"உங்க பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுக்கு கொஞ்சம் டிப்ஸ் தர முடியுமா? " மோகன் கேட்க ராகவிற்கு ஆத்திரம் தலைக்கேறி சட்டென்று அவனை ஓங்கி அறைந்தான்.
"ராஸ்கல் நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்ன விளையாட்டு மயிராப் போயிடுச்சா? அடிச்சு காலி பண்ணிடுவேன். எந்திரிச்சு ஓடுறா"
ராகவ் டென்ஷனாகக் கத்தினான். ஆனால் மோகன் அவனை புன்னகையுடன் பார்த்தான்.
"நான் ஏற்கனவே சொல்லிட்டேன் நீங்க என்னை அடிக்கலாம். உங்களுக்கு இந்த உரிமை இருக்கு. பத்து வருஷமா புருஷனா இருந்துட்டு இப்படி ஒரு அடி அடிக்கலைன்னா நீங்க புருஷனா இருந்திருக்க முடியாது இல்லைங்களா?" மோகன் கேட்க ராகவ் இவனை என்ன செய்வது எனும் பொருள்படப் பார்த்தான்.
"ஒண்ணும் செய்ய முடியாது சார் நான் எல்லாமே எதிர்பார்த்துத்தான் வந்துருக்கேன். நாளை காலைல பொழுது விடியும். நாளையிலிருந்து நான் என்னால் என்னென்ன பண்ண முடியுமோ அது எல்லாமே பண்ணுவேன். எதுக்குன்னு கேளுங்க சார் "
"எதுக்கு?"
"உங்க பொண்டாட்டிய கரெக்ட் பண்றதுக்கு"
சொன்னவன் சிரித்தபடி வெளியேற ராகவ் மனதிற்குள் புழுங்கினான்.
**"
சூப்பர் மார்க்கெட் வளாகம்.
சந்தியா காய்கறிகள் வாங்கியபடி நடக்க அருகில் குரல் கேட்டது.
"மேடம்"
சந்தியா திரும்பிப் பார்க்க மோகன் நின்றான். அவளுக்குக் கோபம் வந்தது. அவனை கண்டுகொள்ளாமல் நடந்தாள். மோகன் அவள் பின்னால் ஓடினான்.
"மேடம் மேடம்"
"என்னங்க? எதுக்கு என் பின்னாடி வர்றீங்க?"
"ஏங்க வரக்கூடாதா?"
"கூடாது. எனக்கு பிடிக்கல"
"எனக்கும் பிடிக்கலைங்க"
"என்ன சொல்றீங்க?"
"உங்க பின்னாடி வர்றது எனக்கும் பிடிக்கலைங்க. உங்க கூட வர்றதுதான் ரொம்பப் பிடிக்கும். "
"இந்த மாதிரி பேசறத நிறுத்துங்க நீங்க பேசினா உடனே மயங்கற அளவுக்கு நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்ல. வேற யாராவது சின்னப்பொண்ணுக்கிட்ட போய் உங்க பேச்சு சாதுரியத்தைக் காட்டுங்க. யாராவது கரெக்டாவாங்க."
சொன்ன சந்தியாவைப் பார்த்து புன்னகைத்தான் மோகன்.
"எனக்கு மத்தவங்க யாரும் வேண்டாங்க. நான் டெய்லி சந்தியா வந்தனம் சொல்லணும்னு ஆசைப்படறேன்"
சொன்னவனை தீர்க்கமாய் பார்த்த சந்தியா அவனிடம் கேட்டாள்.
"உங்களுக்கு என்னங்க பிரச்னை?"
"ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பேசலாமா?" மோகன் கேட்க சந்தியா தயங்கினாள்.
"ப்ளீஸ் மேடம்"
"சரி வாங்க"
அவர்கள் இருவரும் அருகில் இருந்த ஒரு காபி ஷாப்புக்குள் நுழைய உள்ளே காபி குடித்து விட்டு வந்த கணேசன் இருவரையும் பார்த்து அதிர்ந்தான்.
தன் மொபைலை எடுத்தவன் ராகவிற்கு அழைத்தான்.
"ராகவ் நான் கணேசன்"
***
காபி ஷாப்.
