"இப்போ என்ன பண்ண போறே?" அலெக்ஸ் கேட்டான்.
"விக்ரம் ரூமை ஒரு முறை அலசிப் பார்த்திடணும்னு தோணுது." என்றேன். "இன்னிக்கு நைட்டு அந்த வேலையைச் செய்யணும்."
"எது செஞ்சாலும் கவனமா செய்! ஏன்னா, இந்தக் கொலையில சம்பந்தப்பட்டிருக்கிறது பெரிய கை! இந்தப் பொண்ணைக் கொலை பண்றதுக்கு ரொம்ப திட்டம் போட்டிருக்காங்க! ஏதேதோ குழப்பிக் குட்டையைக் கலக்கி தப்பிச்சுடலாம்னு திட்டம் போட்டிருக்காங்க! பார்த்து, உஷார்!" என்று சொன்னான். பிறகு, விடைபெற்று சென்றதும் நான் யாழினிக்கு போன் செய்தேன்.
"என்ன மாதவன்? சிசிடிவி பதிவை பார்த்து முடிச்சாச்சா?" என்றாள்.
"அதெல்லாம் பார்த்தாச்சு. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? அந்த ரகுநாதன் இருக்கானா?"
"நீங்க உள்ளே போனதும் யாருக்கோ போன் பண்ணினான். அப்புறம் மேலிடத்தில் இருந்து என்ன தகவல் வந்ததோ தெரியலை. இன்னும் உனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்."
"நீ எங்க இருக்க? உன்னை அவன் அடையாளம் கண்டு பிடிச்சுட்டானா?"
"பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்திட்டு, ரகுநாதனை கவனிச்சுட்டு இருக்கேன். கறுப்பு கண்ணாடி போட்டு, மாஸ்க் போட்டிருக்கேன். அடையாளம் தெரியாது."
"நீ அங்கேயே இரு. நான் வந்துர்றேன்."
வெளியே வந்து யாழியினியை தேட, அவள் ஓர் ஓரத்தில் நின்று ரகுநாதனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையின் திசையைக் கணித்து திரும்ப ரகுநாதன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன், நான் பார்த்ததும் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். நான் நேராக அவனிடம் சென்று, "தீப்பெட்டி இருக்கா ரகுநாதன்?" என்றேன்.
பெயர் சொல்லி அழைத்ததும் சற்று அதிர்ந்தவனாக, "என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான்.
"தீப்பெட்டி இருக்கான்னு கேட்டேன்?"
"நான் ஸ்மோக் பண்றதில்லை!"
"ஓ… யாராவது யாருக்காவது பிளாக் மெயில் பண்ணா மட்டும் பிரைவேட் டிடெக்டிவ் கிட்ட போகச் சொல்லி அறிவுறுத்துவீங்க; அப்படித்தானே?"
"என்ன உளர்றீங்க? யார் நீங்க? என்ன பேசறீங்கன்னே எனக்குத் தெரியலை!" என்றான் ரகுநாதன்.
நான் அவன் கண்களை உற்றுப் பார்த்து விட்டு, "போய் உங்க முதலாளி கிட்ட சொல்லுங்க! எல்லாம் எனக்குத் தெரிஞ்சு போச்சு; இனிமே தப்பிக்க முடியாதுன்னு சொல்லுங்க! இப்படி எல்லாம் ஒரு டிடெக்டிவை அல்பமா ஃபாலோ பண்ற வேலை எல்லாம் வேணாம்." என்று யாழினியை நோக்கி நடந்தேன்.
"அவன் கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?" என்றாள் யாழினி.
"சும்மா பயம் காட்டினேன். வா, போலாம்."
***
இரவு. தேய்ந்த அரிவாள் நிலா. மேகப் பொதிகள் ஸ்லோ மோஷனில் தேய்ந்த நிலவை அணைத்து அணைத்துச் சென்றன. ஊர் உறங்க ஆயத்தமாகும் பத்து மணி ராத்திரி. வசீகரமான பாவங்களை அடைகாக்கும் இருட்டு! என் அலுவலக தெரு முனையில், நாயர் டீக்கடை மூலையில் சோம்பலாய் ஒரு மின்கம்ப விளக்கு. வியாபாரத்தை அடைத்த ஷட்டர்களின், ஒரு சில படிக்கட்டுகளின் அடியில் எப்போதாவது குறைக்கும் நாய்கள்! நான் கிளம்பத் தயாரான போது யாழினி வந்து நின்றாள்.
