“அம்மா” வாசந்தி தன் அம்மாவை அழைக்க சிவகாமி என்னவென்று பார்த்தாள்.
“நாள் தள்ளிப்போயிடுச்சு”
“எவ்வளவு நாள் ஆகுது?”
“ஐம்பது நாள் ஆயிடுச்சு”
“டெஸ்ட் எடுத்துப் பார்த்தியா?”
“இல்லம்மா”
“சரி நான் ஒரு கிட் வாங்கிட்டு வரேன் டெஸ்ட் பண்ணிப்பாரு”
“ம்”
சிவகாமி சமையலைத் தொடர வாசந்தி வெளியே ஏதோ சத்தம் கேட்க எட்டிப் பார்த்தாள்.
மாடு வித்தியாசமாகக் கத்தியது அவளை துணுக்குறச் செய்தது.
‘மாடு எதையோ பார்த்து பயந்திருக்கு’
யோசித்தவள் மாட்டின் அருகில் வந்து மாட்டின் தலையைத் தடவிக் கொடுக்க முயல மாடு பயந்து அலறியது. அதன் பார்வை போன இடம் பார்த்த வாசந்தி திக்கென்று அதிர்ந்தாள். ஏதோ நிழலாய் கடந்து போனது போல் தோன்ற உண்மையா பிரமையா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
சிவகாமி வெளியே வந்தாள்.
“ இங்க என்னடி பண்ற?”
“மாடு எதையோ பார்த்து பயந்திருக்கு”
“சரி அதுக்கென்ன?”
“என்னம்மா ரொம்ப சாதாரணமா கேக்கற?”
“வேற என்ன பண்ணனும்னு சொல்றே?”
“மாடு மிரண்டிருக்குமா”
“ஏதாவது பார்க்கக் கூடாதது பார்த்திருக்கும்”
“என்னம்மா சொல்ற?”
“எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். நமக்கு தெரியாத சில விஷயங்கள் கூட மிருகங்களுக்குத் தெரியும். இப்பயும் சில நாய்ங்க நைட்டு ஊளையிட்டு கேட்டிருக்கியா?”
“ம்”
“அதுக்கு என்ன காரணம்?”
“தெரியலையே.”
“அது கண்ணுக்கு துஷ்ட சக்திங்க தெரியும். ஒரு வகையில சொல்லப்போனா நாய் ஊளையிட்டா எல்லாரும் வீட்ல அமைதியா இருக்கணும். எங்கயும் வெளியில் போய் எதுவும் பிரச்சனைல சிக்கிக் கக்கூடாது. ஏன்னா நாய் ஊளையிடுற அன்னிக்கு ஒரு சாவு நிச்சியமா விழும்.”
அம்மா சொல்ல வாசந்திக்கு பகிர் என்றது.
“என்னம்மா ஹாரர் ஸ்டோரி மாதிரி பயமுறுத்தறே?”
“இது ஹாரர் ஸ்டோரிதான். நைட் தனியா இருக்கும் போது படிச்சா கண்டிப்பா தூக்கம் கெட்டுப் போயிடும். உடம்பு தூக்கித்தூக்கிப் போடும் கெட்ட கனவு வரும். பார்த்துக்க”
“ம்”
“சரி நீ கதவைப் பூட்டிட்டு வீட்ல இரு. நான் மெடிக்கல் ஷாப் க்கு போயிட்டு வந்துடறேன்.”
“சரிமா”
சிவகாமி வெளியே வர வாசந்தி எழுந்து வந்து கதவைப் பூட்டுவதற்குள் காத்திருந்த “அது “ உள்ளே நுழைந்தது.
வாசந்திக்கு போர் அடித்தது. டிவியை ஆன் செய்தாள். டிவியில் புள்ளிப் புள்ளியாய் ஓட அவளுக்கு கோபம் வந்தது.
