"என்ன நீரஜ்! இன்னிக்கு ரொம்ப ஆர்வமா இருக்கே? நான் கிளம்ப வேணாமா? உனக்கு இருக்கிற ஆர்வத்தைப் பார்த்தா நான் மும்பை போன மாதிரிதான்." என்றான் சுவாமிநாதன். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, வெகு நெருக்கத்தில், பர்ஃப்யூம் மணத்தது. இறுக்கி, நொறுக்கியதில் அவன் இதயம் கனத்தது.
நான் அவனைப் பேச விடாமல் இதழ்களை இதழ்களால் பூட்டினேன்.
"என்ன, என்னிக்கும் இல்லாம இன்னிக்கு?"
"என்னமோ தோணுச்சு. கட்டிக்கிட்டேன். ஏன், நான் கட்டிக்க கூடாதா?"
"நீ கட்டிக்கிறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். ஆனா, இப்ப இல்ல. எனக்கு மும்பை போகணும். மும்பை போறதுக்கு முன்ன ஆபீஸ் போகணும். ஆபீஸ்ல அந்த கடங்காரன் தங்கராஜ் என்ன பண்ணி வெச்சிருக்கானோ, அதை எல்லாம் சரி பண்ணிட்டு நான் போய் பிளேனைப் பிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். நான் மும்பை போயிட்டு வந்துடறேன். அதுக்கு பின்னால நீ என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ."
நான் சிணுங்க சிணுங்க கைகளை விலக்கி விட்டு, சூட்கேஸைப் பொறுக்கிக் கொண்டு, அழுத்தமாக ஓர் அழுத்தம் கொடுத்து விட்டு கிளம்பினான் சுவாமிநாதன்.
"இந்த மழையில் போய்த்தான் ஆகணுமா சுவாமி?"
"மழையா இருந்தாலும் வெயிலா இருந்தாலும் போய்த்தான் ஆகணும் நீரஜ். ஏன்னா, ஒரு பெரிய காண்ராக்ட்ல கையெழுத்து போடணும். நான் போகலைன்னா காண்ட்ராக்ட் கைவிட்டு போயிடும். நான் மும்பை போய் வந்ததும் அந்த காண்ட்ராக்டோட முழு டீடெயில்ஸ் உனக்கு வரும். நீ ஒரு பார்வை பார்த்துடணும்."
"சுவாமி!" நான் செல்லமாய்ச் சிணுங்கினேன். "அந்த தலைவலி எல்லாம் நீயே பார்த்துக்கோ!"
"நோ! நோ! கம்பெனியில ஒரு சின்ன மாறுதல் நடந்தாலும் அது உனக்குத் தெரியணும்."
"டேபிள் சேரை இடம் மாத்தி வெச்சா கூட தெரியணுமா, என்ன?"
"கிண்டல் பண்ணாதே நீரஜா. சொல்லப் போனா அதுதான் உண்மை. ஒரு டேபிளை இடம் மாத்தினாலும் உனக்குத் தெரியணும்."
"ஓ.. நோ சுவாமி! ரொம்ப போரடிக்கிற!" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சுவாமிநாதன் அறையை விட்டு வெளியேறினான். மழையிலேயே காரை கிளம்பிச் செல்லவது மாடி ஜன்னல் வழியே பார்த்தேன். அதன் பிறகு நான் விக்ரமுக்கு போன் செய்தேன்.
"விக்ரம்!"
"சொல்லு நீரஜா. சுவாமிநாதன் போயாச்சா?"
"இப்பதான் கிளம்பிப் போனார்."
"உன் மெசேஜ் பார்த்தேன். அப்படி என்ன அவசரமா பேசணும்?"
"எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, விக்ரம். நான் நேர்ல வர்றேன்."
"இந்த மழையிலேயா?"
"ஆமா, அவசரமா பேசணும். இப்ப நீ எங்க இருக்கே?"
"ரூம்லதான் இருக்கேன். சரியான மழை! இந்த மழையில் வரணும்னு என்ன வேண்டுதல்? கொஞ்சம் மழை நின்ன பின்னாடி வாயேன்."
"சரி, எங்க வரட்டும்?"
"குரோம்பேட்டையில் நல்ல இடம் இருக்கு."
"சரி, நான் கிளம்பி வர்றேன். நீ முதல்ல போய் எந்த இடம்னு லொகேஷன் ஷேர் பண்ணு."
"சுவாமிநாதன் அன்னிக்கு மாதிரி திரும்பி வந்துடப் போறார்!"
"வர மாட்டார் விக்ரம். அப்படியே வந்தாலும் வர்றதுக்கு முன்ன போன் பண்ணுவார்."
