"என்னது போன் வந்துச்சா?" என்றேன். விக்ரமை நம்பாமல் பார்த்தேன். "என்ன, இன்னொரு கதை சொல்ல போறீயா?"
அதற்குள் சுதர்சனம் என்னிடம் வந்து விட்டார். "யோவ், ஜேம்ஸ்பாண்டு! என்னய்யா சொல்றான்? தப்பிக்கிறதுக்கு புதுசு புதுசா என்னென்னவோ கதை சொல்றான் பார்!" என்றவர் விக்ரமை பார்த்து, "ஏண்டா, வாயைத் திறந்து ஒழுங்கா உண்மையை பேச மாட்டியா நீ? பெரிய இடத்து பொண்ணு மேல கை வைக்க வேண்டியது; அனுபவிக்க வேண்டியது; கிடைச்ச வரைக்கும் லாபம்னு அனுபவிச்சிட்டு போக வேண்டியதுதானே! அதை விட்டுட்டு அவளுக்கு போன் பண்ணி மிரட்டறது; மிரட்டி மிரட்டி அவளை கொஞ்சம் கொஞ்சமா மனசை மாத்தி அவ புருஷனை விட்டுட்டு வர வைக்கலாம்னு திட்டம் போட்டு இருக்கே! அவளுக்கு நெருக்கடி மேல நெருக்கடி கொடுத்து கணவனை டிவோர்ஸ் பண்ணிட்டு வந்துடுன்னு சொல்லி இருக்கே! நீரஜா அவள் கணவனை விவாகரத்து பண்ணிட்டு வந்துட்டா, நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு கோடிக்கணக்கான சொத்துக்களை அனுபவிக்கலாம்னு திட்டம்! அதுக்கு நீரஜா ஒத்துக்காததால ரொம்ப அற்புதமா திட்டம் போட்டு, நீரஜா பேர்ல ரூம் புக் பண்ணிட்டு, அவளை வர வெச்சு தீர்த்துக்கட்டிட்டே! எல்லாம் பொருந்திப் போவது! நீ பண்ண எல்லாத்துக்கும் சாட்சி இருக்கு! ஒழுங்கா குற்றத்தை ஒத்துகிட்டு ஒரு நல்ல வக்கீலா பார்த்து வாதாடி தண்டனையைக் குறைக்கிற வழியைப் பார்!" என்றார்.
"நீங்க வாங்க, ஜேம்ஸ் பாண்டு! உங்க போனை வாங்கிக்கிட்டீங்க இல்லை?" என்று என்னைக் கேட்டார். 'அவ்வளவுதான் இனி உனக்கு மரியாதை' என்பதுதான் அதன் அர்த்தம். எனக்குப் புரிந்தது.
"போன்தானே? அப்பவே வாங்கிக்கிட்டேன் சார்!"
"உக்காருங்க. ஆரம்பத்தில் இருந்து நீரஜாவை பற்றி நேத்து நீங்க சொன்னதை எல்லாம் ஒரு ஸ்டேட்மெண்ட்டா எழுதிக் கொடுங்க!" என்று விட்டு, "சண்முகம்!" என்றார்.
"சார்!" என்று சண்முகம் என்ற காவலர் வந்து நின்றார்.
"பேப்பர் பேனா கொடுங்க, இவர்கிட்ட!"
நான், "சார், நேத்து நைட்டுதானே எல்லாம் எழுதி கையெழுத்து வாங்கினீங்க?"
"அது, நீரஜா கூட நீ வந்ததற்கான சாட்சி; முதல்ல பாடியைப் பார்த்ததற்கான சாட்சி! இப்போ, நீரஜா உன்கிட்ட வந்து, 'எனக்கு மிரட்டல் போன் வந்ததுன்னு சொன்னா பார்... அந்த ஆரம்பத்தில் இருந்து நேத்து நைட்டு வரைக்கும் என்னென்ன நடந்தது? நீரஜாவுக்காக நீ என்னெல்லாம் கண்டுபிடிச்சே? எப்படி இந்த கேஸுக்குள்ள நீ வந்தே? எல்லா டீடெயில்ஸ்ஸும் சப்ஜாடா எழுதி கையெழுத்து போட்டுக் கொடு!"
சண்முகம் கொடுத்த பேப்பரை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து மேஜை மேல் வைத்து எழுதினேன்.
அன்றைக்கு நீரஜா என் ஆபீசுக்கு வந்தது முதல், நேற்று அவளை ஸ்ட்ரெக்ச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போனது வரை எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தேன்.
