"கணேஷ் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. அந்த மோகன் திரும்ப என்னோட வாழ்க்கையில குறுக்க வரக்கூடாது." ராகவ் சொல்ல கணேஷ் அவனை குழப்பமாய் பார்த்தான்.
"உனக்கு என்ன பிரச்னை?"
"அந்த மோகனும் சந்தியாவும் திரும்பப் பார்க்கக் கூடாது. அவன் திரும்ப வந்து சந்தியாகிட்ட எதுவும் பேசக்கூடாது "
சொன்னவனை கேலியாய் பார்த்த கணேஷ் கேட்டான்.
"நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?"
"கேளு"
"நீ ஒழுக்கம் இல்லாம இருந்தாலும் உன் பொண்டாட்டி அதுவும் விவாகரத்து செஞ்சாலும் யார் கூடயும் பேசாம இருக்கணும்னு எதிர்பார்க்கிறது அயோக்கியத்தனம் இல்லையா?"
கேட்ட கணேஷை ராகவ கோபமாய் பார்த்தான்.
"நீ என்னோட ஃப்ரண்ட். எனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு நினைச்சேன். "
"சத்தியமா நீ என்னோட ஃபிரண்ட்தான் இல்லன்னு நான் சொல்லவே இல்ல. ஆனா ஃபிரண்ட் தப்பு பண்ணா அத கண்டிக்காம கண்டுக்காம அவன் செய்றதுதான் சரின்னு சொல்றவன் நல்ல ஃபிரண்டா இருக்க முடியுமா?"
கேட்ட கணேஷை பதில் ஒன்றும் சொல்லாமல் ராகவ் முறைத்தான்.
"எனக்குத் தெரியும் ராகவ். நான் பேசறது உன்னால ஏத்துக்க முடியாது. இருந்தாலும் எனக்கு நீ பண்றது தப்பாத்தான் தோணுது. இன்னொரு கல்யாணம் பண்ணப்போறே. சரி. அது உன்னோட பர்சனல். உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணப்போறே. எனக்கு வருத்தம். ஆனா அதுக்கப்புறமும் அவளை கட்டுப்படுத்த நினைக்கிறே பார். அது சுத்தமான அயோக்கியத்தனம்"
கணேஷ் சொல்ல ராகவ் ஒன்றும் பேசாமல் விருட்டென்று வெளியேறினான்.
***
"ஏங்க" மோகன் அழைக்க சந்தியா நிமிர்ந்தாள். அங்கே அவள் அவனை எதிர்பார்க்கவில்லை.
வர்ஷா பூங்காவில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட அவளை அழைத்துக்கொண்டு சிறுவர் பூங்காவிற்கு வந்த சந்தியா வர்ஷாவை விளையாட வைக்கும் போது தான் எதிரில் மோகன் வந்து நின்றான்.
வழக்கமாக அவனைத் தவிர்ப்பவள் அன்று அவனை தவிர்க்கத் தோன்றாமல் பார்த்தாள்.
"என்ன வேணுங்க உங்களுக்கு?"
"ஐயோ சத்தியமா நீங்க இருப்பிங்கன்னு எனக்குத் தெரியாது இது எதார்த்தமாக நடக்கிற சந்திப்பு" மோகன் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல சந்தியா சட்டென்று சிரித்தாள்.
"நான் நம்பறேன்"
"தேங்க் காட்" சொன்ன மோகன் வானத்தை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டான்.
"இங்க எங்கே?" சந்தியா மோகனிடம் கேட்க அவன் புன்னகைத்தான்.
"என்னோட மனசு சரியில்லாத நேரத்துல நான் இந்த பார்க்குக்கு வருவேன். குழந்தைங்க இங்கயும் அங்கயும் ஓடி விளையாடுவாங்க. அதையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பேன். எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு எனக்கு தெரியாது. மனசு லேசானதும் எந்திரிச்சுப் போயிடுவேன்." சொல்லும்போது அவன் முகத்தில் தெரிந்த கலக்கம் அவளை அசைத்துப் பார்த்தது.
