"ஏன் சார், அவர் - சுவாமிநாதன் - மேல் உங்களுக்கு சந்தேகம் இருக்கா?" என்று கேட்டதும் அதீதமான எரிச்சலோடு என்னைப் பார்த்தார். அவர் யூகிப்பதை முன்கூட்டியே நான் யூகித்ததை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று நினைத்து கொண்டு நான் என் பார்வையைத் தழைத்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடந்து கொண்டேன்.
"விக்டர்!" என்றார் சுதர்சனம் - என்னை வலுக்கட்டாயமாக தவிர்த்து.
விக்டர் என்ற போலீஸ் அதிகாரி, "சார்!" என்று கேள்விக்குறியோடு வந்து நின்றார்.
"நீரஜாவோட செல்போன்ல அவங்க ஹஸ்பண்ட் நெம்பர் இருக்கும்; அதை எடுத்து அவருக்கு கால் பண்ணி தகவல் சொல்லிடுங்க." என்று நீரஜாவின் செல்போனை அவரிடம் கொடுத்துவிட்டு, "இவனுங்க இப்படி பணத்தைத் துரத்திட்டு மும்பை, டெல்லின்னு போயிட்டாங்க; வீட்ல பொண்டாட்டி, புள்ளைங்க என்ன பண்றாங்கன்னு தெரியாம போயிடுது; ஏம்பா மேனேஜர்!"
"சார்!" என்றார் மேனேஜர்.
"எல்லா சிசிடிவி கேமராவும் சரியா வேலை செய்யுதா?"
மேனேஜர் தயங்கி, "ஒர்க் ஆவுது சார்!" என்றார்.
"நீ தயங்கிறதை பார்த்தா எங்களுக்கு நிறைய வேலை வெப்ப போலிருக்கே!"
"இல்ல சார், எல்லாம் வேலை செய்யுது."
"சரி, அதை ஒரு முறை பார்த்துடலாம்." என்றவர் ரைட்டரை அழைத்து, "எல்லாம் முடிஞ்சுதா?" என்றார்.
முடிஞ்சுது சார்!"
"ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரச் சொல்லி ஜி.எச் சுக்கு கொண்டு போங்க. நான் சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணிட்டு வர்றேன். வாய்யா ஜேம்ஸ்பாண்டு!" என்று அழைத்து என் தோளில் கை போட்டு நடத்தி சென்றார். அவர் என்னைக் கிண்டல் செய்கிறார் என்று தெரிந்தது.
அந்த அறை கச்சிதமாக இருந்தது. பெரிய மெகா சைஸ் டிவியில் பதினாறு கேமிராக்களின் பதிவுகள் கட்டம் கட்டமாக, லைவ்வாக ஓடிக்கொண்டிருந்தது.
அதையெல்லாம் அவ்வப்போது பார்த்து கொள்ளும் கொஞ்சம் கம்ப்யூட்டரில் பழக்கம் இருக்கும் ஒருவனை அழைத்து வந்திருந்தார் மேனேஜர்.
"உன் பேர் என்னப்பா? நீதான் இந்த கம்ப்யூட்டரை எல்லாம் பார்த்துக்கறியா?"
"சந்திரன் சார்! நான்தான் பாத்துக்கறேன் சார்!"
"முதல்ல 412-ம் ரூமுக்கு போற ஹால்ல இருக்கிற காமிரா பதிவை பார்க்கலாம்."
சந்திரன் நடுத்தர வயதில் இருந்தான். ஒல்லியாக இருந்தான். கண்கள் ஒட்டி உள்ளடங்கி இருந்தன. அவன் அந்த கம்ப்யூட்டரில் மூழ்கி ஒரு காமிரா பதிவை மட்டும் பிரதானமாக பெரிதுபடுத்திக் காட்டினான்.
அதில் -
விக்ரம் குமார் படிக்கட்டுகளில் ஏறி 412-ம் எண் அறையைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
நான் திடுக்கிட்டு டிவி திரையைப் பார்த்தேன். முன்பு நீரஜாவிடம் பேசும் போது விக்ரமின் போட்டோவை செல்போனில் இருந்து என்னிடம் காட்டியிருக்கிறாள். அவனேதான்!
"அவனை 'ஃபிரீஸ்' பண்ணி காட்டுய்யா!" என்றார் சுதர்சனம்.
விக்ரமை உறைய வைத்தான் சந்திரன்.
"இவன் யாருன்னு தெரியுமா ஜேம்ஸ் பாண்ட்?"
நான் சுதர்சனம் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு, "இவன் விக்ரம் குமார் சார்!" என்றேன்.
"யார் இவன்?"
"நான்தான் சொன்னேனே சார், நீரஜாவை காதலிக்கிறவன்! நீரஜாவுக்கு மிரட்டல் போன் வந்ததும், அந்த நெம்பரை கண்டுபிடிச்சப்ப, இவன் பேர்ல தான் அந்த நெம்பர் இருந்தது."