"சரி, வா நீரஜா." என்றான்.
விக்ரம் அவன் வசிக்கும் குரோம்பேட்டை பகுதியிலேயே ஒரு ஓட்டலில் காத்திருப்பதாகச் சொன்னான். நான் சிறிய ஒப்பனை செய்து கொண்ட பிறகு, என் 'ஸ்கோடா' காரில் மழையில் வழக்கமான உற்சாகம் இல்லாத மனநிலையில் சென்றேன்.
'ட்ரீம் லேண்ட்' என்ற அந்த ஓட்டல் மழையில் நனைந்து கொண்டிருந்தது. கார் பார்க்கிங்கில் ஒன்றிரண்டு கார்கள் குளிர் ஜுரம் வந்து இயங்க முடியாமல் படுத்து கொள்ளும் அளவுக்கு மழையில் நனைந்து கொண்டிருந்தன. அங்கே கிடைத்த ஏராளமான இடங்களில் மழை நீரை சிதறடித்து நின்றேன்.
என் கார் வருவதை விக்ரம் உணர்ந்திருந்தான். வரவேற்பறை கண்ணாடி வழியாகப் பார்த்து விட்டு, குடை பிடித்து வந்தான். நான் கார் கதவைத் திறந்து அவனுடன் குடையில் ஒளிந்து கொண்டு, ஓட்டலின் வழுக்கும் படிக்கட்டுகளில் ஏறி, கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது, நான் லேசாக நனைந்து இருந்தேன். உடலை சுருட்டிக் கொள்ளும் அளவுக்கு குளிர் அடித்தது. படுக்கையில் அவன் உடல் சூட்டை உணர்ந்தபடி கட்டி அணைத்துக் கொண்டு படுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை உடனே என் மனதில் இருந்து அழித்தேன். ஆனால் விக்ரமுக்கு அந்த எண்ணம் இருந்தது. நான் காரை விட்டு இறங்கியதுமே என் தோளை அணைத்துப் பிடித்து குடைக்குள் செலுத்திய வேகத்தில் இருந்து என்னால் அதை தெரிந்து கொள்ள முடிந்தது.
"ரொம்ப குளிருது. முதல்ல சூடா ஒரு காபி சாப்பிடலாம்." என்றேன்.
"சாப்பிடலாம். முதல்ல ரூமுக்கு போயிடலாம். அங்கிருந்து ஆர்டர் செய்யலாம்." என்றான் விக்ரம்.
இவையெல்லாம் வழக்கமானதுதான். ஆனால் நான் இன்றைக்கு வழக்கமான நீரஜா இல்லை. அறைக்குச் சென்று, கட்டிலில் புரண்டு, சரச சல்லாபத்துக்கு நான் தயார் இல்லை. விருப்பம் இல்லை. இங்கேயே எங்கேயாவது ஒரு டேபிளில் அமர்ந்து பேச வேண்டியதை பேசி விட்டு கிளம்பும் மனநிலையில்தான் நான் இருந்தேன். ஆனால், ஓட்டலில் இந்த மழையிலும் டேபிளில் ஆட்கள் இருந்தார்கள். நான் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டால் என் குரல் உயர்ந்து ஒலிக்கும். பலர் திரும்பிப் பார்க்கக் கூடும். அதனாலேயே விக்ரம் சொன்னதற்கு நான் சம்மதித்து அழைத்துச் சென்றேன்.
அறை கதகதப்பாக இருந்தது. நறுமணம் வீசியது. கட்டில் விரிப்புகள் சுத்தமாக, சுருக்கம் இல்லாமல் இருந்தது. ஒரு காதல் ஜோடியை எதிர்நோக்கி தன்னை ஓர் உன்னத கசங்கலுக்கு உட்படுத்திக் கொள்வதற்காக அந்த கட்டிலின் மெத்தை காத்திருந்தது.
உள்ளே சென்றதும் விக்ரம் என்னைக் கட்டி அணைக்க முற்பட்டான். நான் நாசுக்காக அவன் கைகளை விலக்கி, "முக்கியமான விஷயம் பேசணும் விக்ரம்!" என்றேன்.
"என்ன முக்கியமான விஷயமா இருந்தாலும் அப்புறம் சொல்லு நீரஜா. முதல்ல இந்த முக்கியமான விஷயத்தை முடிச்சிடலாம்."
என்னை இடுப்போடு சேர்த்து அணைத்து கட்டிலில் வீழ்த்தினான். அவனது ஆவேசம் என்னைத் திக்குமுக்காட வைத்தது.
"விக்ரம், நான் சொல்றதை முதல்ல கேளு!"
