உள்ளே நுழைந்த உடனேயே ஓர் இளம் பெண்ணின் குளியலறை 'ஹம்மிங்' போல மெல்லியக் குளிர்ச்சி உடலைப் போர்த்திக் கொண்டது. இருவரும் ரத்த நிற கார்பெட்டில் நடந்தோம். நேராக என்னைப் பின்புறம் அழைத்துச் சென்றான் தங்கராஜ்.
கடற்கரையைப் பார்த்த மாதிரியான ஒரு பிரமாண்டமான தாழ்வாரம். அங்கே ஒரு பிரம்பு நாற்காலியில் சொகுசாக சாய்ந்து அமர்ந்திருந்தார் சுவாமிநாதன். மிக அருகில் பார்ப்பதற்கு சற்று கூடுதலான ஒல்லியாகத் தெரிந்தான். நீள்வட்ட முகத்தில் கண்கள் கூர்மையாக என்னை ஊடுருவின. என்னை பார்வையாலேயே அளந்தான். நீரஜா இறந்த சோகம் முகத்தில் தெரிந்தது. தாடையில் வளர்ந்தப் புற்களில் ஒன்றிரண்டு வெள்ளை நூல்கள் தெரிந்தன. உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத மேல்தட்டு முகம்.
"உட்கார்!" என்றார். தங்கராஜை பார்த்தார். அவன் புரிந்து கொண்டு விலகினான்.
நான் ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தேன். பார்த்தேன். தூரத்தில் கடல் 'ஹோ'வென்ற இரைச்சலுடன் எவரையும் மதிக்காமல் இறைந்து கொண்டிருந்தது. பெரிய சதுர தாழ்வாரத்தைச் சுற்றிலும் நிறைய பூந்தொட்டிகள். அதில் விதவிதமான மலர்ச் செடிகளும் கொடிகளும் தூய நீலக் கடலலைகளின் குளிர்ந்த உப்புக்காற்றும் அந்த இடத்தைப் பரவசப்படுத்தின.
தங்கராஜ், ஒரு மலர்கள் பதிக்கப்பட்ட அகலமான ட்ரேயில் உயர்தர மதுவும், கூம்பு வடிவில் ஒயிலான கண்ணாடி கோப்பைகளும், பொன்னிறமாக வறுத்து உப்பு மிளகு தூவிய முந்திரி பருப்பும், கிங்ஸ் சிகரெட்டும் எடுத்து வந்து டீபாயின் மீது அழகாக அடுக்கி வைத்து விட்டு நின்றான்.
"நீயும் உட்கார், தங்கராஜ்." என்றான் சுவாமிநாதன்.
தங்கராஜ் ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொள்ள, சுவாமிநாதன் நீளமான கண்ணாடி டம்ளரில் மதுவைச் சரித்து, சோடா கலந்து, இரண்டு ஐஸ் துண்டங்களை அதில் மிதக்க விட்டு, ஒரு முறை சீப்பி விட்டு வைத்தான். என்னைப் பார்த்தான்.
நான், "சார், என்னை எதுக்கு வரச் சொன்னீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்." என்றேன்.
"நீரஜா உன்கிட்ட தான் உதவி கேட்டு வந்திருக்கா. கடைசி வரைக்கும் - அவ கொலையாகிற போதும் நீங்கதான் கூட இருந்திருக்கீங்க. இது, எங்கேயிருந்து, எப்படி ஆரம்பிச்சது? எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க." என்றவன் ரத்தச் சிவப்பான பளிங்கு திரவத்தை ஒருமுறை குடித்துவிட்டு, முந்திரி பருப்பை வாயில் போட்டு, 'கடக்' என்று கடித்தான். எனக்கு பல் கூசியது.
நான், சுவாமிநாதனுக்கு ஆரம்பத்தில் இருந்து கதை சொன்னேன். இடையில் எதுவும் பேசாமல் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டான்.
"அப்போ, போன் நம்பர் கண்டுபிடிக்கிறதுக்காகத்தான் முதன்முதலா நீரஜா உங்ககிட்ட வந்தா?"
"ஆமாம். அதுதான் ஆரம்பம். நீரஜாவுக்கு ரெண்டு விதமான விஷயங்கள் நடந்தது."
"என்ன, ரெண்டு விதமான விஷயங்கள்?"
"ஒண்ணு, ப்ளாக் மெயில்; இன்னொன்று, எச்சரிக்கை!"
"ப்ளாக் மெயில் விக்ரம்தான் பண்ணானா?"
