அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் நீரஜாவும், நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
எதிர்முனையில் அவன் தொடர்ந்து பேசினான்.
"நியாயமான கேள்வி! இதுக்கு நான் உத்தரவாதம் தர்றேன். இந்த ஒரு முறைக்கு மேல நான் உன்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை நீ நம்பலாம்."
"சரி, ஓகே! ஆனா, ஒரு கண்டிஷன்!"
"என்ன நிபந்தனை?"
"நீ சொல்ற இடத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது."
"அப்புறம்?"
"நான் சொல்ற இடத்துக்குதான் நீ வரணும்?"
"ஏன்? வொய்?"
"எனக்கு என் பாதுகாப்பு முக்கியம்!"
"ஓ…!"
"ஏற்கனவே ஒரு முறை தப்பு பண்ணிட்டு உன் கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்."
"புர்ர்ர்' என்று எதிர்முனையில் சிரிப்பு.
"அதனால?" என்றது எதிர்முனை.
"அதனால, இதுக்கு மேல இன்னொரு முறை, இன்னொரு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறதை நான் விரும்பலை."
"அதுக்கு நான் என்ன பண்ணனும்?"
"ஸிட்டி நடுவுல பிஸியா இருக்கிற ஓட்டலா பார்த்து நீயே சொல்லு. அந்த ஒட்டல்ல ரூம் புக் பண்ணிட்டு நான் உனக்கு போன் பண்றேன். அங்க நாம மீட் பண்ணுவோம்."
எதிர்முனையில் நிம்மதியை உறிஞ்சும் மெளனம்.
"என்ன யோசிக்கிறே?"
"நீ சொல்றதை பார்த்தா, என்னை எதுலயாவது மாட்டி வைக்க பிளான் பண்ற மாதிரி தெரியுதே!?"
"ஐயா, சாமி! உன்னை மாட்டி வெச்சு நான் என்ன சாதிக்க முடியும்? அப்படியே உன்னை மாட்ட வெச்சுட்டாலும் உன்னை என்ன தூக்குலயா தொங்க விடப் போறாங்க? இல்ல, இந்த மாதிரி பிளாக் மெயில் குற்றத்துக்கு பத்து வருஷம்; பதினைஞ்சு வருஷம் தண்டனை தரப்போறாங்களா? இந்தப் பிரச்சினையை நான் யாருக்கும் தெரியாம சுமூகமா முடிச்சுக்க விரும்பறேன். என்ன, புரியுதா? இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்லை. சரியா?" என்றாள், நீரஜா.
எதிர்முனை சற்று தயங்கி, "நீ சொல்றதும் சரிதான்!" என்றது.
"இப்ப செல்லு, எந்த ஓட்டல்ல ரூம் புக் பண்ணட்டும்?"
"ஒரு நிமிஷம்!" என்றான் எதிர்முனையில்.
நான் நீரஜாவை பார்த்து சிறிது பொறுமையாக இருக்கும் படி சைகை செய்தேன்.
இருபது விநாடிகள் கழிந்த பிறகு, "எக்மோரில் G SPOT அதாவது, கோல்டன் ஸ்பாட் ஒட்டல்ல புக் பண்ணு!" என்றான். "என்ன, சொன்னது கேட்டுதா?"
"ம்ம். கேட்டுது. குறிச்சு வெச்சுக்கறேன். நான் ரூம் புக் பண்ணிட்டு உனக்கு போன் பண்றேன்."
"ஓகே! எப்போ புக் பண்ணிட்டு, எப்போ கூப்பிடுவே? இன்னிக்கா? நாளைக்கா?"
நான் நீரஜாவை பார்த்து நாளைக்கு என்பது போல் சைகை செய்தேன்.
"நாளைக்கு புக் பண்ணிட்டு உனக்கு போன் பண்றேன்." என்றாள் நீரஜா.
"சரி." என்று போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நீரஜா ஒரு பெருமூச்சு விட்டாள். என்னைப் பார்த்தாள்.
"நான் எதிர்பார்த்ததை விட பிரமாதமா பேசிட்டீங்க! சமயோஜிதமா பேசினீங்க!" என்றேன்.
"இதை எப்படியாவது சரியா எனக்கு முடிச்சு கொடுத்துடுங்க சார்! உங்களுக்கு எவ்வளவு பீஸ் வேணுமோ, நீங்க எதிர்பார்த்ததை விட அதிகமாவே உங்களுக்குத் தரணும்னு நான் நினைக்கிறேன்!" என்றாள்.