"மோகன்"
"சொல்லுங்க"
"வீட்ல எத்தனை பேர் இருக்காங்க?"
"ஒருத்தன். ஒரே ஒருத்தன். நான் மட்டும்தான்"
"கூடப்பிறந்தவங்க யாரும் இல்லையா?"
"எங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் சமூக பொறுப்பு ரொம்ப ஜாஸ்தி. நான் ஒருத்தனே இந்த நாட்டுக்கு ரொம்ப ஜாஸ்தின்னு நினைச்சுக்கிட்டாங்க" அவன் சிரிக்காமல் சொல்ல சந்தியா சிரித்தாள்.
"நீங்க எப்பவுமே இப்படித்தானா?"
"எப்பவுமே வானத்தைப் பார்த்துட்டு பேசறதுக்கு யாரும் இல்லாம இருப்பேன். இப்ப ஒரு அழகான பொண்ணு கூட எனக்குப் பிடிச்ச பொண்ணு கூட பேசிட்டிருக்கேன்" அவன் வெகு இயல்பாக சொல்ல அவள் கன்னம் சிவந்தது. எங்கே அவன் தன் முகத்தை பார்த்து விடுவானோ என்று வேறு பக்கம் திரும்பியபடி கேட்டாள்.
"அப்பா அம்மா?"
"ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. மேல" வானத்தைக் காட்டினான். சந்தியாவிற்கு அவன் மேல் பரிதாபம் தோன்றியது.
"மோகன்"
"சொல்லுங்க சந்தியா"
"என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நீங்க ஒரு நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க. உங்க கல்யாணத்துக்கு என்னக் கூப்பிடுங்க. கண்டிப்பா நானும் குழந்தைகளும் வருவோம்"
சந்தியா சொல்ல மோகன் புன்னகைத்தான்.
"நல்ல பொண்ணு ஏற்கனவே பார்த்துட்டேன். அவங்க சம்மதத்துக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்"
"ப்ளீஸ் என்னால உங்கள கண்டிப்பா ஏத்துக்க முடியாது"
"இப்ப சொல்றீங்க. நாளைக்கு இது மாறலாம் இல்லையா?"
"ஏன் நான் உங்களுக்கு வேணும்? அப்படி என்ன நான் ஸ்பெஷல்?"
"இந்த கேள்விக்கு இப்ப என்னால பதில் சொல்ல முடியாது."
"ஏன்?"
"அது அப்படித்தான்"
"சரி விடுங்க"
"ம்" சொன்னவன் வர்ஷாவை அழைத்தான்.
"பாப்பா"
விளையாடிக் கொண்டிருந்த வர்ஷா திரும்பினாள். அருகில் வந்தாள்.
"என்ன அங்கிள்?"
"அங்கிளுக்கு ஒரு காபி வேணுமாம். உங்க அம்மா வாங்கிக் கொடுப்பாங்களான்னு கேளும்மா"
மோகன் கேட்டது சந்தியாவிற்கு புன்னகையை வரவழைத்தது. சம்மதமாய் தலையசைத்தாள்.
"உங்க வீடு எங்க இருக்கு மோகன்?" சந்தியா நடந்தபடி கேட்க
"பக்கம்தான். சாஸ்திரி நகர்" என்றான்.
"அங்க எங்கே?"
"வாட்டர் டேங்க் இருக்குமே"
"ஆமா"
"அதுக்குப் பக்கத்துல ஒரு சந்து போகும். "
"நேதாஜி ரோடு?"
"கரெக்ட்" சொன்னவன் கேட்டான்.
"வீட்டுக்கு எப்ப வரப்போறீங்க?"
**"
"சார் " பார்வதி அழைக்க கோகுல் கிருஷ்ணா நிமிர்ந்தார்.
"சொல்லுமா"
"ராகவ் சந்தியா டைவர்ஸ்க்கு ஃபைல் பண்ணிடலாமா சார்"
கேட்ட பார்வதிக்கு ஒன்றும் சொல்லாமல் சற்று நேரம் யோசித்த கோகுல் கிருஷ்ணா தலையசைத்தார்.