"புறப்பட்டுட்டீங்களா?" ஜீன்ஸ், பனியன் அணிந்து சாகசங்களுக்குத் தயாராக வந்திருந்தாள்.
"உங்க வீட்ல என்ன சொன்னாங்க யாழினி?"
"போயிட்டு வான்னு சொன்னாங்க."
"நிஜமாவா? நம்ப முடியலையே!"
"நம்புங்க குருவே! யார்தான் ஃப்ரெண்டு கல்யாண ரிசப்ஷனுக்குப் போகணும்னா வேணாம்னு சொல்லுவாங்க. காலையில் வந்துடுவே இல்லைன்னு கேட்டு தெரிஞ்சுட்டு, போய் வான்னு அனுப்பி வெச்சாங்க!" என்று தன் தலைமுடியின் குதிரை வாலை தூக்கி எறிந்து பார்த்தது எனக்கு அவளை உடனடியாக காதலிக்கலாம் போல் தோன்றியது.
"போலாமா?" என்றாள். "என் வண்டியை உங்க ஆபீஸ் முன்னாடி விட்டுர்றேன். விக்ரமுக்கு குரோம்பேட்டையில்தானே வீடு?" என்று ஸ்கூட்டியை தள்ளி ஓர் ஓரமாக நிறுத்தி பூட்டிக்கொண்டு வந்தாள்.
"உனக்கு எப்படி தெரியும், விக்ரம் வீடு குரோம்பேட்டையில இருக்குன்னு?"
"நீங்கதான் சொன்னீங்க! மறந்துட்டீங்களா?" யமஹாவை வெளியே தள்ளி, "சாவி கொடுங்க, ஒரு சேஞ்சுக்கு நான் ஓட்டறேன். நீங்க பின்னாடி உக்காருங்க."
"யமஹா ஓட்டுவியா?"
"இதென்ன பிஸ்கோத்து! புல்லட் ஃபைவ் ஹண்ட்ரட் சிசி; எங்க அண்ணன் வெச்சிருக்கான். தள்றது மட்டும்தான் கஷ்டம். ஓட்ட ஆரம்பிச்சுட்டா வெண்ணெய்யில கத்தி வழுக்கறாப்ல போகும். உக்காருங்க. குரோம்பேட்டையில் எங்க?"
"நான் சொல்றேன், ஓட்டு!"
ஒரே உதையில் உயிர்ப்பித்துச் சீறினாள். சாலைகள் இருட்டும் செயற்கை வெளிச்சமுமாக மாறி மாறி வர, யமஹாவை தூள் பறத்தினாள். "என்னைப் பிடிச்சுக்குங்க! உங்களை மாதிரி ஸ்பீட் பிரேக்கர்ல வேணும்னே பிரேக் போடமாட்டேன்."
அவள் இடுப்பு மென்மையாக இருந்தது. காற்றில் குதிரை வால் பறந்து என் முகத்தை நலம் விசாரித்தது. புதிதாகக் குளித்திருந்த ஷாம்பு மணம் கலீல் ஜிப்ரான் கவிதைகளுக்கு அழைத்துச் சென்றது.
"அழகு எங்கே உள்ளது என்று உங்களால் தேட முடியுமா? அந்த அழகே உங்கள் வழியாகவும் வழித்துணையாகவும் இருந்தாலன்றி, அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?
அந்த அழகே உங்கள் வார்த்தைகளின் கோர்வையாக
அமைந்தாலன்றி, அதைப்பற்றி நீங்கள் எப்படிப் பேசமுடியும்?"
"குரோம்பேட்டையில் எந்த இடம்?" யாழினி மெயின் ரோட்டில் இருந்து விலகி, எதிரே வந்த பேட்ரோல் வண்டியின் சுழல் ஜால விளக்குகளைக் கவனிக்காமல், த்ராட்டிலை குறைக்காமல் சிக்னலில் முன்னேறிய படி கேட்டாள்.
"சுஜிதா அபார்ட்மெண்ட்ஸ்; பூங்கா ஸ்ட்ரீட்!"
"எனக்குத் தெரிந்த டீச்சர் ஒருத்தர் குரோம்பேட்டையில் இருக்காங்க!"
"அப்படியா? வயசானவங்களா? இந்த பக்கம் திருப்பு!"
"இல்லை. காம்ரேட்!"
"ஓ…! மெதுவா போ!"