"நோ, நீரஜா. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்."
"இல்லை, விக்ரம்."
நான் அவனை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளினேன். எப்போதும் அவன் அணைப்பில் மயங்கிக் கிடக்கும் நான் முதல் முறையாக அப்படி செய்தது அவனுக்கு சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. என் இந்த செயலை விக்ரம் எதிர்பார்க்கவில்லை. உடனே அவன் முகம் மாறியது. என்னை விட்டு விலகினான். தன் தலைமுடியை கோதி விட்டுக் கொண்டு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து என்னைப் பார்த்தான்.
"சரி, சொல்லு நீரஜா."
நான் புடவையை சரி செய்து கொண்டேன்.
"அவன் மறுபடியும் போன் பண்ணியிருந்தான், விக்ரம்."
விக்ரமின் முகம் இறுகியது.
"என்ன சொன்னான்? பணம் ஏதாவது கேட்டு மிரட்டினானா?"
"இல்லை. பணம் கேட்டிருந்தா பரவாயில்லையே!"
"வேற என்ன கேட்டான்?"
"என்னையே கேட்டான்!"
"நீ என்ன சொல்ற நீரஜா? உன்னைக் கேட்டான்னா… என்ன அர்த்தம்?"
"என்னை ஒரு நாள் ராத்திரிக்கு கேக்கறான்!"
விக்ரம் கட்டிலின் மெத்தையை ஓங்கிக் குத்தினான். யாரோ ஒரு முகம் தெரியாதவனின் முகம் தெரியாத தாயை கேவலமாக திட்டினான்.
"என்ன விக்ரம், இப்படி திட்ற? யாரோ ஒருத்தன் செஞ்சதுக்கு யாருன்னே தெரியாத ஒரு பெண்ணைத் திட்றது அசிங்கமா இருக்கு. அப்படி பார்த்தா, என்னையும்தான் திட்டிக்கணும்."
"ஸாரி, நீரஜா! நீ சொன்னதைக் கேட்டதும் எனக்கு கோபம் தான் வந்தது."
நீரஜா அவனை உற்றுப் பார்த்தாள். அவளுக்கு குழப்பமாக இருந்தது. விக்ரம் உண்மையில் கோபப்படுகிறானா? இல்லை, பாசாங்கு செய்கிறானா என்று அவளுக்குத் தெரியவில்லை.
"வேற என்ன சொன்னான்?"
"அதான் சொன்னான். அவனுக்குப் பணமும் வேணுமாம். நானும் ஒரு நாளைக்கு வேணுமாம்!"
விக்ரம் பற்களை இறுகக் கடித்து, "இல்லன்னா என்ன பண்ணுவானாம்?" என்றான்.
"என்ன பண்ணுவான்? எத்தனை சினிமா, எத்தனை கதைகள் பார்த்தாச்சு. பணமும் வேணும்; ஒரு நாளைக்கு நீயும் வேணும்னு சொன்னான். ரெண்டு நாள் டைம் கொடுத்திருக்கான்!"
"ரெண்டு நாள் டைம் கொடுத்திருக்கானா? எதுக்கு?"
"அதுக்குள்ள என்னோட முடிவை சொல்லணுமாம்! அதாவது, அவனுக்கு ஒரு நாளைக்கு என்னைக் கொடுக்கணுமாம்!"
"அப்படி முடிவு சொல்லலைன்னா?"
"நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கிற தொடர்பை பத்தி சுவாமி கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்றான்! ரெண்டு நாள்ல அவனுக்கு சாதகமான பதில் சொல்லணும்னு திரும்பத் திரும்ப சொல்றான். நான் இப்ப என்ன பண்றது விக்ரம்?"
விக்ரம் திடீரென்று குரூரமாகச் சிரித்தான்.
"என்ன விக்ரம்! எதுக்கு இப்படி சிரிக்கிற?"
"நீரஜா, என்னைப் பத்தி அவனுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப மோசமானவன்! எனக்கு கோபம் வந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நான் அவனை சும்மா விட மாட்டேன் நீரஜா!"
"விக்ரம்! அவனை நாம ஒண்ணும் பண்ண முடியாது விக்ரம்!"
"இல்லை, நீரஜா. பண்ண முடியும்!"
விக்ரம் எழுந்து சென்று தன் ஹேண்ட் பேகைத் திறந்தான்.
"விக்ரம்! என்ன பண்ற?"
அவன் பேசவில்லை. ஹேண்ட் பேக்கில் இருந்து நீளமான ஒரு கத்தியை எடுத்தான். என்னை நெருங்கினான்.

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 9
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.