"நீரஜா! நீரஜா!"
மீண்டும் அழைத்தேன். இதே போன்று செல்போனில் ஓர் ஆண் குரல் கேட்டதை நினைத்துக் கொண்டேன். அந்த ஆண் குரல் எங்கே? அந்த குரலுக்கு சொந்தக்காரன் எங்கே?
நான் வராண்டாவில் ஓடி வரும் போது, வராண்டாவின் கோடியில் ஒருவன் நடந்து போய் திரும்பினான். நான் அவன் முதுகைத்தான் பார்த்தேன். ஒருவேளை… அவனாக இருக்குமோ?
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? போலீசுக்கு தகவல் சொல்ல வேண்டும்! இந்த ஹோட்டல் மேனேஜருக்கு தகவல் சொல்ல வேண்டும்!
நான் மீண்டும் நீரஜாவை பார்த்தேன். எனக்குள் எதுவோ ஒன்று உடைந்தது. ஏதோ ஒன்று சிதைந்தது; காகிதம் போல் மனம் கிழிந்தது. நான் என் உள்ளுணர்வை அலட்சியப்படுத்தி விட்டேன். நீரஜாவை நான் போகவிட்டிருக்கக் கூடாது. அவளை நான் தடுத்திருக்கலாம். அவள் சாவை என்னால் தடுத்திருக்க முடியும்.
என்னை அவள் முழுமையாக நம்பினாள்! நான்தான் அவளுக்கு ஆலோசனை கொடுத்தேன். அந்த இரண்டு செல்போன் எண்களைக் கண்டுபிடித்து கொடுப்பதோடு என் வேலையை முடித்து கொண்டு நான் முற்றிலும் இந்த கேஸில் இருந்து விலகி இருக்க வேண்டும்! பணம் கொடுப்பதோ, பிளாக் மெயில் செய்பவனுக்கு பணிந்து செல்வதோ… நீரஜாவே முடிவு செய்ய விட்டு விட்டு நான் ஒதுங்கி கொண்டிருக்க வேண்டும்! அப்போது, அவள் உயிரோடாவது இருந்திருப்பாள்!
எனக்கு குற்ற உணர்வு உறுத்தியது. ஒரு நல்ல பெண்ணை சாகடித்து விட்டேன். இதோ, பத்து நிமிடங்களுக்கு முன்னால் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள். உயிரோடு இருந்தாள்! சிரித்துக் கொண்டிருந்தாள். நம்பிக்கையாய் இருந்தாள்.
நீரஜா யார் உன்னைக் கொன்றது? இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் உன்னை போகவிட்டிருக்க மாட்டேன்.
வராண்டாவில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. நான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் நீரஜாவை இந்த நிலையில் பார்த்த மாத்திரத்தில் எதிரே ஒரு கான்க்ரீட் சுவர் தடுத்தது போல் அப்படியே நின்று விட்டேன். அதற்கு மேல் ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. நான் அப்படி போகாமல் இருந்தது நல்லதுதான். வாசலில் நிழல் அசைந்தது. நான் திரும்பி பார்த்தேன். முன்பு ஒரு அறையில் இருந்து நான் ஓடி வரும் போது எட்டிப் பார்த்த பெண் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பின்னடைந்தேன். அவள், "என்ன?" என்றாள். அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்று தெரிந்தது. நெற்றியிலும் காதோரத்திலும் தலைமுடிகள் ஈரத்தில் ஒட்டியிருந்தது.
"கொலை!" என்றேன்.
அவள் கண்கள் பயத்தில் விரிந்தது. "கொலையா? யார்?"
"பெண்!"
"பெண்ணா?"
"ஆமாம்." என்றேன். அப்போதுதான் என் கையிலிருந்த செல்போனை கவனித்தேன்.
இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
நான் நீரஜாவின் ஹேண்ட் பேகை பார்த்தேன். அது, கட்டிலின் மேல் இருந்தது. பக்கத்தில் நீரஜாவின் செல்போன் உயிரற்ற நிலையில் இருந்தது.
யோசிக்க நேரம் இல்லை. நான் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தபோது அந்த பெண்ணுடன் பனியனும் முக்கால் பேண்டும் அணிந்த ஒருவன் பேசிக்கொண்டிருந்தான். இருவரும் என்னை பார்த்தனர். நான் ஹோட்டல் மேனேஜருக்கு போன் செய்து நடந்ததை சுருக்கமாகச் சொன்னேன்.
