1
எனக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிடுச்சு. ஈரோட்டில ஜாப். எங்க ஆபீஸ் கொஞ்சம் அவுட்டர்ல இருக்கு. ஆபீஸ்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர்ல எனக்கு ஒரு ரூம் கிடைச்சது.
பக்கத்துல யாரும் இல்ல. வயல்வெளி மட்டும் தான். பகல்ல பார்க்கறப்ப ஒன்னும் தெரியல. சந்தோஷமாத்தான் இருந்துச்சு. நிம்மதியான ஒரு இடம்னு தோணுச்சு. ஆனா நைட்ல அப்படி நினைக்கத் தோணல. நிறைய வித்தியாசமான சவுண்ட் கேட்கும். ரொம்ப பயமா இருக்கும் . கதவு ஜன்னல் எல்லாமே பூட்டிட்டு லைட் போட்டுட்டு உட்கார்ந்து இருப்பேன்.
இப்படியே கொஞ்ச நாள் போனது. ஒரு நாள் நைட் யாரோ என்னை கூப்பிட்ட மாதிரி தோணுச்சு. எனக்கு பயம் டைம் பார்த்தேன். மணி 12. பிரமைன்னு நினைச்சுட்டு பிடிவாதமா தூங்க முயற்சி பண்ணேன். ஆனா அது பிரமை இல்ல. யாரோ கதவை சுரண்டுனாங்க.
"யாரு?"
பயத்துல எனக்கு குரல் வரல. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. வெளியே எதையோ எரிக்கிற மாதிரி தோணுச்சு. ஜன்னல் மெல்ல திறந்து பார்த்...
ஐயோ... சிவப்புக் கண்ணோட .. யாரோ..
சட்டுன்னு ஜன்னல சாத்திட்டேன். அதே நேரத்தில் அதுவும் என்னை பார்த்துடுச்சு. அதுக்கு கோபம் ஜாஸ்தி ஆயிடுச்சு. அது என்னமோ ஆங்காரமா கத்துச்சு.
நடுங்கிட்டு உட்காந்திருந்தேன்.
கொஞ்ச நேரத்துல கதவப் போட்டு யாரோ அடிக்கிறாங்க. சத்தியமா சொல்றேன் என்னோட வாழ்க்கை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சேன்.
எப்ப தூங்குனேன்னு தெரியல. நான் எந்திரிக்கிறப்ப பொழுது நல்லா விடிஞ்சுடுச்சு.
நைட் நான் பார்த்த விஷயத்தை இங்கே யார்கிட்டயாவது சொல்லலாமா? சொன்னா நம்புவாங்களா? நான் கதை விடறதாத்தான் நினைப்பாங்க. ஆனா யார்கிட்டயாவது சொன்னாதான் எனக்கும் சமாதானமா இருக்கும்.
காலையில அந்தப் பக்கமா வந்த ஒருத்தர் கிட்ட பேச்சுக் கொடுத்தேன்.
"அண்ணா"
"சொல்லுங்க தம்பி"
"இங்க ஏதாவது வித்தியாசமா இருக்காண்ணா?"
"புரியலையே"
"இல்ல வேற ஏதாவது வித்தியாசமா"
"அப்படின்னா?"
"பேய் மாதிரி..."
"மாதிரி எல்லாம் இல்ல உண்மையாவே பேய் இங்க இருக்கு"
அவர் சொல்ல எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு.
"எப்படிண்ணா இவ்வளவு கேஷுவலா இருக்கீங்க? "
"நாம அது கிட்ட மாட்டாத வரைக்கும் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை"
அவர் சொல்லிவிட்டு போய்விட எனக்குத்தான் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை.
எனக்கு நன்றாகத்தெரியும். நிறைவேறாத ஆசை ஏதாவது இருந்தால் மட்டும் தான் ஒரு மனிதன் பேயாக இருக்க முடியும் என்று. அப்படி என்றால் இங்கே இருப்பதாக சொல்லப்படும் பேய்க்கு ஏதோ ஒரு ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் அது தெரிந்தால் தான் நமக்கு ஏதாவது பாதிப்பு வந்தாலும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எப்படி தெரிந்து கொள்வது? எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும். யாரிடம் கேட்பது?
