சந்தியாவந்தனம் 1
“அம்மா” ஐந்தாவது படிக்கும் வர்ஷா அழுதபடி ஓடிவர சந்தியா பதட்டமாய் கேட்டாள்.
“என்னாச்சுடி?”
“தம்பி என் பென்சில் உடைச்சிட்டான்” வர்ஷா சொல்ல சந்தியாவிற்கு ஆத்திரம் வந்தது.
“அவனை...” என்றவள் தன் மூன்று வயது மகன் கிருஷ்ணனை முறைக்க அவன் சட்டென்று மழலையாய் சிரித்ததில் கரைந்தாள். அவனை அள்ளிக்கொண்டாள்.
“கிருஷ்ணா”
“ம்”
“அக்கா பாவம்ல?”
“ம்”
“அப்படி செய்யலாமா?”
“கூடாது”
“அப்புறம் ஏன் பண்ணே?”
“ஸாரிக்கா” அவன் சொல்ல வர்ஷா தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள்.
“சரி ரெண்டு பேரும் என்ன சாப்பிடறீங்க என்ன செஞ்சு கொடுக்கட்டும்?” சந்தியா கேட்க வர்ஷா நூடுல்ஸ் என்று சொல்ல சந்தியா முறைத்தாள்.
“ஜங்க் ஃபுட் சாப்பிடக்கூடாது இன்னிக்கு அம்மா ரெண்டு பேருக்கும் நெய் தோசை சுட்டுத்தர்றேன் ஓகேவா? “
“ஓகே மம்மி” இருவரும் கோரஸாய் சொல்ல அவர்களைப் பார்த்து புன்னகைத்த சந்தியா கிச்சனுக்குள் நுழைந்தாள்.
மாவு எடுத்து இருவருக்கும் நெய்தோசை வார்த்துத் தட்டில் வைத்துக் கொண்டு வந்து தர டிவி பார்த்துக்கொண்டிருந்த இருவரும் டிவியை ஆஃப் செய்து விட்டு சாப்பிட அமர்ந்தனர். சந்தியா எப்பொழுதும் இருவரையும் சாப்பிடும்பொழுது டிவி பார்க்க விடமாட்டாள். முதலில் குழந்தைகள் சற்று அடம்பிடித்தாலும் அம்மா அந்த விஷயத்தில் கடுமையாக இருப்பதைப் பார்த்து அம்மாவின் மனதைப் புரிந்து நடக்க ஆரம்பித்தனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் உறங்கிவிட சந்தியா மணி பார்த்தாள்.
மணி ஒன்பதை நெருங்கியது. ஒரு பைக் சத்தம் கேட்க எங்கே அவள் கணவன் ராகவ் வந்து விட்டானா என்று ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அது ராகவ் இல்லை.
அவளுக்குப் பெருமூச்சு வந்தது. கடந்த ஒரு வருடமாக ராகவ் வீட்டிற்கு தாமதமாகத்தான் வருகிறான். ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்தவன் கொஞ்சம் கொஞ்சமாய் ஏழாகி எட்டாகி ஒன்பதாகி இப்பொழுது அதையும் தாண்டி தாமதமாக வர ஆரம்பித்துவிட்டான். அவனிடம் காரணம் கேட்க முடியாது. ஏதாவது கேட்டால் எரிந்துவிழுவான்
“ஏன் சீக்கிரம் வரணும்? உன்னோட அசிங்கமான முகத்தைப் பார்க்கறதுக்கா? “
“அதில்லைங்க …”
“வேறென்ன?”
“குழந்தைங்க உங்களுக்காக தூங்காம ரொம்ப நேரமாக் காத்துட்டிருந்தாங்க.”
“ஏன்? என்ன கேடு?”
“வர்ஷாக்கு ஸ்கூல் அவார்ட் கொடுத்திருக்காங்க அதை உங்ககிட்ட காட்டணும்னு”
“எதுக்காக அவார்ட்?”
“தமிழ் பேச்சுப்போட்டி”
“அதானே பார்த்தேன்? தமிழ்ல அவார்ட் வாங்கி என்ன பண்ண?”