"அவன் போன் நெம்பரை வெச்சு கண்டுபிடிச்சப்ப விக்ரம்தான்னு தெரிஞ்சுது. ஏன்னா, அந்த நெம்பர் விக்ரம் பேர்ல தான் இருந்தது. ஆனா, போலீஸ் ஸ்டேஷன்ல அவன்கிட்ட பேசினப்ப, அந்த நெம்பர் வாங்கி ரெண்டு நாள் கூட ஆகலை; போன் தொலைஞ்சு போச்சுன்னு சொன்னான்."
"அப்படின்னா, தொலைஞ்சு போன போன் நெம்பரை வெச்சு வேற யாரோ ப்ளாக் மெயில் பண்ணி இருக்காங்கன்னு சொல்றானா?"
ஒரு மடக்கு - இன்னொரு மடக்கு உள்ளே தள்ளினான். முந்திரி பருப்பைக் கடித்தான். மனதுக்குள் இருந்த ஏதோ ஒரு வெறுப்பை முந்திரி பருப்பை மெல்வதில் காட்டினான்.
"ஆமாம். விக்ரம் அப்படித்தான் சொல்றான்."
"நடக்கிற எல்லா சம்பவங்களும் எனக்கு அவமானமாவே இருக்கு. கோடிக்கணக்கான சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? மனைவியை சரியா வெச்சுக்கத் தெரியலையேன்னுதானே அர்த்தம்!
யூ ஸீ… மிஸ்டர்.. மிஸ்டர்…?"
"மாதவன்!"
"ம். மாதவன்! நான் நீரஜா மேல உயிரையே வெச்சிருந்தேன். தெரியுமா? ஏதோ.. சமய சந்தர்ப்பத்தால் விக்ரம் கூட பழக்கம் ஏற்பட்டுப் போச்சு! அந்தத் தொடர்பை வெச்சு ஒருத்தன், 'உன் புருஷன் கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டினப்பவே நீரஜா என்கிட்ட விஷயத்தைச் சொல்லி இருந்தா, அவ மேல நான் பெரிசா கோபப்பட்டிருக்க மாட்டேன். ஆனா… இந்த முட்டாள் நீரஜா எவனோ ஒருத்தனோட மிரட்டலுக்குப் பயந்து, நீ ஒரு உதவாதவன் - நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன் - நீ பெரிசா எதையோ சாதிக்கப் போறேன்ற நம்பிக்கையில உன்கிட்ட வந்தா. கடைசியில் எல்லாருமா சேர்ந்து நீரஜாவை சாவடிச்சாச்சு! என்னையும் சேர்த்துதான் நான் சொல்றேன். ஆனா, ஒரு விஷயம்…"
கண்ணாடி டம்ளரில் இருப்பதை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, மீண்டும் கொஞ்சம் ஊற்றி, சோடா கலந்து, ஐஸ் துண்டங்களை, 'கிளங்,கிளங்' என்று போட்டு மிதக்க விட்டு பேச்சைத் தொடர்ந்தான்.
"ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்! ப்ளாக் மெயில் பண்றதைப் பத்தி நீரஜா என்கிட்ட சொல்லி இருந்தாள்னா…" ஒரு மடக்கு குடித்து விட்டு, "என் ஆளுங்களை விட்டு, ப்ளாக் மெயில் பண்ணவனை ஒரே நாள்ல கண்டுபிடிச்சு தூக்கிட்டு வந்திருப்பேன். இப்போ… எல்லாமே போச்சு!"
ஊற்றி வைத்ததை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, திரும்பவும் கண்ணாடி டம்ளரில் நிரப்பினான்.
"சார், போதும் சார்!" என்றான் தங்கராஜ்.
"யோவ்! நீ சும்மா இருய்யா!" என்றான் சுவாமிநாதன். "கடைசியில்.. நீரஜா என்ன சொன்னாள்? உன் ஹஸ்பண்டை… அதாவது என்னை… விவாகரத்து பண்ணிட்டு வந்துடு; நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு விக்ரம் சொன்னதுக்கு நீரஜா முடியாதுன்னுதானே சொல்லிட்டா?" கேட்டுவிட்டு என்னைப் பார்த்தான் சுவாமிநாதன்.
"ஆமா சார்! நீரஜா அதுக்கு ஒத்துக்கலை."
"எதுக்கு ஒத்துக்கலை?"
"உங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு வர்றதுக்கு!"
