சைக்யாட்ரிஸ்ட் 7
“சார்” விஷ்ணு அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“சிசிடிவி விஷுவல்ஸ் கொண்டு வா”
விஷ்ணு வெளியே வந்து கண்களை காட்ட யாரோ ஒருவன் ஓடினான். சற்று நேரத்தில் பென்டிரைவ் உடன் வந்தான். அங்கிருந்த கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்தான்.
விஷால் அதை உன்னிப்பாய் கவனித்தான்.
“லாஸ்ட் ஒன் வீக் விஷுவல் கம்ப்ளீட்டா போடு”
“யெஸ் சார்”
விஷால் பார்த்தான். சந்தேகத்திற்கு இடமாக ஒன்றும் கிடைக்கவில்லை.
மெல்லிய ஏமாற்றம் உள்ளே பரவ அதை காட்டிக் கொள்ளாத விஷால் எழுந்தான்.
விஷ்ணுவிற்கு மனதில் தப்பித்தோம் என்ற உணர்வு பரவியது.
வித்யாசாகர் பரபரப்பாக உள்ளே நுழைந்தார்.
“ யாரு?” என்று விஷாலைப் பார்த்து கேட்டவருக்கு விஷ்ணு அவர் காதருகில் மெல்ல ஏசிபி என்றான்.
வித்யாசாகர்க்கு வியர்த்தது.
“ஓகே அப்ப நான் கிளம்பறேன் எனக்கு ஒரு சின்ன டவுட் அதான் இவ்வளவு தூரம் வரவேண்டியதாயிடுச்சு “ சொன்ன விஷால் வெளியே வந்தான்.
“பரவால்ல சார் “ சொன்னபடி வித்யாசாகரும் விஷ்ணுவும் வெளியில் வர விஷால் விஷ்ணுவிடம் கேட்டான்.
“உங்க பிளான்ட் எங்க இருக்கு?”
***
“என்ன சொல்றீங்க?” தேவ் ஆத்திரமாகக் கேட்க மறுமுனையில் வித்யாசாகர் கெஞ்சினார்.
“சார் அவங்க ரெண்டு பேரும் பிளான்ட்டுக்கு போயிருக்காங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல சார் “
“செத்துப்போ”
“சார்”
“ஒரு ஏ சி பி ய உருப்படியா பேசி சமாளிக்கத் தெரியல. நீயெல்லாம் எதுக்குய்யா உயிரோட இருக்கணும்?”
“சார்”
“போனை வை நான் ஏதாவது பண்றேன் “
தேவ் சிகரெட்டைப் பற்றவைத்தான்.
நீரஜிற்கு அழைத்தான்.
“நீரஜ்”
“சொல்லுண்ணா”
“அந்த ஜோக்கர் என்ன பண்றான்?”
“தூங்கறாண்ணா”
“உனக்கு ஒரு வேலை இருக்கு.”
“சொல்லுண்ணா”
“குன்னூருக்குப் போ. அந்த ஏசிபி பொண்டாட்டிய முடிச்சுடு”
“என்னண்ணா ஆச்சு?”
“அவன் திரும்ப நம்ப லைன்ல குறுக்க வர்றான்.அவன் மேல கை வைக்க வேண்டாம். அதனால தேவையில்லாத பிரச்னை வரும். அதான்”
“சரிண்ணா நான் கிளம்பறேன் “
“நீரஜ் “
“அண்ணா”
“உன் கூட ஆளுங்களக் கூட்டிட்டுப் போ. இன்னைக்கு நைட் அவ செத்துட்டாங்கற நியூஸ் நீ எனக்கு சொல்ற “
“ கண்டிப்பாண்ணா”
***
விஷ்ணுவிற்கு அதிகமாக வியர்த்தது.
மனதில் பொங்கிய பதட்டத்தை வெளியில் காண்பிக்காமல் விஷாலைத் தொடர்ந்து நடந்தான்.
“சார்”
“ம்”
“இதான் எங்க பிளான்ட்”
விஷ்ணு சொல்ல விஷால் அதைத் தன் பார்வையால் அலசினான். மேலே பொருத்தப்பட்டிருந்த கேமரா விஷால் பார்வைக்குத் தெரிய
“லாஸ்ட் ஒன் வீக் சிசிடிவி விஷுவல் இம்மீடியட்டா வேணும்.”