நான் யாழினியின் பேச்சில் கவனம் இல்லாமல் மெதுவாக கட்டிடங்களின் விவர குறிப்புகளில் மூழ்கி… "இந்த அபார்ட்மெண்ட்தான்! ஆனா, நிறுத்தாதே, நேரா போ! வண்டியை எங்காவது ஒளிச்சு வைக்க முடியுமான்னு பார்க்கலாம்." என்றேன்.
அந்தத் தெரு முழுதும் தூங்கிக் கொண்டிருக்க, தெருமுனையிலும் கோடியிலும் ஒரு மின்கம்பம் மஞ்சள் வெளிச்சத்தைத் துப்பிக் கொண்டிருக்க, சாதுவான நாய் ஒன்று தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு, படுத்துக் கொள்ள, அந்த பேக்கரி பக்கத்தில் ஒரு சிறிய சந்து வண்டியை நிறுத்த வசதியாக இருந்தது.
"யாழினி, என் கூடவே மெல்லமா வா!" என்று நான் கடைகளின் வீடுகளின் இருள் பாதுகாப்பில் நடக்க, அவளும் என்னுடன் தன் மூச்சுக் காற்று கேட்கும் நெருக்கத்தில் தொடர்ந்தாள்.
அந்த சுஜிதா அபார்ட்மெண்ட்ஸை நடுநாயகமாக படிக்கட்டுகள் பிரித்து, இரண்டு புறமும் இரண்டு மாடிக் கட்டிடமாக மேலெழுந்திருந்தது. படிக்கட்டுகளின் முன்பு இரும்பு க்ரில் கேட் மூடி உள்புறமாக ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
"உள்ள பூட்டு போட்டு பூட்டியிருக்காங்க! என்ன பண்றது?" என்றாள் யாழினி.
"ஜீபூம்பா வேலைதான்!"
"ஜீபூம்பா வேலையா?"
யாழினி கேட்டுக் கொண்டே, பார்த்துக் கொண்டே இருக்கும் போதே நான், என், பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஏற்கனவே தயாராக எடுத்து வந்த சில கம்பிகளை எடுத்து, க்ரில் கம்பிகளின் இரண்டு பக்கமும் இரண்டு கைகளைச் செலுத்தி, சிறிய முயற்சிக்குப் பிறகு, பூட்டின் கற்பைப் பறித்தேன்.
"பிர்லியண்ட்!" என்றாள் யாழினி, கிசுகிசுப்பாக. "இதுக்காகவே ஸ்பெஷல் ட்ரெயினிங் எடுத்தீங்களா, என்ன?"
"ஆமாம். ஒரு வாரம் கோடம்பாக்கம் ஏரியாவுல பூட்டு ரிப்பேர் பண்ற ஆசாமிங்க கூட இருந்தேன். எப்பவாவது உதவும்னு தெரியும்."
நான் மிக மெதுவாக கேட்டை ஓசை எழுப்பாமல் திறந்து, ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்ச வழிகாட்டுதலில் படிக்கட்டுகளில் ஏற, யாழினி பின்னால், "குருவே! நாய் கீய் ஏதாவது இருக்கப் போகுது!?" என்றாள் தேவர் மகனில் ரேவதி, காற்றோடு வார்த்தைகளைக் குழைவது போல.
நான் இன்னொரு பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு, அந்தப் பொட்டலத்தை எடுத்து அவள் மூக்கருகே காட்ட, "என்ன பாஸ் இது? சிக்கன் வாசனை வருது!" என்றாள்.
"தூக்க மாத்திரை கலந்த சிக்கன்!"
"கில்லாடி பாஸ் நீங்க!"
ஆனால், நாய் எதுவும் இல்லை. படிக்கட்டுகளில் ஏறியதும் இரண்டு பக்கமும் ஐந்தடி அகல வராந்தா விரிந்தது. வரிசையாக அறைகள்! அறைகள்! ஒரு மங்கலான ட்யூப் லைட்!
"எந்த ரூம்?"
"பேசாம வா!"
நான் பூனைக்கு பாடம் எடுக்கும் ஆசான் போல நுனி பாகத்தில் நடந்து, அந்தக் குறிப்பிட்ட அறையை நெருங்கி, கீழே அமர்ந்து, கதவில் தொங்கியப் பூட்டின் கற்பைப் பரிசோதித்துப் பார்த்தேன். ஆழமான மூச்சில், 'இந்த நேரத்துக்கு எவனும் எவளும் எழுந்து வெளியே வராமல் இருக்க வேண்டுமே…!' சிறிய முயற்சிக்குப் பிறகு பூட்டு திறந்து கொண்டது. நான் உள்ளே நுழைந்து, யாழினியின் கையைப் பிடித்து இழுத்து, உள் பக்கம் கதவை மூடி விட்டு, மூச்சு விட்டுக் கொண்டேன்.
