நான் 'ட்ரீம் லேண்ட" ஓட்டலின் ரிசப்ஷனுக்குச் சென்ற போது அலெக்ஸ் எனக்காக் காத்திருந்தான். யூனிபார்மில் இருந்தான். கடப்பாரையை முழுங்கின மாதிரி நெட்டுக் குத்தலாக அமர்ந்திருந்தான். "வாடா!" என்றான்.
ரிசப்ஷன் சற்று ஹாயாக இருந்தது. அதேசமயம் ஹோட்டல் பகுதியில் பேயாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரிஷப்ஷனில் அதே குதிரைவால் கொண்டைக்காரி! என்னைப் பார்த்தாள். உதட்டில் புன்சிரிப்பை மறைப்பது தெரிந்தது. புன்சிரித்துக் கொண்டேன்.
அலெக்ஸ் என்னை மேனேஜர் அறைக்கு அழைத்துச் சென்றான். "இன்னும் உங்க கேஸ்ல தீர்வு கிடைக்கலையா, ஸார்?" என்றான், தொப்பைத் துருத்திய மேனேஜர். அவன் குரலில் சலிப்பு ஒழுகியது.
"ரொம்ப சிக்கலான கேஸ்ங்க இது!" என்றான் அலெக்ஸ்.
அவன் எங்களை கண்ட்ரோல் அறைக்கு அழைத்துச் சென்றான்.
"யார் இப்போ கண்ட்ரோல் ரூம் இன்சாஜ்ல இருக்கிறது?" என்று கேட்டேன்.
"சந்திரன்தான்!"
"அந்த விநாயகம்?"
"அவனுக்கு நைட்டுதான் ட்யூட்டி!"
"சந்திரன் எப்படி?"
"எப்படின்னா?" மேனேஜர் நடந்தபடியே என்னைப் பார்த்துக் கேட்டான்.
"ஆள் எப்படி? அவனுடைய கேரக்டர் எப்படின்னு கேட்டேன்."
"இங்க வேலை செய்யறவரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் பண்ணாம இருந்தா போதும். அவன் பர்சனல் லைஃப்ல நாங்க தலையிடறது இல்லை. இருந்தாலும் நீங்க கேக்கறதுக்காகச் சொல்றேன்; நல்ல ஆள்தான்! அவன் உண்டு; அவன் வேலை உண்டுன்னு இருப்பான். இதுவரைக்கும் அவனால எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை."
கண்ட்ரோல் ரூம் வாசலில் எங்களை எதிர்பார்த்து காத்திருந்தான் சந்திரன்.
"சந்திரன்!"
"ஸார்!"
"இவங்க என்ன சொல்றாங்களோ அதை செய்து கொடு! அந்தப் பொண்ணு கேஸ் இன்னும் முடியலை. கொலைகாரன் யார்ங்கிறதுல இன்னும் சந்தேகம் இருக்குங்கிறாங்க." என்ற மேனேஜர் எங்களைப் பார்த்து, "ஸார், உங்களுக்கு எப்படி அவனை வேலை வாங்கணுமோ அப்படி வாங்கிக்குங்க! தேவைன்னா அந்த சிசிடிவி புட்டேஜ் டிஸ்கை நீங்க எடுத்துட்டு போறதா இருந்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. நீங்க பாருங்க. எனக்கு வேலை இருக்கு." என்று சொல்லி விட்டு, கிளம்பினான்.
சந்திரன் இன்று உற்சாகமாக இருப்பதாகவே தோன்றியது. நாங்கள் வருகிறோம் என்ற தகவல் ஏற்கனவே மேனேஜர் மூலம் அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அவன் முன்னேற்பாடோடு இருந்தான். கொலை நடந்த அன்று, அந்த வீடியோவை பார்ப்பதற்கு வசதியாகத் தயார்படுத்தி வைத்திருந்தான்.
