"அந்த பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சுங்க "
மறுமுனையில் யாரோ சொன்னதைக் கேட்ட ராஜேஸ்வரி நிலைகுலைந்தாள்.
வீட்டிற்கு வந்தவள் சற்று நேரம் எதிலும் கவனம் செலுத்தாமல் அருணாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
பாவம். உண்மையாக காதலித்திருக்கிறாள். நம்பியிருக்கிறாள். நம்பிக்கை துரோகத்தைத் தாங்க முடியவில்லை.
இப்போது என்ன செய்வது?
ஒன்றும் செய்ய முடியாது.
ஏன்?
அவள் எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் அளிக்கவில்லை.
இருக்கலாம். அதற்காக?
என்ன செய்ய முடியும்?
அந்த பாபுவிற்கு ஏதாவது தண்டனை?
இது வாழ்க்கை. இது ஒன்றும் சினிமா கிடையாது. தவறு செய்யும் அனைவருக்கும் தண்டனை கிடைப்பதற்கு. அல்லது அவர்கள் அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தருவதற்கு.
நம்பியிருக்கிறாள். தன்னை இழந்து விட்டாள். அவன் ஏமாற்றிவிட்டான். இருந்தும் அவன் மேல் புகார் அளிக்க அவளுக்கு விருப்பமில்லை. இறந்தும் போய்விட்டாள். புகார் அளிக்கப்படாத நிலையில் இதில் நான் செய்வது ஒன்றும் இல்லை.
இருந்தாலும் மனசு ஆறவில்லையே? என்ன செய்வது? அதற்காகத்தான் மனிதர்களால் படைக்கப்பட்ட மூன்று விஷயங்கள் இருக்கின்றனவே?
கடவுள் விதி நேரம். இவை மூன்று இருக்கையில் இவற்றின் மீது பழியைப் போட்டுவிட்டு நாம் எளிதில் தப்பிக்க முடியுமே.
ராஜேஸ்வரி யோசித்தாள். தெளிந்தாள். பூஜை அறையில் போய் பத்து நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தாள்.
என்னால் இதில் ஒன்றும் செய்ய முடியாது என் எல்லைகள் வரையறுக்கப்பட்டவை. நீ பார்த்துக்கொள்.
இன்ன கடவுள் என்று இல்லாமல் பொதுவாகப் பிரார்த்தனை செய்தாள்.
வெளியே வரும்போது மனம் கொஞ்சம் லேசாக இருந்தது.
சோபாவில் வந்து அமர்ந்தவளின் பார்வை காலண்டர் மீது பட்டது. ஞாயிற்றுக்கிழமை மனோகர் பெண் பார்க்க வருவது நினைவிற்கு வந்தது.
அவனைப்பற்றி யோசித்தாள்.
பார்க்க நல்லாத்தான் இருக்கான். ஆனா கேரக்டர்? விசாரிக்கணும்.
என்கிட்ட பேசறது இங்க நடந்துக்கறது வச்சு ஒண்ணும் புரிஞ்சுக்க முடியாது. அவனுக்கு இந்த மாதிரி கதை எதுவும் இருக்குமா? இல்ல அவனும் என்னை மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம் தான் காதல்னு இருப்பானா?
யோசித்த ராஜேஸ்வரி கவரிலிருந்து மனோகரின் போட்டோவை எடுத்துப் பார்த்தாள்.
இவன் ரொம்ப நல்லவன் மாதிரி தெரியுது.
ஏய் ராஜி.
ம்
என்ன அவன் இவன்னு பேசற?
பிடிச்சிருக்கு அதான்.
மரியாதை வேண்டாமா?
பிடிச்சவங்கள பிடிச்ச மாதிரிதான் பேசணும்.
சரி நடத்து.
மனோ நீ இந்த மாதிரி இருந்துடாத.
என்ன இது? வெறும் போட்டோவை மட்டும்தானே பார்த்திருக்கே? அதற்குள் மானசீகமாய் பேச்சு வேண்டியிருக்கு?
அவளை அவளே கடிந்து கொண்டாள்.
ராஜி
ம்
இயல்பாய் இரு.
ம்
நீ ஒன்றும் சின்னப் பெண் கிடையாது.
ம்
நீ ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.
ம்
இயல்பாகவே நீ தெளிவானவள் கம்பீரமானவள் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையானவள்
ம்
உனக்கு இதுவரை நல்லது ஒன்றும் நடக்கவில்லை என்று வருத்தப்படாதே.