"பண்ணிடு. அவன் ஒரு யூஸ்லெஸ். இந்த ஆம்பளைங்களுக்கு வைரமே கையில இருந்தாலும் வேறொரு கண்ணாடி மேல ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. என்ன சொல்ற?" அவர் கேட்க மெலிதான புன்னகையுடன் அவரைப் பார்த்தாள்.
"புரியுது நீ எதுக்கு சிரிக்கிறேன்னு புரியுது. நானும் ஒரு ஆம்பளதானேன்னு சிரிக்கிறே. சின்ன வயசுல எனக்கும் அப்படி கொஞ்சம் ஃபீலிங் இருக்கத்தான்செஞ்சது அப்புறம் யோசிச்சு தப்புன்னு தெரிஞ்சு மாத்திக்கிட்டேன். அதுக்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த காலத்துல சினிமாக்கள் நல்லா இருந்துச்சு. எனக்கு எப்பல்லாம் தப்பான சிந்தனை வருதோ அப்பல்லாம் எம்ஜிஆர் பாட்டு திருடாதே பாப்பா திருடாதே கேட்பேன். அதுல வர்ற சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோன்னு லைன்ஸ் கேட்டா என்னோட தப்ப நான் திருத்திக்கணும்னு எனக்குத் தோணும். ஆனா இப்ப வர்ற பாட்டு எப்படி இருக்கு? டாடி மம்மி வீட்ல இல்ல தடை போட யாரும் இல்ல. விளையாடுவோமான்னு பாட்டு வருது. ஒருத்தன் மனசு கெடறதுக்கும் தப்பு பண்றதுக்கும் அவன் வளர்ந்த விதம் இருக்கிற சூழல் இதெல்லாம் கூட காரணமாகலாம். அப்ப நாம என்ன பண்ணனும்? நம்ம மனச சுத்தமா வச்சிருக்கறதுக்கு முயற்சி பண்ணனும். எப்படி முடியும்? நல்ல புக்ஸ் படிக்கணும் நல்ல இசை கேட்கணும். மனச கெடுக்கிற மாதிரியான விஷயங்கள்ல இருந்து தள்ளி இருக்கணும். " கோகுல் கிருஷ்ணா சொல்ல பார்வதி புன்னகைத்தாள்.
***
நாட்கள் வேகமாகச் சென்றன.
சந்தியாவும் மோகனும் இயல்பாக பேசத் தொடங்கியிருந்தனர். சந்தியாவின் மனம் அறிந்த மோகன் விருப்பத்தைத் தெரிவித்து விட்டோம் இனி அவள் என்ன முடிவு எடுத்தாலும் சரி என்பதாக அதைப்பற்றி பேசாமல் அவளுடன் நட்பு மட்டும் பாராட்டி வந்தான்.
ராகவிற்கு மோகனை ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் மனதில் வைத்து புழுங்கினான்.
புனிதாவிடம் மட்டும் இயல்பாக இருப்பது போல் நடித்தான்.
அன்று புனிதாவின் அறைக்குச் சென்றவன் அசந்து போய் அவளைப் பார்த்தான். அப்போதுதான் குளித்து முடித்து தலையில் ஈரத்துண்டுடன் சோப்பு வாசனையாய் வந்து நின்ற புனிதா அவனைக் கலைத்தாள்.
சட்டென்று வெறியுடன் அவளை அணைத்தான். புனிதாவிற்கு புரிந்தது.
"ராகவ் ப்ளீஸ் "
"சொல்லுடி"
"வேண்டாம்பா"
"எனக்கு வேணும்" சொன்னவன் அவள் முகத்தை நிமிர்த்தி இதழ்களை கவ்வினான். தொடர்ந்த முத்தத்தில் புனிதா மெல்லத் தன் வசம் இழக்க ஆரம்பிக்க ராகவ் அவள் இதழ்களை பாவம் பார்த்து விட்டுவிட்டு கழுத்தில் தடம் பதித்து முன்னேறினான். பாவம் பாவையவள் வில்லாய் வளைந்து தன் வேட்டைக்காரனைத் தாங்க முயன்று முடியாமல் தவிக்க இடை வளையுமோ என்ற எண்ணம் அவனுக்கும் இடையில் வந்து போக இனியவளை கட்டிலில் சரித்தான். இருவிழிகளில் அவள் மொத்த எழிலைப் பருகினான். நாணத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள இன்னும் எதற்கு ஆடை? வேண்டுமா இந்தத் தடையென்றே அவளை சிறு குழந்தையாக்கும் முயற்சியில் அவள் செல்ல சிணுங்கலைக் கண்டுகொள்ளாமல் வெற்றி பெற்றவன் தன் இதழ் முத்தங்களின் எல்லைகளை அவள் மொத்த உடம்பிற்கும் விரிவுபடுத்தினான்.