“இப்பல்லாம் கவர்மெண்ட்ல தமிழ் படிச்சவங்களுக்கு முன்னுரிமை தர்றாங்களாம்”
“ஏன்டி ஞானசூன்யம்?”
“என்னங்க? “
“கண்டவன் கண்டபடி சொல்வான். அதெல்லாம் நம்புவியா?”
“இல்லைங்க”
“ஒரு டிகிரி படிச்சிட்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி நினைச்சுக்காத. உலக அறிவு வேணும் நீ ஒரு ஞான சூனியம் உனக்கு சுத்தமா எதுவும் தெரியாது. போடி போய் வேலையைப் பாரு. வந்துட்டா என் கூட பேசறதுக்கு. எல்லாம் தெரிஞ்சவளாட்டம் “
மற்றொரு நாள் அவன் இரவில் தாமதித்து வரும்பொழுது அவன் மேல் இருந்த மணம் அவளுக்கு காட்டிக் கொடுத்தது. அவன் குடித்திருக்கிறான் என்று.
“குடிச்சீங்களா?”
“ஆமா”
“எதுக்குங்க இந்த புதுப்பழக்கம்?”
“என்னடி என்னக் கேள்வி கேக்கறியா?”
“இல்லைங்க”
“அப்புறம்? என்னோட காசு என்னோட சம்பாத்தியம் நான் குடிப்பேன் என்ன வேணாலும் பண்ணுவேன் என்னை யாராவது கேள்வி கேட்டா தூக்கிப் போட்டு மிதிப்பேன். புரிஞ்சதா?”
அவன் இயல்பே அவளை அவமானப்படுத்துவதுதான் அதிலும் குடித்திருந்தால் அவள் பாடு இன்னும் திண்டாட்டம்தான்.
“ஏய் “
“என்னங்க?”
“வா”
அவள் புரிந்து கொண்டாள். கேவலமாகப் பேசுவான் உருவ கேலி செய்வான். மற்றவர்களுடன் ஒப்பிட்டு மனதைத் துன்புறுத்துவான். வருத்தப்படவைப்பான். ஆனால் அவனுக்கு தேவைப்படும் பொழுது அவன் பேசியதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அவளைத் தன் கூடலில் மகிழ வைப்பான். நெகிழ வைப்பான். ஆனால் அந்த மகிழ்ச்சி அவளுக்கு நீண்ட நேரம் நீடிக்காது.
கூட இருப்பவர்களை மரியாதையாய் நடத்தினால் மட்டுமே கூடல் மதிப்பு பெறும். இல்லையென்றால் அது வெறும் சடங்கு சம்பிரதாயம் அவ்வளவுதான் அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை.
சந்தியாவிற்கு ஆரம்பத்தில் மனம் அதிகமாகவே வருந்தியது ஆனால் போகப் போக அதுவே பழக்கமாகிப் போனது. யாரிடமாவது மனம் விட்டு சொல்ல வேண்டும் போல் தோன்றும் ஆனால் யாரிடம் சொல்வது? அவள் விதி. அவள் பெற்றோர் இருவரும் மறைந்திருந்தனர். ஒரு அண்ணா இருக்கிறான். நாமக்கல்லில் டிரான்ஸ்போர்ட்ஸில் வேலை. அவனாகவே சந்தியாவிடம் என்ன பிரச்னை என்று கேட்க முற்பட்டாலும் அவள் அண்ணி அண்ணன் தங்கை இருவரையும் ஒட்ட விடாமல் மிக கவனமாய் பார்த்துக் கொண்டாள். சந்தியாவும் தன் கவலையை அண்ணனிடம் சொல்லி அவன் மன வருத்தப்படுவதை விரும்ப மாட்டாள்.
அதுமட்டுமல்ல இது வீட்டு விசயம். இதைப்பற்றி வேறு யாரிடமாவது சொல்லப்போக அது இன்னும் பிரச்னையை அதிகரிக்குமேத் தவிர தீர்வு ஒன்றும் கிடைக்காது என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
தன் விதி விட்ட வழி என்று தன் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளப் பழகிவிட்டாள்.
கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சின. காலை நாலு மணிக்கு எழுந்தது இன்னும் கண்ணயர முடியவில்லை.