அதை வாங்கிப் படித்துப் பார்த்த சுதர்சனம், "பர்பெக்ட்! இதையெல்லாம் கோர்ட்ல வந்து சொல்ல வேண்டி வரும்!" என்றார். அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிளை பார்த்து கண்ணைக் காட்டினார். அந்த கான்ஸ்டபிள் தன் செல்போனில் இதுவரை நாங்கள் பேசியதைப் பதிவு செய்துக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டார். எழுத்து மூலமாக மட்டும் அல்லாமல் நேரிடையான வாக்குமூலமாகவும் பதிவு செய்து கொள்ளும் அவருடைய யுக்தி என்னை கவர்ந்தது.
"வந்து சொல்றேன் சார்!"
சுதர்சனம் தன் கன்னத்தை தடவிக் கொண்டார். திரும்பி பெஞ்சில் அமர்ந்திருக்கும் விக்ரமை பார்த்து விட்டு, "எத்தனை கச்சிதமா திட்டம் போட்டிருக்கான் பார்த்தீர்களா ஜேம்ஸ்பாண்டு!" என்றார் என்னிடம்.
நான், "சார்!" என்றேன்.
"கோடிக்கணக்கில் சொத்து இருக்கிற பொண்ணை வளைச்சு போட்ட உடனே அவ சொத்துக்கும் குறி வெச்சிருக்கான். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு புது சிம் கார்டு வாங்கி மூணு மாசம் கழிச்சு, அந்த நம்பர்ல இருந்து உனக்கும் விக்ரமுக்கும் இருக்கிற கள்ளக்காதல் எனக்குத் தெரியும்; அதை உன் கணவர் கிட்ட சொல்ல போறேன்னு மிரட்டி இருக்கான். தன் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு அதே மாதிரி மிரட்டல் போன் எனக்கும் வந்ததுன்னு சொல்லி நம்ப வெச்சிருக்கான்."
நான் அவர் பேச்சை இடைமறித்து, "விக்ரம் போனை செக் பண்ணீங்களா சார்?" என்றேன்.
"செக் பண்ணிட்டோம். வேற யாரையோ விட்டு அவன் போனுக்கு பேச வச்சிருக்கான். அதேபோல நீரஜாவோட ஹஸ்பண்ட் சுவாமிநாதனுக்கும் 'விக்ரமா?'ன்னு கேட்டு போன் பண்ணியிருக்கான். 'விக்ரமா? இல்லை; ராங் நம்பர்!' ன்னு நீரஜா எதிரில் சொல்ற அளவுக்கு கச்சிதமா ஒரு டிராமா போட்டிருக்கான். சுவாமிநாதனும் அப்படி ஒரு போன் வந்ததை ஒத்துக் கொண்டார். 'ஆமாம். விக்ரமான்னு போன் வந்தது; நான் ராங் நம்பர்னு வெச்சுட்டேன்! அப்போ பக்கத்துல நீரஜா இருந்தான்னு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இப்படியே மிரட்டி மிரட்டி நீரஜாவுக்கு நெருக்கடி கொடுத்து அவ புருஷன் கிட்ட இருந்து விலகி வந்து, டிவோர்ஸ் வாங்கிட்டு இவனை கல்யாணம் பண்ணிக்கிறதுதான் இவன் திட்டம்!" என்று சொல்லி விட்டு மீண்டும் ஒரு முறை விக்ரமை கடுமையாகப் பார்த்தார் சுதர்சனம்.
விக்ரம் நாங்கள் என்ன பேசிக் கொள்கிறோம் என்று தெரியாமல் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சுதர்சனம் தொடர்ந்து, "நீரஜா உங்ககிட்ட பேசும்போது இதை சொல்லிருக்காங்க இல்லையா?" என்றார்.
"எது சார்?" என்றேன். சற்றே புரியாமல்.
"நீ ஏன் பிளாக்மெயில் பண்றவனுக்கு பயப்படறே? நீ உன் புருஷனை டைவர்ஸ் பண்ணிட்டு என் கூட வந்து விடு! அப்போ பிளாக் மெயில் பண்ணவனால் என்ன செய்ய முடியும்னு நீரஜாக்கிட்ட விக்ரம் சொன்னது உண்மைதானே? நீரஜா இதை உன் கிட்ட சொன்னாங்க இல்லையா?"
"ஆமா சார்! விக்ரம் அப்படி சொன்னதாகத்தான் நீரஜா என்கிட்ட சொன்னாங்க."
"இந்த கொலைக்கு அடிப்படையான காரணமே இந்த விஷயம்தான்! இந்த கோணத்தில்தான் இந்த வழக்கு தொடரப்படுது. கோர்ட்ல ஹியரிங் வர்றப்ப நீரஜா சொன்ன இந்த விஷயத்தை தெளிவா சொல்லணும்; புரிஞ்சுதா?"
நான், "சரி சார், சொல்றேன்!" என்றேன்.
பிறகு சில வினாடிகள் கழித்து, "சார்!" என்றேன்.
சுதர்சனம் என்னை இரு என்பதுபோல் கை அமத்திவிட்டு கான்ஸ்டபிளை பார்க்க அவர் செல்போனை அணைத்தார்.