***
"ஐயா வணக்கம்"
"வா தம்பி உட்காரு"
"ஐயா உங்க கிட்ட நான் நேராவே ஒரு விஷயத்துக்கு வரேன்"
"சொல்லு தம்பி"
"இங்க யாரோ வித்தியாசமாக இருக்கிறதா கேள்விப்பட்டேன்"
"ம்" அவர் ஒரு பெருமூச்சு விட்டபடி எங்கோ பார்த்தார்.
"அது யாருன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?"
"அது எதுக்கு தம்பி உனக்கு?"
"இல்ல எனக்கு தெரிஞ்சுக்கணும்"
"ம்"
"சொல்லுங்கய்யா"
"அது ஒரு பெரிய கதை"
"பரவாயில்லங்க"
"அதோ அந்த மரம் இருக்கே தெரியுதா?"
"ஆமாங்க தெரியுது"
"அந்த மரத்துல தான் செல்வி தூக்குல தொங்குனா."
"அய்யா"
"அவளா தொங்கிட்டான்னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. யாரோ அடிச்சுக் கொன்னு தூக்குல தொங்க விட்டாங்கன்னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. எது உண்மைன்னு எங்களுக்குத் தெரியல. ஆனா ஒண்ணு. அதுக்கப்புறம் அவ இந்த ஊர விட்டுப் போகவே இல்ல. இங்க தான் எங்கயோ இருக்கா "
"அப்படி அவங்க வாழ்க்கையில என்ன நடந்ததுங்க ?"
"அநியாயம்"
"அய்யா"
"செல்விக்கு நடந்த மாதிரி அநியாயம் யாருக்குமே நடக்கல"
"கொஞ்சம் புரியிற மாதிரி சொன்னீங்கன்னா"
"நீ இவ்வளவு தூரம் கேட்கிறதால சொல்றேன் ஆனா நான் தான் இந்த கதை எல்லாம் சொன்னேன்னு இந்த ஊர்க்காரங்களுக்கு எப்பவுமே தெரியக்கூடாது. எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு"
"சத்தியமா நான் வெளியில எதுவுமே சொல்ல மாட்டேங்க"
"ம்"
***
"செல்வி"
"ம்"
"எனக்கு உன்னை விட்டு போகத் தோணல"
"அப்ப கூடவே இருந்துடுங்க"
"போயிட்டு அடுத்த வாரம் வந்துடறேன்"
"மாமா"
"ம்"
"கல்யாணம் பண்ணி என்னையும் கூட்டிட்டுப் போய்டுங்க. எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு"
"என்ன சொல்ற செல்வி ?"
"எப்பப் பார்த்தாலும் உங்க ஞாபகமாத்தான் இருக்கு"
"நிஜமாவா?"
"இல்ல பொய் சொல்றேன்"
"இப்ப எதுக்கு கோபம்?"
"இப்படி கேட்டா என்ன சொல்லுவாங்களாம்?"
"சரி புரியுது"
"மாமா சத்தியமா உங்களுக்கு புரியாது"
"என்ன சொல்ற?"
"என்னோட மனசு புரிஞ்சிருந்தா நீ எப்பயோ என்னக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போயிருப்பே."
"இன்னும் ரெண்டு வாரத்துல மாமா கிட்ட வந்து நானே பேசறேன் ஓகேவா?"
"நிஜமாவா?"
"ம்"
***
"செல்வி"
"அம்மா"
"சுவரொட்டிய கழுவிட்டியா?"
"கழுவிட்டேன்மா"
"கொண்டா"
செல்வி எழுத்து போய் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட அவள் அம்மா பரமேஸ்வரி சீரகம் மிளகு சேர்த்து வறுத்தாள்.