விஷால் சொல்ல விஷ்ணு அவஸ்தையாய் தலையசைத்தான்.
விஷால் பிளான்டிற்குள் செல்லாமல் அதை ஒட்டி இருந்த மண் சாலையில் சற்று தூரம் நடக்க விஷ்ணு ஒன்றும் புரியாமல் பார்த்தான்.
கொஞ்ச தூரம் நடந்த விஷாலின் பார்வையில் ஒரு வெளிச்சம் பட அது என்னவென்று அதை நோக்கி சென்றான்.
அது ஒரு மொபைல். மண் அப்பிக் கிடக்க அதைத் துடைத்தான். ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்த அந்த மொபைலை எடுத்தவன் வேறு எதுவும் அங்கு இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை.
திரும்பியவன் பிளான்டிற்குள் நுழைந்தான்.
விஷ்ணு பென் ட்ரைவைக் கனெக்ட் செய்தான்.
சிசிடிவி விஷுவல்ஸ் கம்ப்யூட்டரில் ஓடின.
விஷால் மிக கவனமாய் அனைத்தையும் ஆராய்ந்தான். ஓரிடத்தில் ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய விஷால் விஷ்ணுவை ஏறிட்டான்.
“யாரோட பைக் அது? ஏன் அங்க இருக்கு?”
“இங்க ஒர்க் பண்றவங்க யாராவது அங்க நிறுத்தியிருக்கலாம் சார் “
“இல்லையே அவங்களுக்குத்தான் இங்க பார்க்கிங் இருக்கே?” சொன்ன விஷால் அந்த பைக்கின் நம்பரைப் பார்த்தான். குறித்துக் கொண்டான்.
தன் மொபைலை எடுத்து காயத்ரிக்கு அழைத்தான்.
மறுமுனையில் காயத்ரி எடுக்க
“நான் விஷால்”
“அண்ணா சொல்லுங்கண்ணா அவர் கிடைச்சுட்டாரா?”
“அந்த விஷயமாத்தான் நான் இங்க ஒரு இடத்துக்கு வந்திருக்கேன். உங்க ஹஸ்பண்ட் அன்னிக்கு எப்படி போனார்?”
“பைக்லண்ணா”
“பைக் நம்பர் கொஞ்சம் சொல்றீங்களா?”
காயத்ரி சொன்னாள். விஷால் எழுந்தான்.
“விஷ்ணு”
“சார்”
“சண்முகம் எங்கே?”
விஷால் கேட்க விஷ்ணு பயமாய் பார்த்தான்.
“எனக்கு தெரி…” முடிக்கும்முன் விஷால் ஓங்கி அறைந்ததில் பொறி கலங்கிப் போய் பார்த்தான்.
*என்னடா பார்க்கற? ஒருத்தனப் பார்த்த உடனே என்னால அவன் கிரிமினலா இல்லையான்னு தெரிஞ்சுக்க முடியும். ஆனா உங்கிட்ட நான் ஏன் பொறுமையா பேசிட்டிருந்தேன் ? எனக்கு எவிடன்ஸ் வேணும். இப்ப எனக்கு எவிடன்ஸ் கிடைச்சிருச்சு. இனி நீ தப்பிக்க முடியாது. உண்மையை சொல்றியா இல்ல போலீஸ் ஸ்டேஷன் க்கு கொண்டு போகட்டா?”
விஷால் கேட்க “அது அவ்வளவு ஈஸி இல்ல சார்” ஒரு குரல் கேட்டது.
விஷால் யார் என்று பார்க்க அங்கே ஆறு பேர் இருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் கத்தி.
விஷால் சிரித்தான்.
“என்ன என்கூட சண்டை போடணுமா?”
“இல்ல”
“அப்புறம்?”
“உன்னை பாஸ் முடிக்கச் சொல்லிட்டார்” ஆறு பேரில் ஒருவன் சொல்ல விஷால் புன்னகைத்தான்.
“வா வந்து முடி நான் ரெடி” விஷால் சொல்ல அவன் கத்தியை ஓங்கிக் கொண்டு ஆவேசமாக விஷால் மீது பாய்ந்தான். அவன் கையை இலகுவாய் பிடித்த விஷால் பின்னால் கொண்டு சென்று முறுக்க கத்தியை தவற விட்டான். அலறினான்.