சுதர்சனம் என்னை பார்த்து, "அவ்வளவுதான் ஜேம்ஸ்பாண்டு! இதை மட்டும் நீ கோர்ட்ல சொன்னா போதும்!" என்றார்.
நான் மீண்டும், "சார்!" என்றேன். அவர் கேள்விக்குறியாய் ஏறிட்டார்.
"எனக்கு ஒரு டவுட் சார்!"
"சொல்லு, என்ன சந்தேகம்?"
"நீரஜாவுக்கு மிரட்டல் ஒரு பக்கம் வந்துட்டு இருந்தது; அதேசமயம் நீரஜாவை எச்சரிக்கை செய்து வேற ஒரு போன்ல இருந்து மெசேஜ் வந்தது…"
"அது கூட இவனோட ஏற்பாடாதான் இருக்கும் ஜேம்ஸ்பாண்டு! அதைக் கொண்டு வந்து இதுல சேர்க்காதே! இப்ப கேஸ் கிளியரா இருக்கு! கொலைக்கான மோடிவ்வும் கரெக்டா இருக்கு! இப்ப புதுசா ஒரு குழப்பம் வேணாம்!"
"இல்ல சார்! நான் என்ன சொல்ல வர்றேன்னா…"
"நீ எதுவும் சொல்ல வேணாம். செத்துப் போன எத்திராஜ் போன்ல இருந்து வந்த மெசேஜ்தானே சொல்ல வர்றே?"
"ஆமா சார்! செத்துப் போன ஒருத்தன் போன்ல இருந்து எதுக்கு வேற ஒருத்தன் மெசேஜ் பண்ணி எச்சரிகை செய்யணும்?"
"நான்தான் சொல்றேனே.. அதுவும் இவனோட ஏற்பாடாதான் இருக்கும்னு. தன் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு இவனே ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி பேச வச்சிருக்கான்!"
"எனக்கு இதுதான் குழப்பமா இருக்கு சார்! அந்த நம்பருக்கு போன் பண்ணி நீரஜா அதுக்கப்புறமா பேசி இருக்கா! போன் நம்பரை வெச்சு கண்டுபிடிக்க முடியும்னா கண்டு பிடிச்சுக்கோன்னு சொல்லியிருக்கான்! அதுக்கு நீரஜா ட்ரூ காலர்ல உண்மையான பெயர் மட்டும்தானே வரும்னு கேட்டிருக்கா; அதுக்கு அவன், 'யாராவது ஒரு பிரைவேட் டிடெக்டிவ் கிட்ட போன்னு சொல்லியிருக்கான். அவனே நீரஜாவுக்கு ஐடியா கொடுப்பானேன்?"
"ஒரு சீன் கிரியேட் பண்ணா பர்பெக்ட்டா பண்ணனும். எந்த பக்கமும் எந்த விதத்திலும் சந்தேகம் வரக்கூடாது. பிரைவேட் டிடெக்டிவ்வை போய் பார்னு சொன்னது ஒரு பேருக்கு... ஒரு ஒப்புக்கு சொன்னது! அப்படி சொன்னா அவ போக மாட்டான்ற நம்பிக்கையில் சொல்லி இருக்கணும். ஆனா, உண்மையிலேயே நீரஜா உன்னை வந்து பார்ப்பான்னோ, போன் நம்பரை வைத்து நீ கண்டுபிடிப்பேன்னோ, கண்டுபிடித்து விக்ரம்தான் வேற ஒரு நம்பரில் இருந்து பேசுறான்னோ, அதை நீ நீரஜா கிட்ட சொல்லுவேன்னோ அவனுக்கு தெரியலை. ஆனா, ஒரு நாளைக்கு நான் என்னை கொடுக்க தயார்னு நீரஜா சொன்னதும்தான் அவனோட திட்டம் விரிசல் விட ஆரம்பிச்சது. அதையும் விக்ரம் எதிர்பார்க்கலை. இதுக்கு நீரஜா சம்மதிக்க மாட்டான்னு விக்ரம் நினைச்சிருக்கணும். அதனால திட்டம் நிறைவேறாமல் போய் விட்டாலோ, விக்ரமோட திட்டம் நீரஜாவுக்கு தெரிந்து விட்டாலோ தனக்கு ஆபத்துன்னு நினைச்சிருக்கணும். அதனாலதான் நீரஜாவை அவ போக்கிலேயே ரூம் புக் பண்ண சொல்லிட்டு, அவள் ஹோட்டல் ரூமுக்கு வந்ததும், 'நான் உன் ரூமுக்கு வரலை; நானும் அதே ஓட்டலில் முதல் மாடியில் ரூம் போட்டு இருக்கேன்; அங்கே வா'ன்னு சொல்லி, அவளை வர வெச்சு கொலை பண்ணியிருக்கணும்!"

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 23
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.