ம்
இனிமேல் எல்லாம் நல்லதாகத்தான் நடக்கும்.
ம்
அதற்காக உன் இயல்பை எக்காலத்திலும் எதன் பொருட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
ம்
ராஜேஸ்வரி தெளிவாக உணர்ந்தாள்.
வெளியே பார்க்க வானம் சலனமற்றிருந்தது.
***
மனோகர் கோபமாய் கேட்டான்.
"அக்கா "
அவன் கோபத்தை துளியும் கண்டுகொள்ளாமல் கண்மணி புன்னகைத்தாள்.
"சொல்லு மனோ"
"இப்ப எதுக்கு எங்கிட்ட கேட்காம ஞாயித்துக்கிழமை பொண்ணு பார்க்க வரதாச் சொன்னே?"
"ஏன் மனோ? எனக்கு அந்த உரிமை இல்லையா?"
கண்மணி புன்னகைத்தபடி கேட்க மனோகர் தடுமாறினான்.
தனக்கு இருப்பது அக்கா மட்டும்தான். அக்காவின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவளுக்கு எதிராக ஒன்றும் பேசத் தோன்றவில்லை.
அமைதியானான்.
"என்ன பதிலைக் காணோம்?" கண்மணி புன்னகைக்க மனோகர் ஒன்றும் பேசவில்லை.
"அதான் உரிமை இல்லையானு கேட்டுட்டியே. அப்புறம் என்ன? "
சொன்ன மனோவை பாசமாய் பார்த்தாள் கண்மணி.
"அக்கா உனக்கு எது பண்ணினாலும் நல்லதாத்தான் பண்ணுவேன்"
"ம்"
"அப்ப போலாமா?"
"எங்க?"
"ஞாயித்துக்கிழமை பொண்ணு பார்க்கறதுக்கு?"
"வேற வழி?" மனோகர் சொல்ல கண்மணி புன்னகைத்தாள்.
"அக்கா"
"ம்"
"பொண்ணு சப்-இன்ஸ்பெக்டர்ங்கிறது ஒரு மாதிரியா இருக்கு."
"என்ன? பயமா?"
"எனக்கென்ன பயம்?"
"அப்புறம் என்ன? இந்த ஜாதகம் தான் உனக்குப் பொருந்தியிருக்கு."
கண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் மனம் பயப்பட ஆரம்பித்திருந்தது.
கண்மணி குணம் மனோவிற்குத் தெரியாததல்ல. அவளுக்கு சரி என்று படுவதை யார் தடுத்தாலும் செய்து முடித்து விடுவாள்.
தன்னைப்பற்றி அக்காவிற்கு ஒன்றும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். மனோ உத்தமன் ஒழுக்க சீலன் என்பதில் அவளுக்கு நூறு சதவீதம் நம்பிக்கை.
அதை அடிக்கடி நீ என் வளர்ப்பு மனோ என்று பெருமிதமாய் சொல்வதில் மனோ புரிந்து கொள்வான். அப்போதெல்லாம் மனோவின் மனம் சஞ்சலப்படும்.
'அக்கா நான் அப்படியல்ல. நான் நீ நினைப்பது போல் நல்லவனல்ல' என்று சொல்ல நினைப்பான். அவனை சொல்ல விடாது தடுப்பது கண்மணியின் பாசம்தான்.
சரி போகும் வரை போகட்டும் என்று சொல்லாமல் இருந்தான். இப்போது அவன் மீது இருக்கும் நம்பிக்கையில் கண்மணி பெண் பார்ப்பது வரை சென்றுவிட்டாள். அதுவும் சப் இன்ஸ்பெக்டர்.
நாளை அந்தப் பெண்ணுக்கு என்னை பற்றி ஏதாவது தெரிந்துவிட்டால் என் நிலைமை என்ன என்பது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தெரிந்தே நெருப்புடன் விளையாட வைக்கிறது என் விதி. எரிந்து போவேனோ நானும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மனோ பெருமூச்சு விட்டான். அருகில் வந்த கண்மணி அவன் மன குழப்பத்தை அறியாமல் அவன் தலையைத் தன் கைவிரல்களால் கோதினாள்.
"மனோ"
அவளின் பாசமான அழைப்பில் மனோ கரைந்தான்.
"அக்கா"
"ஒண்ணும் கவலைப்படாத"
"சரிக்கா"
"அக்கா இருக்கேன்"
"ம்"
***
ஞாயிற்றுக்கிழமை.