"அம்மா"
"ம்"
"அப்பா எங்க போயிருக்கார்?"
"இங்கதானே இருந்தார்?"
அம்மா சொல்லிவிட்டு வேலையை பார்க்க செல்வி தவிப்பாய் உள்ளே சென்று பார்த்தாள்.
இன்று தானே மாமா வந்து அப்பாவிடம் பேசுவதாகச் சொன்னார்? மாமா எப்பொழுது வேண்டுமானாலும் வந்துவிடலாம் .அப்பா எங்கே தான் போனார் ?
"அப்பா" அழைத்துப் பார்த்தாள். பதில் இல்லை.
செல்வி குழப்பமாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் மாமா அன்பு வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் அவள் முகம் பரவசம் ஆனது.
"வாங்க மாமா"
"என்ன செல்வி சொன்னபடி கரெக்டா வந்துட்டேன் பார்த்தியா?"
அன்பு கேட்க செல்வி பதில் ஒன்றும் சொல்லாமல் அவனை காதலாய் பார்த்தாள்.
பரமேஸ்வரி அன்புவைக் கண்டதும் எழுந்து வந்தாள்.
"வா அன்பு எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன் கா"
"உட்காரு சாப்பிடலாம்"
"இருக்கட்டும் கா மாமா எங்கக்கா ?"
"இங்கதான் எங்கயாவது இருப்பார்"
"ம்"
அன்பு சேரில் அமர்ந்தான்.
"இந்தாங்க மாமா காபி" செல்வி கொடுக்க வாங்கிக் கொண்டான்.
பரமேஸ்வரியை புன்னகையுடன் ஏறிட்ட அன்பு கேட்டான்.
"என்னக்கா செல்வி எப்படி படிக்குது?"
"எங்க படிக்கிறா?"
"ஏன்கா ? செல்விக்கு என்ன? செல்வி நல்லாப் படிக்குமே?"
"நீ தான் அப்படி சொல்றே அவ புக் எடுத்துவச்சு நான் பார்த்ததே இல்ல"
பரமேஸ்வரி சொல்ல அன்பு சிரித்தான். செல்வி அன்புவைப் பொய் கோபத்துடன் முறைத்தாள்.
***
கதை சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென பதட்டமாய் பார்த்தார்.
"தம்பி"
"சொல்லுங்கய்யா"
"இப்ப பொழுது சாய்ஞ்சுடுச்சு. சீக்கிரமா ரூமுக்கு போயிடுங்க."
"என்னய்யா சொல்றீங்க?"
"புரிஞ்சிக்கங்க தம்பி ஆபத்து. எந்த காரணத்தைக் கொண்டும் வெளியில் இருக்காதீங்க" பேசியவர் என் பதிலை எதிர்பாராமல் உள்ளே சென்று விட எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எதற்காக அவர் அப்படி சொல்ல வேண்டும்? நான் எதற்காக வெளியே நடமாடக்கூடாது? நான் என்ன தவறு செய்தேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை. அப்படி இருக்க எனக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது ?
மனம் உள்ளே வரிசையாக கேள்விகளை எழுப்பினாலும் எனக்கு ரிஸ்க் எடுப்பது வேண்டாம் என்று தோன்றியது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த மாதிரி விஷயங்களை நான் நம்புவதில்லை ஆனால் கண்முன்னே நடக்கும் சில நிகழ்வுகள் என்னை நம்ப வைத்து விடும் போல்.
என் அறைக்கு நான் வரும்போது இரவு 7 மணி.
என் மனம் முழுவதும் செல்வி குறித்து யோசனை செய்தது.
செல்விக்கு என்ன அநியாயம் நடந்திருக்கும்? அவள் அவள் மாமாவை காதலிக்கிறாள். அவரும் திருமணம் செய்து கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார். பெண் கேட்டும் வந்திருக்கிறார். பிறகு என்ன நடந்திருக்கும்? செல்வியின் அப்பா எங்கு போயிருப்பார்?