ராகவ் எப்போது வருவான்? பீறிட்டு வந்த கொட்டாவியை அடக்கியபடி சுவர்க்கடிகாரத்தை பார்த்தாள்.
பத்தை நெருங்கியது. மொபைலுக்கு அழைத்துப் பார்க்கலாமா? யோசனை வர உடனே அந்த யோசனையை கைவிட்டாள்.
“என்னங்க நான்தான் “
“என்ன சொல்லு?”
“ரொம்ப லேட்டாச்சேன்னு கூப்பிட்டேன் “
“கவலப்படாத உயிரோடத்தான் இருக்கேன். இன்னும் செத்துப்போகல. போனை வை”
“ஐயோ என்னங்க நீங்க..” சந்தியா பதறியபடி ஏதோ சொல்ல முடியல அதற்குள் அவன் போனை கட் செய்திருந்தான்.
இன்றும் அப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாக பேசுவான். வரும்போது வரட்டும்.
சந்தியா சோபாவில் சாய்ந்தபடி தூங்காமல் இருக்க முயற்சித்தும் தூங்கிப் போனாள்.
அழைப்பு மணி அடிக்க பதறிப் போய் எழுந்தாள்.
கதவைத் திறக்க ராகவ் தடுமாறியபடி உள்ளே நுழைந்தான். சந்தியா ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். அவளை லட்சியம் செய்யாமல் படுக்கை அறையில் போய் உடைமாற்றாமல் அப்படியே படுத்தான்.
“என்னங்க” சொன்னவள் அவனுக்கு லுங்கி எடுத்துத் தர வாங்கியவன் அதைக் கட்டாமல் படுக்கையில் சரிந்துகொள்ள சந்தியா பெருமூச்சு விட்டபடி வெளியேற முயல ராகவின் மொபைல் அடித்தது. எடுத்தாள்.
“வீட்டுக்கு போய்ட்டீங்களா டியர்?” ஒரு பெண்குரல் கேட்க சந்தியாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.
சுதாரித்துக் கொண்டு அவசரமாய் யார் என்று பார்த்தாள்.
கணேஷ் என்றிருந்தது. கேட்டது பெண் குரல் ஆனால் கணேஷ் என்று அந்த நம்பர் சேவ் செய்து வைத்திருக்கிறான்.
ராகவிடம் ஏதோ தவறு இருக்கிறது.
சந்தியா ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தாள். கண்களில் கண்ணீர் வழிய அதை துடைக்க மனமின்றி விட்டத்தை வெறித்தாள்.
ராகவ் எனக்கு துரோகம் செய்ய ஆரம்பித்து விட்டானா? நான்தான் பைத்தியம் மாதிரி அவன் நிச்சயம் எனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கொண்டிருந்தேன். இவ்வளவு நாள் அவன் வீட்டிற்கு தாமதமாக வந்தது இந்த காரணத்திற்காகத்தானா? எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் நான்?
சரி இப்பொழுது விஷயம் தெரிந்து விட்டது என்றே வைத்துக் கொள்ளலாம். அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன்? ஏதாவது இதைப்பற்றி நான் அவனிடம் கேட்டால் சாமர்த்தியமாக எதையாவது சொல்லி மறைப்பான். சமாளிக்கப் பார்ப்பான். ஒருவேளை மாட்டிக் கொள்ள நேர்ந்தால் அப்படித்தான் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மிரட்டுவான் என்னால் என்ன முடியும்? ஒன்றும் முடியாது. வர்ஷாவும் கிருஷ்ணாவும் இல்லை என்றால் இந்த உலகமே வேண்டாம் என்று நான் விடை பெற்றுக் கொள்வேன். ஆனால் என் குழந்தைகள் என்ன செய்தனர்? அவர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை.
ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை?
எவ்வளவு நேரம் அழுதாள் என்று சந்தியாவிற்கே தெரியாது.
மறுநாள் பொழுது விடிந்தது.
படுக்கை அறையில் இருந்து எழுந்து வந்த ராகவ் சோபாவில் அமர்ந்திருந்த சந்தியாவைப் பார்த்து துணுக்குற்றாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அதிகாரமாகக் கேட்டான்.
“காஃபி போட்டியா?”
சந்தியா ஒன்றும் சொல்லாமல் அவனை மௌனமாய் பார்த்தாள்.
