ஒழுக்கசீலன் 1

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
மனோவிற்கு போர் அடித்தது. மொபைலை எடுத்தான்.

யாருக்குச் சாட் செய்யலாம்? யோசித்தான்.

வினிதா? வேண்டாம். நேற்று தான் அவளோடு மகாபலிபுரத்தில் ஒன்றாகக் குளித்துக் களித்திருந்தான்.

சங்கரி? ஓகே. சங்கரியைக் கொஞ்ச மனோவிற்கு எப்போதும் தனி ஆர்வம். அதற்கு காரணம் சங்கரி முதலில் மறுப்பாள். பிறகு சிணுங்குவாள். பிணங்குவாள். இணங்குவாள்.

சங்கரி கிராமமும் இல்லாத மாநகரமும் இல்லாத நகரத்தில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் கலாச்சாரம் ஒட்டிக்கொண்டிருந்தது. அறைக்கு வந்த பின் அவ்வளவு சீக்கிரம் எதையும் கழட்ட விட மாட்டாள். அது மனோகருக்கு பிடித்திருந்தது. அவள் சிணுங்கும் போதே மனோவிற்கு வெறியேறிவிடும்.

அனிதா தனியார் பள்ளியின் ஆசிரியை. தன் அக்கா மகனை வகுப்பில் விடச் சென்ற மனோகரின் பார்வையில் பட்டுவிட அவள் பின்னால் நீண்ட நாட்கள் அலைந்து அவளையும் ஒரு வழிக்கு கொண்டுவந்து விட்டான். இப்போது மனோகரிடமிருந்து குட் நைட் மெசேஜ் போகவில்லை என்றால் அனிதா உறங்க மாட்டாள்.

மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூவரும் மனோகர் தன்னை உண்மையாக காதலிக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மூவரையும் தனித்தனியாக காதலித்துக் கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான் மனோகர். வேலை ஒரு தனியார் கம்பெனியின் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ். அவன் நிறம் உயரம் பேச்சு வன்மை மூவரையும் அவனை ஆதர்ச நாயகனாக எண்ண வைத்திருந்தன.

மனோ சங்கரிக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினான். இவன் மெசேஜிற்காகக் காத்திருந்தாற்போல் சங்கரியிடமிருந்து உடனே பதில் கிடைக்க உற்சாகமானான். ஆரம்பித்தான்.

"குட்டி"

"என் பேர் என்ன குட்டியா?"

"இல்லதான்."

"அப்புறம் எதுக்கு என்னை குட்டின்னு கூப்பிடறீங்க?"

"தப்புதான்"

"ஏன்?"

"உனக்குத்தான் எதுவுமே குட்டியா இல்லையே"

"ஏய் கேடி"

"உண்மையச் சொன்னேன்டி"

"ம்"

"ஆண்டவன் எதுக்குத் தெரியுமா எனக்கு ரெண்டு கை கொடுத்திருக்கான்?"

"எதுக்கு?"

"உன்னோட?"

"என்னோட?"

"உன்னோட ரெண்டு.."

"ஏய்"

"முடிக்க விட்றி"

"சரி சொல்லுங்க"

"ரெண்டு கன்னத்தைக் கிள்ளன்னு சொல்ல வந்தேன்."

"நிஜமா?"

"நிஜமா."

"உங்கள நம்ப முடியாதே."

"சரி நீ என்ன நினைச்சே?"

"ஒண்ணும் நினைக்கல"

"பொய்"

"நிஜமா."

"நான் சொல்லவா?"

"வேண்டாம்."

"ஏன்? பிடிக்கலயா?"

"நான் சொன்னேனா?"

"அப்ப எப்போ?"

"என்ன எப்போ?"

"ரெண்டு"

"சீ"

இதுவரை இரண்டு முறை முழுமையாகத் தன்னை இழந்தும் சங்கரிக்கு இன்னும் வெட்கம் போகவில்லை. அது தான் மனோவின் ஈர்ப்புவிசையை இன்னும் குறையாமல் வைத்திருந்தது.

“நாளைக்கு லீவ் போடறியா?”

“நீங்க ஃப்ரீயா?”

“நீ லீவ் போடு. நான் என்னை ஃப்ரீ பண்ணிக்கிறேன்”

“நிஜமாவா?”

“ம்”

“என் மேனேஜர்கிட்ட என்ன சொல்ல?”

