மறுநாள் காலையில் அதி சீக்கிரமாகவே எழுந்து அலுவலகத்திற்கு வந்திருந்தேன். அலுவலகத்தைச் சுத்தம் செய்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழை விரித்தேன். பக்கத்திற்கு ஒரு அரசியல்வாதியும், ஒரு கொலைகாரனும், நசுக்கப்பட்ட ஒரு விவசாயியும், ஒரு பள்ளி விழாவும், ஒரு விளையாட்டு செய்தியும், என்று விரிவாக இருந்தது. நான் ஷாலினி போன் செய்வதற்காக காத்திருந்தேன். காத்திருக்கும் நேரத்தில் நான் சட்டம் படித்தது பற்றியும், இந்த தனியார் துப்பறியும் நிறுவனம் ஆரம்பித்தது பற்றியும் சிறிது நேரம் யோசித்தேன். டிடெக்டிவ் வாக இருக்க வேண்டும் என்பது என் கனவுக்குள் ஊறியிருந்தது. இரும்புக்கை மாயாவியும், ஜேம்ஸ்பாண்ட் 007-ம், காமிக்ஸில் படிக்கும் போதே நான் அது போல் ஆக வேண்டும் என்று கற்பனையில் மிதந்திருக்கிறேன். ஏழு கடல் தாண்டி, ஐந்து மலைகள் கடந்து, ஒரு அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணை கற்பனையில் போய் காப்பாற்றி இருக்கிறேன். என் துப்பறியும் நிறுவனத்திற்கு 'BRA' என்று பெயர் வைக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அது தானாகவே அமைந்தது. Black Rose Agency (பிளாக் ரோஸ் ஏஜென்சி) என்று பெயர் வைக்க முடிவான பிறகு அதன் சுருக்கம் BRA என்று அமைந்தது தற்செயலானது.
போன் ஒலித்தது. ஷாலினிதான்.
"ஹாய் ப்ரோ!" என்றாள் உற்சாகமாய்.
"சொல்லு ஷாலு. சந்தன பவுடர் போட்டிருக்கியா என்ன?"
"எப்படிடா கண்டுபிடிச்ச?"
"போன்ல வாசனை வருது!"
"யூ, நாட்டி! அப்புறம் நீ அனுப்பிச்ச ரெண்டு நம்பரோட பெயர் அட்ரஸ் அனுப்பி இருக்கேன்; வாட்ஸ் அப்ல பார்!"
"தேங்க்ஸ் ஷாலு!"
"அவ்வளவுதானா?"
"வேற என்ன? வேணும்னா இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தர்றேன்!"
"உதை பட போறே நீ! ஆமா, இந்த போன் நம்பரோட அட்ரஸ் எதுக்கு கேட்ட?"
"அது ரகசியம் ஷாலு; சொல்லக்கூடாது!"
"அடப்பாவி! அப்போ, நான் மட்டும் கம்ப்யூட்டரில் இருந்து திருடி உனக்கு கொடுக்கலாமா? நான் ரகசியம் காக்க கூடாதா?"
"இது சின்ன ரகசியம் சாலு! என் க்ளைண்டோட ரகசியம் பெருசு! ரொம்ப முக்கியம்! சரி வெச்சிரவா? நீதான் ஆபீஸ்ல வெட்டியா உட்கார்ந்துட்டு இருக்கே; எனக்கு வேலை இருக்கு!?"
மறுபடியும், "அடப்பாவி!" என்றாள். "அடுத்த முறை போன் பண்ணவே இல்லை?" என்று ஷாலினி சொன்னது, போனை அணைக்கும் கடைசி நேரத்தில் காதில் விழுந்தது. சிரித்துக் கொண்டேன். உடனே வாட்ஸ்அப் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். இரண்டு போன் நம்பர்களுக்கு நேராக பெயர் விலாசம் இருந்தது.
1. 63××××××33 - விக்ரம் குமார்
2. 96××××××89 - எத்திராஜ்
விக்ரம் குமாருடைய பெயரை பார்த்த உடனேயே முதல் அத்தியாயத்தில் இருந்து நீரஜா சொன்ன இந்தக் கதையின் முழு பரிமாணமும் எனக்குள் விரிந்தது.