“ஏண்டி கேட்கிறது தெரியல? காபி போட்டியா இல்லையா? போய் போடு போ “ ராகவ் சொல்ல அவனையே தீர்க்கமாய் பார்த்த சந்தியா சொன்னாள்.
“என்னங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“என்ன பேசணும்?”
“டெய்லி நீங்க வீட்டுக்கு லேட்டா வர்றீங்க உங்களுக்கு ஒர்க் ஜாஸ்தி அதனாலதான் லேட்டா வரீங்கன்னு நினைச்சேன் ஆனா காரணம் அது இல்லைன்னு இப்பத் தெரியுது “ சொன்னவளை கேலியாக ஏறிட்டான் ராகவ்.
“என்ன தெரிஞ்சது உனக்கு?”
“நீங்க என்கிட்ட இருந்து ரொம்ப தூரமா போயிட்டிருக்கீங்க”
“அப்படித்தான் வச்சுக்கயேன். என்ன இப்ப அதுக்கு?”
அவன் அவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சொல்ல சந்தியா அழக்கூடாது என்று நினைத்திருந்தும் அழுகை வரக் கேட்டாள்.
“நான் என்னங்க பாவம் பண்ணேன் உங்களுக்கு? ஏங்க இப்படி பண்றீங்க?”
“ஷ்ஷ் அப்பா. கொஞ்ச நேரம் புலம்பாம அழாம இருக்கியா? ஒழுங்கா பேசறதுன்னா பேசு இல்லன்னா அழுது முடிச்சிட்டு வா அப்புறம் பேசலாம் “
சொன்னவன் அவளை கண்டுகொள்ளாமல் ஹிந்து நாளிதழை கையில் வைத்தபடி செய்திகளைப் பார்த்தான்.
“உங்களுக்கு வேற யார் கூடயாவது…” தயங்கியபடி கேட்ட சந்தியாவை கேலியாக பார்த்து புன்னகைத்தான் ராகவ்.
“கேள்வியை முழுசா கேளு பாதியிலேயே நிக்குது”
“உங்களுக்கு வேற யார் கூடயாவது சம்பந்தம் இருக்கா?” கேட்டவள் தவிப்பாய் அவன் முகத்தை பார்க்க அவன் ஆமென்று தலையசைத்தான்.
அவளுக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வர விழுந்து விடாமல் இருக்க டிவி ஸ்டாண்ட்டை பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
“சந்தியா நீ ஒரு ஞானசூனியம் உனக்கு ஒரு டேஸ்ட்டும் இல்லை. எனக்கு வாழ்க்கைய அனுபவிக்கணும். எனக்குத் தகுந்தபடி ஒரு பெண்ணை பார்த்தேன். நான் எனக்கு வரப்போற பொண்ணு எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டேனோ அவ அப்படி எல்லாம் இருக்கா. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. நாங்க வாழ்க்கையில அடுத்த கட்டத்தை நோக்கி போலாம்னு டிசைட் பண்ணி இருக்கோம். அது பத்தி நான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். நீயா கேட்டதும் நல்லதாப் போச்சு. நான் உன்னை கைவிட்டுருவேன்னு நீ நினைக்க வேண்டாம். பயப்பட வேண்டாம். குழந்தைங்களும் நீயும் இங்க தாராளமா இருக்கலாம். அவ கூட நான் அமைச்சுக்கப் போற புது வாழ்க்கையில உனக்கு எந்த விதத்திலையும் எதிர்ப்பு இல்லைன்னு நீதான் அவளுக்குச் சொல்லணும். சொல்வேதானே? சொல்வே. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு எனக்காக இல்லனாலும் நம்ம குழந்தைங்க நல்லா இருக்கணுங்கிறதுக்காக நீ கண்டிப்பா சொல்லுவ. “
சொன்னவன் அவளை இயல்பாய் கடந்து செல்ல சந்தியாவின் இதயம் வேகமாய் துடித்தது.
தொடரும்
சந்தியாவந்தனம் முழு கதையும் ஆடியோவில் கேட்டு மகிழுங்கள்

Last edited:
Author: gavudham
Article Title: சந்தியாவந்தனம் 1
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.