"விநாயகத்துக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ, என்னவோ? அதான் லீவ் போட்டு, உங்களை பார்த்துக்கச் சொல்லிட்டு போயிட்டார்." என்றேன்.
"அப்படி இருந்தாலும் சொல்லியிருப்பான் சார்! ஏதோ அவசரம் போல! சரி சார், நான் போய் படுக்கிறேன். டைம் கிடைக்கும் போது தூங்கிடணும். இல்லைன்னா கஷ்டப்பட வேண்டியிருக்கும்."
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"ஓட்டல், லாட்ஜ் எல்லாத்துக்கும் எலக்ட்ரீஷியன்னு இருக்கிறது நானும் விநாயகமும்தான்! திடீர் திடீர்னு ஃபேன் ஓடலை, ஏசி சரியா வேலை செய்யலை, பல்ப் பியூஸ் போயிடுச்சுன்னு ஏதாவது ஒரு கம்ப்ளைண்ட் வந்துட்டே இருக்கும். கண்ட நேரத்துக்கு எழுப்புவாங்க. நான் வர்றேன் சார்! பேசிட்டே இருந்தா டைம் போயிட்டே இருக்கும்."
சந்திரன் கிளம்பிச் செல்ல, நான் சாப்பிட்டு முடித்து ஓட்டல் அறைக்குத் திரும்பினேன். கட்டிலில் படுத்து சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி யோசித்தேன்.
கடந்த நான்கு மணி நேரத்தில் நடந்ததை எல்லாம் நினைத்தால் என்னால் நம்பவே முடியவில்லை. இன்னும் கூட நிஜமா, பொய்யா, பிரமையா என்று தோன்றியது.
நான்கு மணி நேரத்திற்கு முன்பு நீரஜா உயிரோடு இருந்தாள். இப்போது இல்லை. இந்நேரம் மார்ச்சுவரியில் குளிர் நிறைந்த அறைக்கு எடுத்து சென்று கிடத்தி இருப்பார்கள். தொண்டையில் அந்த ஆழமான வெட்டு! சிந்திய ரத்தம்! சிவந்த கணுக்கால் அளவு உயர்ந்த புடவை! கடைசியாய் என்னை வெறித்த அவள் கண்களின் பார்வை! அதில் தெரிந்த வலி! அந்தப் பார்வை என்னை இம்சித்தது. ஏன் என்னை கைவிட்டீர் என்ற பரிதாபமும் கெஞ்சலும் நம்பிக்கை பொய்த்துப் போன ஏமாற்றமும் தெரிந்த பார்வை!
சுவாமிநாதனுக்கு தகவல் சொல்லிவிட்டு இருப்பார்கள். இந்நேரம் மும்பையில் இருந்து அவசர அவசரமாக அடுத்த ஏர் பஸ் பிடித்து வந்து சேர்ந்து விடுவார். ஒருவிதத்தில் நீரஜாவின் மரணத்திற்கு சுவாமிநாதன் தான் காரணம் என்று தோன்றியது. அவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னட்! வியாபார காந்தம்! நூற்றுக்கணக்கான பேருக்கு சம்பளம் கொடுக்கிறவர்; அதன்மூலம் அத்தனை குடும்பங்களிலும் மனநிறைவை ஏற்படுத்துபவர்; நீரஜா ஓட்டும் கார் நாற்பது லட்சங்கள்! என்ன பிரயோஜனம்? கார் ஓட்டினால் மட்டும் நீரஜாவுக்கு மனநிறைவு ஏற்படுமா?
என் செல்போன் சுதர்சனிடம் இருக்கிறது. நாளைக்கு போய் வாங்கிக் கொள்ள வேண்டும். என் செல்போனில் இருக்கும் எல்லா தகவல்களையும் சைபர் கிரைம் ஆசாமிகள் அலசி ஆராய்ந்து விடுவார்கள். அதேபோல் நீரஜாவின் செல்போனையும் ஆராய்ந்து அவளுக்கு வந்த மிரட்டல்களையும், எச்சரிக்கை செய்து வந்த மெசேஜையும், எச்சரிக்கை செய்த ஆசாமியுடன் நீரஜா பேசிய உரையாடல்களையும் தோண்டி எடுப்பார்கள். நான் கண்டுபிடித்து சொன்ன எல்லா தகவல்களும் உண்மைதானா என்று விசாரித்து தெரிந்து கொள்வார்கள். காவல்துறை என்பது ஆயிரமாயிரம் வசதிகளும், வாகனங்களும், ஆட்களும் அவர்களின் மூளைகளும் நிரம்பிய ஆக்டோபஸ் மாதிரி! குறிவைத்து விட்டால் தன் சகல கைகளாலும் இலக்கை சூழ்ந்து கொள்ளும்.