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க! இந்தப் பிரச்சினையில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டியது என்னோட பொறுப்பு." என்றேன்.
நீரஜா, அவள் செல்போனை எடுத்து, என் செல்போன் நெம்பரை எழுதி என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி விட்டு, "ரூம் புக் பண்றதுக்கு, மற்ற செலவுக்கெல்லாம் பணம் அனுப்பியிருக்கேன்." என்றாள். "மற்றது எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க." என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள்.
***
எழும்பூரில், 'கோல்டன் ஸ்பாட்' ஓட்டலை கண்டுபிடிப்பது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டது போல், அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. ஆல்பர்ட் தியேட்டருக்கு போகும் வழியிலேயே மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து, ஒரு போக்குவரத்து நெரிசலான தெருவில் இருந்தது. ஓட்டலுக்கு ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து இருக்கும்.
பார்க்கிங் பகுதியில் யமஹாவை நிறுத்தி விட்டு பார்த்ததில் மழை ஓய்ந்து மாலை நேர ஈர மினு மினுப்பில் ஆட்களும் கட்டடங்களும் தலைகீழ் சலனங்கலாகத் தெரிந்தது. சற்று தொலைவில் சேக்ரேட் ஹார்ட் ஆலயத்தின் உச்சியில் சிலுவையை தரிசிக்க முடிந்தது. ஓட்டலின் கண்ணாடி தடுப்புக்கு அப்பால் மனிதர்களின் மெளன இயக்கத்தை நோக்கி படிக்கட்டுகளில் ஏறிச் சென்றேன்.
கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றதும் குளிருக்கு சற்று கதகதப்பாக உணர்ந்தேன். சீலிங்கில் சித்திர வேலைப்பாடுகளுக்கு நடுவே பளீரென்று எரிந்த விளக்குகள் அந்த ரிசப்ஷன் ஹாலை வெளிச்சத்தில் நிரப்பியிருந்தது. வலது புற சோஃபாவில் ஒரு நடுத்தர பெண் அமர்ந்திருந்தாள். அதைத் தாண்டி, ஓட்டலில் சாப்பிடும் பசி மிகுந்த மக்கள் தெரிந்தனர். தம்ளர், தட்டுக்களை உருட்டும் ஓசை மெலிதாகக் கேட்டது. இன்னதென்று பிரித்தறிய முடியாத வாசனை மூக்கை நிரடியது.
நான், ரிசப்ஷனை நெருங்கி லிப்ஸ்டிக் பூசிய ஒரு பெண்ணை அணுகினேன்.
"எஸ்!" என்றாள் நிமிர்ந்து. கண்ணுக்கு மையிட்டிருந்தாள். தலை முடியை சுருள் சுருளாக்கி, பின்பக்கம் கிளிப்பில் சிறைபிடித்து, தொங்க விட்டு, அவ்வப்போது அதை வேண்டுமென்றே தலையசைத்து விசிறினாள். அது, அவளது மேனரிஸமாக மாறியிருந்தது. தூக்கத்தில் இருக்கும் போது அவள் முடியைக் கத்தரித்து விட்டால், அவள் தலையை வெடுக்கென திருப்பி விசிறி அடிக்கும் மேனரிஸம் என்னாகும் என்று யோசித்துக் கொண்டே, "ரெண்டு சிங்கிள் ரூம் வேணும். பக்கத்து பக்கத்தில்." என்றேன்.
வரவேற்பாளினி தன் தலைமுடியை ஒரு முறை விசிறிக் கொண்டு, காதுக்குள் யாரோ ரகசியமாக ரகசிய ஜோக் சொன்னது போல் உதடுகளுக்குள் புன்னகைத்துக் கொண்டு, ஒரு நேர்த்தியான பதிவேட்டில் அகலமான கண்களால் ஓட விட்டு, "பக்கத்து பக்கத்தில் இல்லை. மூன்று ரூம் தள்ளி இருக்கிறது." என்றாள். புன்னகை மாறவில்லை.
"சாரி! நான் நாளைக்கு நைட் வேணும்னு கேட்கிறேன்." என்றேன்.
அவள் மீண்டும் ஒரு விசிறு விசிறிக் கொண்டு பொய் மை கோடிழுத்த விழிகளில் சிரித்து, "இருக்கு!" என்றாள்.
"ரெண்டு ரூம் வேணும்!"
"ஓகே!" என்றாள். "ஐடி ப்ரூப் வேணும்!"