ஏற்கனவே திரும்பத் திரும்பப் பார்த்த காட்சிகள்தான். 412-ம் அறைக்குள் விக்ரம் நுழைவது; நீரஜா செல்வது; அறையை விட்டு மீண்டும் விக்ரம் வெளியேறுவது; நான் படிக்கட்டுகளில் ஓடிப் போய் அறைக்குள் நுழைந்து பார்ப்பது…
"உனக்கு ஏதாவது புரியுதா அலெக்ஸ்?"
"முதல்ல ரெண்டு பேர் மாடி வராந்தாவில் நடந்து போறாங்க இல்லையா?"
"ஆமாம். அவங்க பின்னாடி ஒருத்தன் நடந்து வந்து 412ம் அறைக்குள் போறான். அவன் விக்ரம் சாயல்லதான் இருக்கான்."
"ஆனா, ஒரு விஷயம் கவனிச்சியா அலெக்ஸ்?"
"என்ன? அந்த ரெண்டு பேரு பின்னாடி ஒளிஞ்சிட்டு போறவனோட சட்டையும் விக்ரமுடைய சட்டையும் வேற வேற! வேற வேற கலர்! இதைத்தானே சொல்ல வர்றே?"
"ஆமாம். இப்படிப் பார்த்தால் நீரஜாவை கொலை செய்தது வேற ஆள் மாதிரியும், விக்ரம் பிறகு வந்தது மாதிரியும் இருக்கு. ஆனா, எல்லாரையும் குழப்பறதுக்காக இப்படி ஒரு திட்டம் போட்டு இந்த கொலையை செய்து இருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்."
"எப்படி சொல்ற மாதவன்?"
"நான் விளக்கிச் சொல்றேன், அது பொருந்துதா பாரு, அலெக்ஸ்!" என்று சொல்லி விட்டு சந்திரனிடம் திரும்பி, "சந்திரன்!" என்றேன்.
"ஸார்!"
"மறுபடியும் முதல்ல, விக்ரம் ரிசப்ஷனுக்கு வர்றானே, அந்த வீடியோவை ப்ளே பண்ணுங்க!"
அந்த வீடியோவை ஓட விட்டான், சந்திரன். அதில், ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னேன். விக்ரம் டிவி திரையில் உறைந்து நின்றான்.
"இப்ப பாரு, அலெக்ஸ்! விக்ரம் சட்டை போட்டிருக்கிறது வெள்ளைக் கலர்ல இருக்கு. க்ரே கலர் பேண்ட் போட்டிருக்கான், இல்லையா?"
"ஆமாம்."
"இதே சட்டையை முதல்ல ஒருத்தன் 412-ம் ரூமுக்குள்ள போறானே, அவனும் போட்டிருந்தானே, கவனிச்சீங்களா?"
"நீ என்ன சொல்ற மாதவன்? அவன் எப்படி போட்டிருக்க முடியும்? அவன் போட்டிருந்த ஷர்ட் கலர் வேற! அது ஸ்கை ப்ளூ ஷர்ட்!"
"ஆமாம். வேற கலர் ஷர்டுதான்! அந்த ஷர்டுக்குள்ள இந்த வெள்ளைக் கலர் ஷர்ட் போட்டிருக்கான். மறுபடியும் முதல்ல ஒருத்தன் ரெண்டு பேர் பின்னாடி ஒளிஞ்சுட்டு வர்றானே, அந்த வீடியோவை பார்க்கலாம்."
மீண்டும் அந்த வீடியோவில், இரண்டு பேருக்கு பின்னால் நடந்து வருபவனை ஓரிடத்தில் நிறுத்தச் சொன்னேன்.
இரண்டு பேருக்கு பின்னால் தலையை மறைத்து நின்றவனின் வலது தோள்பட்டையச் சற்று பெரிதாக்கச் சொன்னேன். டிவி திரையில் பின்னால் இருப்பவனின் வலது தோள்பட்டை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கப்பட்டது.
"இப்ப பாரு அலெக்ஸ்! ப்ளூ கலர் ஷர்டுக்குள்ள இன்னொரு வெள்ளை ஷர்ட் தெரியுது. ரொம்ப நுணுக்கமா பார்த்தாதான் கண்டுபிடிக்க முடியும்!"
