ராகவ் புறப்பட்டுச் சென்ற பின் புனிதா சற்று நேரம் எதுவும் செய்யத் தோன்றாமல் யோசித்தாள்.
கோயிலுக்குப் போனால் என்ன? மனதிற்குள் எண்ணம் தோன்ற உடனே சற்றுமுன் ராகவுடன் இருந்தது நினைவிற்கு வர வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
ஏன் தன் வாழ்க்கை இப்படி ஆனது என்ற குழப்பம் அவள் முகத்தில் நிலவியது.
'ஆரம்பத்திலேயே தவறு என்று தெரிந்திருந்தும் நானாக சென்று மீள முடியாத ஒரு வலைக்குள் சிக்கிக் கொண்டேனா?'
எண்ணம் தலைதூக்க யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதே நேரத்தில் யாரிடம் பேச என்ற குழப்பமும் மேலோங்கியது.
அம்மா இருந்தவரை வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. இது சரி இது தவறு என்று அம்மா அவளை நெறிப்படுத்துவாள். புனிதா வெகு எளிதில் உணர்ச்சிவசப்படும் சுபாவம். அந்த சுபாவத்தில் இருக்கும் பெண்கள் எளிதில் ஏமாறுவர். அவர்களை ஏமாற்றி காரியம் சாதிப்பது காதல் என்ற பெயரில் அவர்களிடம் தேவையானவற்றை எடுத்துக் கொள்வது ஆண்களுக்கு மிக எளிது.
ஒரு பெண் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திவிட்டால் எந்த ஆணாலும் அவளை எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. ஆனால் பெரும்பான்மையான பெண்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். எதையும் அறிவுப்பூர்வமாக யோசிக்காமல் எளிதில் நம்புகிறார்கள்.
ஒருவன் தன்னிடம் வந்து நீ தான் என் வாழ்க்கை என்று சொன்னால் அவன் எதற்காக அப்படி சொல்கிறான்? அவன் நோக்கம் என்ன? ஒருவேளை அவன் நோக்கம் நிறைவேறிய பின் அவன் இதே நிலையில் இருப்பானா? அவன் நிலை மாறினால் நம் நிலை என்ன என்ற கேள்விகள் பெரும்பாலான பெண்கள் யோசிப்பதில்லை.
ஏமாறியபின் புரிந்துகொண்டு புலம்புவதில் தனக்குள் மன அழுத்தத்தில் தவிப்பதில் ஒரு பயனுமில்லை. அதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு அந்தக் கோபத்தை காட்டக் கூடாதவர்களிடம் காட்டக் கூடாத தருணங்களில் காட்டும் பொழுது அது இன்னும் வாழ்க்கையை சிக்கலாக்குகிறது.
அம்மா இறந்த பின்பு சொந்தபந்தம் இருந்தாலும் புனிதாவை தனிமை துயரில் தள்ளியது. எதிர்காலத்தைக் குறித்த ஏதோ ஒரு பயம் அவளை ஆட்டிப்படைத்தது. அந்த நேரத்தில் ராகவ் அவளை அணுக முதலில் மறுத்தாலும் அவன் தொடர்ந்த அணுகுமுறையாலும் நேர்மறையாகப் பேசியதாலும் தவறு என்று தெரிந்தும் அந்தத் தவறுக்கு இடம் அளித்தாள். அப்பொழுதே இது எதுவரை போகும் என்ற குழப்பம் அவளைப் பீடித்திருந்தாலும் அந்தத் தருணத்தில் வாழ்க்கை எளிதாக இருப்பதற்காக அதைப்பற்றி அதிகமாக எண்ணாமல் விட்டுவிட்டாள். ஆனால் அவன் திடீரென்று வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லும் பொழுது ஆரம்பத்தில் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அது வரையும் சந்தியா குறித்து எண்ணாதவள் அவளுக்காகப் பரிதாபட்டாள். அதைப் புரிந்திருந்த ராகவ் புனிதா நம்பும் படி ஒரு கதையை சொல்லி அவளை நம்ப வைத்து விட்டான்.