அவ்வளவு! நான் இனிமேல் நான் என்ன செய்ய முடியும்? இத்துடன் என் வேலை முடிந்தது. இதற்கு பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! ஹோட்டலில் இருந்து இந்நேரம் போலீசுக்குத் தகவல் போயிருக்கும். போலீஸ் வந்து தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்வார்கள். அதிகபட்சமாக இரண்டு நாளைக்குள் கொலையாளியை கண்டுபிடித்து விடுவார்கள். போலீஸ் மிகப்பெரிய பத்தாயிரம் கைகள் கொண்ட பிரம்மாண்ட சாதனம். நான் வரும்போது ஒருவன் வராண்டாவின் கோடியில் நடந்து சென்றான். உடனே திரும்பி மறைந்து விட்டான். அவனாக இருக்குமா? சிசிடிவியில் பார்த்தால் கண்டு பிடித்து விடுவார்கள். இந்த தாழ்வாரத்தில் யாரெல்லாம் வந்தார்கள்? யார் இந்த அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள்? யார்யார் அறையை விட்டு வெளியேறினார்கள்? எல்லாம் கண்டுபிடித்து விடுவார்கள்!
போலீஸ் வரும்வரை நான் எங்கேயும் போக முடியாது. நான் நீரஜாவுக்கு எடுத்த அறையில் அந்த கேமிரா மறைந்த லேடிஸ் ஹேண்ட் பேக் இருக்கிறது. அதை அப்புறம் எடுத்துக் கொள்ளலாம். போலீஸ் துருவி துருவி விசாரிக்கும்போது அனைத்தையும் சொல்லிவிட வேண்டும். நான் சுவரோரம் விலகி சாய்ந்து நின்றேன். அந்த தம்பதிகள் - தம்பதிகளாகதான் இருக்க வேண்டும்; அவர்கள் இன்னும் தங்கள் அறைக்குள் செல்லவில்லை. இங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் அவர்களுக்கும் சிறிது சுவாரசியம் இருக்க வேண்டும். என்னையே பார்த்தார்கள். நான் எப்போதாவது அரிதாகத்தான் புகை பிடிப்பேன். இப்போது புகைக்கும் ஆர்வமும், தேவையும், தாகமும் எழுந்தது. நான் அந்த தம்பதியை நோக்கி சென்றேன். பனியன், முக்கால் பேண்ட் ஆசாமி சிகரெட் பிடிப்பவராகத்தான் தெரிந்தது. அந்த சிவந்த முகத்தில் நிகோடின் படிந்த உதடுகள் அதை உணர்த்தியது. அவர்களுக்கும் என்னுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது முகத்திலும் என்னை வரவேற்க தயாராவதிலும் தெரிந்தது.
"செத்துப் போனவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?" என்றான் முக்கால் பேண்ட்.
"ஆமாம்!" என்றேன். "உங்ககிட்ட சிகரெட் இருந்தா ஒண்ணு தர்றீங்களா?" அவன் அவளைப் பார்க்க, அவள் உள்ளே சென்று கிங்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க, அவன் ஒன்று எடுத்துக் கொண்டு, எனக்கு ஒன்று கொடுத்து, பற்ற வைத்துக் கொண்டு, பற்ற வைத்தான்.
"என்ன, ஏதாவது பிரச்சனையா?" என்றான் புகையை ஆழமாக இழுத்து விட்டு. "எப்படி நடந்தது?" மீதி புகை வாயில் கசிந்தது.
"நான் உண்மையை சொல்றதுக்கு இல்லை. இருந்தாலும் சிம்பிளா சொல்றேன். அவங்க ஒரு பிளாக்மெயில் பிரச்சனையில இருந்தாங்க. அவங்களுக்கு என்னோட உதவி தேவையாய் இருந்தது. நானும் உதவி செய்யத்தான் வந்தேன். ஆனாலும் இப்படி ஆகும்னு நினைக்கலை."
புகையை இழுத்து விட்டுவிட்டு நான் அவளைப் பார்த்தேன். அவள் மீது சோப்பு வாசனை அடித்தது.