"ஆமாம்!" என்றான் அலெக்ஸ். "முதல்ல சாதாரணமா பார்க்கும் போது, உள்ளே பனியன் போட்டிருக்கிறது மாதிரி தெரியுது. ஆனா, கிட்ட பார்க்கும் போதுதான் உள்ளே ஒரு வெள்ளை ஷர்ட் போட்டிருக்கிறது தெரியுது. ஆனா, பேண்ட் கலர் வேற! போட்டிருக்கிற ஷூ வேற! இதுக்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும்?" என்றான்.
"எல்லாமே முன்கூட்டியே திட்டம் போட்டு, செய்யப்பட்ட சதி அலெக்ஸ்!" என்றேன்.
"எப்படி?" என்றான் அலெக்ஸ்.
"எல்லாமே மேடை நாடகங்களில் பயன்படுத்துகிற டெக்னிக்தான்! மேடை நாடகங்களில் அடுத்தடுத்த ஸீன்ல நடிக்கும் போது, சட்டைக்கு மேல ஒரு சட்டை, பேண்டுக்கு மேல இன்னொரு பேண்ட், ஷூக்கு மேல இன்னொரு ஷூ… ஒரு ஸீன் முடிஞ்சதுமே மேக்கப் ரூமுக்குப் போய், ஒரு செகண்ட்ல, மேல இருக்கிற சட்டை பேண்டை உதறிட்டு, அடுத்த ஸீனுக்கு வந்து நிப்பாங்க! மேடை நாடகங்கள்ல இது ஒரு டெக்னிக்! அதையேதான் விக்ரமும் பயன்படுத்தி இருக்கான். இப்ப நான் சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு பாருங்க! முதல்ல 412-ம் ரூமுக்குள்ள வர்றவனை உன்னிப்பா பார்த்தீங்கன்னா, அவன் போட்டிருக்கிற பேண்ட் சட்டை, ஷூ எல்லாமே கொஞ்சம் பெரிய சைஸா தெரியும்."
அலெக்ஸ், பார்த்து விட்டு அசந்து போனான்.
"இவ்வளவு பெரிய நுணுக்கமான விஷயத்தை சுதர்சனம் எப்படி தவற விட்டார்னு தெரியலையே?" என்றான்.
"இப்ப மறுபடியும் விக்ரம் ரிசப்ஷனுக்கு வர்ற வீடியோவை பாருங்க! எல்லாமே நார்மலா இருக்கும். இதிலிருந்து என்ன தெரியுது?"
"விக்ரம்தான் கொலைகாரன்னு தெரியுது! முதல்ல வேற கலர் பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு வந்து, நீரஜாவை கொலை செய்துட்டு, வெளியே போய், பேண்ட் ஷர்ட் ஷூ எல்லாத்தையும் கழற்றி போட்டுட்டு, மறுபடியும் ரிசப்ஷனுக்கு வந்து, 412-ம் ரூமுக்கு போய், கொலையைப் பார்த்துட்டு அதிர்ச்சியடைஞ்சு வெளியே போற மாதிரி போய்… இதை எப்படி நிரூபிக்கிறது?"
"இதுக்கு பின்னாடி இருந்து விக்ரமுக்கு யாராவது சப்போர்ட் பண்ணாங்களா என்னன்னு தெரியலை!?"
"வெளியே இருந்து யாராவது சப்போர்ட் பண்ணியிருக்கலாம். இதை எப்படி கண்டுபிடிக்க முடியும் மாதவன்?"
"யோசிக்கலாம் அலெக்ஸ்! இதுல இன்னொரு விஷயம் இருக்கு!"
"என்ன?"
"முதல்ல 412-ம் ரூமுக்குள்ள போறவன் ரிசப்ஷன்ல வந்து சாவி வாங்கிட்டு போயிருக்கணும்; இல்லையா? ஆனா, அப்படி யாரும் சாவி வாங்கிட்டு போனதா தெரியலையே!"