“காசு மட்டும் வாங்கிக்கிறாங்க எல்லா மாசமும் கரெக்டா . ஆனா டிவி எப்பவுமே தெரியறதில்ல “
வாசந்தி கோபத்தில் சொல்ல அதே நேரம் டிவிக்குள் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அவள் பயத்துடன் பார்த்தாள்.
‘என்ன சத்தம் அது?’
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு டிவிக்கு அருகில் செல்ல அவள் செல்வதற்குள் டிவி கீழே தள்ளப்பட்டு விழுந்தது. அவள் பதறினாள்.
‘ஏதோ இங்கிருக்கிறது. ‘
தன் அறைக்குள் வேகமாக நுழைந்து கதவை சாத்திக் கொள்ள முனைந்தவளுக்கு தன் அறைக் கதவை சாத்த முடியவில்லை.
யாரோ தன்னுடன் இருப்பதைப் போல் உணர்ந்தவள் யார் என்று தெரியாமல் பதட்டமாய் அலறினாள்.
“யாரது? ப்ளீஸ் என்ன விட்டுடு”
அவள் அலறல் சத்தமாய் கேட்டது. ஆனால் பதில் ஒன்றும் இல்லை.
சற்று நேரத்தில் அவள் காதில் ஒரு குரல் கேட்டது.
“வாசந்தி”
குரல் கேட்டவள் திக்கென்று அதிர்ந்தாள்.
“யா…. ர் யா…ர் ?”
“என்ன வாசந்தி ? என்னை மறந்துட்டியா? என்னோட ஞாபகம் இல்லையா உனக்கு?”
அந்தக் குரலைக் கேட்ட வாசந்தி படபடப்பாய் உணர்ந்தாள்.
இது … இது…
அவள் யோசிக்க குரல் தொடர்ந்தது.
“நீ என்னை மறந்துட்டே. பரவால்ல இனிமே என்னை நீ எப்பவுமே மறக்க முடியாது. மறக்க முடியாத படி ஏதாச்சும் பண்ணத்தான் திரும்ப வந்திருக்கேன். “
குரல் ஒரு மாதிரி வித்தியாசமாகப் பேச வாசந்தி பயத்தில் அலறினாள்.
“யார் நீ?”
அப்போது அங்கே ஒரு கை மட்டும் சொரசொரப்பாய் அவள் முன் வர அவளுக்கு நடுங்கியது.
அருகில் வந்த கை அவளைத் தொட முயல வீறிட்டபடி ஓடியவள் எதிரில் புகையாய் ஓர் உருவம் நின்றது. .
வாசந்திக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. மயங்கி விழுந்தாள்.
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
***
வாஸந்தி எப்பொழுது எழுந்தாள். கதவைத் திறந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. சிவகாமி வாசந்தியைத் திட்டினாள்.
“எவ்வளவு நேரம் கூப்பிடறது? அப்படி என்ன பண்ணிட்டிருந்தே?” சிவகாமி கேட்க வாஸந்தி பதில் ஒன்றும் சொல்லாமல் பார்க்க
“என்னடி ஆச்சு? ஏன் இப்படி இருக்கே?” கேட்ட சிவகாமி அவளை பிடித்து உலுக்கினாள்.
சட்டென்று வாசந்தி அழ ஆரம்பிக்க சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை.ஏதோ தவறாக நடந்து இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் வாசந்தியைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
சற்று நேரம் கழிந்தது. வாசந்தி பயமாக உணர்ந்தாள்.
‘அந்தக் குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன். எங்கே?’
யோசித்தவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
“சரி விடு கண்டத யோசிக்காத” சிவகாமி சொன்னது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
“அம்மா நான் ஒண்ணு கேட்கலாமா? தப்பா நினைக்கக்கூடாது”
“நான் எதுக்கு உன்னைத் தப்பா நினைக்கப் போறேன். எதுனாலும் கேளு”
“ஆவி பேய் இதெல்லாம் நிஜமாவே இருக்கா?”
தொடரும்

Attachments
Author: gavudham
Article Title: பேபி 1 Horror
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.