எதை எதையோ நினைத்துக்கொண்டு எப்போது தூங்கினேன் என்று தெரியாது.
காலையில் ஹோட்டல் அறையிலேயே குளித்து விட்டு, அறையை காலி செய்து விட்டு, பைக்கை எடுக்கும் போது நீரஜாவின் கார், பார்க்கிங் பகுதியில் ஓர் ஓரத்தில் இருந்தது. நான் என் பைக்கை எடுத்துக்கொண்டு நேராக ராயப்பேட்டை ஜி எச் சுக்கு போனேன். சுதர்சனம் இருந்தார். என்னை பார்த்ததும், "வாய்யா ஜேம்ஸ்பாண்டு!" என்று சிரித்தார். அவருடன் உதவிக்கு ஒரு போலீஸ்காரர் இருந்தார். சுதர்சனம் ராத்திரி அலுப்பு எதுவும் இல்லாமல் குளித்து முடித்து புதிதாக இருந்தார். நெற்றியில் மெல்லிய கோடு போல சந்தன தீற்றல். முகத்தில் மலர்ச்சி. உதட்டில் புன்னகை.
நான் பைக்கை நிறுத்தி விட்டு, "வணக்கம் சார்!" என்றேன். அவரருகே சென்றதும் தோளில் கை போட்டுக் கொண்டே, காலை ஒன்பது மணிக்கு உக்கிரமாய்ப் பொழிந்த சூரிய கதிருக்கு பாதுகாப்பாக ஒரு கட்டிடத்தின் முன் இருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்து, என்னையும் அமர வைத்தார்.
"சார் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிடுச்சா?"
"இன்னும் இல்லையா. டூட்டி டாக்டர் இன்னும் வரலை!"
"சார் நீரஜாவோட கார் ஓட்டல்லேயே நிக்குது."
"அது கிடக்கட்டும்ய்யா. அவ வீட்டுக்காரர் வந்தா சொல்லிடலாம். யாரையாவது விட்டு காரை எடுத்துக்குவாங்க."
"அவங்க ஹஸ்பண்ட் வந்துட்டாரா?"
"போன் பண்ணி சொல்லியாச்சு! நைட்டே வந்திருக்கணும். இல்லன்னா காலையில் வந்துடுவார். போஸ்ட்மார்ட்டம் பண்ணி பாடியை அவர்கிட்ட ஒப்படைச்சுட்டு, பார்மலிடீஸ் எல்லாம் முடிச்சுட்டு, அவர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டா சரி!"
"சார்! என் செல்போன்?" என்றேன்.
"ஓ.. மறந்தே போயிட்டேன்யா, ஜேம்ஸ் பாண்ட்! ஸ்டேஷனிலேயே இருக்கு. அவசரம்னா போய் வாங்கிக்க. நான் சொன்னேன்னு சொல்லு."
"சரி சார்!" என்று நான் எழுந்த போது வேகமாக ஒரு கார் வந்து நின்றது.
காரில் இருந்து அவசரமாக இறங்கினான் சுவாமிநாதன். சுவாமிநாதனை நான் அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். சற்று ஒல்லியாகத்தான் இருந்தான். அவனை தொடர்ந்து கார் டிரைவர் இறங்கினான். சுவாமிநாதன் கார் டிரைவரிடம் என்னமோ பேசியதும் கார் டிரைவர் தலையாட்டி விட்டு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, எங்களை நோக்கி நடந்து வந்தான்.
"சார், நீங்கதான் நீரஜா கேசை விசாரிக்கிற சுதர்சனமா?" என்றான். கார் டிரைவருக்கும் சுவாமிநாதனுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான் இருக்கும் என்று தோன்றியது. ஆனால், சுவாமிநாதன் ஒல்லியாய் இருந்தான்; டிரைவர் நல்ல திடகாத்திரமாக இருந்தான்.
"ஆமாம். இன்னும் டாக்டர் வரலை. அவர்தான் நீரஜாவோட ஹஸ்பண்ட் சுவாமிநாதனா?" என்று கேட்டுக் கொண்டே சுபாவமாக என்னைப் புறக்கணித்து விட்டு எழுந்து சென்றார் சுதர்சனம்.
நான் இதற்கு மேலும் இங்கிருப்பது வீணானது என்று நினைத்தேன். டாக்டர் வந்து, போஸ்ட்மார்டம் செய்து, ரிப்போர்ட் கொடுப்பதற்கு எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும். இங்கேயே காத்திருந்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கொலை செய்யப்பட்ட விதம்; மரணம் எப்படி நிகழ்ந்தது போன்ற விவரங்கள் டெக்னிக்கலான மருத்துவ வார்த்தைகளில் எழுதப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், முழு சம்பவம் நிகழும் போது நான் கூடவே இருந்ததால் கொலை செய்யப்பட்ட விவரங்களை மீண்டும் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.