"விக்ரமுக்காக வேற யாராவது கூட ரூம் புக் பண்ண மெசேஜை காட்டிட்டு சாவி வாங்கிட்டு போய் கொடுக்கலாம். விக்ரம் பின்பக்கம் குப்பையை வெளியே கொண்டு போற வழியா உள்ள வந்திருக்கலாம்."
"இப்ப விக்ரம்தான் கொலையாளின்னு முடிவு பண்ணிக்கலாமா, அலெக்ஸ்?"
"அப்படி ஒரு கோணத்துல கேஸை அணுகலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஏன்? எதற்கு? எப்படி? ன்னு மூணு கேள்விக்கு விடை கண்டுபிடிச்சாதான் கேஸ் முடிவுக்கு வரும்! நீரஜாவை காதலிக்கிற விக்ரமே ஏன் பிளாக்மெயில் பண்ணணும்? ஏன் கொலை செய்யணும்? அதுக்கு என்ன காரணம்? இப்போ, உன்னை எதுக்கு ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டு வரணும்? அவன் சுவாமிநாதன் கிட்ட வேலை செய்யற டிரைவரா இருந்து கிட்டே எதுக்கு நீரஜாவுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பணும்? அவன் திருநெல்வேலி பாஷையும் கோயம்புத்தூர் பாஷையும் கலந்து பேசறவனா இருக்கான். சில சமயங்களில் எல்லாரும் பேசற சாதாரண தமிழ்லேயும் பேசறான். இதெல்லாம் ஏன்? எதற்கு? இது மாதிரி எத்தனை கேள்விகள்!"
"அது மட்டும் இல்லை அலெக்ஸ்! அதை விட வேற ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்கேன்!" என்றேன்.
"என்ன முக்கியமான விஷயம்?" என்று என்னை ஆர்வத்துடன் பார்த்தான் அலெக்ஸ்.
"நான் சுவாமிநாதனை சந்திக்க போனப்ப ஒரு க்ளூ கிடைச்சது!"
"சஸ்பென்ஸ் வைக்காம விஷயத்தை சொல்லுடா! அப்பப்போ ஹிட்ச்காக் மாதிரி கொஞ்சம் சொல்லிட்டு கொஞ்சம் சஸ்பென்ஸ்ல விடறே?"
"சுவாமிநாதன் கிட்ட பேசிட்டிருக்கும் போது, அவன் செகரட்டரி தங்கராஜுக்கு போன் வந்தது. சுதர்சனம்தான் பேசினார். அப்போ நான் கூட இருந்தேன்."
"சுதர்சனம் தங்கராஜுக்கு போன் பேசும் போது நான் கூடத்தான் இருந்தேன். நீரஜாவோட கம்மல், செயின், மோதிரம், மெட்டி எல்லாம் இருக்கு. வந்து சரிபார்த்து வாங்கிட்டு போகச் சொன்னார். அதுக்கு என்ன இப்போ?"
"சுதர்சனம் போன் பண்ணி சொன்னது மேட்டர் இல்லை. சுதர்சனம் போன் பண்ணதும் தங்கராஜ் போன் அடிச்சது; அப்போ, அந்த செல்போன்ல தங்கராஜ் வெச்சிருந்த ரிங்டோன்ல ஒரு விஷயம் கண்டுபிடிச்சேன்!"
"என்ன விஷயம், சொல்லித் தொலைடா சீக்கிரம்?"
நான் என் செல்போனை எடுத்து, நீரஜாவும், பிளாக்மெயில் செய்தவனும் பேசிய உரையாடலை அலெக்ஸுக்கு ப்ளே செய்து காட்டினேன்.
முழுவதும் கேட்ட அலெக்ஸ், "இதுல என்ன இருக்கு?" என்றான்.
"நீரஜாவும், பிளாக்மெயில் பண்றவனும் பேசிக்கிட்டு இருக்கும் போது, நடுவுல ஒரு முறை, வேற யாரோ ஒருத்தரோட போனுக்கு அழைப்பு வருது, கவனிச்சியா?"