ராஜேஸ்வரி பிங்க் நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். உறுத்தாத எளிய மேக்கப் அவளை எழிலாய் காட்டியது.
"ராஜி"
"அம்மா"
"அந்த டாலர் செயின் எடுத்துப் போடும்மா"
"அம்மா"
"ம்"
"வர்றவங்க என்னைப் பார்க்க வர்றாங்களா இல்ல நகையைப் பார்க்கவா?" கேட்ட ராஜியைப் பார்த்து புன்னகைத்தாள் அம்மா
"ராஜி"
"சொல்லும்மா"
"இந்த வரனாவது உனக்கு அமையணும்மா"
ராஜிக்கும் புரிந்தது. ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருப்பது அவள் குற்றமா என்ன? வருபவர்கள் அனைவரையும் அவள் ஜாதகம் தட்டிவிட அம்மா ரொம்பவே நொந்துபோய்விட்டாள். அப்பா இந்தக் கவலையில் குடிக்க ஆரம்பித்துவிட்டார். நல்லவேளையாக இன்று குடிக்காமல் குளித்து நெற்றியில் திருநீறு வைத்துக் காத்திருந்தார்.
"ராஜிம்மா"
"அப்பா"
"எனக்கு இந்த முறை நம்பிக்கை இருக்கும்மா."
"என்னப்பா சொல்றீங்க?"
"மூணு பேர் கிட்ட பொருத்தம் பார்த்தேன்மா. மூணு பேரும் ஒரே மாதிரி சொல்லிருக்காங்க. ரெண்டு ஜாதகத்துக்கும்தான் பொருத்தம்னு"
அப்பா மகிழ்ச்சியாகச் சொன்னார்.
பதில் ஒன்றும் சொல்லாமல் ராஜேஸ்வரி பெருமூச்சு விட வாசலில் கார் வந்து நின்றது.
கண்மணியும் வர்ஷாவும் இறங்க அவர்களைத் தொடர்ந்து இறங்கினான் மனோகர். க்ரீம் நிற ஷர்ட்டும் கருப்பு பேண்டும் அவன் கம்பீரத்தை உயர்த்திக் காட்டின.
அப்பா வரவேற்று வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
அமர்ந்தவர்கள் கொஞ்சம் நேரம் கடைபிடித்த மௌனத்தை வர்ஷா கலைத்தாள்.
"நாம பார்க்க வந்த ஆன்டி எங்க?"
கண்மணி புன்னகைத்தாள்.
"வருவாங்க பாப்பா"
அப்பா சம்பிரதாயமாய் கேட்டார்.
கண்மணி அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
"என் தம்பி மனோ. மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ். "
"ம்"
"இது வர்ஷா என் பொண்ணு"
"வர்ஷா அப்பா வரலையா?"
"அவர் வர்ற மாதிரிதான் இருந்துச்சு. அவருக்கு இந்த வாரம் வரமுடியல. அவருக்கு பெங்களூருல வேலை. "
"நல்லதுங்க."
"பொண்ணப் பார்த்துடலாமா?" கண்மணி கேட்க அம்மா தலையசைத்தாள். ராஜேஸ்வரியை அழைத்து வந்தாள். அவளைப் பார்த்த மனோ அசந்தான்.
பெண் சப் இன்ஸ்பெக்டர் என்றதும் சுமாராய் இருக்கும் என்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி வந்திருந்த மனோகர் இமைக்க மறந்தான்.
இருவிழிகள் பயன் கொண்டதே இந்நாள்தான்.
இப்படி ஓர் அழகா?
கூரான நாசி
தேரான தேகம்
சங்குக் கழுத்து
பொங்கும் இளமை
தங்கிவிடலாம்
இங்கேயே என
எண்ண வைக்கிறது
சேலையில் எழிலாய்
சற்றே வெளித்தெரியும் இடை
நிமிட நேரத்தில் அவன் விழிகளில் தன்னைத் தழுவிக் கொண்டதில் இயல்பான நாணம் இன்னும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க ராஜேஸ்வரியின் சிவந்த கன்னம் இன்னும் சிவந்தது. உள்ளம் மலர்ந்தது.
தன்னை மறந்திருந்த மனோகரின் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தான்.
மொபைலில் அழைத்தது சங்கரி.

Author: gavudham
Article Title: ஒழுக்கசீலன் 5
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.