"அதான், அதுதான்.. விக்ரமுக்கு நீரஜா மேல கோபம்! முதல்ல நைசா அவகிட்ட பேசிப் பார்த்தான். இருக்கிற சொத்து விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டான். நல்லா யோசனை பண்ணி இந்த மாதிரி ஒரு பிளாக் மெயில் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திப் பார்த்தான். என்னை விட்டுட்டு நீரஜா அவன் கூட வந்துடுவான்னு தப்புக் கணக்கு போட்டுட்டான். நீரஜா உறுதியா இருந்ததால, பிளாக் மெயில் பண்ணவன் கூப்பிடற மாதிரியே கூப்பிட்டு கொலை பண்ணிட்டான். இதுல ஒரு விஷயம் என்னன்னா… நீரஜா உன்கிட்ட வந்து செல்போன் நெம்பரை கண்டுபிடிக்க சொன்னதுதான்! அதை விக்ரம் நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டான்! செல்போன் நெம்பரை வெச்சு பிளாக்மெயில் பண்ணவன் விக்ரம்தான்னு நீ கண்டுபிடிச்சது அவனுக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு! அதனால, நீரஜா எங்கே தன்னை காட்டிக் கொடுத்துடுவாளோன்னு பயந்து அவளை, அவன் புக் பண்ண ஓட்டல் ரூமுக்கு வர வெச்சு கொலை பண்ணிட்டான்."
கண்ணாடி டம்ளரில் இருந்ததை கடகடவென குடித்து காலி செய்தான் சுவாமிநாதன்.
"சார், நீங்க அளவுக்கு அதிகமா குடிக்கிறீங்க?" தங்கராஜ் கவலைப்பட்டான்.
"அவ்வளவுதான் தங்கராஜ், இனஃப்! அப்புறம் யூ.. யூ.. மாதவன்! நான் உங்களை கூப்பிட்டதுக்கு முக்கியமான காரணம், நீரஜா உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஃபீஸ் கொடுத்துட்டாளா? உங்க ஃபீஸ் எவ்வளவுன்னு சொல்லுங்க. தங்கராஜ்!"
"சார்!"
"அவருக்கு எவ்வளவு ஃபீஸ்னு கேட்டுக் கொடுத்துடுங்க!"
நான், "ஸார், ஃபீஸ் எல்லாம் வேணாம் ஸார்!" என்றேன்.
"ஏன் வேணாம்ங்கிறீங்க?":
"இல்லை சார்! எனக்கு குற்ற உணர்வு உறுத்துது. கூடவே இருந்து காப்பாத்த முடியலையேங்கிற உறுத்தல் இன்னும் என் மனசுல இருக்கு சார்!"
"இப்படி நடக்கும்னு தெரியுமா உங்களுக்கு?"
"தெரியாது சார்!"
அப்போது, தங்கராஜிடம் இருந்த செல்போன் ஒலித்தது. அதன் ரிங் டோன் என்னைக் கவர்ந்தது.
"யாரு தங்கராஜ்?"
"இன்ஸ்பெக்டர் சுதர்சனம் சார்!"
"என்னவாம்?"
"தெரியலை சார்!"
"சரி, எடுத்துப் பேசு!"
செல்போனை காதில் வைத்து, "ஹாலோ!" என்றான் தங்கராஜ்.
எதிர்முனையில் சொல்வதைக் கேட்டு விட்டு, "சரி, சார்!" என்று சொல்லி விட்டு போனை வைத்தான்.
"என்ன தங்கராஜ்?"
"நீரஜாவோட திங்க்ஸ் எல்லாம் ஸ்டேஷன்ல இருக்காம். வந்து சரி பார்த்து வாங்கிட்டுப் போகச் சொல்றார்!"
"என்னென்ன இருக்காம்?"
"கம்மல், மோதிரம், செயின், தாலி, மெட்டி…"
"புல்ஷிட்! எதுக்கும் அர்த்தமில்லாம போச்சு; தங்கராஜ்!"
"சார்!"
"இந்தாளை கவனிச்சு அனுப்பு!"
அடிப்பட்ட பறவை போல் என் மனம் துடித்தது. என்ன அலட்சியம்! என்ன திமிர்! மனதுக்குள் ஒரு பாம்பு கோபமாகச் சீறியது.
"சரி சார், வாங்க மாதவன்!"
தங்கராஜ் அழைக்க நான் அப்படியே சுவாமிநாதனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். சுவாமிநாதனின் கண்கள் போதையில் சிவந்திருந்தது. முகத்தில் வியர்வை வெள்ளம்! பிரத்யேகமான பூத்துவாலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். புகையை ஆழமாக இழுத்து விட்டபோது உடனடியாக கடல் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டது. என்னைப் பார்த்து, "இன்னும் ஏதாவது இருக்கா?" என்றான்.
நான், "எக்ஸ்கியூஸ்மீ! உங்களை நான் ஒண்ணு கேக்கலாமா?" என்றேன்.
மீண்டும் புகையை இழுத்து விட்டு, "கேள்!" என்றான்.
"நீங்களே ஏன் நீரஜாவை கொன்னிருக்கக் கூடாது?"
சுவாமிநாதனின் கண்களில் ஒரு சில விநாடிகளில் ஏற்பட்ட திடுக்கிடலை நான் பார்த்தேன்.

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 25
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.