மெல்லிய சங்கீதம் இழையோடிக் கொண்டிருந்தது. இரண்டு டேபிள்களில் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன் காபி கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருந்தது. அவர்கள் பேசுவது அவர்களுக்கே கேட்குமா எனும் அளவில் மென்மையாகப் பேசுவதும் ரசிப்பதுமாக இருக்க மோகன் சந்தியாவைப் பார்த்து புன்னகைத்தான்.
"எல்லாருமே லவ் பண்றாங்க உலகம் ரொம்ப சந்தோஷமா இருக்கு" சொன்னவனை ஏறிட்ட சந்தியா புன்னகைத்தாள்.
"லவ் பண்றப்ப நல்லாத்தான் இருக்கும் ஆனா இந்த லவ் கண்டினியூ பண்ணுவாங்களான்னு தெரியாது."
"கரெக்ட்டுங்க. யாரும் பிரேக் அப் பண்ணனும்னு நினைச்சு லவ் பண்றதில்ல. சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுது. என்ன பண்ண முடியும் சொல்லுங்க?"
"சரி அவங்க விஷயம் நமக்குத் தேவையில்லை நீங்க என்கிட்ட என்ன பேசணும்? சொல்லுங்க என்ன பேசணுமோ இப்பவே பேசிடுங்க. இனிமே என் முன்னாடி வராதீங்க. ப்ளீஸ் இது என்னோட ரெக்வஸ்ட்"
சந்தியா பாவமாய் சொல்ல மோகன் கரைந்தான்.
"சந்தியா" அழைத்தவன் அவள் அவனைக் கேள்வியை பார்ப்பதை உணர்ந்ததும் "என்ன? மேடம்னு கூப்பிட்டிருந்தவன் சந்தியான்னு கூப்பிடறேன்னு பார்க்கறீங்களா?
எனக்கு உங்களவிட நாலு வயசு ஜாஸ்தி. உங்க டேட் ஆஃப் பர்த் பார்த்தேன். அதுமட்டுமில்லாம பிடிச்சப் பொண்ண மேடம்னு கூப்பிட்டா அதுல க்ளோஸ்னஸ் இருக்காது. அதான்.
நான் என்ன சொல்ல வர்றேன்னா உங்களை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன். திரும்ப முன்னாடி வராதீங்கன்னு சொல்லாதீங்க. நான் கண்டிப்பா வருவேன். வந்துகிட்டேத்தான் இருப்பேன்."
அவன் தீர்க்கமாய் சொல்ல சந்தியா அயர்ந்தாள்.
"மோகன்"
"சொல்லுங்க"
"நான் பாவம் ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க"
"புரிஞ்சுகிட்டதாலத்தான் உங்க கூட உட்கார்ந்து பேசிட்டிருக்கேன். உங்க கூடவே இருக்கணும்னு ஆசைப்படறேன்"
அதன்பின் சந்தியா ஒன்றும் பேசவில்லை அவர்களுக்கிடையில் மௌனம் நுழைந்தது. மௌனம் சில நேரங்களில் தேவையான ஒன்று சில நேரங்களில் தேவையில்லாத ஒன்று. இப்பொழுது இருவருக்கும் இடையில் அந்த மௌனம் தேவைப்பட்டது. விவாதத்தை உள்வாங்குவதற்கும் அதன் உண்மையான பொருளை அறிந்து கொள்வதற்கும் மௌனம் அவர்களுக்கு துணைநின்றது.
"சந்தியா"
"சொல்லுங்க"
"உங்களோட மனசு என்னால புரிஞ்சுக்க முடியுது ஆனால் ஏத்துக்க முடியல"
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? "
"முடியும்"
"எப்படி?"
"உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்கிற வரைக்கும் என் கூட ஃபிரண்டா இருங்க. டைவர்ஸ் கிடைச்சதுக்கு அப்புறம் என்னப் பத்தி உங்களுக்கு என்ன தோணுதோ அதுக்கு தகுந்தபடி முடிவெடுங்க"
"இதெல்லாம்…"
"ப்ளீஸ் இப்ப நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். வாங்க போலாம். நான் உங்கக்கிட்ட பேச வேண்டியதெல்லாம் பேசிட்டேன்" சொன்ன மோகன் எழுந்தான். வெளியே வந்தான். சந்தியா அவனைத் தொடர்ந்து வெளியே வந்ததை அவர்கள் பார்வையில் படாமல் மறைவாய் நின்று கொண்டிருந்த ராகவ் வன்மமாய் பார்த்தான்.