நான் என் செல்போனை திறந்து, என் ஆதார் அட்டையின் நகலை அவளுக்குக் காட்டினேன். அவள் அதையும் பார்த்து விட்டு, என்னையும் பார்த்து விட்டு, "இதில இருக்கிற செல்போன் நம்பர் உங்களதுதானே?" என்றாள்.
"ஆமாம்" என்றேன்.
அவள் லெட்ஜரில் எழுதிக் கொண்டு கம்ப்யூட்டரில் ஏற்றிக் கொண்டாள்.
"நாளைக்கு எத்தனை மணியிலிருந்து வேணும்?" கேட்டாள். ஒரு வினாடியில் கண்களை என் மீது விட்டு இழுத்துக் கொண்டாள்.
"நாளைக்கு சாயங்காலம் ஆறு மணியிலிருந்து வேணும்."
கம்ப்யூட்டரில் அவள் நீள விரல்கள் விளையாடின.
"உங்க போனுக்கு ஒரு மெசேஜ் வரும் பாருங்க!" என்று அவள் சொல்லும் போதே, 'டிடீங்!' என்று ஓசை எழுப்பியது. நான் செல்போனை திறந்து பார்த்தேன். 305, 306 இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்திருந்தது.
"இந்த மெசேஜை நாளைக்கு நீங்க வரும்போது காட்டினா, ரூம் சாவி உங்களுக்குக் கிடைக்கும். இந்த அறையை வேற யாராவது பயன்படுத்துவதா இருந்தா, அவங்களுக்கு இந்த மெசேஜை சென்ட் பண்ணுங்க! அவங்க காட்டினாலும் சரி! ரூம் கிடைக்கும்!"
அவள் கேட்ட பணத்தை என் செல்போனில் ஸ்கேன் செய்து அந்த ஓட்டல் அக்கவுண்டுக்கு அனுப்பி விட்டு, நாடோடி மன்னன் எம்ஜிஆர் மாதிரி மூக்கில் இரண்டு விரல்களை தொட்டு சொடுக்கி விட்டு வெளியே வந்தேன்.
அறை பதிவு செய்யப்பட்ட செய்தியை நீரஜாவுக்கு மெசேஜ் செய்தேன்.
என் குறுஞ்செய்தி யைப் பார்த்ததும் நீரஜா எனக்கு போன் செய்தாள்.
"நாளைக்கு சாயந்தரம் நாலரை மணிக்கு நான் உங்க ஆபீஸ் கிட்ட கார்ல வந்து நிற்கிறேன். நீங்க ரெடியா இருங்க. உங்களை பிக்கப் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் ஹோட்டல் ரூமுக்கு போகலாம்!" என்றாள்.
நான், "வேண்டாம்!" என்றேன்.
"ஏன் வேண்டாம்ங்கிறீங்க?"
"இல்லை. நான் உங்க கூட வர்றதை பிளாக்மெயில் பண்றவன் பார்க்கலாம். உங்களை உங்க வீட்டில் இருந்தே கூட அவன் ஃபாலோ பண்ணலாம்!"
"அப்படின்னா நான் என்ன செய்யட்டும்?"
"நீங்க காரில் நேரா ஹோட்டலுக்கு வந்துடுங்க! நான் உங்களுக்கு முன்னாடி போய், உங்க ரூமையும் திறந்து வெச்சுட்டு, நான் பக்கத்துல ரூம்ல இருக்கேன். நீங்க கார்ல வெளியே வெயிட் பண்ணுங்க. நான் ரூமுக்கு போயிட்டு உங்களுக்கு போன் பண்றேன். நீங்க நேரா ரூமுக்கு போயிடுங்க!" என்றேன்.
"ஓகே!"
"நீங்க ரூமுக்கு போனதும் அவனுக்கு போன் பண்ணி ரூம் நம்பர் சொல்லி வரச் சொல்லுங்க. நான் பக்கத்து ரூமில் இருந்து உங்க ரூம்ல என்ன நடக்குதுன்னு செல்போன்ல கேட்டுகிட்டு இருக்கேன். சரியா?"
"சரி!" என்றாள்.
நான் அழைப்பைத் துண்டித்து விட்டு, ஒரு சிறு பொம்மையின் கண்களில், அந்த மிகச் சிறிய கேமராவை பொருத்தி விட்டு என் செல்போனில் அது வேலை செய்கிறதா என்று பார்த்து திருப்தி அடைந்தேன்.
மறு நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 13
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.