இப்பொழுது புனிதாவின் மனதில் அந்த இரண்டு குழந்தைகளும்தான் இருந்தனர்.
அவள் மொபைல் அடித்தது.
யார் என்று பார்த்தாள்.
ஸ்டெல்லா. புனிதாவுடன் முன்பு அறையில் தங்கியிருந்தவள்.
"ஸ்டெல்லா எப்படி இருக்கே?"
"ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே? எங்க இருக்கே இப்போ?"
"ரூம்ல"
"நாளைக்கு காலைல டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் கோயம்புத்தூர்ல . உனக்கு அப்ஜக்ஷன் இல்லேன்னா உன்கூட தங்கிக்கலாமா?" ஸ்டெல்லா கேட்க புனிதா செல்லக்கோபத்துடன் சொன்னாள்.
"லூஸ் முதல்ல வாடி. கேட்டுட்டிருக்கே."
மறுபடியும் சிரித்த ஸ்டெல்லா போனை வைத்தாள்.
***
மயானம்.
எங்கும் இருட்டு விரவியிருந்தது.
வெளிச்சம் என்பது துளியும் இல்லை. அவன் தன் கண்களுக்குத்தான் பார்வை போய்விட்டதோ என்று எண்ணிக் கொண்டு எல்லா இடங்களிலும் இலக்கின்றி ஓடினான்.. எங்கு சென்றாலும் இருட்டு அவனை முழுமையாய் தழுவிக் கொள்ள அவனை பயம் முழுமையாக ஆக்ரமித்தது. வியர்த்து ஊற்றியது. இதயம் எக்கச்சக்கமாய் துடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான். எந்தத் திசையில் போகவேண்டும்? எங்கே என்ன இருக்கிறது? எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
'ஐயோ என்ன ஆச்சு? ஏன் இப்படி? யாராவது என்னை காப்பாத்துங்களேன் ப்ளீஸ்.'
கதறினான். ஆனால் எங்கும் நிசப்தம். அவன் கதறல் பல திசைகளில் இருந்து மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. யாராவது இருக்கிறார்களா எதுவும் கேட்கிறார்களா ஏதாவது பதில் சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக்க் கேட்டான். அவன் கதறலை யாரும் கேட்டது போல் தெரியவில்லை.
சட்டென்று தூரத்தில் ஒரே ஒரு வெளிச்சப்பொட்டு தெரிய குழப்பமாய் பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ அதை நோக்கி ஓடினான். அவன் ஓட ஓட அந்த வெளிச்சப் பொட்டு அவனிடம் இருந்து தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.
அவன் தன் ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தான்.. பைத்தியம் பிடித்தது போல் மூச்சிறைங்க ஓடினான்.
அந்த வெளிச்சப்பொட்டு ஓரிடத்தில் நின்றது. அவன் பயமாய் அந்த வெளிச்சத்தையே பார்த்தான். அது ஏதோ ஒரு வித்தியாசமான இடம் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் இதுவரை அவன் அந்த இடத்தைப் பார்த்ததில்லை. மெல்ல அடிமேல் அடி வைத்து நடந்தான். தரையில் ஏதோ ஒன்று இடற அவன் கீழே விழப்போய் விழாமல் சுதாரித்தான்.
இடறியது என்ன என்று மெல்லத் தடவிப் பார்த்தான். யாரோ கீழே கிடக்கிறார்கள் என்று தோன்றியது. யார் என்று அவனால் பார்க்க முடியவில்லை. கைகளால் மீண்டும் துழாவினான். மனம் உச்சமாய் அதிர்ந்தது.
இது எனக்கு யாரோ நன்றாக தெரிந்தவர்கள். யார்? பதறினான்.