விக்ரம்தான் விக்ரம் குமாரா? முழு பெயர் அதுவாகத்தான் இருக்க வேண்டும். எனினும் சின்ன சந்தேகம் வந்தது. அதை தீர்த்துக் கொள்ளும் ஆவல் உடனடியாக ஒரு டீ குடிக்கும் ஆவல் போல், ஒரு சிகரெட் பிடிக்கும் ஆவலைப் போல் ஏற்பட்டு மனதை பரபரப்பாக்கியது. நீரஜாவுக்கு போன் செய்து கேட்கலாம் என்று நினைத்தேன். நினைத்ததும் போன் செய்ய, நீரஜா வேறு யாருடனோ பேசிக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞை வந்தது. சற்று பொறுமையாக காத்திருக்க முடிவு செய்து, அலுவலக அறையை வெறுமனே சாத்திக்கொண்டு, சிறிய தெருவில் நடந்து, சற்று பெரிய சாலைக்கு வந்தேன். தெரு முனையிலேயே நாயர் டீ கடை இருந்தது. ஸ்ட்ராங்காக ஒரு டீயும், ஒரு சிகரெட்டும் வாங்கி முதலில் டீயையும் பிறகு சிகரெட்டையும் குடித்தேன். புகையைத் தலைக்கு மேல் மிதக்க விட்டேன். அது ஜனக்கூட்ட இரைச்சல் தாங்காமல் விரைவிலேயே கரைந்து போனது. நான் மீண்டும் அலுவலகத்துக்கு வந்து, மீண்டும் போன் செய்த போது, மீண்டும் எங்கேஜ்ட் டோன் வந்தது. நான் பொறுமை இழந்து தவித்த போது நீரஜாவே அழைத்தாள்.
"நான் நீரஜா பேசுறேன்!"
"நான் 'மாஸ்' மாதவன் பேசுறேன்." என்று சொல்லிவிட்டு, 'இப்ப ரொம்ப முக்கியம்!' என்று நினைத்துக்கொண்டு, "உங்ககிட்ட ஒரு சின்ன சந்தேகம் கேட்கத்தான் போன் பண்ணினேன். நீங்க பிசியா இருக்கீங்க." என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, அழுகைக்கு அருகாமையிலிருந்த குரலில் பேசினாள் நீரஜா.
"சார்! நான் உங்க கிட்ட அவசரமா பேசணும்!"
"இதோ, இப்ப, பேசிட்டு இருக்கீங்களே!"
"நேர்ல பேசணும்."
"என்ன விஷயம்னு போன்ல சுருக்கமா சொல்லுங்க."
"மறுபடியும் அவன் போன் பண்ணி இருந்தான்!"
"எவன்?"
"அவன் தான்... நேத்து நான் உங்ககிட்ட சொன்னேனே, அவன்!"
"யாரோ முகம் தெரியாத அனாமதேய ஆள்?"
"ஆமாம்."
"என்ன சொன்னான்?"
"நான் நேர்ல வர்றேனே?" என்றாள் நீரஜா.
நான், "சரி, வாங்க." என்று சொல்வதற்குள் போனை இரக்கம் இல்லாமல் சாகடித்திருந்தாள். அப்படி என்ன அவசரம் என்று நான் யோசித்தேன். மீண்டும் அவன் போன் செய்திருக்கிறான் என்றால், இந்த இரண்டு நம்பர்களில் - இந்த இரண்டு பேரில் - விக்ரம் குமார், எத்திராஜ் - இவர்களில் யார் போன் செய்து இருப்பார்கள்? இல்லை, இரண்டு பேரும் ஒரு பேரா? போன் செய்து என்ன சொல்லியிருப்பார்கள்? பணம் கிணம் ஏதாவது கேட்டு இருப்பார்களா?
ஆவல் தாங்காமல் என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரம் காத்திருந்த போது நீரஜா வந்தாள். நீரஜா வருவதற்கு முன்பே பர்ஃப்யூம் வாசனை வந்தது.
நீரஜா இன்றைக்கு மஞ்சள் நிறத்தில் பச்சைப் பூக்கள் தெளித்த பருத்தி ஆடையில் மேலாக்கு இல்லாமல், அவள் மனநிலை போல் லோலாக்கு அசைந்தாட வந்தாள்.
"வாங்க நீரஜா, உக்காருங்க!"
"மறுபடியும் அவன் தான்! பேரெல்லாம் சொல்லலை."
"என்ன சொல்றான்?"
"மிரட்டுறான்."
"அதான் என்ன சொல்லி மிரட்டுறான்?"
"அவன் பேசினதை ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்; நீங்களே கேளுங்க!"
"குட் ஜாப்! போடுங்க, கேட்கலாம்!"
அந்த உயர்தர ஆண்ட்ராய்டு போனை மேஜை மீது வைத்து இயக்கினாள் நீரஜா.
'விழிகளின் அருகினில் வானம்... வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…' என்று நீரஜாவின் போனில் ரிங்டோன் பாடல் ஒலித்தது. செல்போன் அழைப்பை ஏற்றதும் லேசான வளையல் சத்தம். அதைத் தொடர்ந்து சிறிது மௌனம். பிறகு, "ஹலோ!" என்ற நீரஜாவின் கலங்கிய குரல்.
