அபாரமான வேகத்தில் அந்தக் காரை நான் எதிர் கொண்டேன். அது, கரும்பச்சை டொயோட்டா இல்லை; கரும்பச்சை பிசாசு! டிரைவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் காற்றை அறைந்து கொண்டு காட்டுத்தனமாக அப்படி காரை செலுத்த முடியாது. உள்ளே இருக்கும் டிரைவரை என்னால் பார்க்க முடியவில்லை. காரினுள் காரிருள்! பூனையின் இரண்டு பிரகாசமான கண்கள் போல் அந்த காரின் இரண்டு முன் விளக்குகளும் வெளிச்சத்தை வாரி இறைத்த படி என்னை நெருங்கியது.
அடிபட்ட நாயொன்று 'ஈஈஈய்ய்ய்ங்ங்ங்' என்று மரண ஓலமிடுவது போல் விநோதமான சத்தத்துடன் அந்தக் கார் என்னைக் குறிவைத்து வந்தது. தார்சாலையில் காரின் நான்கு டயர்களிலும் தீப்பொறி கிளம்பியது. நான் தப்பிக்க வழி தேடினேன். சுற்றிலும் கண்களுக்கு புலப்படாத இருட்டு. காரின் ஹெட் லைட் துப்பிய வெளிச்ச வெள்ளத்தில் எனக்கு பின்னால் இருந்த கட்டடம் தெரிந்தது.
தப்பிக்க அது ஒரு வழிதான்.
நான் அந்த கட்டடத்தை நோக்கி புயல் போல் ஓடினேன். கட்டடம் பத்து மைல் தூரம்… இல்லை; நூறு மைல் தூரம் இருப்பது போல் இருந்தது. என் கால்களின் ஷுக்களுக்கு அடியில் அனல் பறந்தது. நான் கையில் வைத்திருக்கும் சூட்கேஸ் வேறு கனமாக என்னை துன்புறுத்தியது. அதைத் தூக்கிக்கொண்டு ஓடுவது சவாலான விஷயம். ஆனால், சூட்கேசை விட்டு விட்டு ஓட முடியாது. அந்த சூட்கேஸுக்காகத்தான் இத்தனை துரத்தல்களும்; இத்தனை சுவாரசியமான ஓட்டங்களும்!
ஓடு! ஓடு! ஓடு!
இல்லை என்றால், நிச்சயமாய்-
சாவு! சாவு! சாவு!
எனக்குள் ஒரு உசைன் போல்ட் புகுந்து கொண்டான்.
கார் வெளிச்சம் என்னை துரத்தியது. அந்த வெளிச்சத்தை பயன்படுத்தி ஓடினேன். கார் வெளிச்சம் ஒரு வெள்ளைப் படுதா போல் நீண்டு எதிர் கட்டடத்தின் அருகாமையை உணர்த்தியது. ஓடினேன். ஓடினேன்.
காற்று காற்று என்று இதயம் அடித்துக் கொண்டது. இரையை விழுங்கிய மலைப்பாம்பு போல் மூச்சு விட்டேன். கண் காது வாய் என்று எல்லாவற்றிலும் சுவாசிக்க வேண்டும் போலிருந்தது.
ஓடி வந்து வெற்றுச் சுவரில் முட்டிக் கொண்டேன்.
இப்போது என்ன செய்வது?
இரண்டு பக்கமும் பார்த்தேன்.
அது ஒரு கட்டடத்தின் பின்புறமாக இருக்க வேண்டும். காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் கசிந்த மிச்சத்தில் அந்தக் கட்டடத்தின் அமைப்பு நிழலாகத் தெரிந்தது.
நான் தப்பிக்க வழியின்றி திகைத்து நின்றதும் எனக்கு பத்தடி தொலைவில் வந்து கிரீச்சிட்டு நின்றது கார்.
ஒரு சிங்கத்தின் சிலிர்ப்புடன் கார் உறுமிக் கொண்டு நின்றது.
நான் இடது கையிலிருந்து வலது கைக்கு சூட்கேஸை மாற்றிக் கொண்டு, காரில் இருந்து யாராவது இறங்குகிறார்களா என்று பார்த்தேன். யாரும் இறங்கவில்லை. கியர் மாற்றி, பாய்வதற்குத் தயாராக இருந்தது, கார். நான் நகர்ந்தால் அடுத்த வினாடி கார் என் மீது மோதும். தப்பிக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை.