முகம் எங்கே இருக்கிறது என்று கையால் தேடினான். அவன் கை விரல்கள் கழுத்தில் பட்டுவிட பிசுபிசுப்பாய் சூடாய் ஏதோ ஒட்டியது. அது ரத்தம் என்று அவன் மூளை அவனுக்கு உடனடியாக மொழிபெயர்க்க இதயம் தாறுமாறாய் துடித்தது. பதட்டமாய் முகத்தைத் தேடினான். அவன் விரல்கள் மூக்கில் வைத்து சுவாசம் சோதித்தான். அது நின்றிருந்தது.
***
கோவை.
மழை சாரலாய் பெய்து கொண்டிருக்க மக்கள் பெய்யும் மழையைப் பொருட்படுத்தாமல் அங்கும் இங்கும் எங்கோ சென்று கொண்டிருந்தனர்.
ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால்.
நேரம் மாலை நான்கு மணி.
ஃபுட் கோர்ட்டில் இரண்டு காஃபியுடன் வந்த புனிதா ஸ்டெல்லாவின் எதிரில் அமர்ந்தாள்.
ஸ்டெல்லா புனிதாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். கேட்டாள்.
"சொல்லு"
"ம்"
"ஏதோ பேச வேண்டியது இருக்குன்னு சொன்னே. என்னது?"
"நான் சொல்றேன் இடையில ஏதும் கேட்காம ஃபுல்லா சொல்றதக் கேளு "
"சரி சொல்லு"
புனிதா மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.
ஐநாக்ஸில் படம் முடிந்து மக்கள் கீழே சென்று கொண்டிருந்தனர்.
ஸ்டெல்லா முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் புனிதா சொல்வதை கவனமுடன் கேட்டாள்.
"இதான் நடந்துச்சு"
"ஏன்பா ? என்னாச்சு?"
"புரியல"
"ஒரு கல்யாணமான ஆம்பளைகிட்ட எப்படிப்பா இப்படி ஆச்சு?"
"தெரியல" புனிதாவின் கண்களில் தெரிந்த சோகம் ஸ்டெல்லாவை உறுத்தியது. அவள் கைவிரல்களைப் பிடித்த ஸ்டெல்லா ஆறுதலாக சொன்னாள்.
"சரி விடு. தப்பு பண்ணிட்டே. பரவால்ல விடு. தப்பு பண்ணிட்டோமேன்னு நினைச்சு இன்னும் குற்ற உணர்ச்சியில இருந்து உன்னை நீயே தண்டிச்சுக்காத. அது வேண்டாம். "
"ம்"
"இப்ப என்ன முடிவெடுத்திருக்கே?"
"அவர் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டிருக்காரு"
"புனிதா"
"சொல்லுடி"
"அவனை விடு உன்னோட மனசு என்ன சொல்லுது? அதை மட்டும் என்கிட்ட சொல்லு."
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல."
"அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த ரெண்டு குழந்தைங்களப் பார்த்துட்டு இருக்கலாம்னா?"
"அது வந்து…"
"இது போதும் புனிதா எப்ப நீ தயங்கறியோ அப்பவே அது உனக்கு சம்மதமில்லாத விஷயம்னு தெரியுது. நீ யாருக்காக அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்? இது உன்னோட வாழ்க்கை. நீ வாழ வேண்டிய வாழ்க்கை. உன்னோட வாழ்க்கையை வேற யாரும் தீர்மானிக்கக் கூடாது. தீர்மானிக்கவும் நீ விடக்கூடாது." ஸ்டெல்லா தீர்மானமான குரலில் சொல்ல புனிதா மெதுவாய் புன்னகைத்தாள்.
"ஆனா அவர் ஒத்துக்க மாட்டார் ரொம்ப கஷ்டப்படுவார்"
"அது எப்படி உனக்கு தெரியும்?"
"அவருக்கு நான் தான் உலகம்னு.."
"அவன் சொன்னானா?"
