்டும் வந்து பசிக்குது ஏதாவது கொடுன்னு கேக்கறான்னா அதுக்கு என்ன காரணம்னு கேட்டு டார்ச்சர் பண்றான்”
“எனக்கும் அந்த கேள்வி மனசுக்குள்ள வந்துச்சுமா”
“அதுக்காக எல்லாத்தையும் அப்படியே சொல்ல முடியுமா என்ன? போய் வேலையப் பாரு போ” சொன்ன சிவகாமி தான் வாங்கி வந்த பிரக்னன்சி டெஸ்ட் கிட்டைக் கொடுத்தாள்.
“இந்தா டெஸ்ட் பண்ணிப் பாரு”
அதை வாங்கிக் கொண்ட வாசந்தி தன் அறைக்குச் சென்றாள். டெஸ்ட் செய்யலாம் என்று கிட்டை எடுக்க காற்று எங்கிருந்தோ வந்து வெறித்தனமாக வீச ஃபேன் ராட்சச வேகத்தில் சுற்றியது.
அவள் பயந்தாள். எங்கே தூக்கி வீசப்பட்டு விடுவோமா என்று தோன்றியது. எதையாவது பிடித்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று யோசித்தவள் பார்வைக்கு ஒன்றும் புலப்படவில்லை. அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக சுற்றியபடி இருந்தன. தன் அருகில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் ஏதியோ பற்றிக் கொண்டாள். சொரசொரப்பாக உணர்ந்தவள் கண்கள் திறந்து பார்க்க அது ஒரு கை. ரத்தத்தீற்றல்கள் ஆங்காங்கே மண் தீற்றல்களுடன் கலந்த கை. வீறிட்ட வாசந்தி தான் பிடித்திருந்த கையை உதறிடாள். ஆனால் அவளால் அந்த கையிடமிருந்து அவளை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
“அம்மா” அலறினாள். ஆனால் அறையில் ஃபேன் சுற்றும் சத்தத்தைத் தாண்டி அவள் சத்தம் அம்மாவின் காதுகளை எட்டாது என்று அவளுக்கேத் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கியபடி பார்த்தாள்.
எப்படியாவது கதவின் அருகில் சென்று விட்டால் கதவைத் திறந்து வெளியில் சென்று விடலாம்.
யோசித்தவள் மெல்ல எட்டு வைக்க முயல காற்றின் வேகத்தில் சுவரில் மொத்தப்பட்டு கீழே விழுந்தாள்.
அப்போது அந்த மணத்தை அவள் நாசி நுகர்ந்தது.
‘இது எந்த மணம்?’
மெல்ல எழ முயன்று முடியாமல் அப்படியே கிடந்தாள்.
“வாசந்தி” காதுகளில் மீண்டும் அந்த குரல் கேட்க பதட்டமாய் எழுந்து அமர்ந்தாள்.
“யார் நீ? ப்ளீஸ் சொல்லு. எதுக்கு என்னை இப்படி சித்ரவதை பண்றே? உனக்கு என்ன வேணும்?”
வாசந்தி அழாக்குறையாய் கேட்க சற்று நேரம் மௌனம் நீடித்தது.
“நான் பாவம் ப்ளீஸ் என்ன விட்டுடு” வாசந்தி மீண்டும் கதற ஒரு சிரிப்பு சத்தம் அங்கே கேட்டது.
“இதேதானே அன்னிக்கு நானும் சொன்னேன். நான் பாவம் ப்ளீஸ் என்ன விட்டுடுன்னு. ஆனா நீ என்ன பண்ணே? “
“மை காட். நீ பேசறது எதுவுமே எனக்கு புரியல. நீ யாருன்னு கூட எனக்குத் தெரியல. நீ யாருன்னாவது சொல்லு.”
அவள் கெஞ்ச அந்த உருவம் அவளையே பார்த்தது. அது புகையாய் தலையும் உடம்பும் மட்டுமே இருந்தது.
சற்று தூரத்தில் தனியாக இருந்த கையை அந்த உருவம் பார்த்தது. அதன் முகத்தில் ஒரு கண் மட்டுமே இருந்தது. மற்றொரு கண் இருக்க வேண்டிய இடத்தில் குழி மட்டுமே இருந்தது. தன் ஒற்றை விழியால் வாசந்தி டேபிள் மேல் வைத்திருந்த பிரக்னன்சி கிட்டைப் பார்த்தது. உடனே தூரத்தில் இருந்த அந்த கை டேபிளை நோக்கி நகர்ந்து வந்தது.
டெஸ்ட் கிட்டை எடுத்த கை அதை இரண்டாக உடைத்து கீழே போட்டது.
வாசந்தி அதிர்ந்து போய் பார்க்க சற்று நேரத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் நின்றது.
அவள் தடுமாறி எழுந்து நின்றாள். அந்த கை எங்கே என்று பார்க்க அது எங்கேயும் கண்ணுக்குத் தென்படவில்லை.
ஜன்னலை பயத்துடன் பார்த்தாள். அங்கே அப்போது அவளைத் தவிர யாரும் இல்லாதது போல் தோன்றியது. கீழே இரண்டாக உடைந்திருந்த பிரக்னன்சி கிட்டை எடுக்கப் போனவள் பின் என்ன நினைத்தாளோ அதை எடுக்காமல் வேகமாக கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“அம்மா” பதட்டமாக அழைத்தாள்.
பதில் இல்லை.
இந்த அம்மா எங்கதான் போச்சு? தன்னுள் பேசியபடி சமையலறைக்கு வந்து பார்த்தாள். சிவகாமி அங்கே இல்லை.
மாட்டுத் தொழுவத்திற்கு அம்மா போயிருக்குமோ?
யோசித்தவள் வெளியே சென்று பார்க்க அங்கேயும் சிவகாமி இல்லை.
அவளுக்கு பயம் அதிகமானது. ஒருவேளை அம்மாவிற்கு ஏதாவது நடந்திருக்குமோ?
இதயம் வேகமாய் துடிக்க சிவகாமியை வீடு முழுக்கத் தேடினாள்.
எதார்த்தமாக திரும்பிப் பார்க்க சிவகாமி அவளுக்கு முதுகு காட்டியபடி எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்க துணுக்குற்ற வாசந்தி “எங்கம்மா போயிட்டே நான் எத்தனை தடவை கூப்பிடறது?” கேட்டபடி அவள் தோளைத் தொட சட்டென்று திரும்பிய சிவகாமியின் முகத்தில் …
அவள் முகம் இல்லை.
தொடரும்

Author: gavudham
Article Title: பேபி 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.