"ஓ…!" என்றவர் சட்டென்று திரும்பி, "நெம்பரை வெச்சு ஆளையும் அட்ரஸையும் எப்படி கண்டுபிடிச்சே?" என்றார்.
நான் தயங்கி, "சார்.. அது..வந்து.. எனக்கு டெலிபோன் டிபார்ட்மெண்டில் சில ஆளுங்க பழக்கம் சார், அவங்க மூலமா கண்டுபிடிச்சேன்!"
அவர் என்னை ஏறிட்டார்.
சந்திரன் காமிரா பதிவை ஓடிவிட்டான்.
412-ம் அறைக்குள் சென்ற விக்ரம், சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வருவது தெரிந்தது. அதே வராண்டாவில் இன்னொரு கோடியை நோக்கி அவசரமாக நடப்பதும், அதேசமயம் புயல் வேகத்தில் நான் ஓடி வருவதும், விக்ரம் வராண்டாவின் திருப்பத்தில் திரும்பி மறைவதும், நான் சறுக்கிக் கொண்டு நிலை தடுமாறி 412-ம் அறை வாசலின் விளிம்பைப் பிடித்து நிற்பதும், பதட்டத்துடன் கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் செல்வதும் அப்பட்டமாய்ப் பதிவாகியிருந்தது.
அதன் பிறகு நான் வெளியே வருகிறேன். முக்கால் பேண்ட் ஆசாமி என்னை விசாரிக்கிறான்.
மீதி எல்லாம் பதிவில் திரும்பவும் மௌனமாக ஓடியது.
"இந்த ரூமுக்குள்ள முதல்ல விக்ரம் வர்றப்ப ரெக்கார்ட் ஆகியிருக்குமே, அதை போடுய்யா! எத்தனை மணிக்கு விக்ரமுக்கு ரூம் புக் பண்ணினீங்க? இவன் எத்தனை மணிக்கு ரூமுக்குள்ள போறான்?"
"ஆறு மணியிலிருந்து விக்ரமுக்கு ரூம் புக் பண்ணியிருக்கு சார்!"
"அப்போ, ஆறு மணியிலிருந்து வீடியோவை ஓட விடு!"
காமிரா பதிவு ஓடியது. ஆறு மணிக்கு மேல் விளக்குகள் எரிந்தன. அறை எண் 410-ல் இருந்து ஒரு கணவன் மனைவி தன் குழந்தைகளுடன் லக்கேஜுகளுடன் அறையை காலி செய்து விட்டு கிளம்பினார்கள். ஒரு பணியாள் அவர்களின் லக்கேஜுகளை எடுத்துக் கொண்டு சென்று அவர்களுக்கு உதவினான்.
அதன் பிறகு... சிறிது நேரம் அமைதியாக வீடியோ ஓடியது.
அப்புறம்…
இரண்டு பேர் உயரமாக ஏதோ பேசிக் கொண்டே வர, அவர்கள் பின்னால் ஒருவன் வருகிறான். அவன் உருவம் முழுவதும் தெரியவில்லை. முன்னால் நடந்து வந்த இரண்டு பேர் பின்னால் வந்தவனை மறைத்துக் கொண்டிருந்தனர். அந்த இரண்டு பேரும் 412-ம் அறையைக் கடந்து செல்லும் போது பின்னால் வந்தவன் சட்டென்று 412-ம் அறைக்குள் நுழைகிறான்.
"யாருய்யா அவன்?" சுதர்சனம் அவசரமாக கேட்டார்.
"தெரியலை சார்! விக்ரமாதான் இருக்கும்! அவன் சாயல்தான் தெரியுது.
அதன் பிறகு, நீரஜா அறைக்குள் நுழைகிறாள்! அதன் பிறகு…? திரை முழுக்க இருட்டு!
"என்னய்யா, எல்லாம் ப்ளாக் ஆயிடுச்சு?" சுதர்சனம் பதட்டமுடன் கேட்டார்.
"தெரியலை சார்! கேமிரா ஒர்க் ஆகலை!"
"என்னய்யா ஒர்க் ஆகலைங்கிற? ஏன் ஒர்க் ஆகலை?"
சுதர்சனம் கோபமாக எரிந்து விழுந்தார்.
"சில நேரங்களில் லூஸ் கனெக்சன் காரணமா இப்படி நடக்கிறது உண்டு!"
"நாசாமாப் போச்சு!"
மீண்டும் சிசிடிவி பதிவு தெரிய ஆரம்பித்தது. ஏறக்குறைய பத்து நிமிடங்கள் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை.
நான் யோசித்தேன். அப்படியானால், பத்து நிமிடம் நான் வெட்டியாக நேரத்தை விரயமாக்கிக் கொண்டு, நீரஜா பேசுவாள் என்று அவள் குரலுக்காக காத்திருந்திருக்கிறேன்!
ஷிட்! என்னையே நான் நொந்து கொண்டேன்.