அதற்குள் இரண்டு பேர் மாடிப்படியேறி வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை அப்பியிருந்தது. அவர்கள் எங்களை பார்த்துக் கொண்டே, "எனக்கு போன் பண்ணது?" என்று கேள்விக்குறியோடு ஒருவர் நெருங்கினார்.
நான் ஓர் இழுப்பு புகை இழுத்து விட்டு, "நான்தான் போன் பண்ணேன்." என்றேன்.
"நீங்க யார்?" என்றார் ஒருத்தர். ஹோட்டல் மேனேஜராய் இருக்க வேண்டும்.
"என் பெயர் மாதவன். பிரைவேட் டிடெக்டிவ்!"
"அவர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள்.
"என்ன பிரச்சனை?"
"போலீஸ் வந்துடட்டும். நான் எல்லாத்தையும் அவங்ககிட்டயும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கும். நீங்க கூடத்தானே இருப்பீங்க? அப்போ முழுசா தெரிஞ்சுக்குவீங்க!"
அவர் ஒரு பார்வை என்னை ஏறிட்டு விட்டு, 412-ம் எண் அறையை நோக்கி நடக்க, "உள்ளே போகாதீங்க! எதையும் தொடாதீங்க!" என்றேன். அவர் திரும்பவும் ஒரு முறை என்னை திரும்பிப் பார்த்து விட்டு நடந்து போய், அறையில் எட்டிப் பார்த்து விட்டு திரும்பி வந்து அந்த தம்பதிகளிடம், "நீங்க இந்த ரூம்லதானே இருக்கீங்க?" என்றார்.
"ஆமாம்!" என்றான் முக்கால் பேண்ட்.
"சாரி! நீங்க ரூம் மாத்திக்கிறதா இருந்தா மாத்தி கொடுக்கிறேன். அப்பவும் போலீஸ் உங்ககிட்ட விசாரிக்க விரும்பினா, உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டுப் போயிடலாம். நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்."
"போலீஸ் வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகுமா?" என்றாள் அந்தப் பெண். "உங்க ஹோட்டல்ல ரூம் எடுத்ததுக்கு எங்களுக்கு தலைவலி எதுவும் வைக்காதீர்க!"
"இல்ல மேடம். இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துருவாங்க. நான் உங்களுக்கு வேற ரூம் மாத்தி கொடுக்கிறேன். உங்களுக்கு ரொம்ப கஷ்டம் வராம நான் பாத்துக்குறேன்." என்று கூட இருந்தவனிடம் திரும்பி கீழ் தளத்தில் அவர்களுக்கு அறையை ஒதுக்கித் தருமாறு சொன்னான்.
அந்தப் பெண் உள்ளே சென்று தன் உடமைகளை சேகரிக்க ஆரம்பித்தாள். முக்கால் பேண்டும் உள்ளே சென்று அவளுக்கு உதவி செய்தான். சிறிது நேரத்தில் அவர்கள் ஆளுக்கொரு சூட்கேசுடன் வெளியே வந்தனர். அந்த உதவியாளன் அவர்களை அழைத்துச் சென்றான்.
"சார், நான் போய் ரூம்ல வெச்சுட்டு உடனே வர்றேன்." என்று என்னிடம் சொல்லிவிட்டு முக்கால் பேண்ட் சென்றான்.
நான் புகைத்து முடித்திருந்தேன். அந்த ஹோட்டல் மேனேஜர், "நல்ல வேளை! அவங்க மட்டும்தான்! எல்லா ரூமும் புக் ஆகி இருந்தா பெரிய தலைவலிதான்!" என்றார். "அப்பவும் காலையில ரெண்டு ரூமுக்கு கெஸ்ட் வராங்க! அதுக்குள்ள இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துட்டா நல்லா இருக்கும்!"
சிறிது நேரத்தில் காவல் துறையின் கனமான ஷோக்களில் சத்தம் கேட்டது.
"நீ.. நீ.." என்றாள் நீரஜா.
யாரை நீ.. நீ.. என்றாள்?
"நீரஜா! நீரஜா!" என்றது ஒரு ஆண் குரல்.
அந்த ஆண் குரல் யாருடையது? அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் யார்?

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 16
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.