"என்ன பேபி! எப்படி இருக்க?" - சிறிய இடைவெளி - "நீ போன் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன். ஏன் பண்ணலை?"
சிறிது மௌனம். செல்போனில் ஓர் அடைபட்ட அறையிலிருந்து பேசுவதை உறுதிப்படுத்தும் லேசான எதிரொலி!
"நான் போன் பண்ணினேன்." நீரஜாவின் குரல். "ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது."
எதிர்முனையில் சிரிப்பு.
"அது, என்னோட ஸ்டைல்!"
"எது? சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கிறதா?"
"இல்லை. சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு, எதிராளியைத் தவிக்க விட்டு பீதி கிளப்புறது. அவங்க தவிக்கிறதை ரசிக்கிறது! ரசிச்சு அப்படியே ஆனந்தமா அனுபவிக்கிறது! இது நல்லா இருக்கில்ல?"
சிறிய மௌனம்.
"சரி, இப்போ எதுக்கு போன் பண்ணே?"
"கன்ஃபார்ம் பண்ணி தெரிஞ்சுக்கத்தான்!"
"என்ன தெரிஞ்சுக்கணும்?"
"உனக்கும் விக்ரமுக்கும் உள்ள கள்ளத்தொடர்பு உண்மைதானே? உண்மைதான்னு உன் வாயால சொல்லி, அதை நான் என் காதால கேட்டு தெரிஞ்சுக்கணும்!"
"சரி, உண்மைதான்னா என்ன பண்ணுவே?"
"சிம்பிள்! முதல்ல உங்க ஹஸ்பண்டுக்கு தகவல் சொல்லுவேன்."
"நீ சொல்லாம இருக்கணும்னா நான் என்ன பண்ணனும்?"
"ரொம்ப சிம்பிள்! நாம ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு ஒப்பந்தம் போட்டுக்குவோம்!"
"என்ன ஒப்பந்தம்?"
"அது ரொம்ப ரொம்ப சிம்பிள்! உன் சொத்துல பாதி எனக்கு எழுதி வைக்கணும்!"
"என்ன உளர்ற? அது எப்படி முடியும்?"
"கூல்! அது உன்னால முடியாதுல்ல? அப்போ உன்னால முடியறதைக் கேக்கட்டுமா?"
"என்ன கேக்கப் போறே?"
"அது எல்லாத்தை விடவும் ரொம்ப சிம்பிள்!"
"எவ்வளவு பணம் உனக்கு வேணும்? அதுக்குதானே இந்த பிளாக் மெயில்?"
"பிளாக்மெயில்? தப்பு. தப்பு. ஒப்பந்தம்! பணமும் வேணும்; அதைவிட முக்கியமா, ஒரே ஒரு நாளைக்கு நீயும் வேணும்!"
நான் நீரஜாவை பார்த்தேன். அவளின் கூழாங்கற்கள் போன்ற கண்களில் பனித்துளி போன்ற கண்ணீர் திரண்டிருந்தது. லேசாக விசும்பினாள். நாசுக்காக கைக்குட்டையை உபயோகித்தாள்.
செல்போனில் உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.
"யூ.. ப்ளடி சீப்! யார் கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கே?" நீரஜா போனில் வெடித்தாள்.
"கூல் பேபி! பணமோ, சொத்தோ கொடுத்தா குறைஞ்சுப் போயிடும். ஒரே ஒரு நாளைக்கு உன் உடம்பைக் கொடுக்கறதால உன் உடம்பில் இருந்து எந்த பாகமும் குறைஞ்சுப் போயிடாது!"
"நீ நினைக்கறது கனவிலும் நடக்காது!"
"நடக்காததை நான் கனவு காண்பதில்லை பேபி! நீ இதுக்கு சம்மதிதுத்தான் ஆகணும்!"
"கண்டிப்பாக சம்மதிக்க மாட்டேன்!"
"உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன். அதுக்குள்ள எனக்கு சாதகமான பதிலை நீ சொல்லணும். இல்லன்னா பின்வரும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!"
உரையாடல் முடிந்தது.
நீரஜா விசும்பி கொண்டிருந்தாள். கருணை உள்ளம் கொண்டு அவளை ரசிப்பதை நான் நிறுத்தி வைத்தேன். அவள் அழுது முடித்து சகஜ நிலைக்கு திரும்புவதற்கு அவளுக்கு அவகாசம் கொடுத்தேன். பிறகு கேட்டேன்:
"இந்த கால் எந்த நம்பரில் இருந்து வந்தது?"
அவள் தன் செல்போனை என் பக்கம் நகர்த்தினாள்.
நான் அந்த கைப்பேசியின் தொடு திரையை விலக்கிப் பார்த்தேன்.
விக்ரம் குமாரின் செல்போன் எண்!

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 6
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.