“அவர் பொண்டாட்டிக்கு கொரோனா வந்திருக்கு. பார்க்கப் போறேன்னு சொல்லு.”

“சீ”

மனோகர் சிரித்தான்.

“சீரியஸா ஒரு காரணம் சொல்லுங்க”

“இந்த மாதிரி என்னோட காதலனைப் பார்க்கப் போறேன். நானும் அவரும் கொஞ்சி ரொம்ப நாளாச்சுன்னு சொல்லு”

“மை காட்”

“என்னாச்சு?”

“எப்பப்பார்த்தாலும் விளையாட்டுதானா?”

“உன்னப் பார்த்தா எனக்கு எப்பவும் அப்படித்தான் தோணுது.”

“ஏன்?”

“ஃப்ரஷ் மைதானம் மாதிரி இருக்கற உன் இடுப்பப் பார்த்தாவே எல்லாமே மறந்துடுது”

“சீ”

“உண்மையச் சொல்றேன். வேண்டாம்னு சொன்னா எதும் சொல்லல”

“சரி நாளைக்கு லீவ் போடறேன்.”

“சூப்பர்”

“ம்”

“வீட்டுக்கு வந்துடு”

“சரிப்பா” சொன்னவள் அவனை தயக்கமாய் அழைத்தாள்.

“மனோ”

“சொல்லு குட்டி”

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு”

“தெரியுமே”

“அதான் கல்யாணத்துக்கு முன்னாடி என்னை நான் கொடுத்துட்டிருக்கேன்.”

“ம்”

“என்னை ஏமாத்த மாட்டே தானே?”

சங்கரி கேட்க கோபப்படுவது போல் நடித்தான்.

“லூசு என்னடி நெனச்சிட்டு இருக்க? நீ மட்டும் தான் உண்மையா விரும்புற. நான் உன்னை உண்மையா விரும்பலயா? வேண்டாம் இனிமே நாம பார்க்க வேண்டாம். கல்யாணத்த முடிச்சுட்டு அதுக்கப்புறம் நான் உன்னை எடுத்துக்கிறேன்.”

அவன் எதிர்பார்த்தது போலவே சங்கரி பதறினாள்.

“மனோ நான் அதுக்குச் சொல்லலப்பா”

“நீ எதுக்கும் சொல்லவேண்டாம்”

“ப்ளீஸ் மனோ”

“நான் போறேன்”

“ப்ளீஸ் ஐம் ஸாரி”

“பின்ன என்னடி? எனக்கு எவ்வளவு ஹர்ட்டிங்கா இருந்துச்சு தெரியுமா?”

“ஸாரிப்பா”

“ஸாரி கிடையாது.”

“சரி எனக்கு நீயே பனிஷ்மென்ட் கொடு.”

“கொடுத்துடுவேன்”

“என்ன பனிஷ்மென்ட் வேணாலும் கொடு ஏத்துக்கிறேன்”.

“நாளைக்கு முழு நாளும்”

“முழு நாளும்?”

“உனக்கும் துணிக்கும் சம்மந்தம் இருக்கக் கூடாது.”

“சீ ப்ளீஸ் பா வேண்டாம் பா”

சங்கரி போனில் சிணுங்க மனோகருக்கு வெறியேறியது.

“என்ன ட்ரஸ் இப்போ?”

“நைட்டி”

“ஒரு செல்பி அனுப்பு.”

“இப்பவா?”

“இல்ல அடுத்த வருஷம்”.

மறுமுனையில் சங்கரி சிரிக்க மனோகர் தனக்குள் நினைத்துக்கொண்டான்.

‘சிரிடி நாளைக்கு திரும்பவும் உன்னைத் துவச்சுக் காயப் போடறேன்.’

சங்கரி ஒரு செல்பி அனுப்ப மனோகரன் எடுத்துப் பார்த்தான்.

அவள் புன்னகைத்தபடி இருக்க லட்சியம் செய்யாத மனோவின் பார்வை கழுத்துக்குக் கீழே போனது.

“கால் பண்ணவா?” கேட்டான்

“வேண்டாம் கயல் தூங்கிட்டிருக்கா.”

கயல் சங்கரியின் ரூம்மேட்.

“ம்”

“போட்டோவப் பார்த்தீங்களா?”

“ம்”

“ஒண்ணுமே சொல்லல?”

“உனக்கு இரக்கம் இல்லையே?”