“டேய் எல்லாரும் வாங்கடா”
அவர்கள் ஓடி வர விஷால் அவனைத் தூக்கி அவர்கள் மேல் எறிந்தான். இரண்டு பேர் கதவின் மீது மோதி கீழே விழுந்தனர். சுதாரித்துக் கொண்ட நான்கு பேரும் விஷாலை சூழ்ந்து கொள்ள இரண்டு பேரின் கழுத்தை தன் இரு கைகளால் பிடித்த விஷால் மற்றொருவனை காலால் எட்டி உதைக்க அவன் அவன் அம்மாவை சத்தமாய் கூப்பிட்டபடி கீழே விழுந்து உருண்டான்.
நான்காவதாய் நின்றவன் என்ன செய்வது என்று தயங்க தன் இரண்டு கைகளில் சிக்கிய இருவரையும் அப்படியே தூக்கி எறிந்த விஷால் அவன் முன் வந்து நின்றான்.
“என்ன நீ மட்டும் சும்மா இருக்கே? என் மேல பயமா?” விஷால் கேலியாகக் கேட்க அவன் சட்டென்று கத்தியை விஷாலை நோக்கி எறிந்தான். கத்தி தோள்பட்டையை உரசியபடி சென்றது.
“குட் ட்ரை. ஆனா மிஸ் ஆயிடுச்சே ஸோ சேட். நெக்ஸ்ட் டைம் கரெக்டா குறி வைக்கணும் ஓகேவா? “ கேட்ட விஷால் அவன் கழுத்தைப் பிடித்து கோழியைத் திருகுவது போல் திருகிக் கீழே எறிய அவன் அலறியபடி கீழே விழுந்தான்.
நடந்தது அனைத்தையும் நம்ப முடியாமல் பார்த்த விஷ்ணுவை நெருங்கிய விஷால் கேட்டான்.
“சண்முகம் எங்கே?”
“சார்”
“உண்மையச் சொன்னா உன் உடம்புக்கு எந்த பாதிப்பும் வராது. மாசக் கணக்குல ஹாஸ்பிடல்ல படுத்திருக்கணும்னு நீ ஆசைப்பட்டா எனக்கு அப்ஜக்ஷன் ஒண்ணும் இல்ல. உனக்கு எப்படி வசதி?” விஷால் கேட்க தயக்கமாய் பார்த்தான்.
“சார்”
“நான் சொல்லிடறேன் சார்”
“தட்ஸ் குட்”
“எங்க எம் டி வித்யாசாகர் பிரெயின் ஸ்டிமுலேட்டிங் டேப்லட் இங்க தயாரிக்கிறார். அதாவது மூளையைத் தூண்டி தாறுமாறா உத்தரவுகளைப் போட்டு கடைசில அவங்கள சாகடிக்கிற மாத்திரை அது. செத்துப்போனா பரவாயில்லன்னு அவங்களுக்குத் தோணும். அதனால அந்த மாத்திரையை சாப்பிட்டவங்க நிறைய பேர் செத்துப்போய்ட்டாங்க “
விஷ்ணு சொல்ல விஷால் அதிர்ந்தான்.
“என்ன சொல்ற? அப்படி ஒரு மாத்திரை தயாரிக்கிறதுக்கு கவர்மெண்ட் எப்படி அப்ரூவ் பண்ணாங்க?”
“ப்ரப்போசல்ல நாங்க கொடுத்தது சாதாரண ஃபீவர் டேப்லட் தான். ஆனா யாருக்கும் தெரியாம நாங்க பிரெயின் ஸ்டிமுலேட்டிங் டேப்லட்ஸ் தான் தயாரிக்கிறோம். “
“ம்” சொன்ன விஷால் விஷ்ணுவை ஏறிட்டான். கேட்டான்.
“இப்ப பேப்பர்ல வர்ற நிறைய தற்கொலை செய்திகளுக்கு நீங்க தான் காரணமா?” விஷால் கேட்க விஷ்ணு ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தான்.
“சொல்லுடா”
“சார்”
“எப்படி இத்தனை பேரை கொலை பண்ண முடிஞ்சது?”