உள்ளே அடைபட்ட இருளில் லேசான ஏதோ வாசனை. சற்று நேரம் பொறுத்து செல்போனில் டார்ச் அடித்து, சுவரில் ஸ்விட்ச் தேடிப் போட, விளக்கு வெளிச்சத்தில் யாழியினின் பனியன், வியர்வையில் நனைந்து ஒட்டிக் கொண்டு, மூச்சு வாங்கியதில் விம்மித் தணிந்து, அந்த அறை நான்கைந்து நாட்களாகப் பயன்படுத்தாமல் வெறிச்சென்று இருந்தது. வெளிப்புற ஜன்னல் மூடியிருந்தது. ஜன்னல் அருகே டேபிளில் ஒரு லேப்டாப். கம்ப்யூட்டர் பிரிண்டர். நாற்காலியில் லுங்கி அமர்ந்திருக்க, கொடியில் சில உடைகள்; ஒரு பீரோ. ஓரமாய் கட்டில், கண்ணாடி, கீழே தூசு, வெளியே ஏதோ புரிந்து கொள்ள முடியாத சத்தம்!
"என்ன சத்தம்?" என்றாள் யாழினி.
"கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கு இல்லை? லைட்டை ஆஃப் பண்ணு!"
பண்ணினாள். விளக்கு கண்ணை மூடிக் கொள்ள, இருட்டில் எதுவும் புலப்படாமல் நான் நின்றிருக்க, யாழினி என்னை நெருங்கி வருவதை வாசனையுடன் உணர முடிந்தது. "பாஸ்!" என்றாள். என் தோளில் மெத்தென்று இருந்தது.
"ஸ்ஸ்ஸ்! கொஞ்ச நேரம் பேசாம இரு!"
வெளியே ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. ஆனால், என்ன சத்தம் என்று இனம் காணமுடியவில்லை. கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் அமைதியாக இருந்தோம். யாழினி மிக நெருக்கத்தில் என் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். கை, ஜில்லென்று இருந்தது. நடுக்கம் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. என் கையை உறுதியாகப் பற்றியிருந்தாள். நான் அவள் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, உத்தேசமாகக் கதவை நோக்கி மெல்ல கால்களைத் தேய்த்து நடந்து, தடவி, கதவை அடைந்து, வெளியே ஏதாவது அரவம் கேட்கிறதா என்று காதை வைத்துக் கேட்டேன்.
உறுதியான அமைதி!
சிறிது நேரத்திற்குப் பிறகு எதுவும் இல்லை என்று சத்தியமாய் உணர்ந்து, லைட்டை போட்டேன். வெளிச்சம் எங்காவது தப்பித்துச் செல்ல வாய்ப்பிருக்கிறதா என்று ஆராய்ந்தேன். கதவில் ஓட்டை வாய் வழியாக வெளிச்சம் ஒழுகவில்லை என்று உறுதி செய்து கொண்டு, யாழினிக்கு கட்டை விரலை உயர்த்திக் காட்டினேன்.
"ஏதாவது கிடைக்குதா தேடு!" என்று கிசுகிசுத்து விட்டு, டேபிள் மீதிருந்த புத்தகங்களைக் கலைத்து பார்த்தேன். தமிழின் மலிவான வார, மாத இதழ்கள். யாழினி லேப்டாப்பைத் திறந்து பார்த்து, "பாஸ்வேர்டு கேக்குது!" என்றாள். நான் பீரோவைத் திறக்க இன்னொரு களவாணி கம்பியைப் பயன்படுத்த வேண்டியதாயிருந்தது. உள்ளே துணிகள். விக்ரம் படித்த காலேஜ் சர்ட்டிபிகேட். வேலூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறான். சொந்த ஊர் திருப்பத்தூர் பக்கம் ஏதோ ஒரு கிராமம். டைரி கியிரி ஏதேனும் இருக்கிறதா என்று தேடினேன். பீரோவுக்குள் இருந்த ஒரு கையடக்க சூட்கேஸை எடுத்துத் திறக்க, நல்ல வேளை, திறந்து கொண்டது. சூட்கேஸில் ஒரு மினி டிஜிட்டல் வீடியோ கேமிரா இருந்தது.
எடுத்து இயக்கிப் பார்க்க… பார்க்கப் பார்க்க…

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 30
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.