நான் லேசாக அண்ணாந்து பார்த்தேன். அந்த கட்டடத்தின் ஏதோ ஓர் அறையின், ஏதோ ஒரு ஜன்னலின் சன்சேடு தெரிந்தது. எம்பினால் எட்டாத உயரத்தில் இருந்தது அது. என் அதிர்ஷ்டத்தை நொந்து கொண்டேன்.
காரில் இருப்பவனுக்கும் பொறுமையில்லை. எருமை போல அதை உறும விட்டான். பாயப் போகிறான் என்று தெரிந்தது. நான் சட்டென்று சூட்கேசை மேலே தூக்கி எறிந்தேன். அது சுழன்று கொண்டு போய் சரியாக சன் ஷேடு மீது விழுந்தது, என் அதிர்ஷ்டம் என்றால், கார் என்னை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது என் துரதிஷ்டம்!
நான் செத்தேன்!
சுவரோரம் இப்படியும் அப்படியும் எப்படியும் நகர முடியவில்லை.
கார் என் மீது மோதியது!
***
புது எண்ணாக இருந்தது. முதல் முறை அழைப்பு வந்தபோது நீரஜா அதை நிராகரித்தாள். நீங்கள் நீரஜாவை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். பார்த்திருந்தால் உலக அழகி 'ஹார்னஸ் கவுர் சாந்து' நீராஜாவிடம் பிச்சை… வேண்டாம்; விடுங்கள். நீரஜாவை முதல் முறை பார்க்கும் யாரும் இரண்டாம், மூன்றாம், நான்காம், நூறாவது முறையாக அவளைத் திரும்பிப் பார்க்க தயங்க மாட்டார்கள். அவள் கண் சிமிட்டலில் மது இருந்தது. உதட்டசைவில் போதை இருந்தது. பிரம்மனின் கனவுப் பெண் நீரஜா! பச்சை நரம்புகள் தெரியும் அவளின் நீண்ட கழுத்தை வர்ணிக்க இதுவரை எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை. கழுத்துக்குக் கீழே வர்ணிக்க அவளைப் படைத்த பிரம்மனால் கூட முடியாது. கைப்பிடிக்குள் அடங்கும் சிறுத்த இடைக்கு கீழே... பெருத்த…
நீரஜா, "ஹலோ!" என்றாள். துல்லியமான தேன் தடவிய இனிய குரல்.
"உனக்கு குரல் பெரிய ப்ளஸ் நீரஜா! நீ பேசினா அப்படியே மெய்மறந்து கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு. ஒருத்தருக்கு அழகும் குரலும் நல்லா அமையறது ஒரு பெரிய வரம்!"
"சுவாமி! நீ என்னை ரொம்ப புகழ்றே?"
சுவாமிநாதன் நீரஜாவின் கணவன். கணவன் என்பது தாலி கட்டியதால்.
ஆனால், அவன், நீரஜாவின் அடிமை!
அவளுக்கு தாலி கட்டி விட்டு அவன் விலங்கு பூட்டிக் கொண்டான்.
"புகழ்ச்சி இல்லை நீரஜ்! உண்மையைத்தான் சொல்றேன்."
ரொம்ப மூடு வந்துவிட்டால் சுவாமி இப்படித்தான் நீரஜ் என்று சுருக்கிக் கொள்வான்.
"நீ சங்கீதம் கத்துக்கிட்டு இருந்திருக்கணும் நீரஜ். சினிமாக்காரன் ஒருத்தன் விடாம வீட்டு வாசல்ல வந்து தவமாய் கிடந்திருப்பான்! நீ மட்டும் சினிமாவுல பாடினேன்னு வை; இந்தியா பூராவும் உன் குரலுக்கு மயங்கி விழுந்திருப்பாங்க! இன்னும் இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு நீதான் நம்பர் ஒண்ணா இருந்திருப்பே!"
அந்த அறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. மெல்லியதாக, உறுத்தாத குரலில், சுவரில் எங்கோ புதைந்திருக்கும் ஸ்பீக்கரில் இருந்து, 'எ லிட்டில் பிட் ஆஃப் வெரோனிகா…' வழிந்து கொண்டிருந்தது. அறையின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் பணத்தைக் கொட்டி அழகு படுத்தியிருந்தான், அவள் கணவன்.