***
"கணேஷ் நீ சொல்றது கரெக்ட். அவளை நான் சாதாரணமா நினைச்சிட்டேன்" ராகவ் சிகரெட் புகைத்தபடி சொல்ல கணேஷ் மௌனமாய் கேட்டான்.
"எப்படி கணேஷ்? என்னால நம்ப முடியல"
"ஏன்?"
"நான் எப்ப டைவர்ஸ் பண்ணுவேன்னு காத்திட்டிருந்திருக்கா."
"யாரு?"
"வேற யாரு? என்னோட பொண்டாட்டி சந்தியா தான்"
"அவசரப்படாத. பதட்டமா யோசிச்சா எதுவுமே புரியாது. தப்புத் தப்பா தோணும் .நிதானமா யோசி"
"யோசிக்கிறதுக்கு ஒண்ணும் இல்ல அவளோட கேரக்டர் எனக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு."
"என்ன சொல்றே ராகவ்?"
"அவதான் அந்த விளம்பரத்தை கொடுத்திருக்கணும். என்கிட்ட இல்லைன்னு நாடகமாடறா."
"சரி அப்படியே இருந்தாலும் இதுல நீ டென்ஷன் ஆக என்ன இருக்கு? நீ தான் டைவர்ஸ் பண்ணப் போறியே?"
"என்னால முடியாது. எனக்கு துரோகம் பண்ற அவளை நிம்மதியா வாழ விட மாட்டேன்" ராகவ் சொல்ல கணேசன் சிரித்தான்.
"உன்னோட பொண்டாட்டி பண்றதுக்கு பேரு துரோகம்னா நீ பண்றதுக்கு பேர் என்ன?" கேட்ட கணேசனை திகைப்பாய் பார்த்தான் ராகவ்.
"உன்னோட அப்பா காலம் தாத்தா காலம் கிடையாது இப்ப. புரிஞ்சு நடந்துக்க."
அன்று ராகவ் வீட்டிற்கு சீக்கிரமாகவே சென்றான்.
"ஹை அப்பா வந்தாச்சு" வர்ஷா ஓடிவந்து கால்களை கட்டிக்கொள்ள அவளைத் தூக்கினான்.
"தம்பி எங்கம்மா?"
"அவன் தூங்கிட்டான்பா நான்தான் முழிச்சிட்டிருக்கேன்"
"நீ தூங்கலையா பாப்பா?"
"நீ எப்ப வருவேன்னு தூங்காம வெயிட் பண்ணிட்டிருக்கேன் பா"
"ஓ அப்படியா?"
"ஆமாப்பா"
"என்ன விஷயம் பாப்பா?"
"எங்க ஸ்கூல்ல எனக்கு பிரைஸ் கொடுத்திருக்காங்கப்பா"
"வெரிகுட்"
"இரு எடுத்துட்டு வந்து காட்டறேன்" அறைக்குள் சென்ற வர்ஷா ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு வந்து பெருமையாகக் காட்ட அதை பார்த்தவன் மனம் நெகிழ்ந்தது.
"ரொம்ப சந்தோசம் பாப்பா உனக்கு அப்பா ஏதாவது வாங்கி கொடுக்கலாம்னு தோணுது. உனக்கு என்ன வேணும்னு கேள்"
சொன்னவனை யோசனையாய் பார்த்த வர்ஷா கேட்டாள்.
"எது கேட்டாலும் கொடுப்பியாப்பா?"
"ம் தர்றேன் கேளு"
"இன்னிக்கு மாதிரியே எல்லா நாளும் சீக்கிரம் வீட்டுக்கு வர்றியாப்பா?"
வர்ஷா கேட்க என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.
"வர்ஷா போய் தூங்கு போ" சந்தியா சொல்ல "சரிமா" என்ற வர்ஷா உள்ளே போய்விட சந்தியா சாப்பாட்டை எடுத்து டைனிங் டேபிளில் வைக்க ராகவ் அவளை ஏறிட்டான்.
"நில்லு"
"என்ன சொல்லுங்க"
"அவனை முன்னாடியே தெரியுமா?" ராகவ் முகத்தில் கோபம் தெரிய சந்தியா குழம்பினாள்.
"யாரை சொல்றீங்க?"
"பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத"
"இங்க பாருங்க. எது கேக்கறதானாலும் தெளிவாக் கேளுங்க. எனக்கு ஒண்ணும் புரியல"
சந்தியா சொல்ல ராகவ் கத்தினான்.
"என்னடி என்னை பைத்தியக்காரன்னு நினைச்சுட்டிருக்கியா?" கேட்டவனை ஏறிட்டவள் மிகவும் அமைதியாகச் சொன்னாள்.
"நான் அப்படி நினைக்கல. நீங்க உங்கள அப்படி நினைக்காம இருங்க."
"என்னடி திமிரா?"
"சத்தியமா இல்லைங்க"
"யார் அவன் உனக்கு முன்னாடியே தெரியுமா தெரியாதா? உண்மையச் சொல்லு"
"யாரைக் கேக்கறீங்க?"
"அந்த மோகன்"
"ஓ அவரா?"
"ரொம்ப மரியாதை கொடுத்துத்தான் பேசுவே போல"
"அவர் என்ன தப்பு பண்ணிட்டாரு? அவர மரியாதை குறைவா பேசறதுக்கு?"
"ஓஹோ அந்தளவுக்கு ஆகிப்போச்சா?"
"நீங்க என்கிட்ட ஏதோ ஒரு பதில் எதிர்பார்க்கிறீங்க ஆனா நீங்க எதிர்பார்க்கிற பதிலுக்கான கேள்வியை தெளிவாக் கேட்டு பழகுங்க நீங்க என்ன கேக்கறீங்கன்னு இன்னும் எனக்கு சரியாப் புரியல"
சொன்னவளை கோபமாய் ஏறிட்ட ராகவ் கத்தினான்.
"எப்படா டைவர்ஸ் பண்ணுவேன்னு காத்துட்டிருந்துட்டு ரீமேரேஜ்க்கு விளம்பரம் கொடுத்த ஆள்தானே நீ? நீ இப்படித்தான் பேசுவ"
சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள் சந்தியா.
"அந்த விளம்பரம் நான் கொடுக்கல"
"பொய் சொல்லாத எனக்கு கெட்ட கோபம் வரும்"
"உங்க கோபத்துக்குப் பயந்துக்கிட்டு அழுதுகிட்டு கவலைப்பட்டுட்டு இருந்த பழைய சந்தியா இல்ல நான் இப்போ. எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அப்படியே பண்ணாலும் நீங்க என்னை கட்டுப்படுத்த முடியாது. தெரியுமா தெரியாதா? "
"என்ன சொல்ற?"
"நாளைக்கு நீங்களும் நானும் புருஷன் பொண்டாட்டி கிடையாதுங்கிறப்ப எந்த உரிமையில நீங்க என்கிட்ட வந்து இப்படி கேக்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
சந்தியா அமைதியாகக் கேட்க ராகவ் தடுமாறினான்.
"வந்து…"
"பதில் தெரியலையா இல்ல பதில் இல்லையா?" கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே பார்த்த சந்தியாவைப் பார்க்க முடியாமல் தடுமாறினான் ராகவ்.
"சீக்கிரமா சாப்பிட்டுப் படுத்து தூங்குங்க. நான் சீக்கிரமா தூங்கணும் காலையில எனக்கு கிளாஸ் இருக்கு போகணும்."
சந்தியா சொல்ல அவளை புரியாமல் பார்த்தான் ராகவ்.
"என்ன கிளாஸ்னு பார்க்கறீங்களா? யோகா. காலைல ஆறு டு ஏழு. உடம்பு மனசு ரெண்டையும் கொஞ்சம் சரி பண்ண வேண்டியது இருக்கு. உடம்புல கொஞ்சம் எக்ஸ்ட்ரா சதை இருக்கு மனசுல கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெஸ் இருக்கு ரெண்டும் யோகா பண்ணாப் போயிடும். நீங்களும் வேணும்னா ட்ரை பண்ணிப் பாருங்க. டைம் ரொம்ப ஆகுது. நான் தூங்கப் போகவா?"
சொன்னவள் அவனை கண்டுகொள்ளாமல் படுக்கையறைக்குள் செல்ல ராகவ் ஒன்றும் சொல்லாமல் தனக்குள் குமுறியபடி நின்றான்.

Author: gavudham
Article Title: சந்தியாவந்தனம் 5
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.