"ம்"
"உன்கிட்ட அவனுக்கு வேண்டியது இருக்கு அதனால அவன் அப்படி சொல்றான் எப்பவுமே இப்படி சொல்லுவான்னு எதிர்பார்க்காதே நாளைக்கு அவன் மாத்திச் சொல்வான். அப்ப அந்தப் பொண்ணுக்கு நடந்த அதே கஷ்டம் தான் உனக்கும்."
"ஸ்டெல்லா.."
"என்ன நான் சொல்றத நம்ப முடியலையா? எப்பவுமே குழந்தையா இருக்காத. அப்பாவியா இருக்காத. உன்னை எல்லாரும் ஏறிமிதிச்சிக்கிட்டுப் போயிட்டே இருப்பாங்க. அவங்கவங்க சுய தேவைக்குத்தான் பயன்படுத்திக்குவாங்க. நீ உஷாரா இருக்கணும் அது முக்கியம்."
ஸ்டெல்லா சொல்ல புனிதா யோசித்தாள்.
"அப்ப நான் அவர்கிட்ட என்ன சொல்றது?"
"எனக்கு விருப்பமில்ல. இனிமே இங்க வராதீங்க. உங்க வாழ்க்கையப் பார்த்துக்கங்க. என்னோட வாழ்க்கைல நீங்க இல்லன்னு சொல்லிடு"
ஸ்டெல்லா சொல்ல புனிதா மௌனமாய் தலையாட்டினாள்.
ஸ்டெல்லாவிற்கு யோசனையாக இருந்தது.
அப்படி சொன்னால் அவன் அடுத்து என்ன சொல்வான்?
மனசாட்சி உள்ளவன் என்றால் ஒரு அப்பாவிப்பெண்ணை இவ்வளவு நாள் ஏமாற்றி விட்டோம். இனியாவது அவள் நன்றாக இருக்கட்டும் என்று சொல்லி ஒதுங்கிப்போவான். ஆனால் மனசாட்சியுள்ளவன் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்க மாட்டான். அதுவும் வீட்டில் மனைவி இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு. அந்த ராகவ் நிச்சயம் புனிதாவை மீண்டும் வளைக்கப் பார்ப்பான்.
"ப்ளீஸ் புனிதா நீ என்னோட உலகம் என்னை விட்டுப் போயிடாத என்னால் தாங்க முடியாது"
"உன்னை நம்பி என்னோட பொண்டாட்டிய டைவர்ஸ் பண்றதுக்கு வக்கீலப் போய் பார்த்திருக்கேன். இப்ப வந்து முடியாதுன்னு சொன்னா என்னடி அர்த்தம்?"
"நீ என்கூடப் படுத்தவ. அதை நான் எல்லார்கிட்டயும் சொல்லி உன்னோட வாழ்க்கைய அழிச்சிடுவேன்"
"புனிதா ப்ளீஸ் ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாதம்மா உன் கால்ல விழறேன்"
"என்னடி பேசற தே…யா. படுக்கும்போது சுகமா இருந்துச்சா? கல்யாணம் பண்ண மட்டும் கசக்குதா? முடியாதுன்னு சொன்னா தொலைச்சிடுவேன் நாயே"
இதில் ஏதோ ஒரு மாதிரியாக அவன் பேசுவான். அவன் எப்படி பேசினாலும் இவள் தான் எடுத்திருக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மீண்டும் இவள் மனம் இளகிவிட்டால் இவளுக்குத்தான் ஆபத்து.
கடைசி கட்டமாக அவன் என்ன செய்வான்?
"நீ இல்லாத நான் இந்த உலகத்துல இருந்து பிரயோஜனம் இல்லை. என்னை நானே அழிச்சிடறேன்" தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ட்ராமா போடலாம். அதில் இவள் ஏமாந்து விட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அல்லது அவன் சைக்கோவாக இருந்தால்…
இருந்தால்…
ஸ்டெல்லா பயமாய் உணர்ந்தாள்.
புனிதாவிற்கு ஆபத்து.

Author: gavudham
Article Title: சந்தியாவந்தனம் 7
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.