“சார் ஒவ்வொரு ஊர்லயும் சைக்யாட்ரிஸ்ட்ங்கிற பேர்ல எங்களோட ஆளுங்கள க்ளினிக் ஸ்டார்ட் பண்ண வச்சோம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் யங்ஸ்டர்ஸ் எங்களோட டார்கெட். அவங்கதான் எப்பவுமே எமோஷனலா இருப்பாங்க. ஒரு லவ் ஃபெயிலியர்னாக் கூட ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு காதல் தான் எல்லாமேன்னு அலைவாங்க. எங்களுக்கு அவங்க டார்கெட். எங்களோட ஆளுங்க அவங்க கிட்ட பழகி நல்ல சைக்யாட்ரிஸ்ட் இருக்காரு போய் பாருங்கன்னு தூண்டி விடுவாங்க. அதில் எல்லாரும் வந்து பார்க்கு.றது கிடையாது. ஆனா இதுவரை வந்து பார்த்த எல்லாரும் செத்துட்டாங்க. “
இயல்பாக சொன்னவனை கோபமாய் பார்த்தான் விஷால்.
“எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க? யார் யார் இதுக்கு பின்னாடி இருக்காங்க சொல்லு”
“எங்க எம்டி எனக்கு சொல்வார் சார் நான் தான் தமிழ்நாடு ஃபுல்லா எல்லா மாவட்டத்துக்கும் ஆளுங்கள அனுப்பி வச்சேன்.”
“உனக்கு எப்படி எத்தனை பேர் கிடைச்சாங்க?”
“எங்க கம்பெனியில இன்டர்வ்யூன்னு சொல்லி கூப்பிடுவோம். இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சா கம்பெனில ஒரு நல்ல ஜாப் கிடைக்கும் அதுக்கு அப்புறம் காலம் ஃபுல்லா நிம்மதியா இருக்கலாம்னு ஆசை காட்டுவேன். நிறைய பேர் அதற்கு சம்மதிச்சுருக்காங்க”
“உங்களால இதுவரைக்கும் செத்துப் போனது எத்தனை பேரு?”
“ஸாரி சார் சரியாத் தெரியல “
“சண்முகம் எங்க இருக்கான் இப்போ ?”
விஷால் கேட்க விஷ்ணு ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.
“போன ஞாயித்துக்கிழமை நான் பிளான்டுக்கு வந்திருந்தேன். அப்பதான் சண்முகம் பிளான்டப் போட்டோ எடுத்துட்டிருந்தான். என்னை பார்த்ததும் தப்பிச்சு ஓடப் பார்த்தான். நான் பிடிச்சுட்டேன். அவனைக் கொண்டு போய் அவுட் ஹவுஸ்ல அடைச்சு வச்சேன். எங்க எம்டி கிட்ட கேட்டேன் என்ன பண்ணலாம்னு. அவனோட சாவு ரொம்ப கொடூரமாக இருக்கணும்னு சொன்னார். அவனத் தீர்க்கறதுக்காக அவுட்ஹவுஸ்க்குப் போனேன். ஆனா அவன் அங்க இல்ல”
“என்ன சொல்ற நீ? நீ சொல்றது உண்மையா?”
“ஆமா சார் ஆனா இத நான் வெளியில சொன்னா எனக்குத்தான் பிரச்னை வரும்னு நான் அவனை கொலை பண்ணதா எங்க எம் டி கிட்ட பொய் சொல்லிட்டேன் “
“ஓகே நீ சொன்னது எல்லாமே ஸ்டேட்மென்டா எழுதி கையெழுத்து போட்டு கொடுக்கிறே. “
“சார்”
“என்ன சொல்லு”
“எங்க லாயரை ஒரு முறை …” அவன் முடிக்கவில்லை. விஷால் கோபமாகப் பார்த்ததை உணர்ந்தவன்
“ நான் எழுதித்தர்றேன் சார்” அவசரமாய் சொன்னான்.
“இந்தக் கம்பெனி யாரோட பேர்ல இருக்கு?”
“எங்க எம் டி வித்யா சாகர் பேர்ல சார்”
“அப்ப இந்த கம்பெனி இருக்கிற நிலமும் உன் எம் டி பேர்லத் தான் இருக்கணும் இல்லையா?”
“ஆமா சார்”
“எனக்கு இந்த கம்பெனி டாக்குமெண்ட்ஸ் கம்ப்ளீட்டா பார்க்கணுமே?” விஷால் சொல்ல விஷ்ணு இமைக்க மறந்து பார்த்தான்.
தொடரும்

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 7
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.