எதைப்பற்றி யோசிக்கக் கூடாது என்று நான் என்னைக் கட்டுப்படுத்தி கொள்கிறேனோ அதை பற்றி அதிகமாக யோசிக்க ஆரம்பிக்கிறேன். என் மனம் இப்படித்தான் கட்டுப்பாட்டில் எப்போதும் இருக்காது. எதை கட்டுப்படுத்த முயல்கிறேனோ அதில் தான் அதிக ஆர்வம் மேலிடும்.
வழக்கம்போல் கதவு ஜன்னல் அனைத்தையும் நன்றாகப் பூட்டிவிட்டு ஒரு முறைக்கு இருமுறை சோதித்து கட்டிலில் வந்து படுத்துக் கொண்டேன்
எப்பொழுது உறங்கினேன் எப்பொழுது விழித்துக் கொண்டேன் என்று தெரியாமல் உறங்கிய நான் சட்டென்று உறக்கம் கலைந்து எழுந்துகொண்டேன்.
வெளிய ஏதோ சத்தம் கேட்டது. தூக்கக் கலக்கத்தில் எனக்கு அது என்னவென்று சரியாகத் தெரியவில்லை. உன்னிப்பாகக் கேட்க அது ஏதோ ஒரு அழுகுரல். உடனே எழுந்தேன். எங்கிருந்து வருகிறது இந்த அழுகுரல் என்று உன்னிப்பாக கேட்டுப் பார்த்தேன்.
கதவின் வெளிப்புறம் இருந்து அந்த அழுகுரல் கேட்டது. யாரோ ஒரு பெண் அழும் சத்தம் அது.
கம்பெனிக்கு மிக அருகில் இருக்கிறது என்பதற்காக இப்படி ஒரு கிராமத்தில் வயல்வெளிக்கு நடுவில் ஒரு வீட்டில் குடிவந்தது என் தவறு தான். எனக்கு நன்றாக உறைத்தது. ஆனால் இப்பொழுது என்ன செய்ய முடியும்?
என் சூட்கேஸைத் திறந்து உள்ளே சிலுவையிட்ட ஒரு செயினை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டேன். ஆங்கிலப் படங்கள் பார்த்ததால் வந்த தாக்கம் அது. சிலுவை உள்ள செயின் இருந்தால் எதுவும் அண்டாது என்ற ஒரு நம்பிக்கை.
எனக்கு மிகவும் பயமாக இருந்தது என்பதை நான் மறைக்க முயலவில்லை. வியர்த்துக்கொட்ட டவலை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.
எவ்வளவு நேரம் இந்த அழுகுரல் கேட்கும் ? எதற்காக இங்கே வந்து அழ வேண்டும்? ஒருவேளை அந்த செல்வி தான் இங்கே வந்து அழுது கொண்டிருக்கிறாள் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?
என் மனதிற்குள் நான் செய்த பிரார்த்தனையை அந்த அழுகுரல் கேட்டதோ என்னவோ அதற்குப் பின் அந்த அழுகுரல் சற்று நேரம் கேட்கவில்லை.
எனக்கு ஜன்னலைத் திறந்து பார்க்க ஆர்வம் மேலிட்டது. அதே நேரத்தில் பயமாகவும் இருக்க என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக நின்றேன்.
கொஞ்ச நேரம் எந்த குரலும் கேட்காமல் இருக்க எனக்குள் மகிழ்ச்சி ஆனால் அதே நேரத்தில் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
ஒரு அலறல் சத்தம் அந்த பிராந்தியத்தையே உலுக்கியபடி கேட்டது.
"மாமா...."
தொடரும்
கவுதம் கருணாநிதி கதைகள் பின்வரும் தளங்களில் கிடைக்கும்.
GK Tamil Novels Website
GK Tamil Novels You Tube Channel
Amazon KDP
Pustaka
KUKU FM
புத்தகங்களாக வாசிக்க விரும்புவோர் புத்தகங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
8281693134

Author: gavudham
Article Title: ஒரு பேய்க்கதை 1
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.