நான் பைக்கை எடுத்துக்கொண்டு எஃப் ஸிக்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன். காவல் நிலையம் பரபரப்பாக இருந்தது. எனக்கு தெரிந்த போலீஸ்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் இல்லை. நேராக டேபிள் போட்டு அமர்ந்திருந்த ரைட்டரிடம் சென்று விபரம் கூறினேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, "நீதான் அந்த ஜேம்ஸ் பாண்டா?" என்றார்.
"சார்!" என்று அவரை புரியாமல் பார்த்தேன்.
"உன்னை பற்றிதான் இன்ஸ்பெக்டர் சொல்லி இருந்தார். பலே மூக்கைய்யா உனக்கு! நல்லா மோப்பம் பிடிச்சிருக்கே!" என்று என் செல்போனை மேஜை இழுபறையில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
அப்போதுதான் நீளமான மர பெஞ்சின் ஓரத்தில் கலைந்த தலையுடன் முகத்தில் சில கன்றிப் போன காயங்களுடன் இருந்தவனைப் பார்த்தேன். முதல் பார்வையில் அடையாளம் தெரியவில்லை. சிறிது உற்று பார்த்த போதுதான் தெரிந்தது; அவன் விக்ரம் குமார்!
விக்ரம் என்னை கவனிக்கவில்லை. என்னை யார் என்று அவனுக்குத் தெரியாது. இவனை எப்போது பிடித்தார்கள் என்று தெரியவில்லை. தலையும் உடையும் கலைந்து கிடப்பதை பார்த்தால் ராத்திரியே பிடித்திருக்க வேண்டும். வந்தவுடன் அடி வெளுத்து வாங்கி விட்டார்கள் போலிருக்கிறது! அவன் உதடுகள் வீங்கியிருந்தன. கன்னத்தில் வலிமையான ஒரு போலீஸ்காரரின் கைவண்ணம் சுவடு பதித்திருந்தது. அவன் கண்கள் சோர்ந்து, கலங்கி, சிவந்திருந்தன.
"சார், அவனை எப்போ சார் பிடிச்சீங்க?" என்றேன்.
"யாரை?"
"அதோ, அங்க உட்கார்ந்திருக்கானே, அவனை!"
"அவனை உனக்குத் தெரியுமா? ஓ.. நீதான் ஜேம்ஸ் பாண்ட் ஆச்சே!"
"அவனைத் தெரியும் சார்! ஆனா, நேர்ல பார்த்ததில்லை. இப்பதான் பார்க்கிறேன்."
"அப்படியா? பெரிய இடத்துல எல்லாம் கை வெச்சா இப்படித்தான்!"
"எப்ப சார் பிடிச்சீங்க?"
"விடிகாலைல! கொலையைப் பண்ணிட்டு, பார்ல போய் ஹாயா தண்ணி அடிச்சுட்டு, வீட்ல போய்த் தூங்கிட்டிருந்தான். அவ்வளவு தெனாவெட்டு! கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டு வந்துட்டோம்!"
மிகவும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் அந்த போலீஸ்காரர். இதெல்லாம் எனக்கு முரண்பாடாக தோன்றியது. யாராவது ஒருவன் இப்படி கொலை செய்துவிட்டு பாரில் சென்று சரக்கடித்துக் கொண்டு இருப்பானா? வீட்டிற்குச் சென்று, 'இதோ, வந்து என்னை பிடித்துக் கொள்ளுங்கள்!' என்று படுத்து தூங்கிக் கொண்டு இருப்பானா?
அபத்தமாகத் தோன்றியது எனக்கு. இதில் ஏதோ ஒர் இடத்தில் தப்பு இருக்கிறது என்று நினைத்தேன். தலைக்குள் விரலை செலுத்தி மூளையைத் தடவிக்கொடுத்து யோசித்தேன்.
"சார், ஒரு அஞ்சு நிமிஷம் நான் அவன்கிட்ட பேசலாமா?"
ரைட்டர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.
"அவன்கிட்ட என்ன பேசப் போற? எவ்வளவு அடிச்சாலும் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக்கிட்டு இருக்கான்!"
"என்ன சொல்றான்?"
"நான் கொலை செய்யலை! நான் கொலை செய்யலை! எந்த கொலைகாரன் உண்மையை ஒத்துக்கிட்டு இருக்கான்; இவன் ஒத்துக்கறதுக்கு?"
நான் விக்ரமை பார்த்தேன். அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். இவன் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்தது?

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 21
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.