“புரியல”

“உனக்கு இரக்கம் இல்ல நைட்டிக்கு இறக்கம் இல்ல”

“சீ”

“குட்டி”

“ம்”

“எனக்கு பார்க்கணும்.”

“என்னப்பா இது?”

“ஆசையா இருக்கு.”

“நாளைக்குத்தான் வர்றேனே”

“நாளைக்குத்தானே? இப்ப எனக்கு வேணுமே?”

“கண்டிப்பா வேணுமா?”

“ம்”

“சரி இரு அனுப்பறேன்”

“ம்”

காத்திருந்தான்.

கொஞ்ச நேரத்தில் சங்கரி நைட்டியை இறக்கி விட்டு ஃபோட்டோ அனுப்பியிருக்க மனோகர் பார்த்தான். ரசித்தான்.

“ஹலோ” சங்கரி தான்

“ம்”

“என்னாச்சு?”

“என்னென்னமோ ஆச்சுடி”

“சீ”

“குட்டி”

“ம்”

“நாளைக்கு சீக்கிரம் வந்துடு”

“ம்”

“சேலை கட்டிட்டு வா”

“ம்”

“லவ் யூ டி”

“மீ டூ”

பேசி முடித்த மனோ பரவசமாக உணர்ந்தான்.

நாளை வரட்டும் கவனிக்க வேண்டியதுதான்.

அவன் அலைபேசி அடிக்க சங்கரிதானா மீண்டும் என்று எடுத்துப் பார்த்தான். இல்லை. அனிதா.

பேசினான்

“ஹாய் மை டியர் ஹனிதா”

மறுமுனையில் அனிதா மலர்ந்தாள். அனிதாவை எப்பொழுதும் ஹனிதா என்றுதான் இவன் கூப்பிடுவான்.

அதற்கு இவனே ஒரு முறை பூங்காவில் காரணமும் சொன்னான்.

“நான் உன்ன ஏன் ஹனிதான்னு கூப்பிடறேன் தெரியுமா?”

கேட்டதற்கு அவள் தெரியலையே என்று சொல்ல சட்டென்று இழுத்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அவள் விடுவித்துக்கொள்ள முயன்றும் விடாமல் இதழ்களை கவ்விச்சுவைத்தவன் புன்னகைத்தபடி சொன்னான்.

“உன் உதட்டில தேன் இருக்கு. அதான் ஹனி தான்னு நான் சொன்னா நீ கொடுக்க ரெடியா இருக்கணும்னு”

அவன் பேச்சில் அனிதா மயங்கிக்கிடந்தாள்.

“மனோ நாளைக்கு ஃப்ரீயா?” அனிதா கேட்க யோசித்தான்.

“சொல்லு ஹனி நான் ஃப்ரீ பண்ணிக்கறேன்”.

“நாளைக்கு என்னோட ஃபிரண்டோட பர்த்டே பார்ட்டி. நீயும வந்தா நல்லா இருக்கும்.”

“வர்றேன் ஆனா ஒரு கண்டிஷன்”

“என்ன?”

“பார்ட்டி முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டு போகணும் நீ”

“ஏய்”

“என்ன ஏய்?”

“நீ வேற எதுக்கு ப்ளான் போடறே.?”

“கொஞ்சம் கொஞ்சவா?”

“என்ன நாவலோட பேர் சொல்ற?”

“ஓ அந்த பேர்ல நாவல் எழுதிட்டாங்களா?”

“ஆமா”

“சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லலியே” மனோகர் விடாமல் கேட்க அனிதா சம்மதித்தாள்.

பேசி முடித்த மனோ தன் அதிர்ஷ்டத்தைத் தானே வியந்து கொண்டான்.

‘நாளைக்கு காலையிலிருந்து மத்தியானம் வரைக்கும் சங்கரி. நைட்டு அனிதா. நீ என்ஜாய் மனோ.’

சொன்னவன் டிவியைப் போட ரத்தக் கண்ணீர் படத்தில் எம் ஆர் ராதா

“நாளைக்கு எனக்கு ரெண்டு இடத்துக்குப் போகணும்” என்று வசனம் பேச மனோகர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.


முழு கதையும் ஆடியோ ஸ்டோரியாக GK Tamil Novels You Tube Channel ல் கேட்டு மகிழுங்கள்.

 
Last edited:

Author: gavudham
Article Title: ஒழுக்கசீலன் 1
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.