மண்ணாய் அவள் படர்ந்திருக்க மழையாய் அவள் மீது காதலைப் பொழிந்தான். இருவருக்கும் இடையில் நடந்த காதல் போரில் இருவரின் சுவாசமும் எகிறியது. இருவரும் வெற்றி பெற்றதால் ஒருவரை ஒருவர் தித்திப்பாய் பார்த்துக் கொண்டனர். சற்று நேரம் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ராகவ் அழைத்தான்.
"புனிதா"
"ம்"
"உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?"
"என்ன கேள்வி இது ராகவ்?"
"பதில் சொல்லு"
"கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு எல்லாமே கொடுத்துட்டேன். இன்னும் கொடுத்துட்டும் இருக்கேன். இதுல இருந்தே புரியலையா? எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு" சொன்ன புனிதாவை அணைத்துக் கொண்டான்.
"ஏன் கேட்டே?"
"இல்ல…"
"பரவாயில்ல ராகவ் சொல்லு"
"இன்னும் ஒரு மாசத்துல ஹியரிங் வரும்"
"ம்"
"மியூச்சுவல் டைவர்ஸ். அப்ப ஃபார்மாலிட்டி சீக்கிரம் முடிஞ்சிடும்"
"சரி"
"சந்தியா குழந்தைங்களை வச்சுக்க மாட்டேன்னு சொல்லிட்டா."
ராகவ் சொல்ல புனிதாவின் முகம் மாறியது. அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டவள் அவன் முகத்தைப் பார்த்து கேட்டாள்.
"அப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"
அதனால் என்ன நாம பார்த்துக்கலாம். குழந்தைங்க நம்ம கூட இருக்கட்டும் என்று புனிதா சொல்வாள் என்று எதிர்பார்த்த ராகவ் ஏமாற்றம் அடைந்தான்.
அப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க என்று அவள் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காத ராகவ் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் முகத்தைப் பார்த்தான்.
"இந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல புனிதா"
"என்ன சொல்றீங்க?"
"குழந்தைங்க அம்மாக்கிட்ட அல்லது அப்பாக்கிட்டத்தானே இருக்கும்?"
"குழந்தைங்களை விட்டுட்டு உங்க மனைவி வருத்தப்பட மாட்டாங்களா?"
"அது எனக்கு தெரியாது ஆனா குழந்தைகள் என்னிடம் இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. "
ராகவ் சொல்ல புனிதா ஒன்றும் பேசாமல் மௌனமாய் அவனைப் பார்த்தாள்.
"புனிதா"
"ம்"
"ஒன்னு கேக்கறேன் வெளிப்படையா பதில் சொல்லு"
"கேளு ராகவ்"
"குழந்தைங்க நம்ம கூட இருந்தா நீ பார்த்துக்க மாட்டியா?" ராகவ் கேட்டான்.
"ராகவ்"
"ம்"
"நாம பார்த்துக்கிறோம் பார்த்துக்கல அது இல்ல விஷயம். அவங்க குழந்தைங்க. சட்டுன்னு என்கிட்ட ஒட்டுவாங்களா?"
"அதெல்லாம் நாம சொல்றபடி கேட்க வச்சிடலாம்"
"எப்படி ராகவ்?"
"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்" ராகவ் சொல்ல புனிதாவின் மனம் துணுக்குற்றது.

Author: gavudham
Article Title: சந்தியாவந்தனம் 6
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.