"இல்லையே!"
"மறுபடியும் நல்லா கேள்!" என்று மீண்டும் ஓடவிட்டு, இடையில் செல்போன் அழைப்பு வரும் போது சுட்டிக்காட்டினேன்.
"ஆமாம். பேசிக்கிட்டு இருக்கும் போது, பக்கத்துல இருக்கிற யாருக்கோ அழைப்பு வருது. ஆனா, ரொம்ப நுணுக்கமா கேட்டாதான் தெரியும். அதுவும் அந்த செல்போன் ரிங்டோனை வெளிப்படுத்திய உடனேயே அது அணைக்கப்படுது!"
"யாருக்கோ இல்லை. தங்கராஜுக்கு! சுவாமிநாதன் கிட்ட நான் பேசிக்கிட்டு இருக்கும் போதும் போன் வந்தது. அந்த ரிங்டோன் விஷயம் முதல்ல என் மூளைக்கு எட்டலை! அப்புறம்தான் சட்டுன்னு தோணிச்சு! இதே மாதிரி ரிங்டோன் எங்கேயோ கேட்டமேன்னு. வீட்டுக்கு வந்து நீரஜாவும் பிளாக்மெயில் பண்ணவனும் பேசியதை மறுபடியும் மறுபடியும் போட்டுக் கேட்டு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்."
"அப்படின்னா… அதுக்கு என்ன அர்த்தம்? சுவாமிநாதன்தான் வேற ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி நீரஜாவை மிரட்டினானா? அப்படி மிரட்டி பேசிக்கிட்டு இருக்கும் போது, தங்கராஜ் செல்போனுக்கு கால் வந்ததும் உடனே அவன் செல்போனை ஆஃப் பண்ணிட்டான்னு சொல்றியா?"
"ஆமாம்."
"என்னடா நீ புதுசா குழப்பறே?"
"இந்தக் கேஸே குழப்பமாத்தான் இருக்கு அலெக்ஸ். எத்தனை குழப்பம் பார்! நீரஜாவுக்கு மிரட்டல் போன் வருது; அந்த மிரட்டல் போன் சுவாமிநாதன் ஏற்பாடு பண்ண யாரோ ஒருத்தன் பண்றான்! அப்புறம், சுவாமிநாதன் கிட்ட வேலை செய்யற ரகுநாதன்கிறவன் நீரஜாவுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியது மட்டும் இல்லாம, யாராவது ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்ட போன்னு சொல்றான்; அப்புறம், நீரஜாவை ஓட்டல் ரூமுக்கு வர வெச்சு கொலை பண்றான். அது யாருன்னு பார்த்தா விக்ரம். விக்ரம் கொலை பண்ணிட்டு, கொலை செய்யாத மாதிரி ஒரு செட்டப்! மூல காரணம் சுவாமிநாதன்! ஆனா, அவனுக்கும் நீரஜா கொலைக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இன்னொரு செட்டப்! இதிலிருந்து என்ன தெரியுது?"
"நீரஜா கொலை செய்யப்படணும்! ஆனா, அந்தக் கொலை சம்பந்தமா யாரும் போலீஸ் கிட்ட மாட்டிக்கக் கூடாது!"
"அதேதான்! இதுல சிசிடிவி கேமரா பத்து நிமிஷம் வேலை செய்யாம போனது ஒரு உறுத்தலா இருந்துச்சு. ஆனா, அது உண்மையில் சந்திரன் சொல்ற மாதிரி ஒயர்ல ஏதோ லூஸ் கனெக்சன் இருந்ததாலதான் வேலை செய்யாம போயிருக்கு."
"சரி, இதெல்லாம் ஏன், எதுக்கு நடக்கணும்? இதை எல்லாம் எப்படி ஒண்ணு சேர்த்து நிரூபிக்கிறது?" அலெக்ஸ் கேட்டான்.
எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை - நான் விக்ரம் வீட்டுக்கு போகிற வரைக்கும்!

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 29
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.