இப்போது, கேமிராவில் விக்ரம் தெரிந்தான். அவன் அவசரமாக 412-ம் அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
"சார்! முன்ன ஒருத்தன் ரூமுக்குள்ள போனானே சார்! முன்னாடி ரெண்டு பேர் நடந்து போக, பின்னால் வந்த ஒருத்தன் போனானே, அவன் யார் சார்?"
"வீடியோவை நிறுத்துய்யா! பார்க்கிறதுக்கு அவனும் இவனும் ஒரே மாதிரிதான் இருக்காங்க! ஆனா, முதல் முறை சரியா தெரியலை. ரெண்டு பேர் முன்னால நடந்து போறதால பின்னால் வர்றவனை சரியா பார்க்க முடியலை! அந்த ரெண்டு பேர் யார்? இந்த ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கறவங்களா?"
"இல்லை சார், இந்த ஓட்டல்ல வேலை செய்யற ரெண்டு பேர்தான் அவங்க!" மேனேஜர் சொன்னார்.
"சரியா போச்சு! அந்த ரெண்டு பேரையும் கூப்பிடுய்யா! முதல்ல ரூமுக்குள்ள போறவனும் இப்போ ரூமுக்குள்ள போற விக்ரமும் ஒருத்தன்தானான்னு விசாரிக்கணும்!"
மேனேஜரின் முகம் கவலைக்குள்ளானது.
"அவங்க டூட்டி மாறி வீட்டுக்குப் போயிட்டாங்க சார்!"
"அது எனக்கு கவலையில்லை. நீ என்ன பண்ணுவியோ தெரியாது. அந்த ரெண்டு பேரையும் உடனே வரச்சொல்லு! அந்த ரூமுக்குள்ள போறவன் ஒருத்தனா, வேற வேற ஆளான்னு தெரியணும்! கமான், க்விக்!"
மீண்டும் வீடியோ ஓடிய போது, மீண்டும் விக்ரம் அறையில் இருந்து வெளியேறி, அந்த கோடியில் நடந்து சென்று மறையும் போது, நான் படிக்கட்டுகளில் ஏறி, ஓடிவந்து 412-ம் எண் அறையில் நுழைந்து…
மீண்டும் ஒரு முறை திரும்பவும் என்னை நானே பார்த்தேன்.
எனக்கு குழப்பமாக இருந்தது போலவே சுதர்சனத்திற்கும் குழம்பியது.
"என்னய்யா இது, ஒரே குழப்பமா இருக்கு?"
"காமிரா வேலை செய்யாதப்ப தான் கொலை நடந்திருக்கு சார்!" என்றார் மேனேஜர்.
"சார், எனக்கு இன்னும் குழப்பமாவே இருக்கு சார்!" என்றேன்.
"எனக்கும்தான்யா!" என்ற சுதர்சனம் என்னைப் பார்த்து, "நீ சொல்லுய்யா ஜேம்ஸ் பாண்ட்! உனக்கு என்ன தோணுது?"
"முதல்ல ஒருத்தன் ரூமுக்குள்ள போகும் போது, ஹோட்டல்ல வேலை செய்யற ரெண்டு பேர் மறைச்சிடறாங்க; அதனால, அவனை அடையாளம் தெரியலை!"
"ஆமாம். அதுக்குதான் ஹோட்டல்ல வேலை செய்யற அந்த ரெண்டு பேரையும் வரச்சொன்னேன். அவங்க அவனைப் பார்த்திருக்கலாம், இல்லையா?"
"பார்த்திருக்கலாம்; பார்க்காமலும் போயிருக்கலாம்! எனக்கு என்ன சந்தேகம்னா, முதல்ல ரூமுக்குள்ள போனவன் விக்ரம்னே கூட வெச்சுக்கலாம்; அதுக்கப்புறம் காமிரா வேலை செய்யலை! அந்த நேரத்தில்தான் கொலை நடந்திருக்கணும்! கொலை நடந்த பிறகு, மறுபடியும் காமிரா வேலை செய்யும் போது, மறுபடியும் விக்ரம் ரூமுக்குள்ள நுழையறான். அப்போ, நீரஜாவோட செல்போன்ல, நான், அவங்க கூட லைன்ல இருக்கேன். விக்ரம் ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, "நீரஜா! நீரஜா!" ன்னு கூப்பிடுற சத்தம் மெல்லிசா கேக்குது! அது செல்போனில் பதிவாகி இருக்கு. அப்போதுதான் நான் ஓடி வர்றேன்."
நான் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டு கொண்டிருந்த சுதர்சனம், "இப்ப நீ என்ன சொல்ல வர்றே?" என்றார்.
"முதல்ல ரூமுக்குள்ள போனது விக்ரம்னா, அவன் எப்போ வெளியே போனான்? வெளியே போனவன் மறுபடியும் எதுக்கு திரும்பி வரணும்? கொலை செய்யற ஒருத்தன் போயிட்டு, வந்துட்டு இருப்பானா?"
நான் சொல்ல சுதர்சனம் என்னைக் கேள்விக் குறியோடு ஏறிட்டுப் பார்த்தார்.

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 18
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.