திடுமென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. எதிர்முனையில் இன்னும் விபரீதமான மௌனம் நிலவ, "ஹலோ!" என்றாள்.
யார் அது! போன் செய்து விட்டு, இத்தனை நேரம் பேசாமல் இருப்பது?
அப்போதுதான் நீரஜா குளித்திருந்தாள். கொஞ்சம் மூக்கை நீட்டி பாருங்கள்; சுகந்தமான வாசனையை உணர்வீர்கள். பட்டு போன்ற மென்மையான வழுக்கும் ஈரமான தலை முடியை அலட்சியமாக வலது கையில், ஹேர் டிரையரால் ஒதுக்கி விட்டுக் கொண்டு, கண்ணாடியில் தன் முகத்தை, தன் ஆரஞ்சு நிற உதடுகளை சுழித்து பார்த்துக் கொண்டே மீண்டும் அலட்சியமாக, "ஹலோ!" என்றாள்.
தன் உதடுகளை ஒரு முறை மடித்து விடுவித்தாள். ஈரமாக, பளபளப்பாக, வரிவரியாக ரோஜா நிறத்தில் இருந்தது அவள் உதடுகள்!
விக்ரமின் ரசிக்கத்தக்க சிகரெட் வாசனை நினைவுக்கு வந்தது நீரஜாவுக்கு.
அவன் எப்படி சிகரெட் பிடிப்பான்? ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் ஒன்று சேர்த்து, நடுவில் சிகரெட் தொங்கிக் கொண்டிருக்கும்.
சுவாமிக்கு அத்தனை நேர்த்தியாக சிகரெட் பிடிக்கத் தெரியாது.
விக்ரம் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலே தனியாக இருக்கும்.
அவள் தன் விரல்களை விக்ரம் பிடிப்பது போல் வைத்துக் கொண்டு, விரலிடுக்கில் சிகரெட் இருப்பது போன்ற கற்பனையில் ஒரு முறை உதடு குவித்து, இல்லாத சிகரெட்டை புகைத்து, மிதக்கப் புகையை ஊதி காற்றில் பரவ விட்டாள். உடனே கண்ணாடியில் பார்த்து 'க்ளுக்' என்று சிரித்துக் கொண்டாள்.
"ஹலோ! யாரு?" என்றாள் - நீண்ட மௌனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.
முட்டாள்! முட்டாள்! விக்ரம் இப்படி விளையாட மாட்டான். இது அவன் நம்பர் இல்லை. வேறு யாரோ, விளையாடுகிறார்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, "நீரஜா தானே?" என்று லேசான கரகர புதுக் குரல் கேட்டது.
"அப்பாடா! பேசிட்டியா? இவ்வளவு நேரம் என்ன வாயில கொழுக்கட்டையா வச்சிருந்த? ஆமா, யார் நீங்க?"
"நான் யாருங்கிறது அவ்வளவு முக்கியமில்லை."
"ஓ… அப்படியா? அப்ப எது முக்கியம்?"
"நான் சொல்லப் போற விஷயம்!"
"முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு! அது முக்கியமா இல்லையான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன்."
"ரொம்ப ரொம்ப முக்கியமானது!"
"அப்படியா? சொல்லு கேக்கிறேன்."
"கமல்ஹாசன் ஒரு படம் நடிச்சாரே தெரியுமா?"
"அவர் நிறைய படம் நடிச்சிருக்காரு. நீ எந்த படத்தை சொல்ற? வெயிட்! வெயிட்! யார் நீ? என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது? உன்கிட்ட நான் எதுக்கு பேசணும்? நீ யாருன்னு முதல்ல சொல்லு! சொல்லு! சொல்லு!"
"எதுக்கு இப்போ இப்படி எக்கோ எல்லாம் கொடுக்கிற?"
"அது என் இஷ்டம்! எதுக்கு உன் கிட்ட பேசணும்?"
"என்கிட்ட நீ பேசித்தான் ஆகணும் நீரஜா!"
"நீ.. நீரஜா! என் பெயர் உனக்கு எப்படி தெரியும்?"
"உன் பெயர் மட்டுமல்ல; கமல்ஹாசன் நடிச்ச விக்ரம் படம் பேர் கூட தெரியும்!"
"வி..விக்ரம்!" நீரஜாவின் உதடுகளில் வார்த்தைகள் உறைந்தன.

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 1
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.